அமெரிக்காவில் 49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற தமிழ்ப் பெண்!!

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

ஜெயஸ்ரீ மகேஷ் அமெரிக்காவில் கடந்த 13-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக நடந்த திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர். இதில் திருமதி உலக அழகி பட்டத்தை ஜெயஸ்ரீ மகேஷ் வென்றார்.

இவர் ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு திருமதி கோவை அழகி பட்டத்தையும், 2016-ம் ஆண்டு திருமதி இந்திய அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

திருமதி உலக அழகி பட்டம் வென்ற ஜெயஸ்ரீ மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது..

அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்து உள்ளது.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கூட்டு குடும்பங்கள் அதிகமாக இருந்தன. இதனால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

தனிக்குடும்ப முறை காரணமாக பெற்றோர்களால் தங்களது பிள்ளைகளை சரிவர கண்காணிக்க முடியாமல் போய் விடுகிறது. தற்போது கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகள் தனிமையில் இருக்கின்றனர். இந்த தனிமையை சில நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பெண் குழந்தைகளிடம் அத்துமீறுகின்றனர். கூட்டுகுடும்ப முறை குறைந்து வருவதே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர், அவர்களின் நட்பு வட்டாரத்தில் யார் உள்ளனர் என்று கண்காணிக்க வேண்டும். இளம்பெண்களும் தாங்கள் செல்லும் இடங்கள், யாருடன் செல்கிறோம் என்பது குறித்த விபரங்கள், பயணம் செய்யும் வாகனங்களின் பதிவு எண், டிரைவர் விபரம் போன்றவற்றை தங்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும்.

தாய்-மகள் உறவு என்பது நல்ல தோழிகள் போல் இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும். இதுதவிர இளம் வயதினரிடையே பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

5 ஆண்களுடன் திருமணம் : 54 வயதில் 5 ஆவது குழந்தை பெற்றெடுத்த நடிகை!!

டென்மார்க் நாட்டை சேர்ந்த நடிகை பிரிகெட்டி நெல்சன் தனது 54 வயதில் குழந்தை பெற்றெடுத்துள்ளது.

இவருக்கு ஏற்கனவே, 5 நபர்களுடன் திருமணமாகி Julian (34) Kilian(28) Douglas(25) மற்றும் Raoul (23) என்ற நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு இத்தாலி மொடலான 39 வயதுடைய Mattia Dessi என்பவரை 5 ஆவதாக திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, எனது குடும்பம் பெரிதாக போகிறது, நீ சிறந்த தந்தை என தனது கணவரையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

தமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரஸ்ய காதல்!!

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும், மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில் வளர்ந்தார்கள்.

சோபியா, ஜஸ்டினின் சகோதரர் மைக்கேலின் பள்ளி வகுப்பு தோழியாவார். அப்போது ஜஸ்டினுக்கும், சோபியாவுக்கும் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் வேறு வேறு திசையில் சென்றுவிட்டார்கள்.

பின்னர் 2003-ஆம் ஆண்டு ட்ரூடோவும், சோபியும் மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்து கொண்டார்கள்.

சில மாதங்கள் இருவரும் டேட்டிங் சென்ற நிலையில் அது காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்ய முடிவெடுத்த அவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து மொன்றியலில் உள்ள தேவாலயத்தில் மே 28, 2005-ல் ஜஸ்டின் – சோபி திருமணம் கோலாகலமாக நடந்தது.

தற்போது வரை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இத்தம்பதிக்கு சேவியர் ஜேம்ஸ், எல்லா கிரேஸ், ஹாட்ரின் கிரிகொயர் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2015 தேர்தலுக்கு முன்னர் ஜஸ்டின், என் காதல் சோபி என பதிவிட்ட டுவீட் அவரின் வைரல் டுவீட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது காதல் மனைவி சோபியுடன் நேரம் செலவிட தவற மாட்டேன் என ஜஸ்டின் கூறியது அவரின் அழகான காதலுக்கு உதாரணமாகும்.

இவரின் உடலில் இருப்பது ஓவியம் என்றால் நம்ப முடிகின்றதா? பிரமிக்க வைக்கும் உடல் ஓவிய பெண் கலைஞர்!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜினா ரைலாண்ட் எனும் பெண், தனது உடலில் தானே ஓவியங்களை தீட்டி பிரமிக்க வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர் ஜார்ஜினா ரைலாண்ட். இவர் ஒப்பனைக் கலை மட்டுமின்றி, சிறந்த ஓவியக் கலைஞராகவும் விளங்கி வருகிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், மற்ற கலைஞர்கள் எல்லாம் அடுத்தவர்களின் உடலில் தான் ஓவியங்களை தீட்டுவார்கள். ஆனால், ஜார்ஜினா தனது உடலில் தானே ஓவியங்களை தீட்டுகிறார்.

இவர் செய்யும் விடயம் அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், கண்ணாடியை பார்த்து ஓவியம் தீட்டுவது மிகவும் கடினமாகும். எனினும், ஜார்ஜினா ஒரு தாளில் ஓவியம் தீட்டுவது போல மிக அழகாகவும், நேர்த்தியாகவும் தனது உடலில் தானே ஓவியம் வரைகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இவர், இன்று வரை தனது ஓவியத் திறமையை மெருகேற்றிக்கொண்டே வருகிறார். இதன்மூலம், உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளார்.

ஜார்ஜினா தனது ஓவியக் கலை குறித்து கூறுகையில், ‘ஒரே நாளில் இந்தக் கலை என் வசமாகிடவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவாகவே இன்று மற்றவர்களிடமிருந்து என்னை தனித்துக் காட்டியிருக்கிறது.

இப்போதும் வாரத்தில் ஒரு நாளாவது பயிற்சி செய்யாமல் இருப்பதில்லை. Fashion இதழ்கள், மொடலிங் வாய்ப்புகள் எல்லாம் இந்தக் கலை மூலம் தான் எனக்கு சாத்தியமாயின’ என தெரிவித்துள்ளார்.

ஆஜன்டீனா அணி தோல்வி : தற்கொலை செய்த கேரள ரசிகர்!!

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ரசிகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் தினு அலெக்ஸ், மெஸ்ஸியின் தீவிர ரசிகராவார். இந்நிலையில் கடந்த 21ம் திகதி நடந்த போட்டியில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது.

இதனையடுத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். உடனடியாக பொலிசுக்கு தகவல் அளிக்க, தினு அலெக்ஸை தீவிரமாக தேடி வந்தனர்.

மோப்ப நாய் உதவியுடன் தேடியதில், ஆற்றின் கரையோரம் நின்றுவிட்டது, எனவே ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் எண்ணினர். இதன்படி இன்று ஆற்றிலிருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

25 நாட்களில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : மனைவியை கொடூரமாக கொன்ற புதுமாப்பிள்ளை!!

தமிழகத்தில் திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு.

இவருக்கு கடந்த மே 30-ம் தேதி வேலம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு நீடித்த நிலையில், வேலம்மாள் வேறு ஒரு நபருடன் போனில் பேசியதை பார்த்த பாலகுரு கோபமடைந்தார்.

இதனால், கடந்த சில தினங்களாக பாலகுருவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார் பாலகுரு. இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது வேலம்மாளை தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.பின்னர் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

பின்னர், தானாகவே காவல்நிலையம் சென்று நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ள சரணடைந்துள்ளார். இதனையடுத்து இவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமணமாகி 25 நாட்களிலேயே திருமண வாழ்க்கை முடிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை கொன்று விட்டு சடலத்துக்கு தாலி கட்டிய ஒருதலை காதலன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அடித்துக் கொன்றதுடன், அப்பெண்ணுக்கு தாலிகட்டிய பின்னர் இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் காளிகாபுரம் கொண்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நிர்மலா(24). இவரது தந்தை சிவராமன்(55), தாய் சாமுண்டீஸ்வரி(45).

நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் M.A படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்து படித்த அவர், வார விடுமுறையில் வீட்டிற்கு வந்து செல்வார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநரான அன்பழகன்(30) என்பவர், மாணவியை திருமணம் செய்ய நினைத்து தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் பின், அவரது பெற்றோரும் நிர்மலாவின் பெற்றோரிடம் இதுதொடர்பாக பேசியபோது, மகள் படித்து முடித்ததும் இதுகுறித்து பேசுவதாக கூறிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மாணவி நிர்மலாவின் படிப்பு செலவுக்கு அன்பழகன் பணம் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்மலாவின் பெற்றோர் திடீரென அன்பழகனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன், அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். அதன் பின்னர், நிர்மலாவை குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிட்ட அன்பழகன், சம்பவத்தன்று நள்ளிரவில் அரிவாளுடன் மாணவியின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அன்று மாணவிக்கு விடுமுறை தினம் என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார். முதலில் வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த மாணவியின் தந்தை சிவராமனை, சரமாரியாக வெட்டினார் அன்பழகன்.

பின் வீட்டிற்குள் சென்று மாணவி நிர்மலா மற்றும் அன்பழகனின் மனைவி சாமுண்டீஸ்வரியை அடித்தும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்தார். அதன்பின்னர் நிர்மலாவுக்கு தாலி கட்டியுள்ளார், தொடர்ந்து அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த பார்த்தனர். அப்போது, படுகாயமடைந்த சிவராமன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருந்தது தெரிந்ததால், ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிர்மலா, சாமுண்டீஸ்வரி மற்றும் அன்பழகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் சிறுமிக்கு காதல் வலை : இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னையில் சிறுமியை ஏமாற்றி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் என்ற இளைஞர், தனது பெயர் மற்றவர்களை கவரும்படி இருக்க வேண்டும் என எண்ணி பேஸ்புக்கில் வில்லியம்ஸ் குமார் என்ற பெயரில் கணக்கு துவங்கி ஏராளமான கல்லுரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பெண்களை கவர்ந்திழுக்கும் விதமாக அடிக்கடி புதுவித தோற்றங்களில் இருப்பதை போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.

இதில் மயங்கி, ராகுல் விரித்த காதல் வலையில் விழுந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், ராகுலுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி தன்னை முழுமையாக நம்புவதை உணர்ந்த ராகுல், புதிதாக தொழில் துவங்க வேண்டும் எனவும், அதற்கு சிறிதளவு பணம் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதனை நம்பி சிறுமியும் வீட்டிலிருந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து ராகுலிடம் கொடுத்த வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வீட்டில் இருந்த 20 சவரன் நகை காணமல் போயிருப்பதை கண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அதில் உண்மை வெளிவரவே சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் ராணுவ தளபதி மனைவி கழுத்து அறுத்து கொலை : அதிர்ச்சியில் தலைநகரம்!!

டெல்லியில் பட்டப்பகலில் பொது இடத்தில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாகியிருக்கிறது.

டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. அங்கு 30 வயது பெண் ஒருவர் பிஸியோதெரபி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த மர்ம நபர் ஒருவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு அதே வேகத்தில் தப்பியோடிவிட்டான்.

பரபரப்பான சாலையில் திடீரென நடந்த இந்த கொலையால் அங்குள்ள மக்கள் பதட்டமடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் பற்றிய முதல்கட்ட விசாரணையில்தான் அவர் ஒரு ராணுவ தளபதியின் மனைவி என்பது தெரிய வந்துள்ளது. விசாரணை மேலும் தொடர்கிறது.

உண்மை தெரிந்த அக்கா- மாமாவை தீர்த்து கட்டிய பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

தமிழகத்தில் தவறான உறவை அக்கா மற்றும் அவரின் கணவர் கண்டித்ததால், இருவரை திட்டம் தீட்டி கொலை செய்துள்ள தங்கையின் செயல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்த தம்பதி தர்மலிங்கம்- மீனாட்சி. இதில் மீனாட்சிக்கு மைதிலி என்ற சகோதரி உள்ளார்.
அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மைதலிக்கும், வேறொரு இளைஞருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மீனாட்சி-தர்மலிங்கம் தம்பதி, மைதிலியை கண்டித்துள்ளனர்.

உண்மை வெளியில் தெரிந்துவிட்டதால், தொடர்ந்து கண்டித்து வந்ததால், ஆத்திரமடைந்த மைதலி தர்மலிங்கம்-மீனாட்சி இருவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி தர்மலிங்கத்துக்கு மதுவிலும், மீனாட்சிக்கு உணவிலும் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் தர்மலிங்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் திகதியும், மீனாட்சி ஜனவரி 13-ஆம் திகதியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தர்மலிங்கத்தின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் சகோதரர் குமார், அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த போது, மைதிலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது மைதலியும், பாலமுருகனும் சேர்ந்து தர்மலிங்கம் – மீனாட்சி தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர்களிடம் கையெழுத்து வாங்கி, வங்கியில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தையும் இருவர் திருடியிருப்பது தெரியவந்தது.

பொலிசார் நடத்திய தொடர் விசாரணையின் காரணமாக இருவரையும் பொலிசார் ஒன்றரை ஆண்டுக்கு பின் கைது செய்துள்ளனர்.

மனைவியை ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு : குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட கணவன்!!

இந்தியாவில் மனைவியை கொலை செய்துவிட்டு சுமார் 18 மணி நேரம் போக்கு காட்டிக் கொண்டிருந்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கனபுராவில் காலேஷ்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரின் தொழில் சமீபகாலமாகவே மந்தமாக சென்றுள்ளது.

பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததால், கணேஷ் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்துள்ளார்.

அதிலும் நஷ்டம் ஏற்படவே, கடன் கொடுத்தவர்கள் எல்லாம் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் தனது சொத்துக்களை எல்லாம் விற்று கடன்களை அடைத்துள்ளார்.

இது தொடர்பாக அவ்வப்போது கணேசிற்கும் அவரது மனைவியான சஹானாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது சஹானா குழந்தைகளுக்கு என்று சொத்துக்கள் ஏதும் வைக்காமல் இப்படி விற்றால் அவர்களின் எதிர்காலம் என்னா ஆகும் என்று கேட்டுள்ளார்.

இப்படி நாள்தோறும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று பெங்களூரில் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் கடும் சண்டை நடந்துள்ளது.

ஆத்திரமடைந்த கணேஷ் லைசென்ஸ் பெற்று, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சஹானாவை சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சஹானா சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

அதன் பின் செய்வதறியாமல் முழித்த கணேஷ் வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்த தன்னுடைய குழந்தைகளை காரில் அழைத்துக் கொண்டு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பனகிரி ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் சஹானாவின் தொலைபேசிக்கு அவரின் தந்தை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் வெகுநேரமாகியும் எடுக்காததால், சந்தேகமடைந்த அவர், வீட்டில் வந்து பார்த்த போது மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் கணேசை தேடத் துவங்கியுள்ளனர். சுமார் 16 மணி நேரம் போக்கு காட்டிய கணேசை பொலிசார் பனகிரி தேசிய நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர்.

அப்போது பொலிசாரிடம் சரணடைய விரும்பாததால், குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.

ஆனால் தைரியமின்றி தயங்கிக் கொண்டிருந்ததால், பொலிசார் அந்த நேரத்தில் அவரை பிடித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த குழந்தைகளை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும், கைது செய்யப்பட்ட கணேஷிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் 9ம் வகுப்பு மாணவன் சரமாரியாக குத்திக் கொலை : கழிவறை தூக்கி வீசப்பட்ட கொடூரம்!!

இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் சரமாரிய குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் வடோதராவில் பார்த்தி என்ற பள்ளி உள்ளது. இங்கு 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தான் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று பள்ளியின் முதல் மாடியில் உள்ள தன்னுடைய வகுப்பறைக்கு மாணவன் சென்று கொண்டிருந்த போது, அவனை வழிமறித்து மர்ம நபர்கள் சிலர் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்ச் சென்றுள்ளனர்.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளான். சிறுவனின் உடலில் 10-க்கும் மேற்பட்ட கத்தி குத்து காயங்கள் இருந்ததாகவும், கத்தியால் குத்திவிட்டு சிறுவனின் உடலை கழிவறையில் வீசிவிட்டு, அவனுடைய பையை பள்ளியின் மற்றொரு இடத்திலும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார், அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கு சேர்ந்து ஒருவாரத்திலே சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதால், பல்வேறு சந்தேகங்கள் எழும்புவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

உணவில் விஷம் : கணவனின் உறவினர்கள் 5 பேரை கொன்ற மருமகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவில் மாமியார் கிண்டல் செய்ததால் விருந்து சாப்பாட்டில் மருமகள் விஷத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கத் மாவட்டம் மகாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுபாஷ் மனே – ஜோதி வர்வாஸ்.

இவர்கள் தங்களுடைய புதுமனை புகுவிழாவுக்காக உறவினர்களை அழைத்திருந்தனர். இந்த விழாவிற்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த விழாவின் போது உணவை சாப்பிட்ட பலருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் 120 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, உணவை பரிமாறிய ஜோதி வர்வாஸை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் தான் கருப்பு என்பதால், மாமானார்-மாமியார் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகவும், திருமண வாழ்க்கையிலும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விருந்து நிகழ்ச்சியின் போது கூட அவர்கள் தன்னை ஆத்திரமூட்டியதால், கோபத்தில், பாம்புகளை கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்தை பருப்புக்குழம்பில் கலந்ததாகவும், அதனை உறவினர்கள் அனைவருக்கும் தானே பரிமாறியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்றரை வயது குழந்தைக்கு மழலையர் பள்ளியில் நடந்த கொடூரம்!!

நாகர்கோயிலில் உள்ள மழலையர் பள்ளியான “kids paradise ” ல் ஒன்றரை வயது குழந்தை மீது வெந்நீர் கொட்டியதால் குழந்தையின் இடுப்புக்கு கீழே மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது

நாகர்கோயில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் நாகராஜன் பாமா தம்பதியினர். இவர்கள் மகன் துஷ்யந்த்.

கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதால் பாமாவே குழந்தையை பார்த்து வருகிறார். இவர் வாழ்வாதாரத்திற்காக ஒரு டைலரிங் நிறுவனத்திற்கு வேலைக்கு போகும்போது அருகில் உள்ள “KIDS PARADISE ” மழலையர் பள்ளியில் காலையில் குழந்தையை விட்டு செல்வார் மாலை பணி முடிந்து வரும்போது அழைத்து கொள்வார்.

இந்நிலையில் கடந்த புதன் அன்று குழந்தைகளுக்காக பள்ளியில் வெந்நீர் காய்ச்சப்பட்டிருக்கிறது. அப்போது எதிர்பாராவிதமாக அது கீழே கொட்டியிருக்கிறது. அது அருகில் இருந்த துஷ்யந்த் மீதும் விழுந்திருக்கிறது.

இதனால் துடித்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தைக்கான மருத்துவ செலவை பள்ளி நிர்வாகம் ஏற்பதாக கூறி இருந்த நிலையில் இன்று காலை குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது பணம் தர நிர்வாகம் மறுத்து விட்டதாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து பாமா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதற்காக இதுவரை முப்பதாயிரம் செலவு செய்திருப்பதாக பாமா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் : இருவர் கைது!!

கிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியை கொன்றவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சிறுத்தை புலியை கொலை செய்யும் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

காணொளி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் நான்கு சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளனர். இவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை புலியை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை கிளநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உணவகத்தில் கொத்து வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அம்பலந்தோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கோழி கொத்து ரொட்டியில் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்பலந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி யூ.பி.மாலக சில்வாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொத்து ரொட்டியுடன் அம்பலந்தோட்டையில் உள்ள உணவு கடைக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், கடை உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதற்கமைய சம்பவத்திற்கு தொடர்புடைய உணவு கடையின் உரிமையாளர் 24ஆம் திகதி அம்பலந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கோழி கொத்து ரொட்டியுடன் தவளையின் உடல் சிதைந்து காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி யூ.பி.மாலக சில்வா தெரிவித்துள்ளார்.