முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை செய்த சோகம்!!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாத நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 5 பாடங்கள் மட்டும் சித்தி பெற்ற நிலையில், சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பரீட்சை முடிவுகள் வெளியானதை இட்டு பெறுபேறு குறைந்தமையினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவியான இவர் சிறந்த தலமைத்துவ பண்புகளைக் கொண்டவர் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவி தாய் -தந்தை இறந்த நிலையில் அம்மப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 15 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 15 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவேகா மகேந்திரன், சர்மிகா சர்வானந்தன், பிரணவி சிவகுமார், மயூரிகா சண்முகநாதன், தர்சிகா நடராஜா, விதுசா சிவகுருநாதன், வர்ஷாயினி அரவிந்தன், ஹரினி சபேசன், விஸ்ணுஜா லோகநாதன், பாத்திமா ரம்ஸீன், கிவிதா நகுலேஸ்வரன், அபினா தயாகரன், வானதி இளையதம்பி, பிரேமி செந்தில்குமரன், தாரண்யா சூரியகுமார் ஆகியோர் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன்

மாதுமை நந்தகுமார், வினுஜா திருவருட்செல்வன், நர்ஜிகா நகுலேஸ்வரன், கிறிஸ்ரிகா காசிநாதன், சப்திகா தயானந்தராஜா, மேரின்ஷா யூலியட் அன்ரனி, ஹிபா உபைத், அக்ஷயா சசிராஜ், அமிர்தவர்ஷினி, மதுரா பத்மராஜன் 8A,B சித்திகளையும் ஜானுஸா அழகேஸ்வரன் 8A, C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் செய்கு ரஜீது ஷிவாரா என்ற மாணவி 9A பெற்று முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி செய்கு ரஜீது ஷிவாரா 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் ஹசன் குத்தூஸ் மொஹமட் ருஸைக் 8A,1B , ஹிஷாம் பாத்திமா ஹிஸ்மா 8A,1B, அமீர்தீன் பாத்திமா ஹன்ஸா 8A,1B, யோகேந்திரன் நிதர்சனா 8A,1C, அப்துல் நயீம் பாத்திமா மிப்ஷா 8A,1S , பீர் மொஹமட் பாத்திமா நிப்லா 7A,1B,1C , அஷ்ரப்கான் பாத்திமா சிப்னா 7A,1B,1S சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு!!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இன்று ஜனாதிபதி செயலாளரை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரை அவரது செயலகத்தில் வைத்து சந்தித்து ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதிக்கு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் நேரடியாக மகஜரினை ஒப்படைத்துள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் மகஜரை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் 9A சித்தி பெற்ற மாணவன் உயிரோடு இல்லை : துயரம் தாங்க முடியாமல் சோகத்தில் குடும்பம்!!

சாவகச்சேரி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த முறையில் 9A சித்தி பெற்று சித்தியடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலியான 17 வயதுடைய கோனேஸ்வரன் காருசன் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளில் 9A சித்தியை பெற்றுள்ளமை அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அந்த சந்தோசத்தை வெளிக்காட்டுவதற்கு காருசன் உயிரோடு இல்லையே என்ற துயரம்தான் அதிகம்.

க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் சாதனை!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா விபுலானந்த கல்லூரியில் ஐந்து மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

அகிலன் ஜெனார்த்தனன், ரவிக்குமார் மதுமிதன், வின்சன் லோறன்ஸ் விஷாளன், ரங்கநாதன் தர்சிகா, சிவராஜா சுவேதிகா ஆகியோர் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன்,

வாமதேவன் யுசிகா, சற்குணராஜா சிவதர்சனா, யோகேந்திரன் லஜனிகா, ஜெகநாதன் ஜதுசா, இந்திரகுமார் நிலானி, திருநாவுக்கரசு சாருஜன், பியோ ஜெயராஜ் ரெஜிஸ் ஆகியோர் 8AB சித்திகளையும் ஜெயானந்தன் தனுஜன் 8AC சித்திகளையும்

ஜெ.டிலக்சி 7A,2B , இ.கிளைக்ஸ்ரன் 7A, 2C, த.திலோத்மன் 7A,B,S த.லதுர்சன் 7A , 2B சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

ஐந்து மாணவர்கள் 9A சித்திகளை பெற்றமை பாடசாலை வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியாவில் தேன்கூடு கலைந்ததில் பாடசாலைக்கு விடுமுறை!!

 
வவுனியா ஈரப்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் இன்று (29.03) காலை பாடசாலை வளவிலிருந்த தேனிக்கூடு காற்றில் கலைந்ததில் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் பாடசலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவிருந்த பரீட்சை பிறிதொரு தினத்தில் நடாத்தப்படும் என்று வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தொயிவருகையில்,

இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பரக்கும் மகாவித்தியாலயத்தில் காலை பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் பாடசாலை வளவிலிருந்த தேன்கூடு ஒன்று காற்றினால் கலைந்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாடசாலையின் அதிபர் இவ்விடயம் தொடர்பாக தெற்கு வலய கல்விப்பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணனுடன் தொடர்புகொண்டபோது, பாடசாலையிலிருந்த தேன்கூடு காற்றினால் கலைந்துள்ளது இதையடுத்து மாணவர்களுக்கு எவ்விதப்பாதிப்புக்களும் ஏற்படாவண்ணம் இன்று பாடசலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவிருந்த முதலாம் தவணை பரீட்சையின் பாடத்தினை வேறு ஒரு தினத்தில் நடாத்தப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேன்கூடு கலைந்ததில் மாணவர்களுக்கு எவ்விதப்பாதிப்புக்களும் ஏற்படவில்லை தேன்கூட்டை அகற்றுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. எமது பணிமனையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

யாழில் சாதனை படைத்த வேம்படி மகளிர் கல்லூரி மாணவியின் எதிர்கால ஆசை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ் மாணவி தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியை சேர்ந்த மிருனி சுரேஷ்குமார் என்ற மாணவியே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக மாறி வடமாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என மாணவி மிருனி தெரிவித்துள்ளார்.

தனது விடாமுயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என மாணவி தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் விடா முயற்சியுடன் அர்ப்பணிப்புடன் உழைத்தால் முன்னேறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

பெறுபேறுகளின் அகில இலங்கை ரீதியில் ஆறு மாணவ, மாணவிகள் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 மாணவர்கள் 9ஏ சித்தி! வரலாற்று சாதனை படைத்த பாடசாலை!!

2017ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொது தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நள்ளிரவில் இருந்து இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலையில் இருந்து 9ஏ சித்திகளை 26 மாணவர்களும், 8ஏ சித்திகளை 20 மாணவர்களும் பெற்றதுடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது கல்லூரியில் சென்ற முறை கால்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இம்முறை கல்லூரியின் வரலாற்றில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்று சாதனைகளை பெற்று எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்திருக்கின்றார்கள்.

இந்த பெறுபேறுகளுக்கு உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் எமது கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் பெறுபேறுகள் கல்வித்திணைக்களத்தில் இருந்து கிடைத்தவுடன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வினை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கல்முனை வலயத்தின் தமிழ்ப்பிரிவிற்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரி திரவியராஜா நேரில் வந்து கல்லூரி அதிபரை வாழ்த்தியதோடு மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : சுமார் பத்தாயிரம் பேருக்கு 9A!!

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.

இதன் பெறுபேறுகளுககு அமைய பெரும்பான்மையான மாணவர்கள் சித்தியடைந்து உயர் தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்!!

நள்ளிரவு வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும்.

இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்றோர் விபரம் வருமாறு,

1. குஷானி செனவிரத்ன – ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
1.சாமுடி சுபசிங்க – ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
1. நவோதயா ரணசிங்க – பெண்கள் உயர் பாடசாலை, கண்டி
1. லிமாஷா அமந்தி விமலவீர – மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி
1.ரந்தி லக்பிரியா – சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை
1.கவீஷ பிரதீபத் – சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி

2.நிபுனி ஹேரத் – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

2.அனீஷா பெர்னாண்டோ – சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு

2.ரிஷினி குமாரசிங்க – சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட

2. கவீன் சிறிவர்தன – புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு

இதேவேளை இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Virakesari-

எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகை நோக்கி வரவுள்ள பேராபத்து!!

சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சில நாட்களில் பூமியில் விழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் இந்த சீன விண்வெளி மையத்தின் துகள்கள் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த விண்கலம் பூமியைத் தாக்கும் என குறிப்பிடப்படுகிறது.

Tiangong-1 என்ற விண்வெளி மையமே இவ்வாறு பூமியின் ஏதேனும் ஓர் பகுதியில் விழக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை, 2022ம் ஆண்டில் ஆய்வாளர்களுடன் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை நடத்துவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் அதிசய கிணறு : வரமாக கிடைத்த சொத்தாக மக்கள் பிரமிப்பு!!

 
கொழும்பில் அதிசயிக்கதக்க வகையில் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் இந்த கிணறு அமைந்துள்ளது.

எனினும் இந்தக் கிணறு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள மாளிகை ஒன்றில் இந்தக் கிணறு அமைந்துள்ளது.

இந்த கிணற்றில் காணப்படும் நீர் என்றும் வற்றாத நிலையில் காணப்படுகிறது. வறட்சியான காலநிலையிலும் வற்றிப் போதமையினால் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிசயதக்க வகையில் அமைந்துள்ள இந்த கிணறு அந்தப்பகுதி மக்களுக்கு இயற்கை கொடுத்த வரமாக கருதப்படுகிறது.

எனினும் இந்த கிணற்றினை மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியின் ஊடாக பாரிய வீதியை ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அகில் இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்!!

2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கம்பஹா – ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி – மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி – மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை – சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி – சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.

கொழும்பு – தேவி பாலிகா வித்தியாலயத்தின் என்.ஹேரத், கொழும்பு – சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தின் ஏ. பெர்ணான்டோ, நுகோகொட – சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆர். குமாரசிங்க ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படமாட்டா என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் இன்று(28.03) காலை 8 மணிக்கு காலை பிரார்த்தனையின் போது பாடசாலையின் முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும் முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளருமான ந.ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதி உதவியில் இரண்டாயிரம் லீற்றர் ஒருநாளைக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளக்கூடிய குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சுத்தமான குடிநீர்தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் உப அதிபர் க.முல்லைக்குமரன், ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர் திருமதி ஞானமதி மோகனதாஸ், பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.