இலங்கையில் அறிமுகமாகும் புதிய பெற்றோல் : சாரதிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

இலங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம் புதிய வகை பெட்ரோல் வகை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஊடாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு குறைந்த ஆக்டேன் எண்ணின் கீழ் தயாரிக்கப்படும் பெட்ரோல் இவ்வாறு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்படும் இந்த பெற்ரோல் கிட்டத்தட்ட 90 ஆக்டேன்களை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு மிகவும் சாதகமான பெறுபேறுகளை கொடுத்துள்ளன. இந்நிலையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த பெற்றோல் உரிய முறையில் இயங்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பெற்டோலினால் ஏற்படும் கழிவுகள் குறைவாகவே காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண்ணொருவர் செய்த மோசடி!!

அயலவர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக போலி முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான குறித்த பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையினால் நீதிமன்றத்தில், குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பெண்ணை கடுமையாக எச்சரித்த நீதிபதி ஒரு வாரம் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு போலி முறைப்பாடு செய்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அது போலி குற்றச்சாட்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்ட தினத்தன்று அயலவர் வீட்டில் இருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த அயலவர் வாரியபொல பிரதேசத்திற்கு சென்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபரான பெண்ணின் இரகசிய கணவரின் ஆலோசனைக்கு அமைய அயலவருக்கு எதிராக குறித்த பெண் போலி முறைப்பாடு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கடுமையாக எச்சரித்த நீதிபதி கடுமையான வேலையுடன் கூடிய ஒரு வார சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

உயிருக்கு போராடிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

தமிழகத்தில் விஷம் குடித்ததால் உயிருக்கு போராடிய பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, காவலாளி ஒருவர் குளுக்கோஸ் இணைப்பை மாற்றிய அவலம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், விஷம் குடித்த பெண்ணோருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சமயத்தில் மருத்துவரோ, செவிலியரோ அல்லாமல் மருத்துவமனையின் காவலாளி குறித்த பெண்ணுக்கு குளுக்கோஸ் இணைப்பை மாற்றியுள்ளார்.

இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, காவலாளி ஒருவர் குளுக்கோஸ் இணைப்பை மாற்றியது தொடர்பாக மருத்துவத்துறை இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஏற்கனவே இந்த மருத்துவமனையின் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில், இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயில் பகுதியை அடுத்த ஆலப்பாக்கம் காமதேனு நகரில் வசித்து வருபவர் அபிப்ரகுமான். 38 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு முகமது நாயிப்(6), ரயான்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆலப்பாக்கத்தில் கடந்து இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அனிஷா இலங்கையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் அபிப்ரகுமான், தன்னுடைய இரண்டு மகன்களுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர்கள் வசித்து வந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்களும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று உடல்களையும் கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற வருத்ததில் இருந்த ரகுமான் மன உளைச்சலில் இருந்ததாகவும், அவ்வப்போது சென்னை வரும் ரகுமானின் மனைவி அனிஷா அவரது பிள்ளைகளை சந்தித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழக்கம்போல் பிள்ளைகளை சந்திக்க வரும் அனிஷா கடந்த வாரம் சந்திக்க வராத காரணத்தினால், மனமுடைந்த ரகுமான் இரு பிள்ளைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!

 

வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று (26.06) மாலை விபத்துக்குள்ளானது.

வவுனியா ஏ9 வீதியில் ஓமந்தை பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டியானது தாண்டிக்குளம் புகையிரத்தைக் கடவையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோட்டார் வண்டியடன் மோதி தடம்புரண்டது.

பேக்கறி உணவுப்பொருட்களை ஏற்றி வந்த குறித்த முச்சக்கர வண்டியாது ரெயில்வே கடவையின் அருகிலிருந்த கால்வாயில் தடம்புரண்டு வீழ்ந்த நிலையில் முற்றாக சேதமடைந்ததுடன் உணவுப் பொருட்களும் சிதறிக் காணப்பட்டன.

குறித்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா!!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26.06) நடைபெற்றது.

தேரானது ஆலயத்தின் வெளிவீதியினை சுற்றி வந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள வவுனியா ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய பஜனைக் குழுவினர் பஜனை பாடப்பட்டது.

இத் தேர்த் திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

யாழில் பரிதாபமாக பலியான கிளிநொச்சி சிறுவன் : நேர்த்திக்கடன் செலுத்தும் போது நேர்ந்த விபரீதம்!!

யாழ். தீவகம் மண்கும்பான் சந்தியில் தூக்கு காவடி சென்ற உழவு இயந்திரத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி – பூநகரி ஆலங்கேணிப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சச்சித்தானந்தம் கிளியமுதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தும் முகமாக யாழ்.மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூநகரி ஆலங்கேணியிலுள்ள ஆலயமொன்றை நோக்கி தூக்குக் காவடி எடுத்து சென்றுள்ளார்.

தூக்குக் காவடி எடுத்த உழவு இயந்திரத்தின் பெட்டியில் சிறுவனும் மற்றும் பலரும் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த சிறுவன் மண்கும்பான் சந்தியில் இறங்க முற்பட்ட போது தவறி விழுந்து உழவியந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், உழவு இயந்திரத்தின் சாரதி ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிஸ்கட் திருடிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை!!

பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிய பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

120 ரூபாய் பெறுமதியான பிஸ்கட் பக்கட் ஒன்றை திருடிய சம்பவத்தின் குற்றவாளியான பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு கம்பஹா நீதிவான் நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் 1500 ரூபா மற்றும் 2500 ரூபா அபராத பணம் செலுத்துமாறு குறித்த பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு தொடர்பில் யக்கல பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மாங்காய் மற்றும் தேங்காய் திருடிய குற்றச்சாட்டிற்கு பாரிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன், அதனை வாசித்து தெளிவுபெறுவதற்காக 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், ஆகஸ்டில் ஆரம்பமாகும் பரீட்சைகளானது எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள்களுக்கு 3 மணித்தியால நேரம் வழங்கப்படும். இந்த நிலையிலேயே, இம்முறை மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழை உலுக்கிய றெஜினாவின் படுகொலை : வீதிக்கு இறங்கிய மக்கள்!!

யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்குச் சென்று அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 6 வயதுடைய சிவனேஸ்வரன் றெஜினா என்ற சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலம், சடலத்துக்கான பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் பின்னரே இது குறித்த விபரங்களை வழங்க முடியும் என்றும் வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் நேற்று நடைபெற்ற இந்த துயர சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மதியம் 3 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வராத நிலையில் அனைவரும் சேர்ந்து சிறுமியை தேடிய போது 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் அரை நிர்வாணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் “போதை அது சாவின் பாதை” : விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!!

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தை வவுனியா – நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று காலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘புகைத்தலை ஒழித்து புதுயுகம் படைப்போம், போதை அது சாவின் பாதை, மேதையை அழிக்கும் போதை, போதையை தொடராது சாதனை படைப்போம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

மேலும், இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் மாணவர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

யாழ். உடுப்பபிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் பெண்கள் இருவர் வசித்து வந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

முகத்தை முழுமையாக மூடி மறைத்தபடி, வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் வீட்டிலிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை

கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் நடந்த கொடூரம் : காணொளியால் சர்ச்சை!!

கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் குழந்தை ஒன்று மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமது பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை குறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது குழந்தைக்கு நோயுற்ற போதிலும், மருந்து வழங்காமல் சுமார் 4 மணித்தியாலங்கள் அழுத குழந்தையை கண்டுகொள்ளாமல் வெளியே வைத்து பூட்டி விட்டதாக கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தை வெளியே இருந்து கதவை தட்டி அழும் காட்சியை குறித்த குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு அருகில் உள்ளவர்களினால் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காணொளி பேஸ்புக்கில் வெளியாகியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் குழந்தை பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய குழந்தை பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“பெற்றோர் என்ற ரீதியில் நாம் இந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிடப்போவதில்லை, முடிவு கிடைக்கும் வரை தொடர்வோம். இந்தளவு கொடூரமாக குழந்தையை தண்டிப்பதற்கு குழந்தை என்ன செய்தது… என் மகன் பல மணி நேரம் அழும் வரை பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் மனிதாபிமானமற்ற குருடர்கள். குழந்தை பராமரிப்பு இல்லத்தில் விடப்படும் மற்றைய குழந்தைகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும். எனது குழந்தை பல மணி நேரம் அழுததனை அயலவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் இதனை உறுதி செய்து வாக்குமூலம் வழங்கியுள்ளனர்..” என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குழந்தை அன்றைய தினம் சுகயீனமடைந்துள்ளதாகவும், குழந்தைக்கு மருந்து வழங்காமல் அழ விட்டுள்ளதாகவும் பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். சுழிபுரத்தில் சிறுமி உயிரிழந்தமைக்கான காரணம் : வெளியானது!!

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரண பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதில் சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதால், அவர் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி றெஜினா துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என மரண பரிசோதனை அறிக்கையின் மூலம் நிரூபனமாகியுள்ளது.

பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா, கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.

மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார். தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலை 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கு வரவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்ததனையடுத்து குறித்த சிறுமியியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். சிறுமி படுகொலை : சந்தேகநபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

யாழ். சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் ஒருவர் மனநோயாளியைப் போல நடிப்பதாகவும், ஆனால் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்ததாகவும், தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்ததாகவும் அந்த சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தான் மட்டுமே இந்தக் கொலையைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி றெஜினா நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரை நேற்று பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், இன்று காலை மேலும் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேலும் குறித்த 6 சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்காக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளதுடன், போராட்டங்களும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : பதற்றத்தில் அரபு நாடுகள்!!

இஸ்ரேலிய விமானப்படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் தொடர்பாக சமூக வலைதளத்தில் காணொளி காட்சிகள் சில வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஆனால் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிரியா விமானப்படைகள் இஸ்ரேல் தக்குதலை இடைமறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய சரக்கு கப்பலை குறிவைத்தே இந்த ஏவுகணை தாக்குதல் எனவும் ஒரு தகவல் பரவி வருகின்றது.

குறித்த தகவலுக்கும் இதுவரை எந்த ஊடகமும் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாகாணத்தின் வடப்பகுதியில் சக்தி வாய்ந்த தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு படைகள் உறுதி செய்துள்ளன.