அமெரிக்காவில் நபர் ஒருவர் ஒரே இரவில் ஐந்து ஆண்டுகள் வாழ்க்கையை மறந்த நிலையில் தனது மனைவி, குழந்தைகள் குறித்தும் மறந்து போயுள்ளார்.
ஆடம் கோன்சேல்ஸ் என்பவர் தனது மனைவி ரக்குல் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஒருநாள் ஆடம் இரவில் தூங்க சென்றுள்ளார். பின்னர் காலையில் எழுந்த ஆடம் பிரம்மை பிடித்தவர் போல தனியாக உட்கார்ந்துள்ளார்.
அவரிடம் மனைவி ரக்குல் சென்ற போது அவரை பார்த்து நீங்கள் யார் என கேட்க ரக்குல் அதிர்ந்துள்ளார்.
அப்போது தான் தனக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதையே ஆடம் மறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆடமை ரக்குல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஸ்கேன் எடுத்ததோடு பல்வேறு சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்தநிலையில் ஆடமுக்கு என்ன நோய் வந்துள்ளது என்பதை மருத்துவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. சரியாக 2012 – 2016 வரை நடந்த அனைத்து விடயங்களையும் ஆடம் மறந்துள்ளார்.
அந்த சமயத்தில் தான் ஆடமுக்கு முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகி ரக்குலுடன் இரண்டாம் திருமணம் நடந்தது.
மேலும் இந்த காலக்கட்டத்தில் தான் அவருக்கு குழந்தைகள் பிறந்ததோடு முக்கிய குடும்ப நிகழ்வுகள் பல நடந்துள்ளது. ஆனால் பின்னர் ரக்குல் தான் தனது மனைவி என ஆடம் புரிந்து கொண்டுள்ளார்.
ஆனாலும் சொந்த மனைவி மற்றும் குழந்தைகளையே மறந்துள்ளது ஆடமை பெரிதும் பாதித்துள்ளது. ஆடமுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தாய் சிக்கன் கறி சமைக்காததால் அவரை கொடூரமாக கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கிஷோர் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துள்ளார்.
இதனால் மனைவி தனது குழந்தைகளுடன் கிஷோரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தனது தாய் மாரியம்மாவுடன் கிஷோர் வசித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் வெளியிலிருந்து வீட்டுக்கு கோழியுடன் வந்த கிஷோர், தனக்கு சிக்கன் கறியை தயார் செய்து வைக்கும்படி மாரியம்மாவிடம் சொல்லிவிட்டு மதுகுடிக்க சென்றுள்ளார்.
பின்னர் மது போதையில் கிஷோர் வீட்டுக்கு வந்து சிக்கன் கறி வேண்டும் என மாரியம்மாவிடம் கேட்ட போது தான் இன்னும் சமைக்கவில்லை என கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த கிஷோர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாய் மாரியம்மாவை சரமாரியாக குத்தி துடிதுடிக்க கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து கிஷோர் தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மாரியம்மாவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் கிஷோரை தேடி வருகிறார்கள்.
தற்கொலை செய்யும் அளவுக்கு தனக்கு பிரச்சினைகள் இருக்கிறது என்று நடிகை சார்மிளா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, நான், இவன் வேற மாதிரி போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் சார்மிளா.
அவருக்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் திருமண உறவும் திருப்தியாக அமையவில்லை.
இது குறித்து சார்மிளா கூறுகையில், நான் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தும் எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்து விட்டேன்.
தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு பிரச்சனை உள்ளது, இந்த மாதிரி விடயங்கள் என் வாழ்க்கையில் முன்பே நடந்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பேன். ஆனால் இப்போது சாக முடியாது.
படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டி உள்ளது. மகன் நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை.
இப்போது பெரிய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டால் அவர்கள் தர தயாராக இல்லை. எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள்.
திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர்.
வீடு போன பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை குறைந்து எனது ஆரோக்கியமே கெட்டுப் போனது என கூறியுள்ளார்.
செக்கசிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பலதடைகளை தாண்டி மணிரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளேன்.
நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் சினிமாவிற்கு வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன். நீயெல்லாம் ரஜினியா என்று என்னை கிண்டல் செய்தனர்.
நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது.
எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனால் எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. நான் சின்ன வயதில் இருந்தே இப்படி இருந்து விட்டேன். அதனால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இருந்தும் என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன்.
மாற்றி கொண்டும் விட்டேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
என் கஷ்டத்தை என் பெற்றோர்களை போல் ரசிகர்களாகிய நீங்களும் நன்றாக புரிந்து கொண்டீர்கள். அதற்கு நன்றி. என் அடுத்தடுத்த படங்கள் வரவிருக்கிறது. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்புடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி” என உருக்கமாக பேசியுள்ளார் சிம்பு.
அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்த பின்னர் வெளியான முதல் திரைப்படம் காலா என்பதால் படம் அரசியல் ரீதியான படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் நிலவியது.
ஆனால், காலா ரஜினியின் அரசியலுக்கான படம் கிடையாது என ரஞ்சித் கூறியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் ரஞ்சித், காலா படம் ரஜினியின் அரசியலுக்கான படம் இல்லை. அது மக்கள் பிரச்னையை எடுத்துரைக்கும் படம்.
பல தடைகளை தாண்டி வெளியான படத்துக்குப் பல நேர்மறையான கருத்துகள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலா படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது இல்லை.
பேஸ்புக்கில் இந்தப் படத்தை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பிக்கு நன்றி எனக்கூறி சிரித்துள்ளார் . நீங்கள் இயக்குநரா? அரசியல்வாதியா? என நிருபர்கள் கேட்ட கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் நான் அரசியல்வாதி என பதிலளித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு அரசாங்க அதிபர் சோமரத்தின விதானபத்திரண தலைமையில் நேற்று(07.06) புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக சமய நல்லிணக்கத்திற்கான இப்தார் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டருந்த இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக சர்வமத வழிபாடு இடம்பெற்றது. இவ் இப்தாரல் நிகழ்வானது வருடம் தோறும் வவுனியா மாவட்ட செயலகத்தில் நாடத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் கா.சிவகரன், சிங்கள பிரதேச செயலாளர் ஜானக, சர்வமதகுழுவினர், இராணுவத்தினர், பொலிசார் என பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்குட்பட்ட துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள பிரதேசசபைக்கு சொந்தமான கடையில் இருந்து பிரதேசசபையினர் பொருட்களை வெளியில் வீசியமையினால் விதவைப் பெண்ணொருவர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த விதவைப்பெண் தெரிவிக்கையில்
கணவரால் கைவிடப்பட்ட நிலையில் எனது 17 வயது மகன் மற்றும் மகளுடன் துட்டுவாகையில் வாழ்ந்து வந்தேன். மகனே எங்கள் குடும்பத்தினை பார்த்து வந்தார். இந் நிலையில் அண்மையில் மகன் விபத்தொன்றில் மரணித்துவிட்டார். இதனால் மகளை தனியாக விட்டு வீட்டுவேலைக்கோ கூலி வேலைக்கோ செல்ல முடியாமையினால் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது தொழில் செய்யவேண்டும் என எண்ணினேன்.
பிரதேச சபையிடம் கடையைப்பெற்று நடத்திவந்த ஒருவர் குறித்த கடையை நடத்துமாறும் அதற்காக தனக்கு 45000 ரூபா தருமாறும் தெரிவித்தார். நுண்நிதி நிறுவனத்திடம் கடனைப்பெற்று அப்பணத்தினை அவரிடம் எழுத்துமூல சாட்சிகளுடன் ஒப்படைத்து கடையில் தேனீர்க்கடையொன்றினை நடத்திவந்தேன்.
பிரதேசசபையிடம் நான் கடையை பெறாவிட்டாலும் நான் கடையை நடத்தவேண்டும் என்பதற்காக 500 ரூபா செலுத்தி கடைக்கான வருடாந்த உரிமத்தை பெற்றேன். அத்துடன் தேனீர்க்கடை என்பதனால் மருத்துவ சான்றிதழையும் நானும் எனது தங்கையுமாக பெற்றதுடன் பிரதேசசபை எனது பெயரிலேயே இரண்டு பற்றுச்சீட்டுக்களையும் ஒரே தினத்தில் வழங்கியிருந்தது.
இந் நிலையில் எனக்கு கடை கொடுத்தவர் பிரதேசபையிடம் கடை வேண்டாம் என தெரிவித்ததை அடுத்து குறித்த கடையில் நான் வைத்திருந்த பொருட்களை வெளியில் வைத்துவிட்டு எனது வாழ்வாதாரத்தை சிதைத்து என்னை நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டனர் பிரதேசசபையினர்.
ஒரு விதவைப்பெண் என்றும் பார்க்காமல் மனிதாபிமானம் இன்றி பிரதேசசபையினர் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள செட்டிகுளம் பிரதேசசபையின் தலைவரிடம் கேட்டபோது,
ஏமது பிரதேசபைக்கு சொந்தமான துட்டுவாகை இலக்கம் 1 கடை குறிஞ்சிமலர் என்பவருக்கு 14.02.17 அன்று ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. மாதாந்தம் 1187.50 சதம் அறவிடப்பட்டு வந்துள்ளது.
குறித்த நபர் வாடகைப்பணத்தினை 3 மாதங்களாக செலுத்த தவறியமையினால் கடை மூடப்படுவதற்காக அறிவித்தல் கடிதம் மூலம் 10.05.2018 அறிவிக்கப்பட்டு 28.05.2018 அன்று கடையை மூடுவதற்காக அறிவித்தலும் வழங்கப்பட்டது.
அதனையடுத்து 05.06.2018 இல் கடை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 12.06.2018 அன்று பாதிக்கப்பட்ட நபருக்கான தீர்வை சபை கூடி தீர்மானித்து வழங்கும் என தெரிவித்தார்.
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் வாகன திருத்தும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள் போதிய இடவசதியின்றி வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி திருத்துவதனால் பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.
தாண்டிக்குளம், பூந்தோட்டம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வாகன திருத்தகங்களை நேரடியாக சென்று பார்வையிட்ட நகரசபை தலைவர் அடங்கிய குழுவினர் குறித்த திருத்தகங்களின் உரிமம் மற்றும் இடவசதிகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார். இதன் பின்னர் நகரசபை தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
வீதிகளில் வைத்து வாகனங்களை பழுதுபார்க்கும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்தவண்ணமுள்ளது. அத்துடன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் வாகனத்தின் கழிவு எண்ணை நிலத்தடி நீரில் கலப்பது தொடர்பாகவும் முறைப்பாடு கிடைத்து வருகின்றது.
இவற்றை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதனால், இதற்குமப்பால் வீதிகளில் வைத்து வாகனங்களுக்கான டயர் மாற்றும் கடைகள் காணப்படுவதுடன் பாதசாரி கடவைகளை ஆக்கிரமித்தும் அவர்கள் வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே பொலிஸாரின் உதவியுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் சகல வர்த்தக நிலையங்களிற்குமான வியாபார அனுமதியினை 07ம் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். வியாபார அனுமதி முடிவடைந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் குறித்த காலப்பகுதிக்குள் உரிய நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குழந்தைகளை நடுதெருவிலும், குப்பைதொட்டியிலும் விட்டு செல்லும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.உத்திரபிரதேச மாநிலத்தில் காரில் இருந்தவாரே பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையை தெருவில் வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த குழந்தையை மீட்டவர்கள் குழந்தை கவலைகிடமான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தனது காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க தனது காதல் குறித்து விவரிக்கிறார் நீனு.
கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது குடும்பம் இருந்து வந்துள்ளது. இவரும் கோட்டயம் பகுதியை சேர்ந்த கெவின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
கெவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு நீனு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து நீனு குடும்பத்தினர் காவல்நிலையத்தை நாடினர். அங்கு அவர்கள் நீனுவை கட்டாயப்படுத்தி அவரது பெற்றொருடன் அனுப்பி வைத்தனர்.
கெவின் தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த ஒரு கும்பல் கெவினையும் அவரது உறவினரான அனிஷையும் தாக்கிவிட்டு இருவரையும் கடத்தி சென்றுள்ளனர். மதியவேளையில் அனிஷை மட்டும் அந்தக்கும்பல் விடுவித்துள்ளனர்.
கெவின் குறித்து கேட்டதற்கு எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து அவன் தப்பிவிட்டான் என கூறியுள்ளனர்.மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கெவின் சடலமாக மீட்கப்பட்டார்.
கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.நீனு 2016ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். முதன்முதலில் ஒரு மெக்கானிக்காக தான் கெவின் அறிமுகமாகியுள்ளார்.
நீனு மற்றும் அவளது தோழி இருவரும் ஒன்றாக தான் கல்லூரிக்கு சென்றுவந்துள்ளனர். அனிதாவை பார்க்க அவளது நண்பர் பேருந்து நிலையம் வருவார். அவருடன் கெவினும் வந்துள்ளார். இப்படி தான் நீனுவுக்கும் கெவினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளார். மொபைல் எண்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் குறுஞ்செய்தியில் ஆரம்பித்த இவர்களது பழக்கம் நாளடைவில் நீண்ட நேரம் போனில் உரையாடும் அளவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் கெவின் தனது காதலை நீனுவிடம் தெரிவித்துள்ளார். அப்போதே நீனு தனது குடும்பத்தினர் குறித்து கெவினிடம் தெரிவித்துள்ளார்.
நீனுவின் தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவர் , தாய் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்பதும் இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் கூறியுள்ளார். ஆனால் கெவின் வழக்கமாக எல்லா காதலர்களுக்கு வரும் பிரச்னை தான் நாம் திருமணம் செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பேசும்போது குழந்தை பருவத்தை அடுத்து தான் காதல் வயப்பட்ட சமயம் தான் என் வாழ்வில் பசுமையான தருணங்கள் என்கிறார் நீனு . கெவின் என்னை பொன்னி என்றும் நான் அவனை இச்சா என்றும் செல்லமாக அழைப்பேன்.
நாங்களும் மற்ற காதலர்களை போன்று கோயில், தியேட்டர், மால் என எல்லா இடங்களுக்கும் சென்றோம். ஆனால் அப்போதும் எனது குடும்பத்தினர் குறித்து பயம் இருக்கும் என்றார்.கெவினுக்கு துபாயில் வேலை கிடைத்ததையடுத்து அங்கு சென்றுவிட்டார்.
மே மாதம் தான் நீனுவின் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. நீனுவுக்கு வரன் தேட தொடங்கிய பெற்றோர்கள் அதற்காக அவரது விவரங்களை மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர்.அதன்படி கடந்த மே மாதம் 24ஆம் தேதி கோட்டயத்தை அடுத்த எட்டமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
அன்று இரவு கெவினின் உறவினர் இல்லத்தில் இருவரும் தங்கியுள்ளனர். இரவு தூங்க செல்லும் முன்பு தனது தந்தைக்கு போன் செய்து திருமணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஆனால் கெவின் குடும்பத்தினருக்கு அவர் கடத்தப்படும் வரை இவர்களது காதல் திருமணம் விவகாரம் தெரியாது. கெவின் காணாமல் போன பின்பு தான் அனைத்து விவரங்களும் அவர்களுக்கு தெரியும் என நீனு கூறியுள்ளார்.
நான் எனது பெற்றோர்கள் குறித்து கவலையில் இருந்தேன். எதற்கு பயப்படாதே என கெவின் எனக்கு தைரியம் கூறீனார். மே 25ஆம் தேதி நான் விடுதிக்கு சென்றுவிட்டேன். கெவின் அவரது உறவினர் வீட்டில் இருந்தார், மே 26 இரவு இருவரும் நீண்ட நேரம் போனில் பேசினோம்.
அப்போது பொன்னி நீ எதுக்கும் கவலைப்படாதே. உன் பெற்றோர்கள் என்ன செய்வார்கள். என்னை முதலில் அடிப்பார்கள் ஆனால் பிறகு நம்மை ஏற்றுக்கொள்வார்கள். என்னை காலை 5.30 மணிக்கு எழுப்பி விடு என்று கூறினான்.
நான் காலை 5.45 மணிக்கு கால் செய்தேன். ஆனால் கெவின் போனை எடுக்கவில்லை. சில மணி நேரங்கள் கழித்து தான் கெவின் கடத்தப்பட்ட விவரம் எனக்கு தெரியவந்தது.
அதன்பின்னர் நாங்கள் காவல்நிலையம் சென்றோம். அங்கு தான் கெவினின் குடும்பத்தினர் முதன்முதலாக என்னை கண்டனர். கெவினுடன் கடத்தப்பட்ட அனிஷை மதியவேளையில் அந்தக்கும்பல் வீட்டில் விட்டு சென்றனர். அவர் என்னிடம் எனது உறவினரான நியாஸிடன் பேசச் சொன்னார்.
நான் போனில் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். நான் வீட்டிற்கு செல்கிறேன்.கெவினை எதுவும் செய்து விடாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் பதில் எதும் பேசாமல் சிரித்துவிட்டு போனை கட் செய்துவிட்டார். நான் பயந்த மாதிரியே நடந்துவிட்டது என நீனு கூறினார்.
தன் காதல் கணவன் மரணத்துக்கு நீதிகிடைக்க வேண்டி போராடி வருகிறார் நீனு. கெவினின் பெற்றோரும் நீனுவை தங்கள் வீட்டு பெண்ணாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.
வசந்த் & கோவின் நிறுவனர் எச்.வசந்தகுமார் (67) இவர் கடந்த 1950ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த வசந்தகுமார் பின்னர் தனது பட்டப்படிப்பை கல்லூரியில் படிக்காமல் அஞ்சல் வழியில் மேற்கொண்டார்.
படித்து கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக சேர்ந்த வசந்தகுமார் அங்கு எட்டு வருடங்கள் பணிபுரிந்தார்.அங்கு வீட்டு பொருட்கள் வியாபாரத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் கற்று கொண்டதுடன், தனது வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், தனியாக தொழில் தொடங்க முடிவெடுத்து, நண்பரின் உதவியை நாடினார். ஆறு மாதத்தில் 8000 நண்பருக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வசந்தகுமார் நண்பரின் கடையை வாங்கினார்.
1978ல் அந்த கடைக்கு வசந்த் & கோ என பெயர் வைத்தார். கடையின் முதல் பொருளை வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த அவருக்கு சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த திருப் பக்தவச்சலம் என்னும் நபர் 22 ரூபாய் கொடுத்தார். 70களில் 22 ரூபாய் என்பது மிக பெரிய பணமாகும்.
அதன் பின்னர் அயன் பாக்ஸ் போன்ற சிறிய பொருளில் விற்பனையை ஆரம்பித்த வசந்த் & கோ பின்னர் தொலைகாட்சி பெட்டி, வாட்டர் ஹீட்டர்ஸ், குளிர் சாதன பெட்டி, ரேடியோ, மின் விசிறி, மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது.
ஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும்.சாம்சங், சோனி, எல்.ஜி, பேனசானிக் பிலிப்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை வசந்த் & கோவில் தொடங்கியது.
அதன் பின்னர் வசந்த் & கோவின் வியாபாரம் சூடு பிடிக்க இன்று தமிழகம், பாண்டிசேரி, கேரளா மாநிலங்களில் 64 கிளைகளுடன் இயங்கும் இந்நிறுவனத்தில் 1000 பேர் பணி புரிகிறார்கள்.இன்று இந்த நிறுவனத்தின் விற்பனை 900 கோடியை தாண்டியுள்ளது.
குறைந்த வருவாய் ஈட்டுபவர்களும் எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதற்காகவே தவணை முறையில் பணம் கட்ட சொல்லி பொருட்களை விற்கிறேன். ஒரு சமயம் மற்ற நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வசந்த் & கோ தயாரித்த மிக்ஸி, மின் விசிறி போன்றவற்றை வசந்தகுமார் தயாரித்தார்.
ஆனால் அது மக்களிடத்தில் வரவேற்பை பெறாத காரணத்தினால் அதை நிறுத்தி விட்டு மற்ற நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்வதை அவர் தொடர்ந்தார்.
தமிழ்நாட்டின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் வசந்தகுமாருக்கு தனது வியாபாரத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது.
அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை விடுவிக்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தினர் மத்திய குயின்ஸ்லாந்து, பிலோலா பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 5ஆம் திகதியன்று அதிகாலையில் அந்த இலங்கை தமிழ் குடும்பத்தின் வீட்டுக்கு சென்ற அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், கணவன் மனைவி உட்பட இரண்டு பிள்ளைகளையும் மெல்போர்னுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களின் இரு பிள்ளைகளே இந்த நிலைமைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான அவர்களின் வீசா அனுமதி முடிவடைந்த நிலையில், நாடு கடத்துவதற்காகவே எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மெல்போர்னுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதையடுத்து மேற்கொள்ளபட்ட சட்ட நடவடிக்கைகளுக்கமைய அந்த குடும்பத்தினர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக ஏற்றப்பட்டிருந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்காக தொடர்ந்தும் மெல்போனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களை முன்னர் தங்கியிருந்த பிலோலேக்கு மீண்டும் செல்ல அனுமதிக்குமாறு கோரியே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என்றும், குயின்ஸ்லாந்தில் குடியமர்த்துமாறும் கோரியும் பிலோலே மக்களால் சுமார் ஒரு லட்சம் கையொப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் இது தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நுண்நிதி கடனின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இதனால் பெரும் பாதிப்புக்களை நோக்கியுள்ளனர்.
இதனால் பெண்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், நுண்நிதி கடன் பிரச்சினை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்த நிலையில் தற்போது நுவரெளியா, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலும் நுண்நிதிகடன் பிரச்சினையினால் உயிரழப்புக்கள் சம்பவிக்கின்றன.
இதேவேளை, மஹிந்த ஆட்சி காலத்தில் உட்கட்டுமானம் என்ற பெயரில் ஒரு புறமும், வாழ்வாதாரம் என்ற வகையில் இன்னொரு புறமும் வடக்கு கிழக்கில் நிதி பாய்ச்சல்கள் இடம்பெற்றன.
இவ்வாறான நிதி பாய்ச்சல் அந்த மக்களினுடைய வாழ்க்கையில் மாற்றங்களை கொடுக்கவில்லை.
மேலும், போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் நடத்தும் வருடாந்த போட்டியில் திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த 94 வயதுடைய அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை என்ற முதியவர் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
குறித்த போட்டி நிகழ்வு கொழும்பு சுகததாச மைதாத்தில் கடந்த 2, 3ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது. இதில், அ.நோ.செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும், 1924ஆம் வருடம் மட்டக்களப்பில் பிறந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை, பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடத்தப்படும் மரதன் ஓட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வெற்றிகளை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனம், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை சிங்கள மொழியை கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“கடந்த மார்ச் மாதம் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வன்முறை மேலும் தீவிரமடைய பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டிருந்தது.
சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு பேஸ்புக்கை முடக்கி அரசாங்கம் உத்தரவிட்டது.
வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் பேஸ்புக் நிறுவனம் நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது.
இந்நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனம், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிவின் விளிம்பில் பூமி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மனித நடமாட்டமே இல்லாத அண்டாட்டிகா பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அண்டாட்டிகாவின் எல்லைப் பகுதியில் GREEN PEACE என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கார் டயர், பிளாஸ்டிக் பை போன்றவற்றின் நுண்பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை GREEN PEACE குழுவில் உள்ள நுண் அறிவியலாளர்கள் சேகரித்துள்ளனர்.
17 வகையான மாதிரி தண்ணீரை சேகரித்த அவர்கள் ஒன்பது மாதிரிகளில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றில் PFA எனப்படும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அண்டாட்டிகா பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தென்படுவதால் உலக அளவில் மாசின் அளவு உயர்ந்திருப்பதாக GREEN PEACE ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.
எனவே அழிவின் விளிம்பில் பூமி இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளனர்.