நெல்லை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்பாலன் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
செந்தில்பாலனின் தந்தை பூ விவசாயம் செய்து, அவரை படிக்க வைத்துள்ளார். தினமும் வியாபாரத்திற்காக அதிகாலையில் பறிக்கப்படும் பூக்களை தோவாளை பூ மார்கெட்டிற்கு செந்தில்பாலன் தான் கொண்டு சென்றுள்ளார்.
அதேபோல் இன்றும் தனது இருசக்கர வாகனத்தில் தோவாளை மார்க்கெட் பூவை கொடுத்து விட்டு, திரும்பி ஊருக்கு வரும் போது காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் வருகைக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த சரக்கு ரயில் முன் திடீரென பாய்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பின்னர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் செந்தில்பாலன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், செந்தில்பாலன் ஒரு பெண்ணை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததும், தனது காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இறப்பது முன்னால் அவர் தனது மொபைல் போனில் இதயம் உடைந்தது போல் முகப்புப் படத்தை வைத்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், வறுமையிலும் தந்தை பூ விற்று படிக்க வைத்த நிலையில், அதை உணராமல் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மகனை நினைத்து தந்தை கதறி அழுதுள்ளார்.
தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதன் பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி தரப்பட்டது.
இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸில் கோஷ்டி பூசல் காரணமாக நக்மாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்தன.
இதனால் அவரிடமிருந்து சமீபத்தில் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நக்மாவின் பதவி பறிக்கப்பறிப்புக்கான காரணம் குறித்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கட்சியின் சீனியர்களை அவர் மதிக்கவில்லை. அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்.
நடிகை குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் இடையே சீனியர் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. நக்மாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
இது போன்ற பல தவறான விடயங்களை அவர் செய்ததால் இது குறித்து கட்சி மேலிடத்திக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்தே அவர் பதவி பறிக்கப்பட்டது என கூறியுள்ளனர்.
பொலிசாரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் பெங்களூரு பொலிசாரால் கோவை அருகே கைது செய்யப்பட்டார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர்.
இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சுந்தர் கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில் அங்கிருந்த நடிகர் துனியா விஜய் பொலிசாரை திசைதிருப்பும் நோக்கில் அவர்களுடன் பேச்சு கொடுத்து சம்பவ இடத்தில் இருந்த சுந்தரை தப்பிக்க விட்டார். பின்னர் துனியா விஜய் அங்கிருந்து தலைமறைவானார்.
இது குறித்து பெங்களூர் பொலிசார் துனியா விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் நேற்றிரவு கோவை அருகே அவரை கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் சல்மான் கான் (26). இவரும் மனிஷா நேகி (21) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் ஒத்து கொள்ளவில்லை. இதையடுத்து வீட்டை விட்டு சல்மானும், மனிஷாவும் வெளியேறியுள்ளனர்.
ஆனால் குடும்பத்தினரை போன் மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவோம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள ஒரு இடத்தில் கார் ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது.
இதை பார்த்த மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காரை சோதனை செய்தனர்.
அப்போது உள்ளே சல்மானும், மனிஷாவும் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ள சடலமாக கிடந்துள்ளனர்.
இருவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை இவர்கள் மரணத்தில் சந்தேகம் எழாத நிலையில் இதை தற்கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையில் சல்மான் சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைதள பக்கத்தில், தற்கொலை வலியை முடிவுக்கு கொண்டு வராது, நமது வலியானது மற்றவர்களுக்கு தான் போகும், இதனால் தான் நான் இன்னும் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சல்மானின் காதல் குறித்து மனிஷா வீட்டில் பேச இருந்ததாகவும் அதற்குள் அவர்கள் இந்த முடிவை எடுத்தது அதிர்ச்சியளிப்பதாகவும் சல்மான் குடும்பத்தார் கூறியுள்ளனர்.
நுண்கடன் நிதியினால் வடக்கில் 59 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் அமையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது மேலும்,
போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறிய பின்னர் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கடன் பெற்று அதனை மீள செலுத்துவதில் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கடனை திருப்பி செலுத்துவதில் சிரமத்தினை எதிர்கொள்பவர்களில் ஒரு சிலர் தற்கொலை எனும் வழியை தேடிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் வடக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் 59 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் இது வரையில் 17 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்தபோது குறித்த அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பொறுப்பதிகாரி கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 49 அகவையுடைய வெண்டகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் லிப்டில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபுர நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்ட 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிப்டில் இருந்து எவ்வாறு விழுந்தார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
இந்த அனர்த்தம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
ஜூன் 7ஆம் திகதி கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42ஆவது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரண்டு ஈழத்தமிழர்கள் விஜய் தணிகாசலமும் லோகன் கணபதியும் வரலாற்றில் முதற்தடவையாக தெரிவாகியுள்ளனர். மூன்றாவது தமிழர் ரோசன் நல்லரட்ணம் வெறும் 81 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அவர்கள் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு…
ஸ்காபரோ ரூச்பார்க் கட்சி வாக்குகள்
பெயர் கட்சி வாக்குகள்
விஜய் தணிகாசலம் பிசி 16224
பெலிசியா சாமுவேல் என்டிபி 15261
சுமி சான் லிபரல் 8785
மார்க்கம் தோன்கில்
பெயர் கட்சி வாக்குகள்
லோகன் கணபதி பிசி 18943
ஜெனிற்றா நாதன் லிபரல் 9160
சின்டி கக்கல்பேர்க் என்டிபி 8010
ஸ்காபரோ கில்வூட்
பெயர் கட்சி வாக்குகள்
மிட்சி கன்டர் லிபரல் 11965
ரோசன் நல்லரட்ணம் பிசி 11884
ரொம் பக்வூட் என்டிபி 9910
புலம்பெயர் தமிழர் வரலாற்றில் தம்மை ஒரு அரசியல் சக்தியாகவும் தாம் வாழும் நாட்டில் நிலைநிறுத்திக் கொள்வதில் கனடியத் தமிழர்கள் ஏனையவர்களுக்கு உந்துசக்தியாக உள்ளனர்.
தம் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முதற்தடவையாக ஒருவரை 2011இல் தெரிவு செய்த பெருமையும் கனடியத் தமிழர்களையே சாரும். அதேபோன்று 2015இலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பினர்.
இருமுறையும் தமிழர்கள் அதிகம் வதியும் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதியிலேயே அவ்வரலாறு படைக்கப்பட்டது. முதலில் என்டிபி கட்சி சார்பிலும் பின்னர் லிபரல் கட்சி சார்பிலும் முறையே ராதிகா சிறிசபேசனும் கரி ஆனந்தசங்கரியும் தெரிவாகினர்.
அதேபோன்று மார்க்கம் நகரசபை கவுன்சிலராக லோகன் கணபதி முதன்முறையாக தெரிவாகி நீண்டகாலம் பணியாற்றி இன்று ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
ரூச்பார்க் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரொரன்ரோ பாடசாலைச் சபைக்கு தெரிவான என்டிபியின் முக்கிய பிரதிநிதியான நீதன் சான் பின்னர் கனடாவிலேயே பெரிய மாநகரசபையான ரொரன்ரோ மாநரசபைக் கவுன்சிலராக தெரிவு செய்து முதல் மாநகரசபைப்பிரதிநிதியை தெரிவு செய்த பெருமையையும் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி மக்களே மீண்டும் தட்டிச் சென்றனர்.
லோகன் கணபதி அவர்களின் வெற்றி 124 இல் 76 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை ஆட்சியமைக்கும் பிசி எனப்படும் முற்போக்கு கன்சவேட்டிவ் கட்சியால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறே அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெற்று இலகுவாக பெரு வெற்றியை அவர் பெற்றார். அவர் சார்ந்த ஜோர்க் பிரதேசத்தில் கன்சவேட்டிக் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி இலகுவான வெற்றிகளைப் பெற்றுக் கொண்டது.
ஏனைய தமிழர்கள் கடும் போட்டியைக் கொடுத்தாலும் வெற்றி பெறுவார்கள் என்பதில் கன்சவேட்டிவ் கட்சிக்கு பெரும் நம்பிக்கை இருக்கவில்லை. ஸ்காபுரோ பகுதியில் உள்ள மூன்று தொகுதிகளைத் தவிர ஏனைய மூன்று தொகுதிகளிலும் கடும் போட்டியே நிலவியது. அதிலும் இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகளில் ஸ்காபுரோவில் தமிழர்கள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளும் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் விஜய் மற்றும் ரோசானுக்கு எதிராக சில தமிழர்களால் மைய ஊடகங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசமப் பிரச்சாரங்கள் அவர்கள் வெற்றி குறித்த சந்தேகத்தை மேலும் எழுப்பியிருந்தது.
ஆனால் அவ்வாறானவர்களின் முயற்சியால் துவண்டு போகாது அதை சவாலாக எடுத்து அத்தொகுதிகளின் மக்களும் வேட்பாளர்களும் தொண்டர்களும் ஓர்மத்துடன் இயங்கி விஜய் தணிகாசலம் என்ற இளையவனின் வெற்றியை ஈற்றில் 1000 பெரும்பான்மை வாக்குகள் என்ற நிலையில் சாதித்து அரசியல் மட்டங்களில் தமிழ் மக்களின் பலத்தை ஒரு காட்டமான செய்தியாக சொல்லியுள்ளனர் என்பதே இவ் வெற்றியின் மகுடம்.
அனைத்து தமிழர்களும் பெருவாரியான ஏனைய இனமக்களின் வாக்குகளையும் தமது வெற்றிக்காக பெற்றமை தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை சுட்டி நிற்கிறது. ரோசானின் வெற்றி வெறும் 81 வாக்குகளால் தவறிப் போனது.
தவிர 124 ஆசனங்களில் 76 ஆசனங்களைப் பெற்று முற்போக்கு கன்சவேட்டிவ் கட்சி டக் போட் தலைமையில் ஆட்சியமைக்கிறது. புதிய சனநாயக்கட்சி 40 ஆசனங்களைப்பெற்று வலுவான எதிர்கட்சியாகியுள்ளது.
இதுவரை 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி 7 ஆசனங்களை மட்டுமே பெற்று படு தோல்வியடைந்துள்ளது. 150 வருடகால வரலாற்றில் இதுவே அதுபெற்ற குறைந்த ஆசனம். உத்தியோகபூர்வ கட்சி அந்தஸ்திற்கான 8 ஆசனங்களையும் அது பெறத்தவறிவிட்டது. வரலாறாக 1923 இல் பெற்ற 21.8 சதவீத வாக்கிலும் குறைந்தளவையே அது இம்முறை பெற்றுள்ளது.
இம்முறை நாலாவது கட்சியான கிரீன் கட்சி எனப்படும் பசுமைக்கட்சியின் தலைவர் குவல்வ் தொகுதியில் இருந்து தெரிவாகி அக்கட்சியின் பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தவிர எனைய மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தத்தில் கனடிய தமிழர்காளல் மட்டுமன்றி உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கனடிய தேர்தல் முடிவுகள் உலகளாவிய தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகம் தருவதாயுமே அமைந்துள்ளது.
தென்மேல் பருவ நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும், எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லி மீற்றர் வரையான பாரிய மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக, மேல், தென், மத்திய, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டங்களிலும், காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் அளவில் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக, வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில், காற்றின் வேகம் இடைக்கிடை, மணிக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும், ஏனைய கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம், இடையிடையே மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடல் கொந்தளிப்பாக மாறலாம் எனவும் வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று(08.06) காலை உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்டிபியில் ஈடுபட்டுள்ள மூவரை மாவட்ட நீர் உயிரினச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் யோ.நிசாந்தன் தலைமையில் உத்தியோகத்தர்களான ச.சுதாகரன், கு.டியரூபன், செ.ரவிகரன், எஸ்.டி.எஸ்.கே.குமார ஆகியோருடன்
வவுனியா, மன்னார் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போதே சட்டவிரோத வலைகளுடன் படகுகள் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நிர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Digitek நிறுவனம் அறிமுகம் செய்துள்ள குட்டி சாதனம் இருந்தால், பொருட்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்நிலையில், மடிக்கணினி மற்றும் இதர சாதனங்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள Anti Lost Wireless Tracker அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Digitek நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தைக் கொண்டு களவு போகும் சாதனங்களை எளிதாக கண்டறிய முடியும். இந்த சாதனம் Digitek Tracker செயலியுடன் இணைக்கப்படுகிறது. இந்த சாதனத்தை Key Chain, Wallet, Laptop மற்றும் இதர சாதனங்களில் இணைத்துக் கொள்ளலாம்.
கைப்பேசி செயலியுடன் இணைக்கப்பட்டால், Tracker இருக்கும் இடத்தை கண்டறிய முடியும். மின்சாதனங்கள் மட்டுமின்றி, இந்த சாதனம் கொண்டு கார்களை பாதுகாக்க முடியும். Anti Lost Wireless Tracker சாதனத்தில் உள்ள In-Build அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும்.
எனினும், இது வேலை செய்யும் எல்லை அளவுகளை மாற்றியமைக்க முடியும். அதிகபட்சமாக, 30 மீட்டர்கள் பரப்பளவில் இயங்கும் Tracker, நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடக்கும்போது ஸ்மார்ட்போனில் அலாரம் அடிக்கும்.
எந்த சாதனத்தை Anti Lost Wireless Tracker-ஐ இணைத்தால், நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் அச்சாதனம் அசைந்தால் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும்.
Anti Lost Wireless Tracker சாதனத்தைப் பயன்படுத்தி, Remote முறையில் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கவும் முடியும். இதற்காக ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.
Anti Lost Wireless Tracker-க்கான செயலியை Google Play Store மற்றும் Apple App Store-களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த சாதனத்தை கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் வாங்க முடியும்
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழ்கிறார்.
இந்நிலையில் முதல்முறையாக அவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அர்ஜூன் பங்கேற்று விளையாடவுள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள சச்சின், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ராம் என்பவர் மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மலேசியா சென்ற பின்னர் ஒருமுறை மட்டுமே தமிழகத்திற்கு வந்துசென்றுள்ளார்.
அங்கு இவர் உழைக்கும் பணத்தினை ஒவ்வொரு மாதமும் தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைவைத்து தனது பிள்ளைகளை சித்ரா படிக்கவைத்துள்ளார்.
இந்நிலையில், தனது கணவன் அனுப்பிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சித்ரா, தனது கணவர் அருகில் இல்லாத காரணத்தால் ராஜா என்ற நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
இவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், இவரையே தனது கணவர் என அனைவரிடமும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் குழந்தைகளின் பள்ளிக்கூட விழாவுக்கு செல்கையில் கூட ராஜாவை அழைத்து சென்று இவர்தான் குழந்தைகளின் தந்தை என அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
இப்படி கணவன் அனுப்பும் பணத்தை வைத்து கள்ளக்காதலன் மற்றும் குழந்தைகளோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்த கணவர் ராம், தான் தமிழகம் வருவதை தெரிவிக்கவில்லை.
விமான நிலையத்தில் இறங்கிய கணவர் சந்தோஷமாக வந்துகொண்டிருக்கையில், சித்ரா தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, கோவா செல்ல திட்டமிட்டு அதன்படி, விமான நிலையம் சென்றுள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், விமான நிலையத்தில் வைத்து மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். மனைவியை நேராக வீட்டிற்கு இழுத்துசென்று, நடந்தவை குறித்து அனைத்தையும் அறிந்து, தனது மாமனார் மற்றும் பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மனைவி மற்றும் கள்ளக்காதலனை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
டோனி என்ற மூன்று வயது சிறுவன் பிறந்து 41 நாட்களில் பெற்றோர்களால் விளையாட்டுத்தனமாக ஊஞ்சலாடப்படும்போது கால்களின் எலும்புகள் முறிந்துள்ளது.
அதனைப் பற்றி கவலைப்படாத தாயும் தகப்பனும் 10 நாட்கள் தாமதித்து குழந்தையை மோசமான விபத்து என்று காரணம் கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
குழந்தை மருத்துவமனைக்கு வந்த போது மரணத்தின் விளிம்பில் இருந்தது. காரணம் 10 நாட்களாக கால்களின் எலும்புகள் முறிந்த நிலையில் உடனடியாக கவனிக்காததால் எலும்புகள் சீழ் பிடித்துள்ளன.
மேலும் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட 41 நாட்களே ஆன குழந்தை பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவாகவே இருந்துள்ளது.
குழந்தை 4 மாதங்கள் வரை மருத்துவமனையிலேயே இருந்துள்ளது. அதன் பின் கென்ட் பகுதியில் உள்ள கிங்ஸ் ஹில்லில் இருக்கும் பவுலா மற்றும் மார்க் ஹோகேல் ஆகிய இருவரின் பாதுகாப்பில் குழந்தை விடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய விபத்து என்று கூறி மருத்துவமனையில் சேர்த்ததாலும் காயம் செய்ததற்கான சாட்சியங்கள் இல்லாததாலும் டோனியின் பெற்றோர் மீது சிபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்தது.
அதனால் அந்தக் குழந்தை தனது பெற்றோரான டோனி ஸ்மித் (47) மற்றும் ஜோடி சிம்சன் (24) ஆகியோரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து வந்தது.
அதன்மூலம் தவறிழைத்த நிஜப் பெற்றோருக்கு ஆளுக்கு 10 வருடம் சிறை தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் இந்த வளர்ப்புப் பெற்றோரான பவுலா மற்றும் மார்க்.
தற்போது மூன்று வயதாகும் டோனி ஒரு தொலைக்காட்சி நிகழ்வின் நேரலையில் வந்து அனைவரையும் பார்த்து கையசைத்தது பார்ப்பவரின் கண்களை குளமாக்கியது.
காரணம் அத்தனை அழகான குழந்தை முழங்கால்களுக்கு கீழ் எதுவும் இல்லாமல் தனக்கு நடந்துள்ள சோகம் தெரியாமல் புன்னகைக்கிறது…
பெற்றோரின் கவனக் குறைவினால் கால்களை இழந்த டோனி இப்போது தனக்காக போராடிய வளர்ப்பு பெற்றோருடன் நிம்மதியாக வளர்ந்து வருகிறான்.
ஸ்வீடனில் பொதுமக்கள் மீது லொறியை மோதவிட்டு 5 பேரை கொலை செய்த ஐ.எஸ் பயங்கரவாதிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள நீதிமன்றம் வியாழனன்று குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 7 ஆம் திகதி ஸ்டாக்ஹோம் நகரில் அமைந்துள்ள முக்கிய வணிக வீதியில் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டவரான 40 வயது Rachmat Akilow திட்டமிட்டே குறித்த தாக்குதலை முன்னெடுத்துள்ளார். சம்பவத்தன்று திருடிய லொறி ஒன்றை பொதுமக்களிடையே செலுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் 5 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதுடன், சுமார் 150 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்வீடன் அரசு ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு முன்னெச்சரிக்கை செய்யவே குறித்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையின்போது Rachmat Akilow தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் திருமணம் செய்துகொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார்.
அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
ஆனால், திருமணத்திற்கு வரவிருந்த தனது பெற்றோர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு, பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என ஸ்ரீராம் கூறியுள்ளார்.
இதன்படி, இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது பெற்றோரிடம் மணமகளை அழைத்து செல்லாமல் ஒரு சிறிய அறை எடுத்து தங்கவைத்துள்ளார் ஸ்ரீராம்.
இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், உனக்கு தாலிகட்டிய ஸ்ரீராம் ஆண் அல்ல, அவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பெற்றோர் பொலிசில் தெரிவித்துள்ளனர்.
அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.
தனக்கு ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக இப்படி நாடகமாடினேன் என கூறியுள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் பொலிசாரிடம் அளிக்கப்படவில்லை.
பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து மோசடிக்கு முயன்ற இந்த ருசிகர சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.