வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டி!!

வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கிய 75வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுயநினைவின்றி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.

இவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர் பற்றிய தகவல் அறிந்தாலோ, அல்லது தகவல் பெற விரும்புவோரோ உடனடியாக வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கிய 75வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுயநினைவின்றி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.

வவுனியாவில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த எட்டு இளைஞர்கள் கைது!!

 

வவுனியாவில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் காத்திருந்த எட்டு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று (28.04.2018) அதிகாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர்.

தென்பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் சென்ற 33, 32, 31, 44, 59 வயதுடைய காலி, கிளிநொச்சி, கொழும்பு , அனுராதபுரம், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே வானினை விட்டு தரிந்து நின்ற சமயத்தில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட பொலிஸார் குறித்த வாகனத்தினை சோதனையிட்ட போது வாகனத்திலிருந்து இரு ஸ்காணர் இயந்திரத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட இரு ஸ்கானர் இயந்திரம் , அவர்கள் பயன்படுத்திய வான், எட்டு சந்தேக நபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மின்னல் தாக்கி 39 வயது நபர் பலி!!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று (27.04.2018) மின்னல் தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிக்குளம் இலுப்பைக்குளம், நேரியகுளம் பகுதியினை சேர்ந்த ஜோகராசா நிமலராஜ் (வயது 39) என்ற நபர் நேற்றையதினம் குளத்திற்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். இதன் போது மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மாலை 6 மணிக்குப் பின்னரும் குறித்த நபர் வீடு திரும்பாமையினால் அவரின் உறவினர்கள் தேடிய சமயத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திற்கு அருகே காணப்பட்டுள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் இரவு 10 மணியளவில் சடலத்தினை வவுனியா வைத்தியசாலைக்கு உறவினர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரண்டு மணிநேரமாக தரித்து நின்ற புகையிரதம் : மக்கள் அசௌகரியம்!!

 

வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று (28.04.2018) இரண்டு மணித்தியாலங்களாக தரித்து நின்ற புகையிரத்தினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு செல்லும் நகர்சேர் கடுகதி புகையிரத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனுராதபுரத்திலிருந்து புகையிரத்தின் இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7.45 மணியளவிலே புகையிரதம் கொழும்பு நோக்கி புறப்பட்டது.

இதனால் பயணிகள் சுமார் 2 மணித்தியாலயம் புகையிரத நிலையத்தில் நின்றதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வழமையாக 11 மணியளவில் கொழும்பைச் சென்றடையும் இப் புகையிரதம் இன்று பிற்பகல் 3 மணியளவிலே கொழும்பு கோட்டை புகையிரத்தை சென்றடைந்தது.

சித்தர்களால் சொல்லப்பட்ட பயனுள்ள ரகசியங்கள் : ஒருதடவை படித்துப்பாருங்கள்!!

ஆரம்பகாலத்திலிருந்தே இந்துசமய சாஸ்த்திர சம்பிரதாயங்கள் மனித வாழ்வோடு ஒன்றாக கலந்தவை, இருப்பினும் தற்காலம் வரை இந்து சமயத்தவர்களை அதை கடைப்பிடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.இதில் கீழே சில சித்தர்கள் கடைப்பிடித்த ஆன்மீக தகவல்களை பார்ப்போம்.

அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் .சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

நடிகை அமலா பாலின் கண்ணீர்ப் பக்கங்கள் : 2 வருடங்களில் முடிந்த காதல் திருமணம்!!

 

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார்.

எல்லா வாழ்விலும் சோகமான பக்கங்கள் இருப்பது போலவே.. இவரின் வாழ்விலும் கசந்து போன பக்கங்கள் இருப்பது அனைவரும் அறிந்தது.‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார்.

2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த வருடம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.

அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து அமலாபால், என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிக்பாஸ் ஓவியாவை போல எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதிக்கும் அடித்த அதிஷ்டம்!!

நடிகை ஓவியா என்னதான் படங்கள் நடித்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தான் பிரபலம் ஆனார். அவரின் உண்மையான குணத்தை பார்த்த ரசிகர்கள் அவர் மேல் பைத்தியமாக இருந்தனர்.

அந்த நிகழ்ச்சி ஓவியாவின் சினிமா வாழ்க்கையை மாற்றியிருந்தது, படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார். தற்போது தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அபர்ணதி.

இவரும் கிட்டத்தட்ட ஓவியாவை போலவே என்று கூறலாம். ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற இவருக்கு ஏற்கெனவே மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். இப்போது அவருக்கு ஓவியாவை போல நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறதாம்.அதன் முதற்படியாக அபர்ணதியை வைத்து ஒரு விளம்பரத்திற்காக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியுள்ளனர்

நிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரக்கத்திற்கு “வாஸ்ப்-104 பி” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கிரகம் நிலக்கரியை விட கருப்பாக அடர்ந்த கருப்பு நிறத்தில் உள்ளதாம்.

பொதுவாக கிரகங்கள் நட்சத்திரங்களின் ஒளியை உமிழும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக அந்த கிரகங்கள் வெளிச்சம் கொண்டதாக இருக்கும்.

ஆனால் இந்த கிரகம் உமிழும் தன்மையை மிகவும் குறைவாக கொண்டுள்ளதால், நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஒளியில் 99%த்தை உள்வாங்கிக்கொண்டு 1 சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

இந்த கிரகம் தனது வட்ட பாதையில் சுற்றுவதற்கு 1.76 நாட்கள் எடுத்துக்கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள்.

இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், “சவுதிஅரேபியாவில் குற்ற வழக்குகளில் விசாரணை நடைமுறை மிகவும் கவலை அளிக்கிறது.

சவுதிஅரேபியாவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல. போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் பாலானோர் போதைப் பொருள் கடத்தியவர்கள்.

இலங்கையில் தொகுப்பாளினி பிரியங்கா!!

 

விடுமுறை நாட்கள் வந்ததில் இருந்து பிரபலங்கள் நிறைய பேர் வெளியூர் சென்றுள்ளனர். அதில் சின்னத்திரை பிரபலங்கள் சில பேர் இலங்கை சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா இலங்கை சென்றுள்ளாராம். இந்த தகவலை அவரே டுவிட்டரில் முதன் முறையாக இலங்கை பயணிக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.

இங்கு அவர் கொழும்பில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதையில் கோவில் முன்பு மோசமாக படுத்துக் கிடந்த பெண்!!

தமிழகத்தில் குடி போதையில் மயங்கிய நிலையில் இளம் பெண் ஒருவர் கோவில் வாசல் முன்பு படுத்து கிடந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தஞ்சை மாவாட்டம் கும்பகோணம் அடுத்து தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் சிவன் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் இடைப்பட்ட புல்வெளியில் 18 வயது இளம்பெண் படுத்திருந்தார்.

அப்போது அந்த வழியே வாக்கிங் சென்றவர்கள் இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் அவரை தட்டி எழுப்ப முயற்சித்த போது எழும்பவில்லை.

அவர் படுத்திருந்த இடத்தின் அருகில் பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் கப்புகள் கிடந்ததால், அவர்கள் உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவிலுக்கு வந்த உழியர்கள் பெண் மோசமாக படுத்து கிடந்ததால், அவரின் உடைகளை சரி செய்தும் கம்பால் அடித்தும் எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.

எழுந்த அவரிடம் அவர்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் கோவில் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் அந்த அழைத்து விசாரித்த போது குடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் பொலிசாரிடம்

தாராசுரம் கோயில் வளாகத்தில் தினமும் மது குடித்துவிட்டு வாலிபர்கள் கும்மாளம் அடிப்பர். சில நாட்களாக பகலிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.

இது குறித்து அவர்களிடம் கேட்டால் எங்களை தாக்க வருகின்றனர், இவ்வளவு நாட்கள் இளைஞர்கள் தான் இப்படி என்றால் இன்று காலை இளம் பெண் இப்படிபட்ட நிலையில் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இனி மூளையையும் மாற்றிக் கொள்ளலாம் : மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு!!

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின் நியூரான் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர் Nenad Sestan உயிரிழந்த சுமார் 100 பன்றிகளின் உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி சோதனை மேற்கொண்டார்.

அதில் பெரும்பாலான மூளைகளில் இருந்த பல பில்லியன் செல்கள் உடலை விட்டுப் பிரிக்கப்பட்ட 36 மணி நேரம் வரை உயிர்ப்போடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பன்றி மூளையில் மின்காந்த அலைகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்த பின்னர் இயல்பாகவே மூளையானது சுயமாக விழிப்பு நிலையில்( consciousness) இருக்காது என்பதை அறிந்துகொண்டோம். ஆனால் விழிப்பு நிலையில் இல்லை என்பதற்காகவே மூளை உயிருடன் இல்லை என கூறிவிட முடியாது.

உயிர்ப்புடன் உள்ள மூளை உடல் நரம்புகளின் உதவியுடன் விழிப்பு நிலையை அடையும் என்று ஆய்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.

இதே முறையை உயிரிழந்த மனிதனின் மூளையோடு பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வெற்றி கண்டால், மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்து பயன்படுத்த இது உதவும் என ஆய்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வவுனியா தமிழ் மகாவித்­தி­யா­லய அணி மாகாண கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி!!

கீர்த்தி­கன் ஞாப­கார்த்த வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்று முன்தினம் மாலை இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய அணி வெற்­றி பெற்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்று முன்தினம் மாலை இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. இதில் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணியை எதிர்த்து வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்தியாலய அணி மோதி­யது.

இதில் 50:19 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய அணி வெற்றி­பெற்­றது.

புதிய சாத­னை­யு­டன் தங்­கம் வென்ற சாவகச்சேரி இந்துவின் புதல்வி!!

இளை­யோ­ருக்­கான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 18 வய­துப் பெண்­கள் பிரி­வில், சாவ­கச்­சேரி இந்­துக் கல்லூ­ரியை பிர­தி­நி­தித் து­வம் செய்த நே.டக்­சிதா புதிய சாத­னை­யு­டன் தங்­கம் வென்­றார்.

கொழும்பு சுக­ததாஸ மைதா­னத்­தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற இந்­தப் போட்­டி­யில், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த நே. டக்­சிதா 3.02 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து புதிய சாத­னை­யைப் பதிவு செய்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

கடந்த வரு­டம் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த ஹெரீனா 3.01 மீற்­றர் பாய்ந்து படைத்­தி­ருந்த சாத­னை­யையே இவர் முறி­ய­டித்­தார்.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஹெரீனா 2.90 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு!!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 245 ரூபாவால்அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலைஅதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது ஆயிரத்து 431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம்சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 676 ரூபாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகரில் சிறைச்சாலை வாகனத்தின் மீது சற்று முன் தாக்குதல்!!

யாழ். சிறைச்சாலை வாகனத்தின் மீது சற்றுமுன் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் யாழ். நகரில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த உத்தியோகத்தர் தற்போது சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் அடையாளம் தெரியாத இளைஞர் அணியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-