முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், தொட்டியடிப்பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
தொட்டியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலனறுவையில் நடைபெற்றுவரும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா மூன்று புதிய சாதனைகளைப் படைத்தார்.
44ஆவது தேசியமட்ட பளுதூக்கல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆசிகா 63 கிலோ எடைப்பிரிவில் சினெச் முறைப் போட்டியில் 76 கிலோ பளுவையும்,
கிளீக் அன்ட் ஜக் முறையில் 97 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 173 கிலோ பளுவையும் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த மூன்றும் அவரால் தேசிய ரீதியில் படைக்கப்பட்ட புதிய சாதனைகளாக அமைந்துள்ளன.
யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் – காட்டுபுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் தேசிய இனமான இந்திய வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான கண்டனப் பேரணி வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 10.30 மணியளவில் சிந்தமாமணி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக மணிக்கூட்டுக்கோபுரம் பஜார் வீதி, இலுப்பையடிவழியாக மாவட்ட செயலகம் சென்று அங்கு உதவி மாவட்ட செயலாளரிடம் மகஜரைக் கையளித்து தமது நிலைமைகள் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் வவுனியா பிரதேச செயலகத்தினைச் சென்றடைந்து அங்கு பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் மகஜர் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பார்த்தீபனே உனக்குப்பின்னால் எத்தனை பார்த்தீபன்கள்?, எல்லைப்புறக்கிராமங்களின் பாதுகாவலர் நாமே, காணி உமது உரிமை இதனைப் பறிக்கத்திட்டமிடாதே, உங்கள் சொந்த நலனுக்காக தமிழ்த்தேசியத்தை கூறுபோடாதே, எமது சமூகத்தை இழிவுபடுத்தாதே, காடுகளை அழித்து சேனைகள் ஆக்கியது யார்?? போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்குமேற்பட்டவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வவனியா பிரதேச செயலகத்தில் தமது இனத்ததை இழிவுபடுத்திய நபரைக் கைது செய்யக்கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பொலிசார் அங்கு வந்திருந்த குறித்த இனத்தை இழிவுபடுத்திய சந்தேக நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் சற்று நேரம் தடைப்பட்டிருந்தது.
வவுனியாவில் காலம் காலமாக வாழ்ந்து வரும் மலையக உறவுகளை அல்லது இந்திய வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியும் உணர்வுகளைத்தூண்டும் விதத்திலும் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள இளைஞன் ஒருவரை இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்திற்குள் வைத்து மடக்கி, ஒன்று திரண்டு குரலெழுப்பிய மக்கள் அவரை பொலிசாரிடம் இனங்காட்டி பிடித்து கொடுத்துள்ள சம்பவம் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பிரதேச செயலகத்தில் சற்று பதற்ற நிலை தோன்றியிருந்ததுடன் பொலிசார் பாதுகாப்பினை மேற்கொண்டனர்.
இன்று காலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் வவுனியா மாவட்டத்தின் ஏற்பாட்டில் வவனியா மாவட்டத்தில் பரந்தளவிலும் பாரியளவிலும் இந்திய வம்சாவளி அல்லது மலையக மக்களாகிய தாம் வாழ்ந்து வருவதாகவும் ஆனால் சில நயவஞ்சகர்களும், இனத்துரோகிகளும் காலத்திற்குக்காலம் துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் நேரடியாகவும் தம்மை கேவலப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் வருகின்றார்கள் என்றும் எமது இனத்தை இழிவுபடுத்தாதீர்கள் என்று தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான கண்டி வீழிவழியாக சென்று மணிக்கூட்டுக்கோபுரம், பஜார் வீதி, ஹொறவப்பொத்தான வீதி, சென்று இலுப்பையடி ஊடாக மாவட்ட செயலகத்தை அடைந்தது அங்கு உதவி மாவட்ட செயலளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் வவுனியா பிரதேச செலயகத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இதன்போது குறித்த மக்களை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள நபரும் அங்கு இடம்பெறும் போராட்டத்தினைப்பார்வையிடுவதற்குச் சென்றபோது போராட்டக்காரர்களினால் குறித்த நபர் இனங்காணப்பட்டு அவருடன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பிரதேச செலயகத்தில் சற்று பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து குறித்த நபர் பிரதேச செயலகத்திற்குள் ஓடி ஒழிந்து கொண்டார். வெளியே நின்றிருந்த போராட்டக்காரர்களை அவரை முற்றுகையிட்டதுடன் பிரதேச செயலகத்தினை வழிமறித்து குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இத்தில் கடமையிலிருந்து பொலிசார் குறித்த நபரையும் போராட்டம் மேற்கொண்ட தலைமையினரையும் அழைத்து பேச்சுக்கள் நடாத்திய பின்னர் சந்தேக நபரைக் பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து போராட்டம் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
அண்மையில் மாத்தறையில் நகை கடையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களின் துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரியை தனியாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இளைஞனின் செயற்பாடு குறித்து தற்போது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமன்றி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரை பாராட்டியுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு பணப்பரிசு ஒன்றை வழங்குவதோடு அவரின் செயற்பாட்டிற்கு கௌரவம் வழங்கவும் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதித்த 33 வயதான பொலிஸ் அதிகாரி சுரங்க பிரதிப் உயிரிழந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பசியால் வாடிய சிறுவன் சிக்கன் உணவு விளம்பர படத்தை நாவால் நக்கிய காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் Bayambang பகுதியில் நடந்த இச்சம்பவத்தை சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த வீடியோ காட்சிகளை இதுவரை 11 மில்லியன் முறை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
வீடியோவில் பதிவாகியுள்ள 3 வயது சிறுவனின் குடும்பமானது அங்குள்ள பிரபலமான துரித உணவு விடுதியில் காலை உணவருந்த முடிவு செய்து புறப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் சென்ற நேரம் குறித்த உணவகமானது திறந்திருக்கவில்லை. இதனால் அந்த சிறுவனின் குடும்பத்தினர் உணவகத்தின் வெளியே காத்திருந்துள்ளனர்.
அப்போது அந்த 3 வயது சிறுவன் உணவகத்தின் அருகாமையில் நடந்து நின்றுள்ளான். சிக்கன் உணவு என்றால் உயிர் என கூறப்படும் அந்த சிறுவன் திடீரென்று அந்த உணவக விளம்பரம் முன்பு மண்டியிட்டு நாவால் நக்கியுள்ளான்.
இந்த காட்சிகள் சிறுவனின் குடும்பத்தாரை மட்டுமல்ல அந்த உணவ மேலாளரையும் அதிர வைத்துள்ளது.
இதனையடுத்து Jollibee என்ற அந்த சிக்கன் உணவகம் குறித்த சிறுவனுக்கு இலவசமாக பக்கெட் சிக்கனை வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத்தை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது.
ஏமனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா உதவுவதாக கூறி அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக வீசப்பட்ட ஏவுகணை சவுதி இடைமறித்து அழித்தது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று தலைநகர் ரியாத்தை நோக்கி வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
சவுதியின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற இலக்குகளை குறிவைத்து Burkan ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை கண்டுபிடித்து சென்னையை சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியில், ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத், சுதி ஆகிய நான்கு மாணவர்களும் Aerospace பொறியியல் படிப்பில் முதலாமாண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் நான்கு பெரும் இணைந்து ரூ.15 ஆயிரம் செலவில், வெறும் நைலான் இலைகளை மட்டுமே கொண்டு, 33 கிராம் எடை கொண்ட செயற்கைகோளினை உருவாக்கியுள்ளனர்.
வானிலை நிலவரங்கள் குறித்து அறிந்த கொள்ள பயன்படும் இந்த செயற்கைகோள், நாசா நடத்திய கியூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பலூன் உதவியுடன் விண்ணில் செலுத்த உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
முன்னதாக 64 கிராம் எடைகொண்ட செயற்கைகோளே உலகில் குறைந்த எடைகொண்ட செயற்கைகோள் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு. இவருக்கு கடந்த மே 30ம் திகதி வேலம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு நீடித்த நிலையில், வேலம்மாள் வேறு ஒரு நபருடன் போனில் பேசியதை பார்த்த பாலகுரு கோபமடைந்தார்.
இதனால், கடந்த சில தினங்களாக பாலகுருவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார் பாலகுரு. இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது வேலம்மாளை தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், வேலம்மாள் தலையை தூக்கிவீசியுள்ளார்.
அதன்பின்னர், தானாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது தான் நர்சிங் படித்து வந்த வேலம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலிக்க தொடங்கினோம்.
காதலுக்கு என்னுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கொஞ்ச நாட்கள் கழித்து திருமணம் செய்துகொள்வோம் என்றபோது அவள், உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள்.
கடந்த மாதம் 31ம் திகதி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எங்கள் திருமணம் நடந்தது. எனது தரப்பில் யாரும் திருமணத்துக்கு வரவில்லை. திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக தனிக்குடித்தனம் நடத்தி வந்தேன். வேலம்மாளும் தொடர்ந்து நர்சிங் படித்துவந்தாள்.
10 நாட்களுக்கு முன்புதான் எனக்கு பாளையங்கோட்டை ஜெயிலுக்கு பணிமாறுதல் கிடைத்தது. நான் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், வேலம்மாள் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பாள். நானும் யார் என்று கேட்டால் தோழி என்று கூறுவாள். அவள் என்கூட பேசிய நேரத்தைவிட, செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நேரம்தான் அதிகம்.
இதுபற்றி கேட்டால் என்னுடன் தகராறு செய்வாள். இதனால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தேன்.
ஆனால் அவள் செல்போனில் பேசுவதை குறைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துச்சென்று கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 17 வயது மாணவி, +2 பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
தேர்வில் தேர்ச்சி பெறாததால் மறுதேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததுடன் அக்கா வீட்டில் தங்கி டியூசன் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட உதயன்(வயது 36) என்பவர் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமும் இதை சொல்லக்கூடாது, மீறி கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி அக்காவிடம் கூற பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் உதயனை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காலி ஹபராதுவ பொலிஸ் பிரிவில் கினிகல பிரதேசத்தில் இன்று மதியம் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் வழிமறித்து தாக்கியுள்ளதுடன் வாள்களால் வெட்டியுள்ளனர்.
இதில் கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபராதுவ மீபே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான லக்பிரிய அக்கலங்க பொக்குபிட்டிய என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பழைய முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இலங்கையின் முப்படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பவத்தினர் அடங்களாக 160 பேர் நேற்று இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அவர்கள், புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படையின் சீ-17 ரக விமானத்தில் இன்று அவர்கள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த ஒரு தரப்பினரும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இந்திய இராணுவ பேச்சாளர் அமன் ஆனந்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குருணாகல், வாரியபொல – மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக படகு ஒன்றில் ஐந்து நபர்கள் சென்ற நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய ஐவரில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடி வருகின்றனர்.
இதேவேளை, கம்பஹா பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
காலி, ஹிக்கடுவ சந்தியில் வைத்து சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய இனாசி சமிந்த என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வர்த்தக ரீதியான சைக்கிளில் போட்டியில் கலந்து கொள்ளும் ஓட்ட வீரர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் தெற்கின் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர் 5 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
அத்துடன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், பருவப்பெயர்ச்சி மழை காரணமாகவே டெங்குக் நோய் வேகமாக பரவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.