முதியோர் இல்லத்தில் அலறல் சத்தம் : கழிவறையில் தங்கவைத்து வெறும் கையால் மலம் அள்ளிய அவலம்!!

தமிழகத்தில் முதியோர் இல்லத்தில் முதியோர்கள் கழிவறையில் தங்க வைத்து மலம் அல்ல வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் லைப் டிரஸ்ட் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதை கலைவாணி என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த முதியோர் இல்லத்தில், 60 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் சுற்றித் திரிந்தவர்கள் என சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதியோர் இல்லத்தில், தொடர்ந்து சத்தம் வந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் என்ன என்று சென்று பார்த்த போது, முதியவர் ஒருவரை அந்த காப்பகத்தில் இருந்த நபர் கையில் இருந்த குச்சியை வைத்து தாக்கி வெறும் கையால் மலம் அல்ல வைத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து இது போன்று காப்பகத்தில் நடந்து வருவதாகவும் புகார் கூறினர்.

குறித்த காப்பகத்தில் இருபது பேர் கூட இருக்க முடியாத நிலையில் 35-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

காணாமல் போன தொழிலதிபர் கொலை : டேப்பால் சுற்றி கல்லை கட்டி அணையில் வீசிய கொடூரம்!!

திருப்பூர் பின்னலாடை தொழிலதிபரின் உடல் ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலதிபர் சிவமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான இவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆம்பூர் டோல்கேட் பகுதியில் சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் அடிக்கடி வந்து போய் கொண்டிருந்ததால் டோல்கேட் நபர்கள் பொலிஸாரிடம் இது பற்றி கூறினர்.

காவல்துறையினர் சொகுசு காரில் உள்ளவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அந்த கார் சிவமூர்த்திக்கு சொந்தமானது என்பதும் அதில் இருந்த மூவரும் சிவமூர்த்தியை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து கெலவரப்பள்ளி அணையில் வீசியதை குற்றவாளிகள் ஒப்பு கொண்டனர். மேலும் சடலம் வெளியே தெரியாமல் இருக்க அங்கிருந்த மைல் கல் ஒன்றை உடலில் கட்டி வீசியதால் இரண்டு நாட்கள் கழித்து சடலம் வெளிவந்ததாக பொலிஸார் கூறினர்.

நீரில் வீசப்பட்ட சிவமூர்த்தியின் உடலில் கை கால்கள் கட்டப்பட்டு முகம் முழுவதும் டேப் பால் சுற்றப்பட்டு இருந்தது கொடூரமாக இருந்தது.

சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும், தொழிலதிபருமான சிவமூர்த்தி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது அந்த பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கடல் அலையில் சிக்கி இரட்டையர்கள் பரிதாபமாகப் பலி : சோகமாய் மாறிய மகிழ்ச்சியான தருணம்!!

மேற்கு வங்கத்தில் மந்தர்மணி பீச்சுக்கு சென்ற இரட்டையர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற மந்தர்மணி பீச் உள்ளது, இந்தியாவிலேயே மோட்டார் வாகனங்கள் செல்லும் வசதி கொண்ட ஒரே பீச் என்ற பெருமை கொண்டது.

சமீபகாலமாக இங்கு நடத்தப்படும் போட்டிகள் விதிமுறைகளையே மீறியே இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், மால்டா மாகாணத்தை சேர்ந்த இரட்டையர்கள் Arkaprabha Chakraborty மற்றும் Alolika Bengali, இருவரும் தங்களது நண்பர்களுடன் இந்த பீச்சிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுகிழமை நால்வரும் சுற்றுலா சென்ற போது, இளம்பெண்ணை தவிர மற்ற மூவரும் கடல் நீருக்குள் இறங்கியுள்ளனர்.

அப்போது அவர்களை திடீரென வந்த அலை ஒன்று அடித்து சென்றுள்ளது, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் இரட்டையர்கள் உயிரிழந்துவிட்டனர்.

இதற்கு முன்னரும் கடந்த சில ஆண்டுகளாக அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, ராட்சத பலூன்கள் மூலம் எச்சரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரம் வரை நீச்சல் அடிக்கலாம் என்பது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியுடன் மூன்றாவது திருமணம் : மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளி பெண்ணை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சோலை கணேஷ், சிங்கப்பூரில் பணியாற்றிய போது விவாகரத்து ஆனதை மறைத்து கடந்த 2010ம் ஆண்டு தமிழ் வம்சாவளி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வசதியான பெண் என்பதால் வரதட்சணையாக பிளாட் ஒன்றை வாங்கி தன்னுடைய பெயரிலும் பதிவு செய்து கொண்டாராம்.

இந்நிலையில் சோலை கணேஷ் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்ததால் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இங்கு வந்து, இரண்டு திருமணங்களையும் மறைத்து மூன்றாவதாக 17 வயது சிறுமியை மணமுடித்துள்ளார்.

இதுதெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சிங்கப்பூர் உடனடியாக புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அத்துடன் தன்னை ஏமாற்றி ரூ.72 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாகவும், இனியும் யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் புகார் அளித்தாகவும் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து சோலை கணேஷை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் இறந்து கிடந்த நபர் : வெளியான பின்னணித் தகவல்கள்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நபர் ஒருவர் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிர்வாணமாக இறந்து கிடந்ததன் பின்னணில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

முத்துபட்டுராஜா என்பவர் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

முத்துபட்டுராஜா, நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பெண் தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதில், சுரேஷ் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பட்டுராஜா கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து கைதான இருவரும் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நாங்கள் இருவரும் பட்டுராஜாவுடன் சேர்ந்து தான் வேலை பார்த்தோம். இதண்டு மாதங்களுக்கு முன்னர் பட்டுராஜாவால் எங்களது வேலை பறிபோனது.

மேலும், பட்டுராஜாவின் வீட்டுக்கு அருகில் சுரோஷ் வசித்து வந்ததால் அவரது மனைவியை அவ்வப்போது பட்டுராஜா கிண்டல் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் பட்டுராஜா கேட்கவில்லை. ஏற்கனவே வேலை போன கோபத்தில் இருந்ததால், பட்டுராஜாவை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 23ம் திகதி இரவு மதுகுடிக்க அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போதை தலைக்கேறியதும் நண்பர்கள் இருவரும் பட்டுராஜாவை கொடூரமான முறையில் கொலைசெய்துள்ளனர்.
தற்போது, இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கு 3500 தொலைபேசி அழைப்புக்கள் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

இராணுவ மேஜரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு இராணுவ மேஜர் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 6 மாதங்களில் 3500 போன் கோல் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் இராணுவ மேஜர் அமித் திவிவேதி. இவரின் மனைவியான சைலஜா கடந்த சனிக்கிழமை டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, மற்றொரு இராணுவ மேஜரான நிக்கல் ஹண்டா தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அவர் உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால், இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது சில பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சைலஜாவை கொலை செய்த இராணுவ மேஜர் நிகில் ஹண்டே கடந்த ஜனவரி மாதம் முதல் கொலை நடந்த நாள்வரை 3500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்

இத்தனை அதிகமான போன் கால்களை செய்திருப்பதன் மூலம் அவர் சைலஜா மீது அதீத பற்று கொண்டிருந்ததாகத் தெரிவதாக வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்து வந்துள்ளார். அங்குதான் நிகில் ஹண்டாவுக்கு சைலஜாவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒருகட்டத்தில் அமித்துக்கு டெல்லிக்கு பணியிட மாறுதலாகியுள்ளது. ஆனாலும் நிகில்-சைலஜா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது டெல்லி வந்த நிகில் சைலஜாவின் திருமணம் செய்து கொள்ளும் படி கூறவே, அவர் மறுப்பு தெரிவிக்கவே இது கொலையில் போய் முடிந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் சைலஜாவும் நிகிலும் ஒருநாள் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதைக் மேஜர் திவிவேதி கவனித்து இருவரையும் கண்டித்துள்ளார்.

அதன் பின் மேஜர் ஹண்டாவையும் வன்மையாகக் கண்டித்தும் இருக்கிறார். தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறார்.

இதேபோல், மேஜர் நிகில் ஹண்டாவின் மனைவியும் நிகிலுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு கடலில் கப்பல் விபத்து : அதிரடியாக செயற்பட்ட இலங்கை கடற்படை!!

கொழும்பு துறைமுகத்திற்கு 11.6 கடல் மைல் தூரத்தில் “முத்தா பயனியர்” என்ற வர்த்தக கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

டொமினிக்கா கொடியுடன் பயணித்து கொண்டிருந்த வர்த்தக கப்பலின் கப்டனால் கப்பலை கட்டுப்படுத்த முடியாமல் இடது பக்கமாக சரிந்துள்ளதாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் கப்பல் ஊழியர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கப்பலில் காப்பற்றப்பட்டவர்களில் 10 இலங்கையர்கள் மற்றும் இந்தோனேசிய நாட்டவர்களும் அடங்குகின்றனர்.

இந்த கப்பலின் உரிமையாளர் இந்தியர் எனவும், குறித்த கப்பலில் இருந்து மீட்டகப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கோர விபத்து : ஒருவர் பலி : பேருந்தை நிறுத்தாமல் தப்பிச் சென்ற சாரதி!!

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர், செல்வநகர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி 2 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த சிறு வியாபாரியான 61 வயதுடைய பத்திரப்பன் சேது நம்பு என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நகரில் இருந்து தாழ்வுபாடு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எழுத்தூர் செல்வநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியுள்ளது.

பின்னர் தாழ்வுபாட்டு பிரதான வீதியூடாக எமிழ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு மாங்காய் கொள்வனவு செய்து கொண்டு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் மீதும் பேருந்து மோதியுள்ளது.

இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார். பேருந்தின் சாரதி பேருந்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்தில் ஒன்று கூடிய மக்கள் காயமடைந்த நபரை மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் எமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பத்திரப்பன் சேது நம்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதி இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புறாவுக்கு ஆசைப்பட்டதால் சித்திரவதை செய்யப்பட்ட யாழ். சிறுமி : மாட்டுக் கயிற்றால் உயிர்போன பரிதாபம்!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போதும் சில விடயங்கள் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் 21 வயதுடைய இளைஞன் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து பல விடயங்கள் வெளிவந்திருந்தன.

இந்த கொலையை தானே செய்ததாகவும், தோட்டுக்காக கொலை செய்ததாகவும், தான் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது குறித்த நபர் தெரிவித்த மேலும் சில வாக்குமூலங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பவ தினத்தன்று சிறுமி பாடசாலை முடிந்து வந்ததும் புறா காட்டுவதாக ஆசை வார்த்தை காட்டி மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து குறித்த சிறுமி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய துன்புறுத்தல்களால் குறித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். பின்னர் சிறுமியின் தோட்டை எடுத்து விட்டு, மாடுகள் கட்டும் கயிற்றால் சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளார்.

இவை அனைத்தும் 21 வயது இளைஞனின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கூறியது போலவே சிறுமியின் சீருடை, புத்தகப்பை என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை சிறுமியை காணவில்லை என ஊர் மக்கள் தேடும் போது இந்த இளைஞனும் சேர்ந்து சிறுமியை தேடியுள்ளார்.

ஆனால் இந்த இளைஞன் இதன்கு முன்னர் அப்பகுதிக்கு வராத நிலையில், அன்று மட்டும் வந்தது ஏன்? சிறுமியை தேடுவது ஏன்? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பொலிஸாரிடம் இது குறித்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், தந்தையை பழிவாங்குவதற்கு சிறுமி றெஜினாவை இளைஞர்கள் கொலை செய்துள்ளனர் என்றும், இதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உதவியுள்ளார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குறித்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு அடங்கி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சிறுமியின் கொலையில் பல சந்தேகங்கள் எழுவதுடன் உண்மை கொலைகாரன் யார்? ஏன் கொலை செய்தான் என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேங்காய் விலையை காட்சிப்படுத்த தவறிய வியாபார நிலைய உரிமையாளருக்கு தண்டம் அறவீடு!!

வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றில் நேற்று தேங்காயின் விலையை விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச்சபையின் அதிகாரிகளினால் தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

வவுனியா சாந்ததோலையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் சென்ற விலை கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் வியாபார நிலையத்திலுள்ள பொருட்களை பரிசோதனைக்குட்படுத்தினார்கள். இதையடுத்து வர்த்தக நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட விலைப்பட்டியல் விளம்பரப்பலகையில் தேங்காயின் விலை காட்சிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து குறித்த வியாபார நிலைய உரிமையாளருக்கு ரூபா 3000 தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவில் தேங்காய் வியாபாரம் மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் தேங்காயின் விலை காட்சிப்படுத்தப்படுவதில்லை.

நகர்ப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒரு சட்டமும் கிராமப்புங்களிலுள்ள வியாபார நிலையங்களுக்கு வேறு ஒரு சட்டத்தினையும் விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கஞ்சாவுடன் இராணுவ வீராகள் இருவர் கைது!!

இன்று (27.06) அதிகாலை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொலிசாரால் இரு இராணுவ வீரர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சமபவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற பேருந்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது இராணுவ வீரர் பொதியினுள் மறைத்து எடுத்துச் சென்ற இரண்டு கிலோ கேரளா கஞ்சுவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

அதே பேருந்தில் ஹொறவப்பொத்தானையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரிடம் சந்தேகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது சிறியளவிலான 6 கஞ்சா பொதிகள் மீட்டுள்ளதாகவும் தற்போது இவர்கள் இருவரையும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரணகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இளைஞர் வீடு போய் சேர முன்னர் விபத்தில் பலி!!

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக தாயகம் திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சற்று முன்னர் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவூதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக காத்தான்குடி ஊடாக அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் தம்புள்ளை அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்த நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் புறப்படத்தயாராகி சாரதி வண்டியை பின்னோக்கிச் செலுத்தியுள்ளார்.

இதன்போது அவசரமாக வண்டியில் ஏற முற்பட்ட குறித்த இளைஞர் வண்டிக்கும் அங்கிருந்த மரம் ஒன்றுக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சவூதியில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் வீடு சேரமுன்னர் உயிரிழந்த சம்பவம் பேருந்தில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோகமயமானது மட்டுநகர் : பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது!!

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்தும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இதில் வானின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். மேலும், பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 10 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் மோசமாக காயமடைந்துள்ள உயிரிழந்த சிறுவனின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவான மக்களின் கண்ணீருடன் ரெஜினாவின் உடல் நல்லடக்கம்!!

யாழ். சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று மாலை ரெஜினா என்ற ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று பிற்பகல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் வீட்டில் இடம்பெற்ற இறுதி கிரியை நிகழ்வுகளை தொடர்ந்து, சிறுமி ரெஜினாவின் சடலம் திருவடிநிலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில், பொது மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தந்தையை பழிதீர்க்க சிறுமி ரெஜினாவை கொலை செய்த இளைஞர்கள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

தந்தையை பழிதீர்க்கும் நோக்கிலேயே சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த கொலைக்கு சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் துணைபோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று முன்தினம் மாலை ரெஜினா என்ற ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.

“சம்பவம் தொடர்பான விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது.

எனினும் தோடுகளை மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காட்டமுடியவில்லை. சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

அத்துடன், சந்தேகநபர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இதனை கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை அறிந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் தந்தையை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியோடு பிரதான சந்தேகநபர் இருந்துள்ளார். இதற்காக சிறுமி ரெஜினாவை கொலை செய்துள்ளனர். இதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ரெஜினா கொலை செய்யப்படுவதற்கு முன் இத்தனை கொடூரங்களா : வெளிவந்துள்ள பதைபதைக்கும் தகவல்!!

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினா பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி உ.மயூரதன் குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா, கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.

மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார். தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலை 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கு வரவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்ததனையடுத்து குறித்த சிறுமியியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.