பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

அமெரிக்காவில் பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டகோடா மாகாணத்தை சேர்ந்தவர் கேட்ரினா ஷேங்குருக்ஸ் (30), இவர் மகன் கைலின் (2).

கடந்த 2016-ஆம் ஆண்டு யூன் மாதத்தில் கைலின் தனது வீட்டு படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளான், பின்னர் தனது அம்மா கேட்ரினாவை நோக்கி திருட்டு முழி முழித்துள்ளான்.

இதையடுத்து கைலின் மீது ஆத்திரப்பட்ட கேட்ரினா அவனை பெல்டால் அடித்ததுடன், கையாலும் தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

அடித்து முடித்த பின்னர் தனது அம்மா சோன்யா துப்ராய்க்கு போன் செய்து தனது வீட்டுக்கு வரவழைத்தார்.

பின்னர் கைலினுக்கு அப்பிள் ஜூஸ் கொடுக்க சோன்யா முயன்றுள்ளார். ஆனால் கையின் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிர் பிரிந்தது.

இதையடுத்து பொலிசார் கேட்ரினாவை கைது செய்தனர், கைலின் உடலில் 70 சதவீதம் காயம் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

கேட்ரீனா மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மகனை அடிக்கும் போது, தான் மது அருந்தியிருந்ததாக அவர் திங்களன்று நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரிகள் கூறுகையில், கேட்ரீனா குற்றத்தை முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

25 வருடகால பாடசாலை வரலாற்றை புரட்டிப்போட்ட இரட்டைச் சகோதரர்கள்!!

25வருடகால பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9A பெற்று நாவிதன் வெளியில் இரண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில், சம்மாந்துறை கல்விவலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்திலுள்ள வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இரட்டை சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்துள்ளார்.

வறுமையான பாடசாலையான வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் வேப்பையடியை சேர்ந்த திருச்செல்வம் கோபுராஜ் 9ஏ சித்தியும், திருச்செல்வம் கோபிநாத் 8 ஏ பி சித்தியும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் 25வருடகால வரலாற்றில் முதற்றடவையாக 9ஏ சித்தி பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாவிதன்வெளிக்கோட்டத்தில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவி வன்னியசிங்கம் சாஹித்யா 9ஏ சித்திபெற்று சாதனைபடைத்துள்ளதாக அதிபர் நா.பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தின் டயர் வெடித்து விபத்து : அதிர்ஷ்டசமாக உயிர் தப்பிய நடிகை ரோஜா!!

நடிகை ரோஜா பயணம் செய்த விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது வய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு 8.55 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹைதரபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார்.

அந்த விமானம் இரவு 10.25 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தின் ஒரு டயர் வெடித்து நெருப்பு வெளியேறியுள்ளது.

நெருப்பை பார்த்தவுடன் ரோஜா உள்ளிட்ட பயணிகள் அனைவரும் பதற்றமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி நெருப்பை அணைத்து, பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நடிகை ரோஜா அரசியலில் பரபரப்பாக இயங்கி வருவதால், விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அவரது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

இதையடுத்து, தனக்கும் தன்னுடன் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என செல்ஃபி வீடியோ மூலம் ரோஜா உறுதி படுத்தியுள்ளார்.

5 வயதுச் சிறுமியை கொன்றது ஏன் : இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த அஞ்சலி சரோஜ் (5) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை அங்குள்ள ரயில் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பொலிசார் அஞ்சலியின் தந்தை சந்தோஷின் கள்ளக்காதலி அனிதாவை கைது செய்துள்ளனர்.

அஞ்சலியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ள அனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தோஷுக்கும், அனிதாவுக்கும் 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அனிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தோஷ் அவருடன் பல முறை ஒன்றாக இருந்துள்ளார். இதன் காரணமாக இரு முறை கர்ப்பமான அனிதா கருகலைப்பும் செய்துள்ளார்.

ஆனால் அவரை திருமணம் செய்யாமல் சந்தோஷ் ஏமாற்றி வந்துள்ளார். அதனால் தனது வயிற்றில் உருவான இரண்டு குழந்தைகளை கலைத்த மாதிரி, அஞ்சலியையும் கொலை செய்ய அனிதா முடிவெடுத்துள்ளார்.

அதன்படி திங்கட்கிழமை சொக்லேட் வாங்கி கொடுத்து அஞ்சலியை ரயில் நிலைய கழிப்பறைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பொலிசார் கூறுகையில், சில சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகத்தின் பேரில் அனிதாவை விசாரித்தோம், அவர் உண்மையை ஒப்பு கொண்டுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

பாரில் ஆண் நண்பர்களுடன் மது குடித்த இளம்பெண்: வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் இளம்பெண்ணொருவர், தனது ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இளம்பெண்ணொருவர், ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ளார். அவர் முன்பு பீர் பாட்டில் இருக்கிறது.

பின்னர், நண்பர்கள் கொடுக்கும் சிகரெட்டை அவர் புகைக்கிறார். தற்போது, வைரலாக பரவி வரும் இந்த வீடியோ காட்சி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை யாரோ செல்போனில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர் : உயிரை இழந்த பரிதாபம்!!

தமிழகத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்த இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னை ஆவடியில் வசித்து வந்தவர் பிரதீப்(27). ரியல் எஸ்டேட் தொழிலதிபராக வலம் வந்தவர்.100 கிலோ எடையுடன் இருந்த பிரதீப், தன் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து வசந்துள்ளார்.

அந்த வகையில் நேற்று ஆவடி பகுதியின் வீதி ஓரத்தில் முறையான அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்.

உடல் எடை உடனடியாக குறையும் என்ற நம்பிக்கையில் வாங்கி சாப்பிட்ட பிரதிப்புக்கு, லேசான வயிற்று வலி ஏறப்ட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் நள்ளிரவில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிராதீப், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் பொலிசார், முறையான அனுமதி இல்லாமல் லேகியம் விற்பனை செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், இது போன்ற ஆசை வார்த்தைகள் கூறி சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் லேகியங்களை வாங்க வேண்டாம் என்றும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தந்தையின் சடலத்தை 8 கிலோ மீட்டர் தூரம் ரிக்‌ஷாவில் சுமந்து சென்ற மகன்!!

இந்தியாவில் இறந்த தந்தையின் உடலை, அவரது பிள்ளைகள் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்தவர் மன்ஷரம், இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த மன்ஷரமின் உடலை, வீட்டிற்கு கொண்டு செல்ல வாகன வசதி இல்லை.

இதனால், அவரின் மாற்றுத்திறனாளி மகனும், மகளும் ரிக்‌ஷா ஒன்றில் தந்தையின் உடலை வைத்து, சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டு சென்றுள்ளனர்.

வட இந்தியாவில், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு இவர்களே காரணம் : தூக்கில் தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம்!!

கேரளாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

பாலக்காட்டில் உள்ள ஆலத்தூரை சேர்ந்த மணிகண்டன் – சுனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இளைய மகள் அஸ்வதி (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் திங்கள் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி அஸ்வதி சென்றுள்ளார்.

பின்னர் மதியம் சுனிதா அஸ்வதிக்கு போன் செய்த போது அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து கல்லூரிக்கு போன் செய்த போது அஸ்வதி கல்லூரிக்கே வரவில்லை என தெரியவந்தது. பின்னர் அவர் வீட்டுக்கு சென்றிருப்பார் என சுனிதா விட்டுவிட்டார்.

இதையடுத்து மாலை சுனிதா தனது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது மின்விசிறியில் அஸ்வதி சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலம் அருகிலிருந்த கடிதத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அதில், என் தற்கொலைக்கு காரணம் தனது வகுப்பில் உள்ள 4 மாணவிகள் மற்றும் ஆசிரியை தான் என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், காலை 10 மணிக்கே அஸ்வதி தூக்கில் தொங்கியிருப்பார் என எண்ணுகிறோம், மாலை 5 மணிக்கு தான் சுனிதா சடலத்தை பார்த்துள்ளார்.

அஸ்வதி தனது வகுப்பறையில் 5 முறை மயங்கி விழுந்துள்ளார், ஆனால் தனது உடல்நிலை குறித்து சக மாணவிகளிடமோ அல்லது ஆசிரியையிடமோ அவர் கூறியதில்லை என தெரிகிறது.

தற்கொலை கடிதம் தொடர்பான அறிக்கையை அதிகாரபூர்வமாக பொலிசார் இனி தான் வெளியிடவுள்ளனர்.

வார்னருக்கு தடை : ஐபிஎல் அணியில் களமிறங்கும் இலங்கை வீரர்!!

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, சன்ரைசர்ஸ் அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வார்னருக்கு பதிலாக, இலங்கை அணியின் இளம் வீரர் குசால் பெரேராவை நியமிக்க அந்த அணி முடிவு செய்துள்ளது.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாட பி.சி.சி.ஐ தடை விதித்துள்ளது.

மேலும், டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், வார்னருக்கு பதிலாக இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் பெரேராவை அணியில் சேர்க்க சன்ரைசர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வார்னருக்கு பதிலாக குசால் பெரேராவை நியமிக்க அவரை அணுகினோம்.

வார்னரைப் போல அவரும் அபாயகரமான வீரர் ஆவார். எங்களது அணியின் ஆய்வாளர், குசால் பெரேரா கடந்த சில மாதங்களாக சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார்.

எனினும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், பெரேரா எங்கள் அணியில் இணைந்து கொள்வார் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

27 வயதான பெரேரா, 34 டி20 போட்டிகளில் விளையாடி 10 அரைசதங்கள் அடித்துள்ளார், அவரது Strike rate 137 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அணித்தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மர்மமாக இறந்த கணவன் : மனைவியே கொன்றுவிட்டதாக ஆதாரத்துடன் புகார்!!

இந்தியாவில் உயிரிழந்த இளைஞரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தார் எழுப்பிய சந்தேகத்தின் காரணமாக பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் வகீல் முகமது (27). இவர் மனைவி நஸ்மா. முகமது கடந்த 6-ஆம் திகதி தனது மாமா ரியாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்ட முகமது அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.

பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட சிகிச்சை பலனில்லாமல் 9-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து முகமதின் சடலம் புதைக்கப்பட்டது. இந்நிலையில் முகமதை அவர் மனைவி நஸ்மா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக அவர் குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து முகமதின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முகமதின் மாமா ரியாஸ் கூறுகையில், மயக்க நிலையில் முகமதை நான் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் போதை வஸ்துவை சாப்பிட்டாரா என மருத்துவர் கேட்டார், ஆனால் பாக்கு போடும் பழக்கம் கூட அவருக்கு கிடையாது.

முகமது இறந்த பின்னர் அவர் மனைவி நஸ்மாவின் பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தில் அவரின் கணவர் பெயர் சல்மான் என இருந்தது.

சல்மான், நஸ்மாவின் உறவுக்கார இளைஞர் ஆவார், இருவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது, அதனால் தான் மெதுவாக கொல்லும் விஷத்தை முகமதுக்கு கொடுத்து கொன்றுவிட்டனர் என கூறியுள்ளனர்.

இதனிடையில், கடந்த 5 மற்றும் 6-ஆம் திகதி நஸ்மா, சல்மானுடன் தனியாக பேசுவதை பார்த்த முகமது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

இதோடு நஸ்மாவும், சல்மானும் போனில் பேசுவதையும் முகமது தனது போனில் ஆதாரமாக வைத்துள்ளதாக முகமது குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதையடுத்து முகமதின் தந்தை பொலிசில் இது குறித்து புகார் அளித்த நிலையிலேயே முகமது சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனை செய்ய தோண்டி எடுத்தனர்.

அதன் முடிவுகள் வந்த பின்னர் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிசார் கூறியுள்ளனர்.

இனிமேல் பரீட்சை எழுதமுன் பரீட்சை வினாத்தாளை வாசிப்பதற்கு 15 நிமிடம் வழங்கப்படும்!!

இனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் தோற்றும்போது பரீட்சை எழுதமுன் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

அதாவது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன்பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல புதிய யுக்திகளை, மாற்றங்களை பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

2001ஆம் ஆண்டிற்குப் பின்னரான பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்.

ஒகஸ்ட் புலமைப்பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது. அதே போல க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்திலே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே மதிப்பீட்டையும் நடத்திமுடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இனிமேல் கபொ.த சா.த மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற விரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்தி அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் பிரதிகளை கையில் கிடைக்குமாறு அல்லது தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தரம் 6- 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழினுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அப்பாடத்திற்கு கல்வியியல் கல்லூரி பயிற்சி முடித்தவர்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் அதிசய கன்றுக் குட்டி!!

முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று பிறந்துள்ளது.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த பசுக் கன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளது.

எழுந்து நின்று உணவு அருந்த முடியாமல் தவிப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதிசயிக்கும் வகையில் பிறந்த பசுக் கன்றை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் 9A பெற்ற மாணவி : போரின் வடுவினால் வைத்தியராக மாற இலட்சியம்!!

இறுதி யுத்தத்தின் போது மருத்துவ சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரமுடிந்தது. இதன் அடிப்படையில் எனது எதிர்கால இலட்சியம் மருத்துவர் ஆவதே என முள்ளிவாய்க்கால் மேற்கு கணிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்விகற்று கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி 9A சித்திகளைப்பெற்ற மாணவி வித்தியானந்தன் கம்சிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விஞ்ஞானத்துறையில் கல்வியை தொடரவுள்ள எனக்கும் சக மாணவர்களுக்கும் கல்விகற்றுத்தந்த சகல ஆசிரியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் யுத்த பாதிப்புக்குள்ளாகிய எமது குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலையிலும் எனது கல்விக்காண முழு உதவிகளையும் எனது பெற்றோர் தந்துதவியுள்ளனர்.

இந்நிலையில் எனது எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கணிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களில் 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலத்தில் கே.சிந்துஜா முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி கே.சிந்துஜா 7A, 2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் எம்.திவிகன் 6A,2B,C, ரி.கீர்த்தன் 6A,3B , என்.பிரேமினி 5A,3B,C, பி.சாருஜன் 4A,2B,2C,S, எஸ்.ஜோன்சன் 4A,2B,2C , ஜே.கேசனா 4A,3B,2C, பி.சிவகாமசுந்தரி 4A,B,4C, ரி.பிரியங்கா 4A,B,3C,S சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த வருடத்தினை விட இவ் வருடம் பெறுபேறுகளின் எமது பாடசாலை வீழ்ச்சி கண்டாலும் அடுத்த வருடம் சிறந்ததோரு பெறுபேற்றினை பெறுவோம் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 4 மாணவிகள் 9A சித்தி!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 4 மாணவிகள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

ருகாசிகா சுபாகரன், அட்சயா தர்மகடாட்சம், சியானுகா செல்வரஞ்சன், விதுஷா விக்னேஸ்வரன் ஆகியோர் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன்,

கஜேந்தினி கணேசலிங்கம், சரணிகா செல்வச்சாமி, மயூரபி உதயகுமார், கிசாலினி இந்திரலிங்கம், பிரேதிகா சண்முகராஜ் , நிக்ஷா குமார், டிலக்சிகா கலைச்செல்வன் 8A,B சித்திகளையும்

தீபிகா ஜெகதீஸ்வரன், ஆரணி இராசவேல், லக்சனா சுரேசன், கம்சிகா தவக்குமார், பாத்திமா நிக்சா நிஷாம்டீன் 7A,2B சித்திகளையும் கர்சா அருணகுமார் 7A,B,C, துளசிகா ரவீந்திரமூர்த்தி 7A, 2C

திலக்சிகா தேவராஜன், கோசலா ராஜசேகரம், அபர்ணா சந்திரமோகன் 7A,2C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

தமிழ் மொழியில் 9 மாணவர்கள் 9A சித்திகளையும் ஆங்கில மொழியில் 3 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன் 10 மாணவர்கள் 8A,B , 4 மாணவர்கள் 8A,C, ஒரு மாணவன் 8A,S சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் உத்தியோகபூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றதுடன் மாணவர்களின் பெயர் விபரங்களுடன் தருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.