அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்!!

முன்னணி சமூக வலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளை செய்து வருகின்றது. இந்த வரிசையில் அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக இலத்திரனியல் சிப்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Qualcomn நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இத் தொழில்நுட்பத்திற்காக 60GHz மீடிறன் கொண்ட சிப்களை Qualcomn நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

இதேவேளை 5G தொழில்நுட்பத்திற்கான சிறிய கல வகை சிப்களையும் Qualcomn நிறுவனம் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடுவீதியில் வைத்து கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை அடித்த பொலிஸ்!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மீது தாக்குதல் நடத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த பொலிஸ் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது.

இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

அப்போது ஆத்திரமடைந்த பொலிஸ் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

இதுகுறித்து விவரம் அறிந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சிறையில் துடிதுடித்து குழந்தை பெற்ற பெண் : கவனிக்காத சிறைக்காவலர்கள்!!

டெக்சாஸ் மாகாண சிறையில் Shaye Bear(25) என்னும் பெண் பிரசவ வலியில் கதறி துடித்தபோது அவர் நடிப்பதாகக் கூறி சிறைக்காவலர்கள் அலட்சியப்படுத்த, அவர் சிறை அறையிலேயே குழந்தை பெற்றெடுத்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐந்து மாதங்களே கர்ப்பமாக இருந்த நிலையில் Shaye Bearவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அவர் சிறைக்காவலர்களை கதறியழைத்தும் யாரும் அவரது குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

யாரும் உதவிக்கு இல்லாமல் கதறித் துடித்து குழந்தை பெற்ற Shaye Bearஇன் குழந்தையின் அழுகுரல் கேட்ட பிறகே சிறைக்காவலர்கள் அவரை வந்து பார்த்துள்ளனர்.

அப்போது கூட ஒரு காவலர் நீயே வயிற்றுக்குள் கையை விட்டு குழந்தையை வெளியே எடுத்து விட்டாயா? என்று சற்றும் மனசாட்சியே இல்லாமல் கேட்டிருக்கிறார்.

பின்னர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தை ஐந்து மாதங்களிலேயே பிறந்துவிட்டதால் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் சிறைக்காவலர்கள் Shaye Bear வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக குழந்தையை வெளியே எடுத்துவிட்டதாகவே குற்றம் சாட்டி வரும் நிலையில் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதிதாக திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

ஹைதராபாத் நகரில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். லோகித் – அஞ்சலி ஆகிய இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியிலும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அஞ்சலியிடம் படிப்பை நிறுத்திவிடுமாறு அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால், பெற்றோரை எதிர்த்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், பூச்சிகொல்லி மருந்தை வாங்கி இருவரும் குடித்துள்ளனர். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரான்சில் நடந்த கோர விபத்து : பிரித்தானியாவைச் சேர்ந்தவர் பலி!!

 

பிரான்சில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் பிரித்தானியாவைச் சேர்ந்த டிரைவர் பலியாகியுள்ளார். பிரான்சின் Miramont de Guyenne பகுதிக்கு அருகே உள்ள Monteton என்ற கிராமத்தில் இருக்கும் சாலையில் இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் பிரித்தானியாவை சேர்ந்த டிரைவர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தெரிவிக்கையில், பிரான்சைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க பெண் ஓட்டி வந்த கார், எதிர் திசையில் வந்த காரின் மீது மோதியுள்ளது.

இதனால் எதிர் திசை காரில் இருந்த டிரைவர் மோசமான காயங்களுடன் பலியாகியுள்ளதாகவும், தற்போது வரை கிடைத்த தகவலின் படி இறந்த நபர் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் எனவும், ஆனால் அவர் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 பேரை சுட்டுக் கொன்ற பொலிஸ் : தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு இரத்தக்கறை!!

தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது. போராட்டம் 25 நாள், 50 நாள் என கடந்து 100-வது நாளை எட்டியது.

இதையடுத்து தங்கள் கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்தனர். பேரணியாகச் சென்று மனு அளிக்க அனுமதி கேட்டனர்.

ஆனால் சாதாரணமாக அனுமதி கொடுத்து போராட்டப் பாதையை வகுத்துக் கொடுத்து மனுவைப் பெற வேண்டிய மாவட்ட நிர்வாகம் தலைகீழாக நடந்துகொண்டு போராட்டத்தை கடுமையாகக் கையாண்டது.

இதன் விளைவு பேரணி சொற்ப எண்ணிக்கையில் இருந்த பொலிசாரையும் மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை வெடித்தது

பொலிசார் தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னர் 1980-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று குருஞ்சாக்குளத்திலேயே விவசாயப் போராட்டத்தில் 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

தனியார் ஒருவரால் நடத்தப்படும் ஒரு ஆலையை அகற்ற பொதுமக்கள் மாவட்டம் முழுதும் போராட, போராட்டத்தை அலட்சியமாக கையாண்டு 11 பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் பலியானது இதுவே தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாகும்.

கட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி!!

 

குஜராத் மாநிலத்தில் தலித் கூலித் தொழிலாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் முகேஷ் வன்னியா. கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குப்பையை அகற்றுவதற்காக சென்றுள்ளார்.

வழக்கமாக இவர்கள் சாக்குப்பைகளையும் குப்பையில் இருந்து இரும்பு பொருட்களை பிரித்து எடுப்பதற்காக காந்தத்ததையும் கையில் வைத்திருப்பர். இந்நிலையில் வாகன உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலையில் குப்பையை எடுப்பதற்காக சென்றுள்ளனர். காந்தங்களை பயன்படுத்தி குப்பைகளில் உள்ள இரும்புகளையும் பிரித்து எடுத்துள்ளனர்.

இவர்களின் செயலில் சந்தேகமடைந்த ஊழியர்கள் இவர்களை திருடர்கள் எனக் கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கணவன் மனைவி இருவரையும் தாக்க ஆரம்பித்துள்ளனர். முகேஷை அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து 5பேர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தலித் என்பதால் இவர்களை கூறியதை ஏற்க மறுத்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த அவரது மனைவி தனது கிராமத்திற்கு சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வந்துள்ளார். தொழிற்சாலைக்கு வந்து அவர்கள் பார்த்த போது முகேஷ் கீழே இறந்து கிடந்தார்.

இந்நிலையில் முகேஷை கட்டி வைத்து அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவியது. இதில் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட 5பேர் அவரை தாக்குவது பதிவாகியுள்ளது. கம்பத்தில் அவரை கயிற்றால் கட்டி இரும்பு கம்பிகளைக் கொண்டு கடுமையாக தாக்குகின்றனர்.

அவர் வலி தாங்க முடியாமல் கதறுகிறார். இருப்பினும் இறக்கமில்லாத அந்தக்கூட்டம் அவரை கடுமையாக தாக்குகிறார்கள். இந்த விவகாரம் தற்போது கடுமையாக விவாதத்திற்குள்ளானது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநிலத்தின் சுயேட்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5பேரை கைது செய்துள்ளனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினருக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் மாஸ்டர் சில்வா!!

 

தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10-ஆம் வகுப்பு மாணவி உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய தங்கையின் கணவர் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில்வா தனது ட்விட்டரில், “எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை ஜெ. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை மிக்க வேதனையோடு பகிர்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், உயிரிழந்த தங்கை கணவரின் குண்டடிப்பட்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

வாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்!!

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி வாயில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை நேற்று தீவிரமாக முன்னெடுத்தனர்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்த நிலையில், ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையப் பார்த்தனர்.

அவர்களை பொலிசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்களமே போர்க்களமானது. இதையடுத்து தடைகளை மீறி போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நுழைந்தனர். காவல்துறையினர் மற்றும் அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முழக்கங்கள் பலமாக ஒலித்தன.

அந்த முழக்கங்களின் சத்தம் அடங்கும் விதமாக, சற்று நேரத்தில் காவல்துறையினர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் சிதறி ஓட, சிலர் சம்பவ இடத்திலேயே குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராம், தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கிளாஸ்டன், சிலோன் கொலனியை சேர்ந்த கந்தையா, தூத்துக்குடி குறுக்குசாலையைச் சேர்ந்த தமிழரசன், மாசிலாமணிபுரத்தை சேர்ந்த சண்முகம், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி செல்வராஜ், மணிராஜ் ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் கொடுமையான சம்பவம் என்ன வென்றால், மாணவி வெனிஸ்டா வாயில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த மரணங்கள் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு!!

2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த வீரர்கள் 33 பேரை தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடும் அனைத்து வீரர்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த வீரர்கள் A, B, C, D மற்றும் பிரீமியர் என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை – மூதூர், நெய்தல் நகர் பகுதியில் 11 வயதான தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூதூர் நெய்தல் நகரை சேர்ந்த ரபாய்தீன் இல்யாஸ் எனும் 35 வயதான நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயும், தந்தையும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்துள்ள நிலையில், தாய் வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியும், அவரது சகோதரரும் தந்தையின் பராமறிப்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், மனைவி வெளிநாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.

சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்பில் உறவினர்களும், அயலவர்களும் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதன் அடிப்படையிலேயே தந்தை மகளை இரண்டு வருடங்களாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இரு சகோதரிகளில் ஒருவர் மரணம் : ஒருவர் உயிர்காக்க இச் செய்தியை அதிகம் பகிருங்கள்!!

வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது 8, சரணிக்கா வயது 7, Blood Group – O+ positive. இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது.

இவர்களின் தாய் தந்தை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்ததால் ஏற்கனவே தமது மகனை கடந்த 2013ம் ஆண்டு அவரது 7வது வயதில் இழந்து தவித்தனர்.

தற்போது அவர்களது அடுத்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அவருக்கு இருந்த அதே இருதய
நோய் காரணமாக [Familial Dilated Cardiomyopathy with moderate to severely reduced LV Function] அவசரமாக இருதய மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

இதில் தனிஸ்கா என்ற சிறுமி சற்றுமுன் காலமாகியுள்ளார் எனவே மற்றைய சிறுமியை காப்பாற்ற முன்வாருங்கள்.

இவர்களுக்கு இருதய மாற்றம் மட்டும் தான் ஒரே தீர்வு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக ஒரு மனிதன் உயிர் வாழ 65% மேல் இதயத்தின் செயற்பாடு காணப்பபட வேண்டும். ஆனால் அவர்களது இரண்டாவது குழந்தைக்கு 10%மாகவும் 3வது குழந்தைக்கு 25% மாகவும் காணப்படுகிறது.

எனவே கருணை உள்ளம் கொண்ட அன்பு நெஞ்சங்களே இருதயம் பெறக்கூடிய வழிமுறைகள், இருதயம் பெறும் முறைகள் தெரிந்தவர்கள் இருதயம் வழங்க முடிந்தவர்கள் இத் தகவலை பார்க்கும் வரை அதி வேகமாக பகிர்ந்து [Share செய்து] இப் பிஞ்சுக் குழந்தைகளின் உயிர் காக்க உதவுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு –
தொ.பேசி.இலக்கம் – 0094772101377
0094779620509
E-mail Address – shanuyadevi@gmail.com

70 வயதில் கர்ப்பமான மூதாட்டி : இது அவருக்கு எத்தனாவது குழந்தை தெரியுமா?

 

மெக்சிகோவில் 70 வயது மூதாட்டி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெறவுள்ளதால், இவர் தான் உலகின் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

மெக்சிகோவின் Mazatlan பகுதியைச் சேர்ந்தவர் Maria de la Lu. 70 வயதான இவருக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாகி எட்டாவது குழந்தையை பெற்றேடுக்கவுள்ளார்.

இது குறித்து Mazatlan கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்பே நான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்பட்டேன். என் கால்கள் வலித்தன, தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தேன், இதைத் தவிர மயக்கம் ஏற்படுவதையும் உணர்ந்தேன்.

இதன் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்தேன். சுமார் 10 முறை சோதனை செய்த போதும் நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானதால், மருத்துவர்களே இதை நம்ப முடியாமல் திகைத்து போனர்.

அந்த சோதனையில் எனக்கு பெண் குழந்தை தான் பிறக்கப் போவதும் தெரியவந்தது என்று கூறியுள்ளார். மிகவும் வயதான இவருக்கு சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பில்லாத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தை பெற்றேடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர் ஸ்பேயினைச் சேர்ந்த Maria del Carmen Bousada de Lara, கடந்த டிசம்பர் மாதம் 2006-ஆம் ஆண்டு தன்னுடைய 66 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றேடுத்தார்.

அதுவே உலகின் அதிக வயதில் குழந்தை பெற்றேடுத்த பெண்ணாக கூறப்பட்ட நிலையில், தற்போது 70 வயதில் இவர் குழந்தை பெற்றேடுக்கவுள்ளதால், இவரே இனி உலகின் அதிக வயதில் குழந்தை பெற்றேடுத்த பெண் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த Omkari Panwar என்ற பெண் கடந்த 2008-ஆம் ஆண்டு 70 வயதில் இரண்டு குழந்தைகள் பெற்றேடுத்ததாக கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரமாக தரையிறங்கிய விமானம் : 53 பேர் படுகாயம்!!

சவுதி அரேபிய விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் Airlines நிறுவனத்துக்கு சொந்தமான Airbus A330 ஜெட் விமானம், மெக்காவிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி சென்றது.

இந்த விமானத்தில் 151 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், நடுவானில் விமான எஞ்சினில் உள்ள Hydrolic system திடீர் என செயலிழந்தது. இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த நகரான ஜெட்டாவில் விமானத்தை தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

உடனடியாக தரையிறக்கினால் தான் பெரும் விபத்தை தவிர்க்க முடியும் என்பதால், விமானிகள் மிக அவசரமாக விமானத்தை ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

அப்போது, விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி சேதம் அடைந்தது. இந்த மோதலினால் விமானத்தில் இருந்த பயணிகளில் 52 பேர் காயமடைந்தனர். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்த அவசரகால கதவு வழியே வெளியேற்றப்பட்டனர்.

ஒரு பெண் பயணிக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சவுதி விமான போக்குவரத்து விசாரணை ஆணையம் இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

விபத்தில் இறந்த மகன் : பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்ந்துகொண்ட பெற்றோர்!!

நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்திவேல் – சுதா தம்பதியினரின் ஒரே மகன் நிஷாந்த். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் நிஷாந்தின் உடல் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், தங்கள் மகன் இறந்துவிட்டதை தாங்கிகொள்ள முடியாமல் கதறி அழுதுள்ளனர்.

நமக்கு இருந்த ஒரே மகனும் இறந்துவிட்டதால், இனி நாமும் உயிர்வாழக்கூடாது என குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏக்கத்துடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய 8 வயது மகள் : கண்கலங்க வைத்த புகைப்படம்!!

 

உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீபக் நெய்ன்வால் என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல், சொந்த ஊரானஉத்தரகாண்டில் வைக்கப்பட்டது.

பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, இறந்துபோன ராணுவவீரரின் 8 வயது மகள் தனது தந்தையின் உடல் முன் நின்றுகொண்டு, ஏக்கத்துடன் அழுதுகொண்டே அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.