இறக்கப் போகிறேன் சேட்டா : கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்!!

நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ்தாக்குதலின் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி இவர்களை கவனித்து வந்த லினி என்ற செவிலியரும் இந்த வைரசின் தாக்குதலால் பலியாகினார்.

திருமணமனமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான லினி, இறப்பதற்கு முன் கணவனுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், சாஜி சேட்டா நான் மரணத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறேன். நான் உங்களை காண முடியாது என எண்ணுகிறேன். மன்னித்து விடுங்கள்.

நமது குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்றும் அறியாத நமது குழந்தைகளை உங்களுடனே அழைத்து செல்லுங்கள். தந்தை இல்லாமல் அவர்கள் தனியாக இருக்கக்கூடாது எழுதியுள்ளார்.

பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு : வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பரிதாபமாக மாணவி பலி!!

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று போராட்டம் 100-வது நாளை எட்டியதால், பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர்.

அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை பொலிசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.

இதனால் பொலிசார் திடீரென்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தற்போது வரை 10 பேர் பலியாகியிருப்பதாகவும், அதில் சிலரின் தகவலும் வெளியாகியுள்ளது.

மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இறந்தவரின் 3 பேரின் அடையாளம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூசு சம்பவமே நடந்தது இல்லை எனவும், ஒரே நாளில் 8 பேரை பொலிசார் சுட்டு கொலை செய்துள்ளது தமிழகம் முழுவதிலும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கதறியுள்ளனர்.

இதில் உயிரிழந்த வெனிஸா என்ற மாணவி வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் பிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்?

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் சந்திப்பின்போது சபாநாயகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பரிந்துரை செய்துள்ளார் என சபாநாயகர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மனோ கணேசன் தனது பதிவில் “அங்கஜன் இராமநாதன் எம்பியை உபசபாநாயகர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக இன்று சபாநாயகர் கட்சி தலைவர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இலங்கையர் : விடாமுயற்சியின் பலன்!!

உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது வீரர் என்ற சாதனையை யோஹான் பீரிஸ் பதிவு செய்துள்ளார்.

இவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராவார். இவருக்கு முன்னதாக ஜெயந்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண் முதலாவது சாதனையை படைத்திருந்தார்.

அந்த வகையில், நேபாள நேரப்படி இன்று காலை 5.55 மணியளவில் யோஹான் பீரிஸ் எவரஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். இரண்டாவது தடவையிலேயே எவரஸ்ட் சிகரத்தை அடைந்து யோஹான் பீரிஸ் சாதனை படைத்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த வருடம் உதும்பாலவுடன் யோஹான் பீரிஸ் எவரஸ்ட் சிகரத்தை ஏற முயற்சி செய்திருந்தார். எனினும் அவர் எடுத்து சென்ற ஒட்சிசன் தாங்கியில் கசிவு ஏற்பட்டதனால் அப்போது அவரால் அந்த பயணத்தில் இணைந்து கொள்ள முடியாமல் போனது.

விடா முயற்சியின் பலனாக இரண்டு வருடங்களுக்குப் பின் இன்று தனது சாதனையை யோஹான் பீரிஸ் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள்!!

கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிஸ்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிஸ்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த குழந்தைகள் தற்போது இளமைப்பருவத்தை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலான தேடலை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் தமது உண்மையான இலங்கைப் பெற்றோர் மற்றும் முன்னைய வசிப்பிடம் குறித்த தகவல்களை தேடவும் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகள் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பான இந்த தகவல் சுவிஸ்லாந்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள காலநிலை : எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும். அதேவேளை ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்பதுடன், மக்கள் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும், நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, குருநாகல், கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மண்சரிவு, வெள்ளம், இடி மற்றும் மின்னல் தாக்கம், நிலம் தாழிறக்கம், ஆறுகள் பெருக்கெடுப்பு போன்ற அனர்த்தங்கள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியில் முறிகண்டியானுக்கு இந்த நிலைமையா?

 

கிளிநொச்சி ஏ9 வீதியில் முறிகண்டி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகம் குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம் உள்ள குறித்த பகுதியில் இவ்வாறு ஆலயத்தின் வளாகம் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

முறிகண்டி ஆலய வளாகத்தினைச் சுற்றியுள்ள மக்களின் பாவனைக்கான இந்த பகுதி புனரமைக்கப்படாத நிலையில், சேதமடைந்து காணப்படுகின்றது.

குறித்த பகுதியை மக்கள் தமது போக்குவரத்துத் தேவைக்காகவும் பயன்படுத்திவருகின்ற நிலையில் இவ்வாறு இந்த பகுதி சேதமடைந்து காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மழைக்காலங்களில் நீர்த்தேங்குவதன் காரணமாக இதர பல சுகாதார சீர்கேடுகளுக்கும் தாம் உட்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த பகுதியின் ஊடாக வேறு இடங்களுக்கு பயணிக்கும் மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இன, மதம் என்பதை மறந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

எனவே, இந்த பகுதி உட்படுத்தப்படும் பிரதேச சபை மற்றும் மாகாண சபை என்பன கவனத்திற்கொண்டு ஆலய வளாகத்தினை செப்பனிட்டுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யாழில் இடி விழுந்து பற்றி எரிந்த தென்னை மரங்கள்!!

யாழ் – தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு, இடி மன்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் இடி மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி நால்வர் உயிரிழந்ததுடன், மண்சரிவுகளாலும், வெள்ளத்திலும் சிக்குண்டு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் யாழ். தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்கள் பற்றி எரிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பில் சற்று பதற்றம் : இளைஞர்கள் மீது மோதிய இராணுவ வாகனம்!!

புதுக்குடியிருப்பில் இராணுவ வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி தேவிபுரப்பகுதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்த பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இரண்டு இளைஞர்கள் பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் எதிரே வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிளுடன், மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்  கடந்த 19.05.2018  சனிக்கிழமை  சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார்  தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது .

மேற்படி மகோற்சவத்தில்

சப்பர திருவிழா -26.05.2018  சனிக்கிழமையும்

தேர்த்திருவிழா -27.05.2018  ஞாயிற்றுகிழமையும்

தீர்த்த திருவிழா -28.05.2018  திங்கட்கிழமையும்

பூங்காவன  உற்சவம் -29.05.2018    செவ்வாய்க்கிழமை யும்  இடம்பெற உள்ளன.

 

இவரின் வயதைக்கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!!

ஜப்பானைச் சேர்ந்த மொடல் ஒருவர், 47 வயதில் 20 வயது பெண் போன்ற தோற்றத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரைஸா ஹிராகோ. இவர் அந்நாட்டின் புகழ்பெற்ற மொடலாக இருக்கிறார். 47 வயதாகும் ரைஸா, தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்தார்.

இவரது புகைப்படங்களை பார்த்தவர்கள் பலர் ரசிகர்களாக மாறினர். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இவருக்கு குவிய தொடங்கினர். அதற்கு காரணம் இவரது இளமையான தோற்றம் தான்.

20 வயது பெண் போன்ற தோற்றத்தில் இருந்த ரைஸாவைப் பார்த்து ரசிகர்களானவர்கள், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தகவல்களைத் தேடியபோது, இவரின் உண்மையான வயதான 47-ஐ அறிந்து ஆச்சரியமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் ரைஸாவைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. அப்போது ரைஸாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக இருந்தது.

அதன் பிறகு 2 லட்சமாக உயர்ந்தது. தற்போது இவரை சுமார் 2,22,000 பேர் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனது இளமையின் ரகசியம் குறித்து ரைஸா ஹிராகோ கூறுகையில், ‘தோல் சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் என் இளமைக்கு காரணமா? என்று எல்லோரும் கேட்கின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட என்னுடைய மரபணுதான் இளமைக்கு காரணமாக இருக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து மிரட்டல் வருகிறது : கண்கலங்கிய நடிகை!!

2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் 18.5.2009.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தன்யாவுக்கு வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக அவர் சமீபத்தில் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், தனது அம்மாவுடன் வசித்து வருவதால், எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என கண்கலங்கியுள்ளார்.

இந்நிலையில, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி, இன்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை தன்யா மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், நடிகை தன்யா என்பவர் ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழர் அல்லாத மாற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதால் தமிழர்கள் மேல் இயற்கையாக இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாகக் காவல்துறையிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார். கீழத்தரமான சுயவிளம்பரம் தேடிக்கொள்வதற்காகவே இவ்வாறு ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி பொய் புகார்கள் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

நடிகை தன்யா கூறியதாவது, நான் தமிழ்பெண்தான், எனக்கு விளம்பரம் தேட வேண்டும் என அவசியமில்லை. எனக்கு வரும் மிரட்டல்களை தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் எனக்கும் மிரட்டல் விடுத்தவர்களின் தொலைபேசி எண்களை பொலிசாரிடம் அளித்துள்ளேன், அவர்கள் விசாரணை நடத்துவார்கள் எனவும் கூறியுள்ளார்.

அப்பாவி இலங்கை தமிழ் இளைஞன் பிரித்தானியாவில் கொலை!!

பிரித்தானியாவில் புதிய வாழ்க்கை ஒன்றை தேடி சென்ற இலங்யைர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான உத்தம வில்லன் எனப்படும் அருனேஷ் தங்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை குறித்த இளைஞன் Mitcham என்ற பகுதியில் கொடூரமாக கத்திக்குத்துக்கு இலக்காகி படு காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை பலனளிக்கவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்தமை தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஸ்கொட்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் மிகவும் அன்பான மற்றும் நட்பான ஒருவர் எனவும், யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் ஏற்படுத்தாதவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் நல்ல மனிதர் அவர் யாருக்கு உதவி தேவைப்படுகின்றதோ அவர்களுக்கு கைகொடுக்கும் ஒருவராக வாழ்ந்தார் என பெயர் கூற விரும்பாத ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் நன்கு மது அருந்தினார், அவருக்கு ஒரு வீடேனும் இல்லை. எனினும் யாருக்கு வேண்டும் என்றால் ஓடி சென்று உதவுவார். தனது பையில் இறுதியாக உள்ள பணத்தை கேட்டாலும் அவர் கொடுப்பார். மிகவும் நல்ல மனிதன். எல்லோருக்கும் நல்லவராகவே இருந்தார். யாருடனும் மோதலுக்கு அல்லது வாய் தகராறுகளுக்கு அவர் செல்ல மாட்டார். அவரால் யாருக்கும் ஆபத்து இல்லை என இன்னும் ஒரு நண்பர் கூறியுள்ளார்.

அவது குடும்பத்தினர் யாரும் பிரித்தானியாவில் இல்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தந்தை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நியாயம் பெற்று கொடுக்கப்படும்.

அவரது குடும்பத்தினருக்கு இந்த மரணம் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது மிகவும் மோசமான ஒரு செயற்பாடாகும். பிரித்தானிய தலைநகரில் இந்த வருடத்தில் மாத்திரம் 60 பேர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மேயர் Sadiq Khan தெரிவித்துள்ளார்.

யாழில் நடந்த பயங்கரம் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதி ஊடாக பயணித்த ரயிலில் மோதுண்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் கடவை மூடப்படாத நிலையில் பயணித்த ரயில் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மதிய வேளையில் அந்தப் பகுதியால் சென்ற ரயில், ஒலிகளை எழுப்பாத நிலையில் பயணித்துள்ளது. இதன் போது பாடசாலை நிறைவடைந்து பிள்ளைகளுடன் பெற்றோர் சென்று கொண்டிருந்தனர். ரயில் கடவையைக் கடந்தபோது ரயில் வந்து கொண்டிருந்தது.

ரயில் பாதுகாப்பு கடவை போடப்படவில்லை. அதனால் ரயில் வரவில்லை என்று கருதி, அந்தப் பகுதியை கடந்து சென்றுள்ளனர். எனினும் திடீரென வந்த ரயிலை கண்ட மக்கள் பல பகுதி சிதறி ஓடியுள்ளனர்.

இதன் காரணமாக தனது பாடசாலைக்கு வந்த பிள்ளையை கூட்டிச் சென்றவர் கடவைக்கு அருகில் வீழ்ந்துள்ளார். பலர் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதில் கடமையில் இருந்தார். பணி பகிஷ்கரிப்பு காரணமாக அவர் அதில் தற்போது கடமையில் இருப்பதில்லை என கடவைக் காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் தெரிவித்தார்

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பேஸ்புக்!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையினை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் “பாதுகாப்பை உறுதி செய்தல் (Saftey Check)” முறையை தற்போது பேஸ்புக் செயற்படுத்தியுள்ளது.

அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிந்து கொள்வதற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஏற்படும் அனர்த்தங்களின் போது, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2015ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை பேஸ்புக் நிறுவனம் அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை : நீரில் மூழ்கிய பல நகரங்கள்!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடைமழை காரணமாக 9851 குடும்பங்களை சேர்ந்த 38040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 8 பேர் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

ஜிங் கங்கை பெருக்கெடுத்த காரணத்தினால் காலி மாவட்டத்தில் 1960 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பானதுகம பிரதேசத்தில் நில்வளா கங்கை பெருக்கெடுத்தமையினால் மாத்தறை, கடவத்தை, திஹகொட, மாலிம்பட, கும்புருபிட்டிய அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபந்தர ஆகிய பிரதேசங்கள்ல நீரில் மூழ்கியுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்றைய தினமும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும், இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு மாலை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் எனவும், இடி மின்னல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.