ஒடிசா மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தையை தாயே தீயில் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கத்தாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்குலி பின்குவா. இவர் சுனா பின்குவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுனா வீட்டில் இருந்த அனைத்து துணிகளையும் தீவைத்து எரித்தார்.
பின்னர் தனது 6 மாதக்குழந்தையையும் தீயில் வீசினார். இதில் படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
பெற்ற தாயே குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் வழகுப்பதிவு செய்தனர்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது சுனா குழந்தை தீயில் கருவதை ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் சொத்துக்காக தனது மருமகள் மற்றும் மகனை கொலை செய்துள்ள பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிந்தராசு-லோகம்மாள் தம்பதியினருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் குமாரின் மனைவி அமராவதியின் அம்மா வீட்டில் நிறைய நிலம், சொத்துக்கள் உள்ளன.
அந்த சொத்துக்கள் அனைத்தும் அமராவதியையே சேரும் என்பதால், கோவிந்தராசு தன்னுடைய சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்குத்தான் கொடுப்பேன் எனவும், குமாருக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பலமுறை சொல்லியிருக்கிறார்.
இதனால், சொத்துப் பிரச்சனை தொடர்பாக அரியலூா் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்றுவருகிறது. இதில் 3 மகன்களுக்கும் சமமாக சொத்துக்களை பிரித்துகொடுக்குமாறு தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
இதனால், மாமனார்- மாமியார் மற்றும் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி செல்வி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அமராவதியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
பின்னா், வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய மகன் குமாரையும் அடித்து, வயிற்றில் கத்தியால் குத்திக் கொலைசெய்ய முயன்றுள்ளனர்.
கத்திக்குத்து பட்ட குமார் அங்கிருந்து தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பொலிசில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடவுள் ஹனுமனின் மறுபிறவி என்று 13 வயது சிறுவனை அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் தொட்டு கும்பிட்டு செல்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Sadiq Shah(32)-Nazma(30). இஸ்லாமியர்களான இவர்களுக்கு Sohail Shah என்ற 13 வயது மகன் உள்ளார். Sohail Shah பிறக்கும் போது அவரின் முதுகெலும்பில் நீண்டகாலமாக வால் போன்று முடி வளர்ந்து வந்துள்ளது. இதைக் கண்ட அக்கிராம மக்கள் அனைவரும் Bajrangi Bhaijan என்று ஹனுமனின் மறுபிறவி என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய சிறுவனாக இருந்தாலும், அங்கிருக்கும் கிராம மக்கள் சிலர் சிறுவனிடம் வந்து தினந்தோறும் ஆசிர்வாதம் வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
சிறுவனை பார்க்க வரும் மக்கள் வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்றவைகளை காணிக்கையாக கொடுப்பார்கள் எனவும், அவர்களுக்கு சிறுவன் ஆசிர்வாதம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் முதுகின் பின்னால் சுமார் ஒன்றரை அடி நீளத்திற்கு வால் போன்று முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது என்பது தெரியவில்லை. மருத்துவர்களோ நரம்பு குழாய் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
ஆனால் அவரது குடும்பத்தினர் இது குறித்து எந்த ஒரு கவலையும் படாமல், அதை நீக்குவது குறித்து எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் வருகின்றனர்.
ஏனெனில் தங்கள் மகனை மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி நாங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், இந்து மக்கள் கடவுளை எப்படி வணங்குவார்கள் என்பது தெரியு. இது அவனுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார்.
சிறுவன் Sohail Shah கூறுகையில், இதைப் பற்றி நான் கவலைப்பட்டது இல்லை எனவும் நான் நடந்து சென்றால் சிலர் ஆசிர்வதிக்கும் படி கூறுவர், அதன் பின் பழங்கள் வாங்கித் தருவர்.
இதனால் தற்போது வரை எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன் என்று சிரித்த படி கூறியுள்ளார்.
மேலும் இந்த சிறுவனை பார்ப்பதற்கு அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் கற்பமாக இருக்கும் பெண் ஒருவரின் வயிற்றில் இறந்த பாட்டி தெரிந்ததால், குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரித்தானியாவின் Merseyside பகுதியில் உள்ள Knowsley கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Michael-Stephanie Jackson. Michael திருமணம் செய்வதற்கு முன் கருத்தடை செய்திருந்தார், திருமணத்திற்கு பின் குழந்தை வேண்டும் என்பதால் மீண்டும் அதற்குரிய சிகிச்சைகள் எல்லாம் மேற்கொண்டு வந்தார்.
இருப்பினும் Michael-ஆல் குழந்தை கொடுப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் Stephanie மிகுந்த வருத்ததில் இருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு இறந்து போன தன்னுடைய பாட்டியின் இடத்திற்கு சென்ற Stephanie தன் பாட்டியிடம் தனக்கு குழந்தை வேண்டும் என்று கூறி கவலைப்பட்டுள்ளார்.
இறந்து 14-ஆண்டுகள் ஆகியும் பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டதால், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு Stephanie கஷ்டமாக இருக்கும் சமயத்தில் சென்று வருவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் Stephanie சமீபத்தில் கர்ப்பமடைந்தார். 18-வாரங்கள் கடந்த நிலையில் குழந்தை வயிற்றின் உள்ளே எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது ஸ்கேனில் குழந்தை உருவத்திற்கு பக்கத்தில் ஏதோ ஒரு மனிததலை போன்று தெரிந்துள்ளது. அதைக் கண்ட Stephanie-யின் தாய் இது பார்ப்பதற்கு இறந்து போன பாட்டி போன்று தெரிகிறது என்று கூறியுள்ளார்.
அதன் பின் அவர் உன்னிப்பாக பார்த்த போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். ஆம் இது பாட்டி தான் அவர் தான் எனக்கு குழந்தையாக பிறக்கவுள்ளார், குழந்தை பிறப்பதற்கு சாத்தியமில்லை என்ற போது நான் பாட்டியிடம் அழுத காரணத்தினால் அவரே எனக்கு குழந்தையாக வரவுள்ளார் என்று கூறியுள்ளார்.
எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம் ஏன்? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை இந்த பதிவு விளக்குகிறது.
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது, குடித்தால் உடலில் சத்துக்கள் ஒட்டாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும், அப்போது கண்டிப்பாகக் குடிக்கத்தான் வேண்டும், அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை.
உடலின் தேவையைப் பூர்த்திசெய்தே ஆக வேண்டும், இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இப்படி சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைப் பற்றி இருவேறு விதமாக பலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம், ஆனால் இதைப்பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது, அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்
நாம் பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள்.
அப்படி சாப்பிட்ட உடன் நீரை முழுவதுமாகக் குடிக்கக் கூடாது, குறைந்தபட்சம் சாப்பிட்டப்பின் இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது.
ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துக்கள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது.
நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும்.
அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும்
சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?’ என்பார்கள் சிலர். அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது, ஒரு மணிநேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை.
ஆனால், குறைவாகக் குடிப்பதால் தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன.
சாப்பிடுவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம், சாப்பிட்ட பிறகும் அரை மணிநேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.
இந்த உலகில் கிண்டல்கள், அவச்சொற்கள் என்னதான் ஒருவரின் மனதை புண்படுத்தினாலும், அந்த கிண்டல்களே ஒரு சிலரது மனதில் தன்னம்பிக்கையைஏற்படுத்தி அவர்களை வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கிறது.
நம்மை கேலி செய்கிறவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் அவர்களது மனதில் மேலோங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கிறது. அதற்கு உதாரணம் தான் மெக்ஸிகோவை சேர்ந்த 24 வயதான LorenaBolanos.
பிறக்கும்போது உடலின் பாதி அளவில் மச்சத்துடன் பிறந்துள்ளார். சிறு குழந்தையாக இருக்கும்போது அது லோரினாவுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால், பள்ளிநாட்கள் அவருக்கு நரகமாக இருந்துள்ளது. தினம் தினம் கேலிகளுக்கு ஆளாகியுள்ளார். இதனால் துவண்டு போயிருந்த இவரை, தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இது தட்டமை நோயாக இருக்குமோ என கேட்டுள்ளார்.
ஆனால், அது தட்டம்மை கிடையாது. மச்சங்கள் தான், இது பிறப்பிலேயே இருக்கும் விசித்திர நோய் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் கிண்டலை இவரது மனம் தாங்கிகொள்ளவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தாயின் ஆறுதலால் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
பேஸ்புக்கில் இவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அதனை கிண்டல் செய்வதற்காக ஒரு கூட்டம் அலை மோதும். இவரது உடலை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிடுவார்கள்.
அப்போதுதான் அவரது நண்பர் ஒருவர், விசித்திர உடல் அமைப்புகள் என்னும் தலைப்பில் புகைப்படம் பிடித்தல் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார். தன் தோழி Lorena Bolanos-ன் உடலின் மச்சங்களைதன் புகைப்பட திறமையால் மிகவும் அழகாகவே காட்டினார். நடுவர்கள் முதல் அனைவரும் இவரை பாராட்ட மகிழ்ச்சியில் மிதந்துள்ளார் Lorena Bolanos.
பிறரால் கேலி செய்யப்பட்ட மச்சங்களே தற்போது அவருக்கு புகழினை பெற்று தந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய அவர், வாழ்வதற்கு விருப்பம் இன்றி வாழ்ந்து வந்த என்னை, தன் நம்பிக்கையுடன் வாழ உந்தியது இந்நிகழ்வுதான் என தெரிவித்துள்ளார்.
இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான்.
வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும்.
வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக்கவைத்துவிடும்.
சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது.
சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம்.
நந்திக்கடல் பகுதியில் மர்ம ஒளி நடமாட்டம் தென்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்பவரை கண்காணித்து கைது செய்வதற்காக இரவு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இது அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நந்திக்கடல் எதிர்க்கரையோரப்பகுதியில் அமைந்துள்ள கேப்பாப்புலவு இராணுவ முகாமில் இருந்து வெளிப்படும் மின் ஒளி கடல் நீரில் பட்டு தெறிப்படைவதனால் இவ்வாறான காட்சி தோன்றி இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த ஒளித்தொடர் நேரடியாக கண்களுக்கு புலப்படவில்லை என்றும் புகைப்பட கருவியினூடாகவே இது தெரிவதாக குறிப்பிட்டுள்ளனர்.
நந்திக்கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழிலை தடுப்பதற்காக அந்தப்பகுதியில் புகைப்படக்கருவி மற்றும் இரவுபார்வை சாதனங்களுடன் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஏ.கயல்விழி சிறைத்தண்டனை விதித்துள்ளார். கிருஷ்ண குமார், சுபாஷ்கரன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கிருஷ்ண குமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு 10 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்ட குற்றச்சாட்டி இந்த நான்கு பேருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“2015ம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் வழியில் மேற்கொண்ட சோதனையின் போது கிருஷ்ணகுமார், இராஜேந்திரன் சசிக்குமார் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த சுபாஸ்கரன் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 4 ஜி.பி.எஸ்.கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், என்பவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு எதிராக வழக்கின் தீர்ப்பு இன்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றில் வழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 2630 பேர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நேற்று அதிகாலை 4.00 மணி முதல் காலை 8.00 மணி வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாகனப் போக்குவரத்து சட்ட மீறல்கள் தொடர்பில் 8276 வழக்குகள் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
திருகோணமலையில் இரு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணாக நடித்து மற்றுமொரு பெண்ணை ஏமாற்றிய பெண்ணும் அவருக்கு உதவிய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமணத்தை அடிப்படையாக வைத்து வெளி மாவட்ட பெண் ஒருவரால் மூதூர் ஶ்ரீ நாராயணபுரம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். தன்னை ஒரு ஆணாக சித்தரித்த பெண், மூதூரிலுள்ள இளம் பெண்ணொருவரை கடந்த 25 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மணப்பெண் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, உறவினர்கள் அவரிடம் சோதனை செய்த போது, அவர் பெண் என்பதும் ஆணாக சித்தரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது சகோதரனின் சாயலை ஒத்துள்ள குறித்த பெண், அவரின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பெண்ணையும் லொறி சாரதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்களைக் கடத்தும் செயற்பாடுகளுக்காக இந்த மோசடியை நடத்தியிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தின் அடிப்படையில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த பொது மன்னிப்புக் காலம் இந்த மாதம் 22ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தலைமையிலான அதிகாரிகள் இந்த நாடு கடத்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழைகளுக்கும், ஈழதமிழர்களுக்கும் உதவுவதே எனது லட்சியம் என்று ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வரும் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கூறியிருக்கிறார்.
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச வைட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார்.
இது பற்றி கூறிய திவ்யா தெரிவிக்கையில், சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டேன்.
இனி, ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஊட்டச்சத்து ஆலோசனை மையம் சென்னையில் தொடங்க உள்ளேன். ஊட்டச்சத்து மாத்திரைகள் தொடர்ச்சியாக இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் என்கிற நிலைமை மாற இது முதல் அடித்தளமாக இருக்கும்” என்றார்.
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று (28.04.2018 சனிக்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து எட்டுமணியளவில் எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர்.
தொடர்ந்து எட்டரை மணியளவில் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன. .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது.
சீரியல் கில்லர் என்ற பெயரை கேட்டாலே அந்த நபர் 10 அல்லது 20 கொலைகள் செய்திருப்பார் என்று தான் நினைப்போம், ஆனால் இந்தியாவை சேர்ந்த நபர் 931 பேரை கொலை செய்துள்ளது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது.
உலகின் கொடூரமானசீரியல் கில்லார இருந்த இவனது பெயர் தக் பெஹ்ராம். டெல்லியை சேர்ந்த இவன் கர்சீப்பை வைத்து தான் கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான். பெஹ்ராம் மற்றும் அவனது கூட்டாளிகள் 200 பேர், டெல்லி – ஜபல்பூர், குவாலியர் போன்றபாதைகளின் வழியாக வணிகம் செய்ய வருபவர்களை குறிவைத்து தாக்குவார்கள்.
ஒருமெடல் பாதிக்கப்பட்ட மஞ்சள் கர்சீப்பை பயன்படுத்தி, கழுத்தை நெறித்துக் கொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். 1800-களின் தொடக்கத்தில் திடீரென சுற்றுலா பயணிகள், வீரர்கள், நாடோடிகள் உட்பட பலர் மாயமாகினர். இதனைத் தொடர்ந்தே பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. 1809-ல் கேப்டன் வில்லியம் ச்லீமேன் என்பவர் தான் இதனை விசாரணை நடத்த பணியில் அமர்த்தப்பட்டார்.
ராமோசி “Ramosi” எனும் பாஷையை பயன்படுத்தி இவர்களுக்குள் உரையாடிக் கொண்டு, வணிகர்கள் வரும் போது மஞ்சள் கர்சீப்பை கொண்டு கழுத்தை நெறித்து கொன்று, அருகில் இருக்கும் கிணறுகளில் புதைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
குறிப்பாக இவர்கள் ஒரு கொலை செய்ய திட்டமிட்டால், காளியை வழிபடுவது வழக்கம். இவர்கள் கொன்று குவிக்கும் உயிர்கள் காளியை மகிழ்விக்கும் என்பது நம்பிக்கை, அதுமட்டுமல்ல இவர்களை செய்யும்கொலைக்கு காளி உறுதுணையாக இருப்பார் எனவும் வழிபடுகின்றனர்.
இவர்களை கண்டுபிடிக்கும் நடைபெற்ற தேடுதல் வேட்டை 10 ஆண்டுகளாக தொடர்ந்தது. இறுதியில், தக் பெஹ்ரம் அவனது74-வது வயதில் 1840-ல் தான் கைது செய்யப்பட்டான். இவனுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது மகளின் தவறான உறவை கண்டித்த தந்தையை அவரது மகளே உணவில் விஷம் வைத்துகொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பையை(53) என்பவர் தனது மனைவி இறந்துவிட்ட காரணத்தால், தனது மகள் முருகவள்ளி வீட்டில் உணவுசாப்பிட்டு வந்துள்ளார். திருமணமாகிஇரு குழந்தைகள் உள்ள நிலையில் முருகவள்ளிக்கும் அதே ஊரில் வசித்து வரும் வேறு ஒரு நபருக்கும்இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.
முருகவள்ளியின்கணவர் சண்முகவேல் வேலைக்குச் சென்றபின் முருகவள்ளியின் வீட்டுக்கு அந்த நபர் வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது கருப்பையாவுக்குத் தெரிந்ததால் மகளைக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் தனது பழக்கம் குறித்து தனது கணவரிடம், தந்தை தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் உணவில் விஷம் வைத்து கொலைசெய்துள்ளார்.
இதுகுறித்துஅவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,என்னை பற்றி எனது தந்தையிடம் தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இருந்தேன். இதனால்எனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி,கள்ளக்காதலன் வாங்கிவந்த விஷ மருந்தினை எனது தந்தை சாப்பிடும் உணவில் கலந்து அவருக்குகொடுத்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
விஷம் கொடுத்துகொலை செய்த மகள் முருகவள்ளியை பொலிசார் கைது செய்துள்ளனர், மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள்தெரிவித்துள்ளனர்.