240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை செய்யப்பட்ட நடிகை ஸ்ரீதேவி : திடுக்கிடும் தகவல்!!

நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாதா தாவூத்தின் சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக மீண்டும் கூறிவரும் ஆணையர், தமது சந்தேகங்களின் உண்மையறிய அதே ஹோட்டலில் தமது புலனாய்வுக் குழுவுடன் தங்கியுள்ளார்.

ஸ்ரீதேவியின் ரத்த மாதிரிகளையும் அவர் நுரையீரலுக்குள் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்ற விபரத்தை துபாய் பொலிசார் தரமறுத்துவிட்டதாகவும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே கொடுத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது என்றும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.

இயற்கையின் சீற்றத்தினால் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு : இளைஞனின் விபரீத முடிவு!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றை அதில் குதித்து காணாமல் போயுள்ளார். வென்னப்புவ, லுனுவில பிரதான பாலத்திற்கு சென்ற இளைஞனே திடீரென பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும் போது, அழைப்பு மேற்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் குதித்துள்ளார். எனினும் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் தனக்கு நெருக்கமான சிலருடன் வெள்ளத்தை பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென குதித்துள்ளார்.

காதல் தொடர்பினால் ஏற்பட்ட மனரீதியான குழப்பம் காரணமாக அவர் வெள்ளத்தில் குதித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் காணாமல் போயுள்ள வென்னப்புவ பிரதான பாடசாலை கல்வி கற்கும் லக்ஷான் என்ற 17 வயதுடைய இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

லுனுவில பாலத்தின் மீதிருந்து குதிப்பதற்கு முன்னர் குறித்த இளைஞர் அருகில் இருந்த நபரிடம் தனது கையடக்க தொலைபேசியை காதலியிடம் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

நீரில் குதித்த இளைஞனை தேடுவதற்கு வென்னப்புவ பொலிஸார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லக்கட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி!!

தமிழகம் – தூத்துக்குடியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 தமிழர்களுக்கும் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பல தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது உயிரிழந்த தமிழக உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மக்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவினையும் தெரிவித்த ஈழத் தமிழ் உறவுகள், மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமையையும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் முக்கிய வேண்டுகோள்!!

நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து மீள்குடியேற்ற வசதிகள் கிடைக்காதோர் கிராமசேவகர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என வடமாகாண உறுப்பினர் பா. சத்தியலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளது.

எனவே இதுவரை அவ்வாறான வசதிகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதி கிராம சேவகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் மா.ச.உறுப்பினரால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் தமது பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்காக விசேட செயலணியொன்று மீள்குடியேற்ற அமைச்சினால் கடந்த 2016ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டது.

இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு வசதியாக வீட்டுத்திட்டம், உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதே இந்த செயலணியின் நோக்கமாகும்.

எனினும் துரதிஸ்ரவசமாக இந்த செயலணியின் திட்டத்தில் இதுவரையில் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இதுதொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இம்மாதம் 16ம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.

இந்த சந்திப்பின்போது நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும் இத்திட்டத்தில் உள்வாங்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறுவுறுத்தல் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் முடிவுத்திகதி வரும் ஜூன் மாதம் 30ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றத்திற்கான வசதிகள் கிடைக்காதவர்கள் உங்கள் பகுதி கிராம சேவகர்களிடம் விண்ணப்படிவங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி!!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த பன்னிரண்டு வயதுப் சிறுவன் ஒருவனை பொலிஸ் நிலையத்தில் வைத்தே அதிகாரியொருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இச்சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக மணலாறு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த 08ம் திகதி திருட்டுச் சம்பவமொன்று தொடர்பாக மணலாறு பொலிஸார் 12 வயதுச் சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளனர். அன்றைய இரவில் பொலிஸ் காவலில் வைத்து அதிகாரியொருவர் குறித்த சிறுவனை கடுமையாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதன் பின்னரே சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை இல்லமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளான்.

இந்நிலையில் நன்னடத்தை அதிகாரிகளிடம் சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் அவன் மீண்டும் கெபிதிகொல்லாவ நீதவான் நீதிபதி மனோஜ் பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டுள்ளான்.

இதன் போது நீதிபதி அளித்த உத்தரவுக்கமைய பாதிக்கப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவன் கடுமையான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவன் விவகாரம் தொடர்பாக புதியதொரு விசாரணையை நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நன்னடத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

வௌ்ளத்தில் விளையாடச் சென்ற 17 வயது மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

விளையாட்டாக கிங் கங்கையில் குதித்த பாடசாலை மாணவரொருவர் காணாமல் போயுள்ளதாக வென்னப்புவ காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

17 வயதுடைய வென்னப்புவ – லுணுவில பிரதேசத்தை சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இத்தினங்களில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கை பார்ப்பதற்காக மேலும் சிலருடன் இணைந்து குறித்த மாணவர் சென்றுள்ளார்.

பின்னர் , குறித்த மாணவர் திடீரென நீரில் குதித்துள்ளதை தொடர்ந்து மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , குறித்த மாணவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பார்த்து கொண்டிருக்கையிலயே குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளத்தில் மரணிக்கும் அதிர்ச்சி காணொளி!!

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் மீகொடை – ஆடிகல வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு மரணிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளதோடு அனைவரது மனத்திலும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் மீகொடை – ஆடிகல வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு மரணிக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியை வாசகர்கள் கீழே காணலாம்..

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இன்று முதல் எளிமையான ஆடை!!

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு இன்று (24) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது.

இலங்கையில் 236,000 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அதில் 172,000 பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில் சுமார் 10,000 பேர் வருடம் ஒன்றிற்கு கர்ப்பம் தரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் இந்த எளிமையான ஆடையை அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கனடாவில் கடற்கரைக்கு பெண்ணொருவர் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாட்டின் Tofino பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அன் விட்டர்ன்பெர்க் (52) என்ற பெண் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை தண்ணீரிலிந்து மீட்ட நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அதற்குள் அன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அன்னின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதனிடையில் Tofino-வில் உள்ள பல கடற்கரைகளில் பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லை எனவும், அதிகளவு அலைகள் வருவதால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகனை தாக்கிய தமிழர்கள் : 3 பேர் கைது!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

நேற்று போராட்டம் 100-வது நாள் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியைப் பல்லாயிரக்கணக்கானோர் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இதையடுத்து இன்றும் பொலிசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இளைஞர் ஒருவர் பலியாகினார். நேற்று மற்றும் இன்று சேர்த்து மொத்தம் 13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்டெர்லைட் ஆலை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் தலைவராக அனில் அகர்வால் உள்ளார்.

இந்நிலையில் லண்டனில் அமைந்துள்ள அனில் அகர்வால் வீட்டு முன்பு தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டு, அவருக்கு எதிராக கண்டனமுழுக்கங்கள் எழுப்பினர்.

கைகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளதாகவும், இதனால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் இருந்து விடை பெறுகிறார் நீதிபதி இளஞ்செழியன்!!

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று (23.05) புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரச சட்டவாதிகள் நாகரட்னம் நிஷாந்த், திருமதி பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் வெல்லவராஜன் ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள், மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.

மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து வாழ்த்துப் பாமலை மற்றும் நினைவுச் சின்னம் என்பனவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நலன்புரிச் சங்கம் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் வழங்கிவைத்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

லண்டனில் இலங்கை இளைஞனை கொலை செய்த தமிழன் : சம்பவத்தை நேரில் கண்ட இளம் பெண்!!

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலைச் சம்பவத்துடன் மற்றுமொரு தமிழர் தொடர்புபட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வைத்து இலங்கையை சேர்ந்த 28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் மணிமாறன் செல்லையா என்ற 44 வயதுடைய தமிழரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணிமாறன் ஏற்கனவே 35 வயதான நபர் ஒருவரின் உடலில் காயம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நேற்று Wimbledon நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் இன ரீதியாக தாக்குதல் அல்லவென பொலிஸ் தலைமை ஆய்வாளார் Simon Harding தெரிவித்துள்ளார். இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகம் மற்றும் சுற்றி இருக்கும் குழுக்களின் உதவிகளை விசாரணைகளுக்காக எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

அருனேஷ் தங்கராஜா கொலை செய்யப்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் லண்டனில் மற்றுமொரு நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய நேரப்படி நேற்று முன்தினம் மாலை வடக்கு லண்டன் Islington பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதாகவும், இது தொடர்பில் முறைப்பாடு செய்ய யாராவது முன்வருவார்கள் என பொலிஸார் எதிர்பாரத்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வடக்கு லண்டன் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி காட்சிகளை ஆராய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தை அங்கிருந்த இளம் பெண் உட்பட பலர் நேரில் பார்த்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சியை பலர் அவதானித்துள்ளனர்.

எனினும் குறித்த நபர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியாகவில்லை. இந்த கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இலங்கையர் கொலை செய்யப்பட்டதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாவது கொலை இதுவென லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ்.கே.செனரத் தெரிவித்தார்.

மலையடி பருத்திக்குளம் பகுதியில் அமைந்தள்ள கற்குவாரியிலிருந்து ஆயிரத்து ஏழு கிலோகிராம் அமோனியா வெடி மருந்துகளும், 774 டெட்டிநேற்றர்களும், 306 ஜெலக்நைற் குச்சிகளும், மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பகுதியைசேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்,

பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மடுக்கந்த விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

சந்தேகநபரை நாளை (24.05) நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாமடுவ பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் இரண்டாக உடைந்த விமானம் : அதிர்ச்சிப் படங்கள்!!

 

டெக்சாஸிலிருந்து ஹோண்டூராஸ் சென்ற தனியார் விமானம் ஒன்று தரையிறங்கும்போது இரண்டாக உடைந்தது. விமானத்திலிருந்த ஆறு அமெரிக்க பயணிகள் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த விமானம் நேற்று ஹோண்டூராஸின் தலைநகரான Tegucigalpaவில் தரையிறங்கும்போது இந்த விபத்து நேரிட்டது. Toncontin சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகியதால் இந்த விபத்து நேரிட்டது.

எத்தனைபேர் விமானத்தில் இருந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் சரியாக அறிவிக்காத நிலையில் பொலிசார் ஒருவர் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதிக காயம் எதுவும் ஏற்படாத நிலையிலிருந்த ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டதாக சம்பவம் நடந்ததை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

மலைகள் சூழ்ந்த மிக சிறிய ஓடுபாதையைக் கொண்ட Toncontin சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் மோசமான விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அரசாங்கம் தலைநகரிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் ஒரு புதிய சர்வதேச விமானநிலையம் ஒன்றை அமைத்து வருகிறது.

என் மகனை விட்டு விடுங்கள், நான் செத்துடுவேன் : பொலிசாரின் காலை பிடித்து கெஞ்சிய தாய்!!

தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் என் மகனை விட்டுவிடுங்கள் என்று தாய் ஒருவர் கெஞ்சும் காட்சி பார்ப்போரை கண்ணீர் வரவைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொதுமக்களை நோக்கி பொலிசார் சுட்டதால், தற்போதுவரை 13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் காலில் விழுந்து தன் மகனை விட்டுவிடுங்கள் என தாய் ஒருவர் கதறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதில், ஐயா என் பையன விடுங்கய்யா, பெரிய ஐயா என பையன விடுங்க. இல்லையென்றால் நான் அழுதே செத்துடுவேன். என் பையன் வேலை பாக்குறான்.

படித்து கோயம்பத்தூர் போகப்போறான்யா. எனக்கு இருக்குறது 2 மகன்தான். இரண்டு பேரையும் இரவு வந்து தூக்கிட்டு போய்டீங்களே, விட்டுறங்க ஐயா என காவல்துறையினரின் காலில் விழுந்து கதறியுள்ளார்.

பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலை!!

சிலாபம் – கொழும்பு வீதியின் மாதம்பே பிரதேசத்தில் நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதி ஊடாக பயணிக்க வேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த இடத்தில் இருந்த மாதம்பே பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் இணைந்து நீரில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்றியுள்ளனர்.

எப்படியிருப்பினும் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க பிடிக்க முடியாமல் போயுள்ளது.