மகள் வயது பெண்ணின் மீது காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறந்த நடிகர்!!

 

பொலிவுட் உலகில் இப்போதைய சூடான பேச்சு 52 வயதான நடிகர் சோமன், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதுதான். உலகிற்குஇவர்களது வயது வித்தியாசம் பெரிதாக தெரிந்தாலும்,இவர்கள் இருவருக்குள்ளும் இருப்பது புனிதமான காதல். அந்த காதல் இவர்களது வயதினை மறைத்துஇதயத்தை இணைத்துவிட்டது. இவ்வாறு கூறுகிறார்மிலிந்த் சோமன்.

காதல் மலர்ந்த தருணம் : நான் அங்கிதாவை முதல்முறையாக பார்த்தது சென்னையில் உள்ள நைட்கிளப்பில் தான். பார்த்த உடனே அங்கிதாவை பிடித்துப்போய் எனது செல்போன்எண்ணை கொடுத்தேன்.

வழக்கமாக நைட் கிளப் போகும் பழக்கம் இல்லாத அங்கிதா, அன்று அங்கு வந்தது எனக்காகத் தான் என நினைக்கிறேன். அவர்அங்கு வந்தது நல்லதாகிவிட்டது.

நான்நம்பர் கொடுத்த மறுநாளே அங்கிதா கால் செய்து பேசினார். அப்புறம் தினமும் பேச ஆரம்பித்தார். நான் பேச, அவள் பேச, அப்படியே பேசிப் பேசி நட்பாகி, பிறகு அது காதலானது. 4 வருடங்களாக காதலித்து வந்த நாங்கள்தற்போது, திருமண பந்தத்தில் இணைந்துள்ளோம்.

அங்கிதாவுக்கு 26 வயது என்பதால், வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக குறை சொல்கிறார்கள். வயது பிரச்சினை இல்லை. எங்கள் காதல் பற்றி மற்றவர்களுக்கு தெரியாது. உண்மையான காதல்தான் வாழ்க்கை. அது எங்களிடம் இருக்கிறது என தங்களை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

என்னை பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசிவிட நடந்த சதித்திட்டம் : ஷமியின் மனைவி தகவல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹன் தனது கணவர் மீது அவ்வப்போது புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா பொலிசில் பரபரப்பான புகார் அளித்தார்.

இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி கத்துவா பகுதியில் 8 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை போன்றே தனக்கும் நடந்ததாவும், ஆனால் அச்சிறுமி இறந்துவிட்டார்.

நான், கடந்த 2 மாதங்களாக போராடி வருகிறேன் என கூறியுள்ளார். என்னை பலாத்காரம் செய்து, கொலை செய்த பின்னர் எனது உடலை காட்டுக்குள் வீசிவிட சதித்திட்டம் போட்டனர், ஆனால் நான் தப்பித்துவிட்டேன் என கூறியுள்ளார்.

எனக்கு கிடைக்கவில்லையே : அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய நடிகர் கார்த்திக்!!

பிரபல திரைப்பட நடிகரான கார்த்திக் மேடையில் அப்பாவை நினைத்து கண்கலங்கியுள்ளார்.1990ம் ஆண்டுகளில் கார்த்திக் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதன் பின் நாட்கள் செல்ல செல்ல கார்த்திக் கதைக்கு முக்கியதுவம் தரும் படங்களிலே நடித்து வந்தார்.

இவரது மகனான கெளதம் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில், கார்த்திக்கும், கெளதமும் இணைந்து சந்திரமெளலி என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான ஓடியோ வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது கெளதம் தனது அப்பாவான கார்த்திக்குடன் நடித்தைப் பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.

அப்போது கார்த்திக் நான் அப்பாவுடன் நடிக்கவில்லை, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் இப்படி தான் சந்தோஷப் பட்டிருப்பேனோ என்று கண்கலங்கினார்.

வவுனியாவில் 32 சுகாதாரமற்ற வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் உணவுப் பாதுகாப்பு வாரம் வவுனியாவில் கடந்த 16ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.லவன் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கத்தின் நெறிப்படுத்தலில் உணவகங்கள், வெதுப்பகங்கள், வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பரிசோதனை நடவடிக்கைகளில் எட்டு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இரு வாகனங்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணிவரையான காலப்பகுதிகளில் இத்திடீர் பரிசோதனைகள் மேற்கொண்டதாக மேற்பார்வை பொதுப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும்போது,

இந்நடவடிக்கையின்போது, 19 உணவகங்கள், 6 வெதுப்பகங்கள், 3 சுப்பர் மார்க்கட்கள், 29 பலசரக்கு வர்த்தக வியாபார நிலையங்கள், 28 வீதியோர வியாபார நிலையங்கள் என்பன சுற்றிவளைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுகாதார நலத்திற்கு ஒவ்வாத நிலையின் கீழ் உணவுகள் தயாரித்தமைக்காக 16 நீதிமன்ற வழக்குகளும் இறந்த எலியின் உடலுடனும் எலி எச்சத்துடனும் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமைக்காக 3 நீதிமன்ற வழக்குகளும், பூச்சி மொய்த்த பூஞ்ஞனம் பிடித்த நிலையில் உணவுகளை வைத்திருந்தமைக்காக 4 நீதிமன்ற வழக்குகளும்,

காலாவதியான முடிவடைந்த உணவுப் பொருட்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைத்திருந்தமைக்காக 9 நீதிமன்ற வழக்குகளும் வவுனியா நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டம் அறவிடப்பட்டன.

இக்காலப்பகுதியில் மொத்தமாக 1597 உணவுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றக் கட்டளையின் பின்னர் அவை அழிக்கப்பட்டன.

அத்துடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் என இரு சுகாதாரக்கருத்தரங்குகளும் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

நியமனம் இல்லையேல் ஒட்டுமொத்தமாக வேலையிலிருந்து விலகுவோம்!!

நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையானால் அகில இலங்கை ரீதியில் பணியிலிருக்கும் பகையிரதக்கடவை காப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பணியிலிருந்து விலகப்போவதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மேலாக பொலிசாரினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

கடந்த காலத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளுடனும் திணைக்களங்களுடனும், அமைச்சக்களுடனும் புகையிரதக்கடவை காப்பாளர்களாகிய நாங்கள் எங்கள் பிரச்சனைகளை பல தடவை முன்வைத்த போதும் எங்கள் பிரச்சனை தீர்த்து வைக்கப்படவில்லை.

இருந்தபோதும் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து மகஜர் ஒன்று கையளித்திருந்தோம். ஜனாதிபதி எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் நாங்கள் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளோம்.

நாளை (29.04.2018) எங்களுக்கு பதில் வழுங்குமாறு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதமர், முதலமைச்சர் ஆகியோருக்கு மகஜர் ஒன்று அனுப்பியுள்ளோம்.

வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை புகையிரதக்கடவை காப்பாளர் சங்கம் ஆகியன இணைந்து எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய எங்கள் ஊழியர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதனை எமக்கு எழுத்து மூலம் அறியத்தராதவிடத்து நாடு தழுவிய ரீதியில் இருக்க கூடிய ஒட்டுமொத்த புகையிரதக்கடவை காப்பாளர்களும் ஒரே நாளில் இச்சேவையை விட்டு விலகுவதாக தீர்மானித்துள்ளோம்.

எங்களுடைய சேவையை இந்த அரசாங்கம் மதிக்க வேண்டும். உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வரும் எமது ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 250 ரூபாவுக்கு சேவையாற்றி வரும் நிலையில் எமது ஊழியர்களின் வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எமது ஊழியர்களின் நிரந்தர நியமனத்தை வழங்க அரசு முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

சமையல் எரிவாயு விலை உயர்வால் உணவு விலைகளிலும் மாற்றம்!!

சமையல் எரிவாயு விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் சோறு உணவு பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர உணவகங்களின் ஏனைய உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விலைகளை நிர்ணயம் செய்ய அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் எதுவும் இல்லை எனவும் இதனால், வெவ்வேறு உணவகங்களில் உணவுகளின் விலைகளில் வித்தியாசங்கள் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 245 ரூபா அதிகரிக்கப்பட்டது. இதனடிப்படையில், ஆயிரத்து 431 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றில் விலை ஆயிரத்து 676 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய சோகம் : ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி!!

 

உலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450 ஆண்டுகளில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பெரு நாட்டின் வடக்கு கடல் எல்லைக்குள் அருகில் உள்ள பிரதேசத்தில் இதற்கான சாட்சியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 140க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இவ்வாறு நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நரபலி கொடுக்கப்பட்டு உயிரிழந்த பிள்ளைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நரபலி கொடுக்கப்பட்ட பிள்ளைகள் பெரும்பாலும் 5 வயது முதல் 14 வயதுக்கும் 8 வயது முதல் 12 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

பசுபிக் கடலில் லய் லிபர்டாட் பகுதியில் உள்ள மலையுடன் கூடிய பிரதேசத்தில் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டின் வடக்கு பகுதியில் சையிம் நாகரிகம் நிலவிய பகுதியில் வாழ்ந்த மக்கள் சந்திரனை வழிபட்ட பண்டைய கால கொலம்பியா இன மக்கள் கூட்டம் என தொல் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எஸ்டேக், மாயா, இன்கா இன மக்கள் நரபலி பூஜைகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருந்த போதிலும் ஒரே நேரத்தில் அதிகளவான பிள்ளைகளை நரலி கொடுத்தமைக்கான சாட்சியங்கள் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என இது பற்றி ஆய்வு நடத்தும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சியில் 140 பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும், பலியிடப்பட்ட இலாமாஸ் என்ற விலங்கினத்தின் 200 உடல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிள்ளைகள் அணிந்திருந்தாக நம்பப்படும் ஆடைகளின் மாதிரிகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.

முச்சக்கர வண்டியை 24 மணி நேரம் அம்பியூலன்ஸ் வண்டியாக மாற்றிய மனிதன்!!

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது முச்சக்கர வண்டியை 24 மணி நேரமும் நோயாளர்களை அழைத்துச் செல்லும் இலவச அம்பியூலன்ஸ் வண்டியாக பயன்படுத்தி வருகிறார்.

அக்குரஸ்ஸ, இலுப்பெல்ல கிராமத்தை சேர்ந்த சமிந்த சிசிர குமார என்ற இந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை. இவர் தனது வாழ்வாதார தொழிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி வருகிறார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த மக்கள் நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் சமிந்த சிசிர குமாரவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தால் போதும். அவர் அழைத்த இடத்திற்கு உடனடியாக சென்று, இலவசமாக நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வார் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இலவசமாக இவர் சேவை செய்து வருவதால், சிலரது அவமதிப்புகளால் சில சந்தர்ப்பங்களில் கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கியுள்ளார்.

இலவசமாக தான் செய்து வரும் சேவை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சம்பத் சிசிர குமார, “ நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பித்தேன். நாம் பிறந்து இறக்கும் மனிதர்கள். இறக்கும் போது நாம் வாழ்நாளில் செய்தவைகளை மட்டுமே எம்முடன் எடுத்துச் செல்வோம்.

இதனால், நாம் நல்ல பணிகளை செய்ய வேண்டும். இதன் காரணமாகவே இப்படியான சேவையை ஆரம்பிக்க எண்ணினேன். நான் இந்த சேவையை செய்யும் போது சில நேரம் ஏமாற்றப்படுகிறேன். என்னை அவமதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்துள்ளன.

எனக்கு அப்படி செய்ய வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்பவர்களுக்கு எனது உதவி சில நேரம் தேவைப்படக் கூடும்” எனக் கூறியுள்ளார்.

மனித சமூகத்தில், மனிதாபிமானத்தை மறந்து பணத்திற்கு பின்னால் ஓடி திரியும் இந்த காலத்தில் அக்குரஸ்ஸ சமிந்த சிசிர குமார உலகத்திற்கு முன்னுதாரணமாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரசிகருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா செய்த செயல்!!

 

இலங்கையை சேர்ந்த தனது ரசிகர் ஒருவரின் தந்தையின் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது இந்தியாவில் நடக்கும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் குறித்தே கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மும்பாய் இன்டியன்ஸ் அணிக்கே ஆதரவு வழங்கி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மஹலே ஜயவர்தன மற்றும் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆகியோர் மும்பாய் இன்டியன்ஸ் அணிக்கு பயிற்சியாளர்களாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்திய கிரிக்கெட் அணி குறிப்பாக இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகரான இலங்கையை சேர்ந்த மொஹமட் நிலாம், அண்மையில் மும்பாய் சென்று மும்பாய் இன்டியன்ஸ் அணிக்கு தனது ஆதரவை வழங்கியள்ளார்.

தனது தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது ரோஹித் சர்மா உதவியாக மொஹமட் நிலாம் தெரிவித்துள்ளார்.

மொஹமட் நிலாம் தொடர்பான காணொளி ஒன்று மும்பாய் இன்டியன்ஸ் அணியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உயிரிழந்த இளைஞன் : திடீரென மாயமான 33 இலட்சம் ரூபா!!

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் 33 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைககள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெஹிவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அணிந்திருந்த 33 லட்சம் பெறுமதியான நகைகளை வைத்தியசாலை ஊழியர்கள் எடுத்து மேசை ஒன்றின் மீது வைத்துள்ளனர். எனினும் அவை திடீரென காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் நகைகள் காணாமல் போயுள்ளதாக இளைஞனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞனின் கழுத்தில் இருந்த சங்கிலி, பென்டன், கைச்சங்கிலி ஆகியவைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

மோட்டார் சைக்களிலில் சென்று கொண்டிருந்த போது தெஹிவளையில் வைத்து விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பின்னர் அவசர அம்பியுலன்ஸ் சேவை ஊடாக அவர் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் களுபோவில வைத்தியசாலையில் வைத்து அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் கிடைத்த அதிஷ்டம் : ஒரே நாளில் கோடிஸ்வரர்களாக மாறிய மீனவர்கள்!!

 

சிலாபம், இரணவில பிரதேசத்தில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இந்த மீன்கள் தங்கள் வலைக்கு சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீண்ட காலமாக இரணவில கடற்பகுதியில் இவ்வளவு பாரிய அளவு மீன்கள் கிடைத்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடலில் கிடைத்த அதிஷ்டம் காரணமாக பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் வியப்பை ஏற்படுத்திய பெண்கள்!!

 

முல்லைத்தீவில் நிகழ்வு ஒன்றுக்காக வருகைத்தந்திருந்த அதிதிகளுக்கு வழமையை விட சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட அணியின் 1ஆம் ஆண்டு நிறைவு விழா, புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா, சிவமோகன், சத்தியலிங்கம் உட்பட பல அதிதிகள் வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது புதுகுடிருப்பில் மகளிர் அணியினர் மேள வாத்தியங்களை இசைத்து அவர்களை வரவேற்றுள்ளார்கள்.வழமையாக ஆண்களே அனைத்து நிகழ்வுகளிலும் நாதஸ்வரம், மேளம் இசைப்பார்கள். ஆனால் இங்கு பெண்கள் மேளம் மற்றும் நாதஸ்வரம் இசைத்து அதிதிகளை வரவேற்றுள்ளனர்.

இவ்வாறு பெண்கள் தவில், நாதஸ்வரம், மேள வாத்தியங்கள் இசைத்த காட்சியை கண்டுகளிப்பதற்கு அந்தப் பகுதியில் இருந்து ஆயிரக்காணக்கான பொது மக்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நுண்நிதி நிறுவனத்தின் தொல்லையினால் குடும்பப் பெண் தற்கொலை!

வவுனியாவில் தவறான முடிவெடுத்து நஞ்சருந்திய குடும்பப் பெண்ணொருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். நுண்நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்த இயலாத காரணத்தினாலேயே அவர் உயிரை மாய்த்தார் என அப் பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலைசெய்துள்ளார். கடந்த 23ம் திகதி இரவு 9 மணியளவில் தவறான முடிவெடுத்து தனது வீட்டில் நஞ்சருந்திய நிலையில் சகோதரனால் மீட்கப்பட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண் கணவரைப் பிரிந்த நிலையில் அவரது தந்தையுடனேயே வசித்து வந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவரது தந்தை கருத்து தெரிவிக்கையில்,

“என்னுடன் வாழும் எனது மகளான சசிகலா நுண் நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்றார். தவணைப் பணத்தினை செலுத்த இயலாது திண்டாடினார். தவறான முடிவெடுத்த அன்றைய தினம் மாலை 5 மணியளவில் குறித்த நுண் நிதி நிறுவனத்தின் முகவர் தவணைப் பணம் கேட்டு வீட்டுக்கு வந்ததுடன் கடுமையான வார்த்தைகளினால் மகளினை திட்டியுமுள்ளார். இதன் காரணமாகவே எனது மகள் நஞ்சருந்தியுள்ளார். “என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கைப் பெண் : நண்பி கதறல்!!

 

கனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கனடாவில் வாழ்ந்து வரும் ரங்கிக்கா கருணாதிலக்க என்ற இலங்கை பெண்மணி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ரொரன்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து அவர் கருத்து வெளியிட்டார். இந்த அனர்த்தத்தில் தனது நண்பி ரேனுகா அமரசிங்க படுகொலை செய்யப்பட்டமை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ரேனுகா மரணத்தை தழுவும் வயதை கொண்டிருக்கவில்லை. இதுவொரு கொடுமையான நிகழ்வு. தாக்குதல் சம்பவத்தில் அவர் காயங்களுடன் தப்பியிருப்பார் என்றே நம்பியிருந்தேன். எனினும் அவர் உயிரிழந்திருப்பார் என நான் நினைக்கவில்லை.

இது எப்படி நடந்திருக்கும். வீதியில் உயிரிழந்து கிடக்க வேண்டியவர்கள் அல்ல அவர்கள். மிருகங்கள் போன்று கொல்லப்பட்டனர். மிருகங்கள் கூட இப்படி உயிரிழக்குமா என தெரியவில்லை.

ரேனுகா எனது சகோதரி போன்ற ஒருவராகும். 13 வருடங்களாக அவரை எனக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் மிகவும் நெருக்கமானோம்.

தனது ஏழு வயது மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். பிள்ளைக்கு இனி யார் தாயை கொடுப்பார்கள்.  அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாது. அதனை கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவர் எங்கள் மனங்களில் எப்போதும் இருப்பார்…” என ரங்கிக்கா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர். பத்துப் பேரில் இலங்கையின் ஹொரண பிரதேசத்தை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண் கொல்லப்பட்டிருந்தார்.

யாழ். கருங்காலி முருகனின் தேர் திடீரென சரிந்து விழுந்தது விபத்து!!

யாழ்ப்பாணம் – காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
கருங்காலி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று நடைபெற்று வருகின்றது.

இதன்போது தேர் வலம் வந்துகொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகரம் பௌத்த மயமாகின்றதா? நகர் முழுவதும் வெசாக் கூடுகள்!!

 

வெசாக் பண்டிகையினை கொண்டாடுவதற்கு வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகள், வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட செயலகத்திலும் வெசாக் பண்டிகைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பொலிஸார், இரானுவத்தினரின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலத்திலிருந்து வவுனியா நகர் வரை பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் வெசாக் தோரணங்கள் வீதியின் இரு பக்கத்திலும் தொங்க விடப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வாசற்தலத்திற்கு அருகே பாரிய அளவிலான வெசாக் தோரணங்கள் செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரின் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் தமிழர்களின் இடமான வவுனியா நகரம் பெருபான்மை மக்களின் கைகளுக்கு மாறி செல்கின்றமை மன வேதனையளிக்கும் விடயமென சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.