மட்டக்களப்பு – வாழைச்சேனை, வாகனேரியில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனேரி குளத்தில் இன்று காலை நீர் எடுக்க சென்ற 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடமத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனை, வாகனேரியில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனேரி குளத்தில் இன்று காலை நீர் எடுக்க சென்ற 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நூற்றுக்கு 15 வீதத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என, அனைத்து இலங்கை பேருந்து சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரிய்ஜித் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை என்றால் அனைத்து பேருந்து சங்கத்தினரும் இணைந்து தொடர் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விலையை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்தமையால் போக்குவரத்து துறைக்கு மிகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அதிகரத்திற்கு வந்த நாளில் இருந்து பொது போக்குவரத்தின் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை என அஞ்ஜன பிரியக்ஜித் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்கு 50 ரூபாயில் காணப்பட்ட கட்டணம் நாளை முதல் 60 ரூபாவாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கான செலவுகளும் அதிகரிக்கவுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அதிபரின் மனித தன்மையற்ற அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு குமுழமுனையை பிறப்பிடமாகவும் யாழ். திருநெல்வேலியை வசிப்பிடாகவும் கொண்ட கொஜெயசீலன் கவிதா (வயது 40) என்ற தமிழ் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஆசிரியை கடமையாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியையை பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக பல நெருக்கீடுகளைக் கொடுத்துவந்ததன் விளைவாக ஆசிரியை அப்பாடசாலையிலிருந்து கடந்த வாரம் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
எனினும் குறித்த அதிபரால் ஆசிரியைக்குரிய ஆவணங்களை வழங்க மறுக்கப்பட்டதுடன், இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலைக்கு வந்து மாலை நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த பாடசாலையில் ஆசிரியை கடமையாற்றியதை உறுதிப்படுத்தும் சம்பள படிவம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை உறுதிப்படுத்தி வழங்காது நிறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியையால் வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்த உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதிபர் பற்றி முறையிட்டதற்காக வலயக்கல்விப்பணிப்பாளரால் ஆசிரியை கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அதிபர்கள் வழமையாக எல்லா பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கு தொந்தரவு கொடுப்பது சாதாரண விடயம்தானே என கல்வி உயரதிகாரிகள் பொறுப்பற்றுப் பதிலளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியையின் உயிரைப் பறித்த குற்றவாளி என கூறப்படும் அதிபரை காப்பாற்றுவதற்காக மாகாண கல்வித் திணைக்களம் நடத்துகின்ற போலியான விசாரணைகளை நிறுத்தி, வடமாகாணக் கல்வி அமைச்சு நேரடியாகத் தலையிட்டு நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் கூறுகையில், குறித்த ஆசிரியைக்கு அதிபரால் தொந்தரவு இருந்திருக்கிறது. அது வழமையாக எல்லாப் பாடசாலைகளிலும் உள்ள சாதாரண விடயம்தானே. அதிபர்கள் ஆசிரியர்களைப் பேசுவது, ஏசுவது வழமையான விடயம்தானே. இது ஒரு சாதாரண விடயம்.
அவரது உயிரிழப்புக்கு இதுதான் காரணம் எனக் கூறமுடியாது. ஆசிரியைக்கு நோய் இருந்ததென்று கூறப்படுகின்றது. அதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம்.
இது பற்றிய முறைப்பாடு அல்லது தகவல் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. முறைப்பாடு வந்தால் அது பற்றிக் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் கூட பூநகரி விக்னேஸ்வர வித்தியாலயத்தின் அதிபரால் அங்கு நடைபெற்ற கூட்டத்தின் போது, தொண்டர் ஆசிரியராகவிருந்து நியமனம் பெற்று சேவைக்கு வந்தவர்களை அவமதிக்கும் வகையில் இவர்களால் தான் கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் இறுதி நிலையில் இருக்கின்றது.
தொண்டர் ஆசிரியர் என்று இருப்பது போல தொண்டர் வைத்தியர் என்று யாராவது இருந்தால் நோயாளிகளின் நிலை என்னவாகும் அதே மாதிரித்தான் தொண்டர் ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
இதை வலயக்கல்விப்பணிப்பாளரே கூறியுள்ளார் என ஏளனமாக அனைவர் மத்தியிலும் கூறியதாக ஆசிரியர்களால் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படியான சம்பவங்கள் வட மாகாணத்தில் இடம்பெறுவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்களே காரணமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
நடிகர் பிரபுதேவாவை எனக்கு பிடிக்கும், அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என நடிகை நிகிஷா பட்டேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். பாண்டிமுனி எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஹீரோக்களில் பலரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் நட்பாக பழகுகிறோம்.
அவரை திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.திடீரென்று பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் என்று நிகிஷா பட்டேல் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அவர் சட்டப்படி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
சாஸ்திரங்களின் படி இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை பின்பற்றி வந்தால் நம் வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் நன்மை அதிகரிக்கும்
உறங்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பு நிரப்பிய ஒரு சிறிய பையை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் இரவில் கெட்ட கனவுகள் வராது.ஒரு வெண்கல சொம்பில் நீரை நிரப்பி, அதை தலைக்கு பக்கவாட்டில் வைத்துகொண்டு தூங்க வேண்டும். மறுநாள் காலையில் அந்நீரை செடிகளுக்கு ஊற்றினால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
இரவில் உறங்கும் முன் நல்ல புத்தகத்தைப் படித்து விட்டு, தென் திசையில் தலையை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.இரவு நேரத்தில் உறங்கும் முன் 10 நிமிடம் தினமும் தியானம் செய்தால், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் மூளையின் ஆற்றல் அதிகரிக்கும்.
பாதங்களை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட்டு, கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, குதிகாலில் தடவிக் கொண்டு உறங்க வேண்டும்.
உறங்கும் முன் குறைந்தது 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்து, சிறிது நேரம் தியான நிலையில் அமர்ந்து விஷ்ணு மந்திரத்தை சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணான பிரகதி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார்.
இசை நிகழ்ச்சிகள், இசை அல்பம்கள், மற்றும் பின்னணி பாடகி என ரொம்ப பிசியாக இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில், இவர் தமிழில் தெகிடி திரைப்படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. இதனால், நெட்டிசன்கள் அனைவரும் பிரகதி நடிகர் அசோக் செல்வனை காதல் திருமணம் செய்ய இருப்பதாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
காரைதீவில் பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் கொண்டுவந்து வீசப்பட்ட முதியவர் யார்? என்பது இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் நேற்று வைத்தியசாலைக்குச்சென்று அவரது உடல்நிலை முன்னேற்றம் பற்றியும், அவரை யாராவது தேடி வந்தனரா என்பது தொடர்பாகவும் வினவினார்.
இன்னும் சுயநினைவின்றிய நிலையிலிருப்பதால் அவரை மேலதிக சிகிச்சைக்காக உயர்வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்து முதியவர் வீதியில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் 1.40 மணியளவில் காரைதீவில் இடம்பெற்றுள்ளது. அவர் வாயைத்திறந்து கதைப்பதாயில்லை. ஆனால் ஒரேயொரு வார்த்தையை மட்டும் பேசுகின்றார்.
சாப்பாடு, சாப்பாடு என்று மட்டும் கூறுகின்றார். இந்நிலையில், குறித்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் காரைதீவு வைத்தியசாலைக்கு வந்து அடையாளம் காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைதீவில் இன்று வயோதிபர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர் ”சாப்பாடு… சாப்பாடு” என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் பேசவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று பகல் 12.40 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வயோதிபரை ஆட்டோவில் கொண்டுவந்து காரைதீவு 12ஆம் பிரிவில் நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கிடைத்த தகலுக்கமைய வயோதிபர் கிடந்த இடத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீதியில் கிடந்த அந்த வயோதிபரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தார்.
மேலும், அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கும் அறிவித்தல் கொடுத்ததன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
யார் ஆட்டோவில் வந்து வயோதிபரை கொண்டுவந்து இங்கு போட்டார்கள்? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்தப்படத்திலுள்ள வயோதிபரை இனங்காண உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே காணப்படும் எரிபொருள் மீள்நிரப்பும் நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் ஏற்ப்பட்ட பரபரப்பினை தடுக்கும் முகமாக மீள்நிரப்பும் நிலையத்தில் நெளுக்குளம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோலின். விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன்படி அதன் புதிய விலை 148 ரூபாவாகும். லங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது.
இதனையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் 50க்கு மேற்பட்ட வாகனங்கள் தரித்து நின்ற சமயத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவித்தமையடுத்து அங்கு பதற்றநிலை நிலவியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் தீர்வு காணப்பட்டு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருகே மூதாட்டி மற்றும் அவருடன் வந்தவர்களை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள போளூரில் குழந்தைகளுக்கு சாக்லேட் தந்த பாட்டி மற்றும் அவர் கும்பத்தினரை அந்த கிராம மக்கள் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூதாட்டி பலியானார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்மணி என்கிற 65 வயது மூதாட்டி இவர் தனது குடும்பத்தை சேர்ந்த மோகன்குமார் உள்ளிட்ட ஐந்து பேருடன் குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் பொருட்டு காரில் சென்றனர். திருவண்ணாமலை அருகே உள்ள அத்திமூர் தான் இவர்கள் குலதெய்வ கோவில் இருக்கும் ஊர்.
அங்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல வழி கேட்பதற்காக டிரைவர் ஒரு கிராமத்தில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் ருக்மணி பிரியமாக சாக்லட் தந்துள்ளார்.
இதனை கண்ட ஊர் மக்கள் மூதாட்டி ருக்மணி மற்றும் அவருடன் வந்தவர்கள் குழந்தைகள் கடத்தும் கும்பல் என்று சந்தேகம் கொண்டனர். இதனை அடுத்து அனைவரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் அடிக்க தொடங்கியிருக்கின்றனர்.
நிலைமை மோசமானதை தொடர்ந்து அவர்கள் காரில் ஏறி தப்பிக்க நினைக்கையில் அடுத்த ஊர் காரர்களுக்கு போன் போட்டு வண்டியை மறிக்க சொல்லி அங்கும் அவர்களை அடித்து உதைத்திருக்கின்றனர். இந்த கொடூரத்தை வீடியோவாக எடுத்த ஊர் மக்கள் வாட்ஸப்பில் பெருமையாக உலவ விட்டிருக்கின்றனர்.
சிகிச்சை பலனின்றி ருக்மணி (65) இறந்த நிலையில் , அவருடன் வந்தவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது இவர்களின் ஆடைகளை உருவி தீவிரமாக தாக்கியிருப்பது வீடியோவில் தெரிய வந்துள்ளது.
இது பற்றி ருக்குமணி அம்மாவின் பக்கத்துக்கு வீட்டாரிடம் கேட்ட போது ருக்மணி மிகவும் அன்பானவர். உதவி செய்யும் இரக்க குணம் வாய்ந்தவர் அவர் அன்பினால் குழந்தைகளுக்கு தந்த இனிப்பு அவரது உயிரையே குடித்து விட்டது. அவரின் குடும்பத்திற்கு இந்த கிராமத்தார் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று சோகமாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அத்திமூர் காவல் துறையினர் வாட்சப் விடியோவை வைத்து 50 பேரை குற்றவாளிகளாக கருதி அவர்களை தேடி வருகின்றனர்.
இன்று மாலைக்குள் மீதமிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிய வருகிறது. தம்பு கொட்டன்பாரை கலையன் கிராமத்தை சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 100 பேர் கொண்ட காவல்துறையினரை ஏழு குழுவாக பிரித்து வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசுகையில் மனித நேயம் செத்து விட்டது என்று வருத்தப்பட்ட எஸ் பி பொன்னி அவர்கள் மேலும் சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது, வாட்சப் வதந்திகளை நம்ப கூடாது எனவும் தெரிவித்தார் . கைதுக்கு பயந்து ஊர் மக்கள் வீட்டை காலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் மதுரையில் பெற்ற மகனை அவரது தந்தையே கொன்று புதைத்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சௌபா என்ற சவுந்திரபாண்டியன், பிரபல எழுத்தாளரான இவரது மனைவி லதா பூரணம் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது மகன் விபின் இருவரிடமும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக தந்தையுடன் தங்கியிருந்த மகனை காணவில்லை என எஸ்.எஸ்.காலனி பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி லதா பூரணம் புகார் அளித்தார்.
சந்தேகத்தின் பேரின் சவுந்திரபாண்டியனிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பொலிசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், விலை உயர்ந்த காரை எனது மகனுக்கு பரிசாக வாங்கி கொடுத்தேன், போதைக்கு அடிமையானதால் விபின் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வான்.
ஒரே மகன் என்பதால் நானும் கொடுப்பேன், நான் வாங்கி கொடுத்த காரை என் அனுமதி இல்லாமல் விற்றுவிட்டான். இதுகுறித்து கேட்ட போது தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் கோபத்தில் சுத்தியலால் அடித்தேன், அவன் இறந்துவிட்டான்.
என்னசெய்வதென்று தெரியாமல், திண்டுக்கல் அருகே கொடை ரோட்டு பகுதியில் இருந்த எனக்கு சொந்த தோட்டத்துக்கு விபினின் உடலை எடுத்துச் சென்றேன்.
பள்ளப்பட்டி மூப்பர் தெருவைச் சேர்ந்த பூமி (40), நிலக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த கனிக்குமார் என்ற கணேசன் (42) ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தில் விபின் உடலை புதைத்து விட்டேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மூவரையும் அழைத்துச் சென்று விபினின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.
இந்தியாவில் பண மோசடியால் 16 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் நிஷா (16). பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியான இவரின் தந்தை ரஞ்சித்தாசுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அவர் வேலைக்கு செல்லவில்லை.
இதனால் குடும்பம் பண கஷ்டத்தில் தவித்து வந்தது. இந்நிலையில் தன்னுடைய ஏ.டி.எம் கார்டை நிஷாவிடம் கொடுத்த அவர் தந்தை தாஸ், 6000 பணத்தை எடுத்து வர கூறியுள்ளார்.
நிஷாவும் ஏ.டி.எம் மையத்துக்கு சென்று 6000 பணத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது மையத்தின் வாசலில் நின்ற இரண்டு ஆண்கள் நிஷாவிடம் பணம் எடுத்ததற்கான ரசீதை எடுத்தீர்களா என கேட்டுள்ளனர். இதற்கு நிஷா இல்லை என கூறியதோடு, தனது தந்தை போனில் மெசேஜ் வரும் என கூறினார்.
ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை என நிஷாவிடம் கூறிய இருவரும் மீண்டும் அவர் ஏ.டி.எம் கார்டை உபயோகப்படுத்த வைத்துள்ளனர்.
பின்னர் நிஷா வீட்டுக்கு வந்த போது தாஸ் செல்போனில் ரூபாய் 29000 எடுத்ததற்கான மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ந்தார். அப்போது தான் நிஷா அந்த இருவரால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து நிஷா பொலிசில் புகார் அளித்த நிலையில் தன்னால் பணம் போய்விட்டதே என மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் நிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் நிஷாவின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஏடிஎம் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்
பழம்பெரும் நடிகர் நீலு மரணமடைந்தார். அவருக்கு வயது 82. ஆர்.நீலகண்டன் என்ற இயற் பெயர் கொண்ட நீலு நாடகம் மூலம் திரைப்பட நடிகரானவர். நீலு என்ற பெயரில் இவர் நாடகங்களில் அறிமுகமானவர். நாடகம், சினிமா, டிவி நாடகம் என பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.
7000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 160 படங்களிலும் நடித்துள்ளார் நீலு. மறைந்த சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற நாடக கம்பெனியை ஆரம்பித்து நாடகம் போட்டு வந்தார்.
முகம்மது பின் துக்ளக், என்று தணியும் இந்த சுதந்திர தாகம் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். ஆயிரம் பொய் படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஏற்ற படங்கள் – கெளரவம், அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே. சம்பந்தம், அந்நியன், ரெண்டு, கல்யாண சமையல் சாதம், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகியவை.
வவுனியாவில் சர்ச்சைக்குரிய பாரதிபுரம் விக்ஸ்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சனைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிற்கு இஸ்லாமியர்கள் உரிமை கோரி வந்து அக்காணியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவ்வேளைகளில் குறித்த பகுதியில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்பை காட்டி தடுத்து வந்தனர்.
கடந்த (08.05) அன்று இஸ்லாமியர்கள் மீண்டும் குறித்த காணியை கைப்பற்றும் நோக்கில் JCB கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்ட பொழுது அப்பகுதி வாழ் தமிழர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க இன்று (10.05) வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினர் அதிரடியாக களமிறங்கி குறித்த காணியில் இக்காணி தமிழ் தெற்கு பிரதேச சபைக்கு உரித்தான காணி என்று பதாதையை இட்டுள்ளனர்.
வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) தலமையில் உபதவிசாளர் மகேந்திரன் ஆகியோருடன் கட்சி வேறுபாடின்றி ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்ததுடன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பதாதையை இட்டுள்ளனர்.
பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எல். றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சந்தேகநபர் சார்பில் ஆஜராகியுள்ள இலவச சட்ட ஆலோசனை ஆணைக்குழுவினால் மேற்கொள்ள வேண்டிய மேன்முறையீட்டில் நிலவும் தாமதம் காரணமாக குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிணை மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் நீதவான் இன்று ஆணைக்குழுவிடம் வினவிய போது, பிணை மனு சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் வித்தியா கொலை வழக்கில் குற்றவாளியா என்பது குறித்து ஆராய்வதாக ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.
எனினும், வித்தியா படுகொலை வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பில் பிறிதொரு வழக்கே சந்தேகநபர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பிணை கோருவது தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு இலவச சட்ட ஆலோசனை ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் முன்னாள் மாவட்டச் செயலர் கந்தையா கணேஷ் அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளது.
வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அரச சேவையில் 50 ஆண்டுகளும், மாவட்டச் செயலராக 19 ஆண்டுகளாகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடை அணிந்த யுவதியை இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் நண்பகல் வேளையில், யுவதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் நின்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். நண்பகல் வேளை என்பதால் சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது.
அப்போது அவ்வழியாக வந்த இரு இளைஞர்கள் குறித்த யுவதிக்கு அருகில் வந்து கையில் இருந்த தொலைபேசியை தட்டி விட்டதுடன், குட்டைப் பாவாடை போடுவியா? என கேட்டுத் தாக்கியுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் வீதியால் சென்ற பொதுமக்கள் யுவதியிடம் நடந்தவற்றை கேட்டு அவரை ஆறுதல் படுத்தியதுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.