வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சித்ரா பௌர்ணமி சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகைத்தந்திருந்தனர்.
சித்ராபௌர்ணமி பூஜைக்கு முன்பாக பாம்பு புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு வழமையை விட பக்தர்கள் முண்டியடித்து வந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்துகணேஸ், காரைதீவு பிரதேசசபைபயின் தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வி.ஜெயச்சந்திரன், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்களான பி.மோகனதாஸ் மு.காண்டீபன் சி.ஜெயராணி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஆலயங்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்று, சித்திரகுப்தனாரின் சரிதம் பாடப்பட்டு சித்திரைக் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக் காலமாக ஆபத்தான குளவிகள் கூடு கட்டி வருவதாகவும், அதனை தம்மால் அழிக்க முடியாதுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
தற்போது 5 இடங்களில் இந்த குளவிகளின் கூடுகள் காணப்படுவதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால், பாடசாலைக்கு மாணவர்கள் வருகைத்தரும் பட்சத்தில் ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதற்கமைய நேற்றைய தினம் ஆசியாவின் மிக உயரமான கட்டடமாக கருதப்படுகின்ற தாமரை கோபுரத்திற்கு முழுமையாக மின் விளக்கு பொருத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக தாமரை கோபுரத்தின் உச்சிப்பகுதியில் மின் விளக்கு நேற்று ஒளிரப்பட்டுள்ளது.
அழகான தோற்றத்தில் தாமரை கோபுரம் காணப்பட்டுள்ள நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவரினால் இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றும் நடன ஆசிரியைக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி அவரை கொடூரமாக கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
அதனை தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது. இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் மாலை 6.30 மணியளவில் 20 வயதுடைய யுவதி ஒருவர் தனது பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது இருள் சூழ்ந்த நேரம் என்பதை மனதில் கொண்ட 17வயதுடைய சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் குறித்த யுவதியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போதே யுவதியின் அவயவங்களைப் பிடித்து துஷ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளார்.
சுதாகரித்து கொண்ட யுவதி சத்தம் போட்டு கூக்குரலிடவும் குறித்த சிறுவன் தப்பித்து ஓடியுள்ளான். இதன் போது யுவதியின் கூக்குரல் கேட்டு வந்த இளைஞர்கள் சிலர் சிறுவனின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து துரத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.
மடக்கிப் பிடித்த போது, அவன் ஒரு சிறுவன் என்று தெரியவந்ததுடன் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுவனை இளைஞர்கள் விடுவித்துள்ளனர்
தயவு செய்து பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதை மனதில் நிறுத்தி பிள்ளைகளுக்காக சற்று நேரம் செலவிடுங்கள்.
யாழில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பால், யுவதி ஒருவர் தனது தலை முடியை இழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் பேஸ்புக் ஊடாக பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.
கருத்து முரண்பாடு முற்றியதால் குறித்த இளைஞன் யுவதியின் வீட்டுக்குச் சென்று காதலியின் நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார். குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இதில் பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 – 26 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள், பதினொரு போலியான 5,000 ரூபாய் நாணயத்தாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டர் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் போது ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸாரைக் கண்டதும் குறித்த இளைஞர்கள் போலி நாணயத்தாள்களை வாயில் போன்று மென்றுள்ளனர். எனினும் குறித்த பணத்தை பொலிஸார் கைப்பற்றியதுடன், இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
சோனம் கபூர் திருமணத்தில் அம்மாவின் பாடல்களுக்கு ஜான்வி கபூர் நடனம் ஆடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போனி கபூரின் சகோதரரான அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் திருமணம் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. சோனம் கபூர் இந்திய தொழிலதிபர் Anand Ahuja-வை கரம் பிடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த திருமணத்திற்கு போனி கபூரின் மகளும் வளர்ந்து வரும் நடிகையுமான ஜான்வி கபூர்(21) தன் அம்மாவின் பாடல்களுக்கு நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் ஜான்விகபூர் நடனமாடியதில்லை, தன் அம்மாவிற்காக முதன் முறையாக அம்மா நடித்திருந்த படங்களிலிருந்து Mere Haathon Mein Nau Nau Chudiyan மற்றும் Kisi Ke Haath Naa Aayegi Yeh Ladki என்ற பாடல்களுக்கு நடனமாடவுள்ளார்.
திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி துபாய் சென்றிருந்த போது மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர், குஷிகபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் தன் அம்மாவின் மரண செய்தியை கேட்டு பட பிடிப்பு தளத்தில் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் தற்போது விஜய் 62 படத்தில் ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே அவருடன் பைரவா படத்தில் ஒன்றாக நடித்து விட்டார். இவர் விஜய்யின் ரசிகையும் கூட.
அண்மையில் ஒரு இணையதள சனல் ஒன்று விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளது. இதில் கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
மேடையில் இயக்குனர் அட்லீயிடம் விருதை பெற மேலே வந்திருக்கிறார் கீர்த்தி. அப்போது அட்லீ என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோயின் இவர் தான் என ஒரு பாட்டியை அழைத்தார்.
அவர் வேறு யாருமல்ல. கீர்த்தி சுரேஷின் பாட்டி. இது கீர்த்திக்கும் பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அட்லீயின் அன்புக்கட்டளைக்காக அந்த பாட்டி தான் அவருக்கு விருதை வழங்கினார்.மேலும் அவர் இந்த பாட்டி கீர்த்தியை விட நன்றாக நடிப்பார் என கூறினார்.
ஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும். அதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத பட்சத்தில் பிரிவு ஏற்படுகிறது.
மேஷம் மற்றும் கடகம் : ஆரம்பத்தில் இவர்களின் உறவில் மிகப்பெரிய ஆர்வம் நிறைந்திருக்கும். பார்த்த முதல் நாளே….என்பது போல், கண்டதும் காதல் உண்டாகி, அவர்கள் மூளை வேறு எதை பற்றியும் யோசிக்க முடியாமல், இவர்கின் உறவு திருமண பந்தத்தில் முடியும்.
ஒரு காலகட்டத்திற்கு மேல் இவர்களின் அன்பில் மாற்றம் ஏற்படும். இது உண்மையான காதல் அல்ல வெறும் மோகம் மட்டுமே என்பதை உணர இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.
ஒருவரை மற்றவரோடு இணைக்க எந்த ஒரு காரணமும் இல்லாமல் போகும் காலம் கூட வரலாம். ஆகவே இவர்கள் உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
ரிஷபம் மற்றும் தனுசு : எதிர் துருவங்கள் ஈர்க்கப்படலாம் என்பதற்கேற்ப தொடக்கத்தில் இந்த இரண்டு ராசிக்காரர்களும் அவர்களின் வித்தியாசம் காரணமாக கவரப்படுகிறார்கள். முற்றிலும் வித்தியாசமான குணங்கள் கொண்ட இருவரையும் இணைப்பது இந்த வேறுபாடு மட்டுமே.
விரைவில் இதுவே இவர்களின் தொல்லைகளுக்கும் காரணமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் எப்போதுமே தீர்மானிக்க முடியாதவர்களாகவும், சாகசத்தை விரும்புபவருமாக இருப்பார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் , எதிலும் நிதானமாக நிரந்தரமாக இருப்பார்கள். ரிஷப ராசிக்கார்கள் தனுசி ராசிக்காரர்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள். ஆனால் நான் யாருக்கும் அடிமை இல்லை என்ற சுபாவம் கொண்ட தனுசு ராசிக்கார்கள் இதனை ஏற்க மறுக்கலாம்.இதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது.
மிதுனம் மற்றும் மீனம் : உணர்ச்சிகளில் ஆழமானவர்கள் மீன ராசிக்காரகள். ஆனால் மிதுன ராசிக்காரகள் எல்லாவற்றையும் மிகவும் லேசாக, மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்.
மீன ராசிக்கார்களின் உள்ளார்ந்த படைப்பாற்றல் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் அவர்கள் மீது ஈர்க்கப்படலாம். ஆனால் இந்த கவர்ச்சி அவர்களை நீண்ட காலம் அழைத்துச் செல்லாது.
உற்சாக இயல்பு கொண்ட மிதுன ராசிக்காரர்கள் மீன் ராசிக்காரர்களுடன் இணைந்து வாழ முடியாது. அவர்களுக்கு பொறமைக் குணம் எளிதில் தென்படும்.
கடகம் மற்றும் மகரம் : உணர்வுகள் மற்றும் பாலியல் பொருத்தம் மிக அதிகமாக இருக்கும் இந்த ஜோடி நெருக்கமாக உணர்வதற்கும் இதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் அவர்கள் மத்தியில் பாலியல் உணர்வைத் தாண்டி வேறு ஒரு பொதுவான குணமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
இவர்களுக்கு இடையில் பொதுவாக வேறு எந்த பிரச்சனையும் இல்லாதபோதும், மற்றவர்களைப் போல் இவர்கள் சந்தோஷமாக வாழவில்லை என்ற எண்ணம் இவர்களுக்கு அடிக்கடி தோன்றும்.
சிம்மம் மற்றும் கன்னி : சிம்ம ராசிக்கார்கள் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர்கள். இதற்குக் காரணம், இவருக்கு இருக்கும் நளினம் மற்றும் தன்னம்பிக்கை. கன்னி ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஊக்கமுள்ளவர்கள்.
இந்த பண்பு சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் பிடிக்கும். கன்னி ராசிக்கார்கள் தான் சரியாக நடக்கும் சூழ்நிலையில் சிம்ம ராசிக்கார்களின் குற்றங்களை விமர்சித்து பேச முயற்சிப்பர்.
சிம்ம ராசிக்காரர்கள், தங்களை குறை சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாதவர். இதனால் இவர்களின் உறவில் உராய்வு ஏற்படுகிறது.
கன்னி மற்றும் மேஷம் : கன்னி ராசிக்காரர்கள் கிளர்ச்சி மற்றும் சாகச உணர்வுகள் நிறைந்தவர். கன்னி ராசிக்காரர்கள் விரைந்து மேஷ ராசிக்காரர்களிடம் காதல் வசப்படுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் எதையும் நிதானமாக யோசித்து தகுந்த தயாரிப்புடன் எந்த ஒரு காரியத்திலும் இறங்குவார்கள்.
அதுவே மேஷ ராசிக்காரர்கள், வாழ்க்கை வரும் வழியில் பயணம் செய்ய விரும்புவார்கள். மேஷ ராசிக்கார்களின் தன்னிச்சையான மனோபாவம், இவருடைய வாழ்க்கை அணுகுமுறையோடு ஒத்து வராது என்ற முடிவிற்கு சில நாட்களில் வரலாம்.
துலாம் மற்றும் மகரம் : துலாம் மற்றும் மகர ராசிகார்கள் ஒருவரை ஒருவர் அதிகம் கவரும் குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் நீண்ட நாள் வாழ்க்கையில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் ஒத்து வராது.
துலாம் ராசிக்காரர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் எதையும் சீராக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
துலாம் ராசிக்காரர் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சோம்பேறிகளாக இருப்பதால் இவர்களுக்கு இடையில் சர்ச்சை தொடங்கும். இருவருக்கும் தனித்தனி வழியைத் தேர்ந்தெடுப்பதே இந்த ஜோடிக்கு நல்லது.
விருச்சிகம் மற்றும் தனுசு : மனம் போன போக்கில் இந்த இரண்டு ராசிக்கார்களும் ஒன்றாக இணைவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பேச்சை இவர்கள் காதில் கூட வாங்குவதில்லை.
விருச்சக ராசிக்காரர்கள் மிகவும் பொசசிவ் எண்ணம் கொடிப்ருப்பார்கள். தன் துணை தன்னுடன் மட்டுமே பொழுதை கழிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . இவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகவும் பிடிக்கும்.
இதையே இவர்கள் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுசு ராசிக்காரர்கள் வெளி உலகத்தை விரும்புபவர்கள். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களின் கெடுபிடி இவர்களுக்கு அறவே பிடிக்காது.
தனுசு மற்றும் கடகம் : நண்பர்கள் மத்தியில் கிசுகிசு மற்றும் நாடகத்தன்மை நிறைந்த ஜோடிகளாக இவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே கட்டுப்படுத்தும் பண்பு உண்டு.
இருவருமே கிளர்ச்சியாளர்கள். சில ஆழமான மற்றும் அன்பான தருணங்கள் இவர்களுக்கு வாய்த்தாலும் , ஒருவரை ஒருவர் ஏமாற்றும் தன்மையால் இவர்களின் உறவில் பாதிப்புகள் தோன்றும். இந்த குணத்தால் இருவரும் வேறு வேறு பாதையை தேர்வு செய்ய நேரலாம்.
மகரம் மற்றும் மீனம் : இவர்களின் இணை ஒரு சக்திமிக்க இணையாகும். அனைவரும் பார்த்து வியக்கும் ஒரு ஜோடியாக இவர்கள் திகழ்வார்கள். ஒரு சமூகக் குழுவில் அனைவரும் மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு இணையாக இவர்கள் இருப்பார்கள்.
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையை ப்ராக்டிகலாக பார்க்கும் தன்மை கொண்டவர்கள். மீன ராசிக்காரர்கள், விசித்திரமான மற்றும் படைப்பாற்றலுடன் கூடிய ஒருவர்.
இந்த மாறுபட்ட குணங்களை சமநிலையில் வைத்து பார்க்கும் குணம் உள்ளவராக இருந்தால் வாழக்கை நன்றாக பயணிக்கும் . இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டு, இருவரும் பிரிய நேரலாம்.
கும்பம் மற்றும் சிம்மம் : நல்ல ஜோடி வரிசையில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. இரண்டு ராசிகளுக்கும் இருக்கும் ஒரு தனித்துவமான கவர்ச்சி ஒருவரின் கவனத்தை மற்றவர் மேல் செலுத்த வைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் , தன்னுடைய துணை எப்போதும் தன்மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதே சமயம் கும்ப ராசிக்காரர்கள், மிக நுட்பமான விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும். இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய தனித்தனி பார்வைகள் இருக்கும்.
மீனம் மற்றும் மேஷம் : மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானவர்கள் . மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள். ஆனால் மேஷ ராசிக்காரர்கள், தடாலடியாக நடப்பவர்கள்.
இந்த குணங்கள் இவர்கள் உறவில் விரிசலை உண்டாக்கலாம். தனது துணை கூறும் விஷயங்களை ஏற்றுக் கொள்ளலாமல் இருக்கும்போது இருவருக்குள்ளும் பிரச்சனை உண்டாகிறது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் மழை பெய்யும் வேளை காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ந்து மழை பெய்தால் எஹலியகொட, எலபாத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிவு மற்றும் கற்பாறைகள் கவிழும் அவதானம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது தனது நாட்டிற்காகக் கடமையாற்றிய பிரபல மாடல் அழகி ஒருவர் தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் கவனிப்பார் யாருமின்றி, சிரங்கால் பாதிக்கப்பட்டு, நுண் பூச்சிகளுக்கு இரையாகி இறந்திருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் மாடல் அழகியான ரெபேக்கா செனி (93) தனது முதுமைக்காலத்தில் டெமிண்டியா பிரச்சினையால் அவதியுற்று ஜார்ஜியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பெற்றுவரும்போது அங்குள்ள பலருக்கும் சிரங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. ரெபேக்காவுக்கு அது தொற்றிக்கொண்டது. மருத்துவமனை நிர்வாகம் சரிவர கவனிக்காததால் ரெபேக்காவிற்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி அந்நோயை உண்டு பண்ணும் நுண் பூச்சிகளால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
அவரது கைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது கையைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் ஒரு வேளை கை கழன்று விழுந்து விடும் என்றும் தாதியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது ரெபேக்காவின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரெபேக்காவின் உடலை பரிசோதித்த தடயவியல் நோய் நிபுணர் ஒருவர் தன் வாழ்நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை என்றும் அவர் இறக்கும்போது மிகுந்த வேதனையுடனேயே இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரெபேக்காவை இந்த நிலையில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் எங்கு சென்றார்கள், ஏன் அவர்கள் அவரது நோயைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் கேள்விகளை பலரும் எழுப்பியுள்ளனர்.
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றை குரங்கு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்பிட்டிய, கெடன்தொல, உடோவிட்ட பகுதியில் வாழும் ஒரு குரங்கிற்காக பிரதேச மக்கள் பயந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகாலத்தில் அந்த பிரதேசத்தில் சுற்றித்திரியும் ஆபத்தான குரங்கினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த நாட்களில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் 20 பேருக்கு அதிகமானோரை குரங்கு கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குரங்கு தொடர்பில் வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸார் இதுவரை குரங்கினை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், தீக்குளித்த ராணுவ வீரரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகேஷ், ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவரும் திருத்தணியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் மகளும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பெண் கேட்டு ராகேஷ் தனது பெற்றோருடன் பெண்வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தந்தை திருமணம் செய்து தர மறுத்ததால், ராகேஷ் அவரது வீட்டு முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராகேஷ் அரக்கோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தி பாறைக்கு அடியில் சிக்கி உயிரை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த நபர் 11 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் பாதி மண்ணுக்குள் புதைந்து இருந்த பாறையை உடைப்பதற்கு ஏதுவாக மண்ணை அகற்றும் பணி நேற்று காலையில் நடைபெற்றது.
ஜே.சி.பி மூலம் மண் அகற்றப்பட்டபோது திடீரென பாறை உருண்டு ஜே.சி.பி மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜே.சி.பி. ஆப்பரேட்டர் பிஜூமோன் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
சுமார் 2,000 டன் எடை கொண்ட பாறைக்கு அடியில் சிக்கிய அவரை மீட்க காலை 10 மணி முதல் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் முயற்சித்தனர்.
அவரை நேற்று இரவு 10 மணியளவில்தான் உயிரோடு மீட்க முடிந்தது. அவரின் கால்கள் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த திருமண வீட்டாரை மறித்து துப்பாக்கியால் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் திருமணம் முடிந்த பின்னர் திருமன ஜோடிக காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திடீர் என அவர்கள் காரை மற்றொரு கார் வழி மறித்துள்ளது.
அந்த காரில் இருந்தவர்கள் திடீர் என துப்பாக்கியை காட்டி திருமண வீட்டாரை மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை பறித்தனர்.
அப்போது மணப் பெண் அணிந்து இருந்த நகைகளையும் மிரட்டி பறிக்க முற்ச்சி செய்துள்ளனர். மணப் பெண் நகைகளை கொடுக்க மறுக்கவே கோபமடைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் மணப் பெண்ணை சுட்டு விட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை பறித்தனர்.
இதை தடுக்க முயன்ற மணமகன் உட்பட மற்றவர்களையும் சரமாரியாக அவரகள் தாக்கியுள்ளனர், அதில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கொள்ளை குறித்து திருமண வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.