நடுரோட்டில் கணவன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய காவல்துறையினர்!!

திருச்சி காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவன் மனைவி தற்போது திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

திருச்சி சிறுகனூர் இந்திரா காலனியை சேர்ந்தவர்கள் வின்சென்ட் (43) சோபியா (30). வெளிநாட்டில் ஓட்டுநராக வின்சென்ட் பணிபுரிகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜோதிவேல் எனும் இளைஞர் (23) சோபியாவிடம் தகராறு செய்துள்ளார். தீவிரமடைந்த தகராறில் ஜோதிவேலுவால் சோபியா தாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிய காவல்துறையிடம் சென்ற போது இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறது காவல்துறை.

வெளிநாட்டில் இருந்து வந்த வின்சென்ட் தன் மனைவியை தாக்கிய ஜோதிவேலுவிடம் அது பற்றி கேட்டுள்ளார். வாய்தகராறு ஏற்பட்டு கொண்டிருக்கும்போதே ஜோதிவேலுவின் மனைவி தன் கணவரை தாக்க வந்துள்ளதாக காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாரை அடுத்து வின்சென்ட் வீட்டிற்கு சென்ற காவலர்களிடம் தான் மது அருந்தியிருப்பதால் காலை ஸ்டேஷன் வருவதாக கூறியிருக்கிறார் வின்சென்ட்.

ஆனால் காவல்துறையினர் வின்சென்டை அடித்து இழுத்து செல்ல முயன்றனர். அப்போது தடுப்பதற்காக உதறிய வின்சென்டின் கைகள் காவல் ஆய்வாளர் மீது பட்டுள்ளது. தன்னை தாக்க முயன்றதாக கருதிய ஆய்வாளர் செல்வராஜ் மேலும் சிலரை காவல் நிலையத்திலிருந்து வர சொல்லியிருக்கிறார்.

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வின்சென்ட்டை அடித்து உதைத்திருக்கின்றனர். இதனை தடுக்க வந்த மனைவி சோபியாவையும் அடித்து உதைத்த காவல்துறை அவரது உடைகளையும் கிழித்திருக்கிறது.

இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அங்குள்ள ஊர்க்காவல் படையை சேர்ந்த சத்யமூர்த்தி இந்த இளைஞரின் செல்போனை பிடுங்கி உடைத்து வீசியிருக்கிறார். இதனால் அந்த போன் சிதறியது.

காயமடைந்த இருவரும் திருச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறையே இப்படி அத்து மீறி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

வேலையை விட்டு நிறுத்திய ஆத்திரத்தில் முகாமையாளரை துப்பாக்கியால் சுட்ட ஊழியர் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் பணியை விட்டு நீக்கிய மனிதவள மேலாளரை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரை சேர்ந்தவர் பினீஸ் சர்மா (50). இவர் மிட்சுபிஷி நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சர்மா நேற்று தனது காரில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த இரண்டும் பேர் காரை வழிமறித்துள்ளனர்.

ஆனால் சர்மா காரை நிறுத்தாமல் சென்ற நிலையில் பைக்கில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சர்மாவை சுட்டுள்ளார்.

கழுத்தில் குண்டடி பாய்ந்த சர்மா எப்படியோ சமாளித்து காரை அலுவலகம் வரை ஓட்டி சென்ற நிலையில் அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சர்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையில் சம்பவத்தில் தொடர்புடைய தயானந்த் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ஜோகிந்தர் சிங்கை தேடி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ஜோகிந்தர் சிங், சர்மா வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோகிந்தரை பணிநீக்கம் செய்தது சர்மா தான், அந்த ஆத்திரத்தை அவரை ஜோகிந்தர் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் தற்போது இச்செயலில் ஈடுபட்டுள்ளான் என கூறியுள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது : அரசு வெளியிட்ட ஆதாரம்!!

போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் அண்மையில் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் எலோசியஸ் எல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாகும்.

சட்டவிரோதமாக இத்தாலியில் நுழைவதற்காக 28 ஆயிரம் யூரோ வரை செலுத்தும் நபர்களும் உள்ளதாகவும், போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையில் இருந்து இத்தாலிக்கு நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நடமாடும் குழுவினால் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக பலேர்மோ நீதிமன்றத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்களின் புகைப்படங்களை இத்தாலி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

-தமிழ்வின்-

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸாக மாறிய எயார் சிலோன் : அரிய புகைப்படங்கள் உள்ளே!!

ஒரு நாட்டின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் அல்லது ஆகிக்கம் செலுத்தும் பிரதான காரணிகள் அந்நாட்டின் சேவைகள் மற்றும் முக்கியத்துறைகளை மேம்படுத்துவதில் அந்த அரசாங்கம் காட்டும் கரிசனைப்போக்குதான்.

இந்நிலையில், நம் நாட்டைப்பொறுத்தவரையில் இயற்கை எழில் தவழும் ஒரு சுவர்க்கத் தீவு என்றே கூறலாம், இயற்கை அன்னை வஞ்சனையின்றி நம் நாட்டிற்கு கொட்டிக்கொடுத்த வளங்களை காண வெளிநாட்டில் இருந்து நம் நாட்டை நோக்கி படையெடுக்கும் இயற்கையின் காதலர்கள் கோடி..

இந்நிலையில், அந்த சுற்றுலாத்துறையை மேலும் அதிகரிக்கவென நம் நாட்டில் வழங்கப்படும் சேவைகளும் அதிகம், அதில் ஒன்றுதான் போக்குவரத்து, அதிகம் பயன்படுத்தப்படுவது வான் வழியான போக்குவரத்துதான்.

தற்போது நவீன வசதிகளுக்கேற்ப விமான போக்குவரத்து வெகு வளர்ச்சி கண்டுள்ளது, நம் நாட்டின் விமான சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை மேலும் விசாலப்படுத்தியுள்ளன.

தற்போது இயங்கிவரும் விமான சேவையான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெகு பிரபல்யமானது, ஆனால் இந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பழைய பெயர் எயார் சிலோன் (Air Ceylon) என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

இந்நிலையில், அக்காலத்தில் எயார் சிலோன் என்று அழைக்கப்பட்ட விமான சேவையின் பழைய புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறித்த புகைப்படங்களுள் சில,

கடலுக்குள் மூழ்கிப் போகும் இலங்கையின் ஒரு பகுதி!!

புத்தளம் கடற்கரையோர பகுதியிலுள்ள மைதானம் ஒன்று கடலில் மூழ்கி வருவதாக தெரிய வந்துள்ளது. மஹவெவ – மடட்கொட்டுவ கோல்டன் பீச் மைதானம் வேகமாக கடல் நீரில் மறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

150 மீற்றர் தூரம் வரையிலான மைதானத்தின் பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடலுக்கு நேராக இருந்த வீதியும் முறையாக கடலுக்கு இரையாகி வர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆபத்து தொடர்பில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும், எந்த பலனும் இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பருவ காலம் ஆரம்பித்துள்ளமையினால் கடல் அரிப்பின் வேகம் அதிகமாக உள்ளதென கூறப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக பிரதேசத்திற்கு உள்ள ஒரே மைதானம் மற்றும் வீதி கடலுக்கு இரையாகும் ஆபத்தில் உள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிப்பு!!

கனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரொரண்டோவில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி காலை 4 மணிக்கு இறுதியாக பாஸ்கரன் குடும்பத்துடன் பேசியுள்ளார். Victoria Park Avenue மற்றும் Hwy. 401 பகுதியில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஒரே நாளில் அவர் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Victoria Park Avenue மற்றும் Hwy. 401 பகுதியில் அவரது வாகனம் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் பொலிஸார் அவர் காணாமல் போய்விட்டார் என்பது குறித்து வருத்தமடைந்துள்ளனர். எனினும் பொலிஸார் அவர் உள்ள இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

வவுனியாவில் நீண்ட காலமாக தடை செய்யப்பட்ட வீதி பொது மக்களின் பாவனைக்கு!!

 

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்று வட்ட வீதிக்குச் செல்லும் வீதி நீண்ட காலமாக பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவ் வீதி மக்களின் பாவனைக்குத் திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நகரசபைத்தவிசாளர் இ.கௌதமன் மற்றும் நகரசபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்று (09.06.2018) காலை சென்று அவ் வீதியிலுள்ள தடைகளை அகற்றியதுடன், இன்றுமுதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியைத் திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் சந்தை சுற்றுவட்ட வீதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தி இலகுவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கூமாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு!!

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நேற்று (08.06.2018) ஆசிரியரும் UNFPA இளைஞர் கழகத்தின் தலைவி நிலூஷா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வுக்கான கருத்தரங்கில் UNFPA தலைவர் றெக்சன், வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் அருள், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் பிரதீபன், மீடியா மாணவன் சிம்சுபன், குருநாகல் பல்கலைக்கழக மாணவன் நிவோதன், கூமாங்குள சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை சிவாஜினி மற்றும் கபிலன் கலந்து கொண்டார்கள்.

இவ் நிகழ்விற்கு தமிழ் தாய் இளைஞர் கழகத்தால் மாணவர்களுக்கு அன்பளிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் மாணவர்களுக்கான மதிய நேர பானத்தினை அஸ்திரம் அமைப்பு வழங்கி வைத்தார்கள்.

வவுனியாவில் 8 மாதக் குழந்தை கடத்தல் விவகாரம் : பின்னணியில் இத்தனை நபர்களா?

வவுனியாவில் அண்மையில் குட்செட் வீதியிலுள்ள 8 மாத ஆண் குழந்தை அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 6 மர்ம நபர்களினால் கடத்தப்பட்டு 3 தினங்களின் பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் கடந்த 04ம் திகதி மேலும் ஒரு சந்தேக நபரான நந்தகோபால் கோபால் என்ற 33 வயதுடைய புதுக்குடியிருப்புப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நேற்றையதினம் (08.06.2018) புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கயஸ்ரக வாகனத்துடன் 9 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 12 பேரிடமும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் பெரும் பரபரப்பு : இறுதிக் கிரிகையின் போது இரண்டாவது முறையாகவும் உயிர்பிழைத்த சிறுமி!!

உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் உள்ள இரண்டு வயது சிறுமி ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 15ம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று சிறுமிக்கு இறுதி கிரியைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், சிறுமியின் உடலில் இருந்து திடீரென சிறுநீர் மற்றும் மலம் என்பன வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.





இதனையடுத்து, குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கொண்டு சென்ற நிலையில், உறவினர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், குறித்த குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்து மீண்டும் இன்று இறுதி கிரியைகள் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், குழந்தையின் நாடித்துடிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி கிரியைகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுமியின் உடலில் அடிக்கடி நாடி துடிப்பு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும், சிறுமியின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறியுள்ளதுடன், சளி மற்றும் வியர்வையும் வெளியேறியுள்ளது.

எவ்வாறாயினும், சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்று நாட்களை கடந்துள்ள போதிலும், உயிரிழந்தவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் எந்த மாற்றமும் சிறுமிக்கு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி உயிருடன் இருப்பதாக முழுமையாக நம்பும் உறவினர்கள், சிறுமி விரைவில் நலம்பெற வேண்டும் என இறைபிரார்த்தனையில், ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

 

யாழ். மானிப்பாயில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்!!

யாழ். மானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழுவினர், வீட்டிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்களில் வந்த 6 பேர் இந்த சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வீட்டின் கதவு, யன்னல்கள், அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இளைஞனின் உயிரைப் பறித்த தாமரைக் கோபுரம்!!

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாமரை கோபுரத்தின் லிப்டில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோபுர நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்ட 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிப்டில் இருந்து எவ்வாறு விழுந்தார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. இந்த அனர்த்தம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்ணெண்ணெய் விலை குறைப்பு : அரசாங்கம் அறிவிப்பு : விபரம் உள்ளே!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் திலீப் வெதஆரச்சி இதனை தெரிவித்துள்ளார். 25 முதல் 30 ரூபா வரையில் விலை குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவுக்கும் 80 ரூபாவுக்கும் இடையிலான விற்பனை விலைக்கு குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், 44 ரூபாவாக காணப்பட்ட மண்ணெண்ணெய் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வானில் தோன்றிய திகில் காட்சி!!

கொழும்பு வான்பரப்பில் திடீரென மாற்றம் எற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் முகில் கூட்டம் திடீரென கறுப்பு நிறத்தில் பூமியை நோக்கி வருவது போன்று காட்சியளித்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதுவொரு திகில் நிறைந்த காட்சியாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளமையால் எதிர்வரும் நாட்களில் நாட்டிலும் அதனை சூழவுள்ள பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு வான்பரப்பில் மாறுபட்ட காட்சி தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் 90 வயது மூதாட்டியை கொடூரமாக அடித்து சித்திரவதை : அதிகரிக்கும் வன்முறைகள்!!

லண்டனில் சட்டவிரோதமான வன்முறைக் கும்பலால் தாக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதில் சமீபமாக பாதிக்கப்பட்டவர் திருமதி வார்னர் என்னும் 90 வயது மூதாட்டி.

லண்டனின் வடமேற்கு பகுதியான Brent பகுதியை சேர்ந்த வார்னர் ஓய்வூதியம் பெற்று வாழ்ந்து வருகிறார். திடீரென அதிகாலையில் தனது வீட்டில் யாரோ நுழைந்ததாக உணர்ந்த வார்னர் யாரென கேட்ட போதே வீட்டிற்குள் அழையாமல் நுழைந்த நபரால் பல்வேறு வகையில் தலை முதல் கால் வரை தாக்கப்பட்டார்.

அந்த தாக்குதலின் முடிவில் தன்னை தாக்கியவனின் முகம் கூட மறந்து போகும் வகையில் கோமா நிலைக்கு அவர் சென்று விட்டார்.

சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து திங்களன்று மதியம் தனது தாயை பார்க்க வந்த மகன் Jeffry warner தாய் இருந்த நிலைமையை பார்த்து அதிர்ந்து போனார்.

மோசமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனது தாயை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் வார்னர் , தனது சகோதரி லெஸ்லியின் உதவியுடன் தனது தாயின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

அதன் மூலம் தாயை இந்த நிலைமைக்கு ஆளாகியவன் பற்றிய துப்புகள் கிடைக்காதா என்றும் காத்துக் கொண்டிக்கின்றனர்.

லண்டனில் இந்த மாதத்தில் நடைபெறும் வன்முறைகளில் மேற்கண்ட வன்முறையும் ஒன்று. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் (24 ) இதே போல அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். நகைச்சுவை நடிகரான Michael McIntyre தன்னிடம் இருந்த விலையுயர்ந்த (யூரோ 15,000)வாட்சுக்காக கொள்ளையடிக்கப்பட்டார்.

இதற்கிடையில் ஒரு ஆஸ்திரேலியன் டிவி ரிப்போர்ட்டரிடம் லைவ் ஷோவில் இருக்கும்போதே அவரிடம் இருந்த விலையுர்ந்த கேமராவை (யூரோ 15,000) வலுக்கட்டாயமாக கைகளில் இருந்து வன்முறையாளனால் பிடுங்கப்பட்டது. பின்னர் அவன் சைக்கிளில் தப்பி சென்றான்.

இந்த வருடத்தில் இது போன்ற சம்பவங்களில் இதுவரை 70 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது நியூயார்க்கின் அளவை விட அதிகமான குற்ற அளவாகும்.

தற்போது பாதிக்கபட்ட 90 வயதான மூதாட்டி இன்னமும் சுயநினைவுக்கு வரமுடியவில்லை. தரப்படும் சிகிச்சைகள் அவரது உயிரைக் காக்குமா என்பது சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைகளால் பொதுமக்கள் அச்சத்தோடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியில் யூதச் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை : கொலையாளி தப்பியோட்டம்!!

ஜேர்மனியில் 14 வயது யூதச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஈராக் அகதியை பொலிசார் தேடி வருகிறர்கள்.

Frankfurt அருகிலுள்ள Mainz என்னும் நகரைச் சேர்ந்த Susanna Feldman என்னும் சிறுமி மே மாதம் 22 ஆம் திகதி காணாமல் போனாள்.

இந்நிலையில் புதன் கிழமை அன்று Wiesbaden பகுதியில் ரயில் பாதைக்கருகே உள்ள ஒரு புதரில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த இடத்தின் அருகில்தான் கொலை செய்ததாகக் கருதப்படும் ஈராக் அகதியான Ali Basar தங்கியிருந்த அகதிகள் முகாம் அமைந்துள்ளது.

Susannaவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதும் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அவளை அகதிகள் முகாம் அருகே நேரில் பார்த்த சாட்சிகளும் கிடைத்துள்ளனர். ஏற்கனவே Ali Basar அவனது புகலிட நிலைமை குறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாலும் அகதிகள் முகாமில் 11 வயது சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுவதாலும் அவனை பொலிசார் நன்கறிந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தலைமறைவான அவன் ஈராக்குக்கு தனது குடும்பத்துடன் தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

35 வயதான இன்னொரு மனிதனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான்.

இதற்கிடையில் யூத இன வெறுப்பு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக செய்திகள் பரவி விடக்கூடாது என்பதில் பொலிசார் கவனமாக உள்ளனர்.