வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

 

எரிபொருள், அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று (23) வவுனியாவில் நடைபெற்றது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் யூ.அயூப்கான் தலைமையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், எரிபொருள், அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தை உடனடியாக குறை, மக்களை பட்டினியில் போடும் பொருளாதாரக்கொள்கையை கைவிடு, அமைச்சர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழாதே,

பெண்களின் வாழ்வுரிமையை சிதைக்கும் சாராயக்கடைகளை இழுத்து மூடு, மக்களையும் நாட்டையும் அடகு வைக்காதே, பொருட்களை விலையேற்றி மக்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி நின்றனர்.

கொழும்பில் மழை மேகத்தால் ஏற்பட்ட மாற்றம்!!

 

கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு “அல்டாயர்” கட்டடத்தின் மேற்பகுதி இன்று மதியம் ஒரு மணியளவில் மழை மேகங்களால் மூடப்பட்டு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

67 மாடிகளை கொண்ட இந்த கட்டடம் ஆங்கில “ஏ” எழுத்து வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு – ஹூனுப்பிட்டிய பேர குளத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்டாயர் கட்டடத்தில் பல ஆடம்பர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு தொடர்மாடி கட்டடமாக நிர்மாணிக்கப்படும் இதில் ஒன்றில் 67 மாடிகளும் மற்றைய கட்டடத்தில் 50 மாடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்டடத்தின் இடது பக்கத்தில் 50 மாடிகளை கொண்ட கொழும்பு சிட்டி சென்டர் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் : படையினருக்கு கிடைத்த பெட்டி!!

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டிலேயே கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த அகழ்வு பணியானது விமானப்படையினர், விசேட அதிரடிப்படையினர், தர்மபுரம் பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நில மட்டத்திலிருந்து சுமார் ஆறு அடி ஆழத்தில் பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து பாவிக்கக்கூடிய வகையிலான பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்ட வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் ஐந்து என்பன மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்று காலை நடந்த சோகம் : தந்தையும் மகனும் பரிதாபமாக பலி!!

 

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று காலை வடமராட்சி கரணவாய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்டுள்ளனர். இதன்போது அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நகரில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை ஒன்றை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் படையெடுக்கும் பாத்தீனியம் : நடவடிக்கை எடுப்பார்களா உரியவர்கள்!!

வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் பாத்தீனியம் படையெடுத்துக் காணப்படுகினறது. இதனை அழித்தொழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக பாடசாலைகள் செல்லும் வீதிகளிலும், பிரதான வீதிகள், குளக்கட்டுப்பகுதிகள், கோவில்கள் வழிபாட்டுத்தளங்கள், போன்ற மிகவும் முக்கிய மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் இச் செடிகளை காணக்கூடியதாக உள்ளது.

இதனைக்கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கி பத்தீனியத்தைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள வடமாகாண சபை இவ்விடயத்தில் தற்போது கவனமற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

பல பகுதிகளிலும் பாத்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்புணர்வு விளம்பரப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டபோதிலும் அதனை கட்டுப்படுத்தி அழித்தொழிப்பதற்கு போதியளவில் முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாத்தீனியம் அதிகம் காணப்படும் இடங்களை அப்பகுதியிலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பாடசாலைச்சமூகம் ஒன்றிணைந்து இவற்றை அழித்தொழிப்பதற்கு முன்வருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியற்ற தமிழக முதலமைச்சரே வீட்டுக்குப் போ : கொதித்த பிரபல நகைச்சுவை நடிகர்!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் கருணாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள சுற்று பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் பொலிசார் அங்கு நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுத்து வருகின்றன.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரன் டுவிட்டரில் தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தி அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. நமது முதல்வரை நமக்கு முதல்வராக இருக்க நாம் தெரிவு செய்யாததன் விளைவு தான் இது.

தகுதியற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்களே தயவு செய்து 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வாங்கி கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என பதிவுட்டுள்ளார்.

மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொடூரமாக கொன்றது ஏன் : கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை துப்பாக்கியால் பலமுறை சுட்டு கொன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தர்மேஷ் ஷா (50) என்ற தொழிலதிபர் தனது மனைவி அமிபென் மற்றும் மகள்களான ஹிலி (21), குஷி (18) ஆகியோரிடம் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தன்னிடமிருந்த கை துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் மகள்களை ஷா சுட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நண்பர் ஷா வீட்டுக்கு வந்த நிலையில் தற்கொலை செய்யாத அவர் வீட்டில் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற ஷா அங்கு சரணடைந்துள்ளார்.

பொலிசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனக்கு 15 கோடி கடன் இருந்ததாகவும் அதை குடும்பத்தாரிடம் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், மூத்த மகளான ஹலியை மேற்படிப்புக்காக 70 லட்சம் செலவழித்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப மனைவி முடிவு செய்ததால் ஆத்திரத்தில் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் ஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

35 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, தன் உயிரை விட்ட பேருந்து சாரதி!!

35 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிர் விட்ட பேருந்து சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரை பயணித்த சொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹவெல – கவுடுபெலெல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது

பின்னர் அந்த சாரதி போராடி பேருந்தை ஓரமாக நிறுத்தியமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தை நிறுத்தியிருக்க முடியாமல் போயிருந்தால் பேருந்து பாரிய பள்ளத்தில் விழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் பேருந்தின் சாரதியை வைத்தியசாலையில் அனுமதிக்க பயணிகள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தொடரும் அபாயம் : காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்!!

இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் அடைமழையுடனான காலநிலை மேலும் தீவிரம் அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றிரவு முதல் அதிகளவு மழையுடன் கூடிய காலநிலையை எதிர்ப்பாக்கலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது. ஏனைய பகுதிகளுக்கு மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகும். முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும், இடி மின்னல்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா : எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்!!

பாடகர் ஜி.வி பிரகாசுடன் இணைந்து நேரில் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்பது ஈழத்து இளைஞரின் நீண்ட நாள் கனவு. இந்த கனவு நிஜமாகுமா என்பது தெரிய வில்லை. எனினும், எதிர்பாராமல் ஈழத்து இளைஞருக்கு ஜி.வி பிரகாசுடன் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேரில் அவருடன் பாட வில்லை என்றாலும், ஜி.வி பிரகாசுடன் இணைந்து பாடுவதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாடலை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியிருக்கும் ஜி.வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக காலடி வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2F100007109538018%2Fvideos%2F2087151334865164%2F&show_text=0&width=476″ width=”476″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

சினிமாவை மிஞ்சிய சம்பவம் : விமான நிலையத்தில் இளம்பெண் கடத்தல்!!

 

தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் பகுதியில் இருந்து கடந்த மே மாதம் 6 ஆம் திகதி ஜின்சாய் சென் என்ற 39 வயது பெண்மணி தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையில் இறங்கியுள்ளார்.

விமான நிலைய சோதனை முடித்து வெளியேற முயன்ற அவரை திடீரென்று ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை கடத்தி சென்றுள்ளது.

இவர்களுடன் மேலும் இரு நபர்கள் இணைய மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்மணியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவரது கணவரை தொடர்பு கொண்ட கும்பல் சுமார் 232,000 பவுண்ட் தொகை கேட்டு மிரட்டியுள்ளது. இதில் பெருவாரியான பணத்தை கைப்பற்றிய பின்னர் மேலும் 116,000 பவுண்ட்ஸ் தொகை கேட்டு மிரட்டியுள்ளது அந்த கும்பல்.

ஆனால் மேலும் பணம் தர தம்மால் முடியாது என கூறிய அந்த பெண்ணின் கணவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் 13 நாட்களுக்கு பின்னர் Bang Na மாவட்டத்தில் உள்ள பிரதான சாலை ஒன்றின் அருகே கைவிடப்பட்ட நிலையில் ஜின்சாய் சென் மீட்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சீனர்கள் 4 பேர் உள்ளிட்ட கும்பலை தேடி வருவதாகவும், கடத்தலில் ஈடுபட்ட அனைவரது தகவலும் திரட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பறக்கும் விமானத்தில் சிறு நீர் கழித்த நபர் : முகம் சுழித்த பயணிகள்!!

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் சிறு நீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோ மாகாணத்தில் இயங்கும் உள்ளூர் விமான சேவை நிறுவனத்தின் விமானத்திலேயே குறித்த நபர் சிறு நீர் கழித்துள்ளார்.

இச்சம்பவம் விமானத்தில் உள்ள கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தெரிவிக்கையில், தொடர்புடைய நபர் அதிக மது அருந்தியதாகவும், அவரது முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் குரல் எழுப்பி திட்டவும், விமான ஊழியர்கள் தலையிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபரை விமானத்தின் பின் இருக்கையில் அமரும்படி பணித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த நபர் திடீரென்று இருக்கையில் அமர்ந்தவாறே சிறு நீர் கழித்துள்ளார். இதைக் கண்டிருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூச்சலிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் விமானிக்கு தெரியப்படுத்தவும், அவர், பொலிசாருக்கு தகவல் தெரிவித்து, குறித்த பயணி டென்வர் விமான நிலையத்தில் இறங்கவும், அவரை கைது செய்துள்ளனர்.

<div style=”position:relative;height:0;padding-bottom:56.25%”><iframe src=”https://www.youtube.com/embed/b8AT9UfCl4A?ecver=2″ style=”position:absolute;width:100%;height:100%;left:0″ width=”640″ height=”360″ frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe></div>

களனிவெலி பாதையில் தடம் புரண்ட ரயில்!!

களனிவெலி பாதையில் ​நேற்றிரவு புகையிரத வண்டியொன்று தடம்புரண்டதன் காரணமாக குறித்த ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஒன்றே நேற்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

நேற்று மாலை 5.30 ஹோமாகம- பன்னிப்பிட்டியவுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் திடீரென்று தடம்புரண்டபோது அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

ரயில் தடம்புரண்டதை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக பேரூந்துகள் மூலம் பயணத்தைத் தொடர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் தடம்புரண்ட ரயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போதைக்கு களனிவெலிப் பாதை ரயில் போக்குவரத்து நுகேகொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் ​சேவையை நம்பியிருக்கும் ஏராளமான அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கு புதன்கிழமை காலை அலுவலகம் செல்லும்போது போக்குரவத்து தொடர்பில் பெரும் அசௌகரியங்களை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிய கூடு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய் : கொழும்பு புறநகர் பகுதியில் இருந்து மீட்பு!!

கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கல்வலபார பகுதியில் சிறிய கூண்டு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த தாயை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான இவர், 4 அடி அகலமும், 5 அடி நீளமுமான பலகை மற்றும் சீமெந்து கற்கலினால் அமைக்கப்பட்ட சிறிய கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயின் மகளொருவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலேயே இந்த தாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூடு இருந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக இவ்வாறு தாயை தனிமைப்படுத்தி வைத்ததாக அவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட தாய் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது : கண்ணீருடன் பதிவிட்ட தமிழ்ப் பெண்!!

தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் நேற்றைய போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக 11 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து முகபுத்தகம் வாயிலாக குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “அப்பாவி பொது மக்கள் சாவடிக்கப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் போராட வேண்டும் என்று இருந்த எங்களை சுட்டுகொன்றுள்ளனர். இதன் மூலம் தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர்.

இது திட்டமிட்ட சதி நடவடிக்கை. இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ் நாட்டிலும் நடக்கும். இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.

இது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல. முற்றிலும் திட்டமிடப்பட்ட ஒரு செயல். அடுத்து ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். இன்னொரு ஈழம் இங்கு உருவாக கூடாது.

எனவே, இன்னுமொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் நாம் பறிகொடுத்துவிட கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான் : அமலா பால் அதிரடி!!

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். விவாகரத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நம்மைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான். பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என கூறுவார்கள்.

மற்றொன்று நாம் சரியான பாதையில் செல்கிறோம் என சொல்வார்கள். இப்போது நல்ல பாதையில் போவதாக தான் கிசுகிசுக்கள் வருகின்றன. அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அதே நேரத்தில் நாம் செய்வது தவறு என கூறும் போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் தவறை நான் திருத்திக்கொள்வேன்.

சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே வேடிக்கையாக எடுத்துக்கொள்வேன்
என்று பதிலளித்துள்ளார்.