பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் எல்லா தகவலையும் தனது நினைவில் வைத்துக் கொண்டு அதை தேவையான நேரத்தில் பயன்படித்தும் நினைவாற்றல் கொண்ட வகையில் ரோபோ ஒன்று வடிவமைக்க பட்டிருக்கும்.
அதே போல பெங்களூரு விமான நிலையத்தில், பயணாளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் கெம்பா என்ற ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது. இந்த ரோபோவால் உள்ளூர் தகவல்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
விக்கினேஸ்வரன் ரஜீபன் 6A, 2B, 1C சித்திகளையும், நிர்மலன் சரண்ணியா 6A, 1B, 2C சித்திகளையும், சிவாஜி சோபிகா 6A, 2B, 1S ஆகிய பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை செய்துள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தால், பேஸ்புக் நிறுவனம் உலகளவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
அதன் செயல்பாடு பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளன. இதனால், அதன் ‘கிரைம் ரேட்’ கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ‘பேஸ்புக்’ உலகம் முழுவதும் 200 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இதில், தங்களுடைய பொழுதுபோக்கு, பிடித்த விஷயங்கள், பெயர், படித்த பள்ளி, கல்லூரிகள், வேலை, பணியாற்றும் நிறுவனம், ஊர், குடும்ப உறவினர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை மக்கள் சேமிக்கின்றனர்.
இத்தகவல்கள், அவர்களுக்கே தெரியாமல் பல்வேறு முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படும் திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது.
தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவது, வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த தகவல்களை கொடுத்து வியாபாரத்தை பெருக்குவது, இந்த தகவல்களின் அடிப்படையில் வர்த்தக வியூகத்தை மாற்றுவது, விளம்பரங்கள் செய்வது என பல்வேறு செயல்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2016ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கை உயர்த்துவதற்காக பேஸ்புக்கை பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்களை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் திருடியதாக சமீபத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, அடுத்த பூகம்பம் இந்தியாவில் வெடித்தது. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் செல்வாக்கை உயர்த்துவதற்காக, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்துடன் அக்கட்சி ஒப்பந்தம் செய்து இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பகிரங்க குற்றச்சாட்டை கூறினார்.
இந்திய அரசின் இந்த கடும் நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகளும் விழித்துக் கொண்டுள்ளன. பேஸ்புக் நிறுவனமும், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் தங்கள் நாடுகளிலும் தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்துகின்றன.
இதனால், ‘கிரைண்டரில் சிக்கிய இட்லி மாவு போல்’ பேஸ்புக் நிர்வாகம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தகவல் திருட்டு சம்பவத்துக்காக ஜுகர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கேட்ட போதிலும், தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் அதன் செயலை எந்த நாடும் மன்னிப்பதாக இல்லை.
இதற்கிடையே, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் இதுவரை திருடி சேர்த்த பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் இங்கிலாந்து அரசு அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
பேஸ்புக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், உலகளவில் அதன் பங்குகளின் மதிப்பு 15 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் திருட்டு குற்றச்சாட்டால் ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிர்வாகம், எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டுகள் நடப்பதை தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. அடுத்த சில வாரங்களில் இவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.
பேஸ்புக் எடுத்துள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகள்,
தற்போது, ‘பிரைவசி செட்டிங்’ மற்றும் முக்கியமான ‘டூல்’களை மக்கள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இனிமேல், பேஸ்புக் பயன்படுத்துவோர் ‘யூசர் செட்டிங்’கில் எளிதாக நுழைந்து, தகவல்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தலாம்.
தங்களின் பேஸ்புக் முகவரியை யார் பார்க்கிறார்கள், அவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தேவையில்லாத அல்லது விரும்பாத தகவல்களை உடனடியாக ‘டெலிட்’ செய்யலாம். அதற்கான ‘டூல்’சும் ‘செட்டிங்’கும் ‘ஷார்ட் கட்’ முறையில் இனிமேல் எளிதாக கையாளும் வகையில் அமைக்கப்படும்.
பேஸ்புக்கின் சேவை மற்றும் புள்ளி விவர கொள்கை, பேஸ்புக் எப்படி தகவல்களை சேகரிக்கிறது, அவற்றை எப்படி பயன்படுத்துகிறது என்பது பற்றிய விவரங்களை மக்கள் இனிமேல் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்.
பேஸ்புக்கில் கிடைக்கும் தகவல்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்த ‘பங்குதாரர் பிரிவு’ (பார்ட்னர் கேட்டகரிஸ்) என்ற வசதி பயன்படுத்தப்படுகிறது. இது இனிமேல் ரத்து செய்யப்படும்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 15ம் திகதி இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சிட்னியில் ஓபன் என்ற புறநகரில் வசித்த லோகேஸ்வரன் துரைசாமியின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதிகாலை வேலை முடித்து வீடு திரும்பும் போது அவசரகால உதவி பெற அழைக்கும் தொலைபேசி எண்ணை அழைத்து பொலிஸாருடன் பேசியிருக்கிறார். அதன் பின்னர் குறுகிய நேரத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
பொலிஸாரின் தகவல்களின்படி அவர் மேற்கு சிட்னியின் ரயில் நிலையம் ஒன்றில் தமது உயிரை மாய்த்துக்கொண்டார் என்று தெரியவருகிறது. இப்போது லோகேஸ்வரனின் உடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு தேடி அவுஸ்திரேலியா வந்த லோகேஸ்வரனின் வயதான பெற்றோரும் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இலங்கையில் உள்ளனர். அவருக்கு அவுஸ்திரேலியாவில் உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ இல்லை. லோகேஸ்வரனின் இறுதிச் சடங்கை சைவ முறைப்படி எளிமையாக நடத்துமாறு குடும்பம் கோரியிருக்கிறது.
ஒரு புதுவரவான லோகேஸ்வரன் வசம் சேமிப்போ எதுவிதமான காப்பீடுகளோ இருக்கவில்லை. அவரது இறுதிச்சடங்குக்காக லோகேஸ்வரனின் நலன்விரும்பிகள் பணம் சேகரித்து வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த வெறுப்பூட்டும் செயற்பாடுகள் காரணமாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் அந்த வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதியில் இணையங்கள் தொடர்பில் இலங்கையின் அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வகுத்து இனங்களுக்கு எதிரான வெறுப்பூட்டலை தவிர்க்க முடியும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
தெஹிவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரின் கணவரால் குறித்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறுவர் இல்லத்தில் சாரதியாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது.
பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன.
வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன.
கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது.
இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் சாதாரண தர பரீட்சையில் சிறப்பான சித்தியை பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாதாரண தர பரீட்சை எழுதிய விமல் வீரவன்சவின் மகள், விமாஷா விஷ்வாதரி வீரவன்ச அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளுக்கமைய அவர் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார். கொழும்பு விஷாகா பாடசாலையில் அவர் கல்வி கற்றுள்ளார்.
தனது தந்தை 3 மாதங்கள் சிறைச்சாலையிலும், தாயார் அந்த காலப்பகுதியில் சிறைச்சாலையில் இருந்த போதிலும் அவர் பரீட்சை தன்னை தயார்படுத்தி சிறப்பாக பரீட்சை எழுதியுள்ளார் என ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் கடற்கரைகளில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் சிசிடீவி கமரா கட்டமைப்பு ஒன்றை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்கரைக்கு அருகில் நியமிக்கப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் குளியலறையை சிலர் உடைத்துள்ளதாக காரைநகர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு உட்பட சமூக விரோத செயற்பாடுகள் பல இங்கு முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் உள்ள போதிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகைத்தரும் நாட்களில், கடற்கரையின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.
இதன் காரணமாக கடற்கரைக்கு அருகில் சிசிடீவி கமரா கட்டமைப்பு ஒன்றை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கடந்த 27.03.2018 அன்று கேப்பாபுலவில் இருந்து அதிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சூரிபுரம் கேப்பாபுலவை சேர்ந்த 20 வயதுடைய சண்முகலிங்கம் நிமலன் என்ற திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன இளைஞனே பலியாகியுள்ளார்.
உலகில் அதிகமான நீலப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை காணப்படுவதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இந்த நிலை காணப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக அறிவித்துள்ளார்.
இலங்கையர்களின் கணினி அறிவு நூற்றுக்கு 38 வீதம் காணப்படுகின்றது. அதில் நூற்றுக்கு 89 வீதமானவர்கள் ஆண்கள் எனவும், இலங்கை தொழில்நுட்ப வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்றாகவும் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை தொடர்பிலும் கணினி குற்றங்கள் தொடர்பிலும் சிறுவர்களுக்கு இணையத்தள பயன்பாட்டிற்கு இடமளிக்க கூடிய முறையினையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
விசேடமாக சைபர் தாக்குதல்கள் தொடர்பிலும், சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வாய் பேச முடியாத, காது கேளாத மகனை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ள தாயின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யூ ரோங்(77) என்ற பெண்ணுக்கு மகனாக பிறந்தவர் வாங் ஜிக்கியங்(41), பிறவியிலேயே பேசும் ஆற்றல் மற்றும் காது கேட்கும் திறனை இழந்தவர்.
அவரை சிறு வயதில் படிப்பிற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான போர்டிங் பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு வாங்கை அவரது நண்பர்கள் கேலி செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு நாளடைவில் நோயாக மாறியுள்ளது.
மனநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை வழங்காமல் அவரை சங்கிலியால் கட்டி அடைத்து வைக்க முடிவு செய்துள்ளார் தாய், யூ ரோங்.
அதன்படி தன் வீட்டருகே சிறிய கூடம் ஒன்றை கட்டி, அதில் தன் மகனை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
திட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில் கட்டப்பட்டு கிடக்கும் தன் சகோதரனை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக வாங்கின் சகோதரி ஷுஃபன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், “என் கணவர் உயிரோடு இருந்தவரை அவனை பத்திரமாக கண்காணித்து வந்தார். அவரின் மறைவிற்கு பின் என்னால் தனியாக பார்த்துக் கொள்ள முடியாமல் அடைத்து வைத்தேன்” என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த நபரின் சிகிச்சைக்கு உரிய பணத்தை வழங்க முயற்சிப்பதாக அரசியல் பிரமுகர் டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Alexandre Bissonnette (28) என்னும் கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் Quebecஇல் உள்ள மசூதி ஒன்றில் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான்.
இதில் ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில் Alexandre மனம் மாறி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். “என்னுடைய செயலுக்காக வெட்கப்படுகிறேன், நான் ஒரு தீவிரவாதியோ இஸ்லாமியர்களை வெறுப்பவனோ அல்ல” என்று அவன் Quebec நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்தான்.
தனது குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டுள்ளதால் அவனுக்கு 150 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த செய்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
“எங்களுக்கு இந்த வார்த்தைகள் போதாது, அவன் செய்த குற்றங்கள் அனைத்தையும் அவனுடைய வார்த்தைகள் சமாதானப்படுத்தாது. எங்களுக்கு ஒரு பெரிய விளக்கத்தை அவன் கொடுக்க வேண்டும்” என்று Quebec மசூதியின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவனது சக மாணவரான Vincent Boissoneault, Alexandre பிற நாட்டவர்களை வெறுப்பவனாக இருப்பான் என்று தான் நினைக்கவில்லை என்றும், அவன் சற்று இன வெறுப்பு உடையவன்தான் என்றாலும் கொலை செய்யுமளவிற்கு மோசமான குணமுடையவனாக இருப்பான் என்று எண்ணவில்லை” என்றும் கூறியுள்ளார்.
தாய்லாந்தில் தலைவெட்டப்பட்ட கோழி ஒன்று ஒருவாரமாக உயிருடன் வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பராமரித்து வருகிறார். ரத்சபுரி மாகாணத்தில் தான் இந்த அதிசய கோழி கிடைத்துள்ளது.
கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என சரியாக தெரியாத நிலையில் வேறு எதாவது உயிரினம் அதை தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஒரு வாரத்துக்கு முன்னர் தலை வெட்டப்பட்டாலும் கோழி இன்னும் உயிருடன் இருந்து வருகிறது.
கோழியின் தலை இருக்க வேண்டிய இடத்தில் ரத்தக்கறை படிந்திருக்கும் நிலையில், அது எப்படியோ எழுந்து நிற்கிறது.
இதையடுத்து சுபகாடி அருண் தொங் என்னும் கால்நடை மருத்துவர் குறித்த கோழியை தற்போது பராமரித்து வருகிறார்.
அதற்கு உணவுகள் கொடுத்து வருவதோடு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளையும் அருண் கொடுத்து வருகிறார். அருண் கூறுகையில், கோழி நன்றாக ஒத்துழைக்கிறது, அதற்கு வாழ்க்கை இன்னும் உள்ளது.
கோழியை யாராவது எடுத்து வளர்ப்பார்கள் என நம்புகிறேன், அதன் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க யாராவது உள்ளார்களா என கூறியுள்ளார்.
மேலும், கோழியானது கடுமையான இதயம் கொண்ட உண்மையான போர்வீரன் எனவும் அருண் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1945-லிருந்து 1947 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மைக் என்னும் கோழி தலையில்லாமல் 18 மாதங்கள் உயிருடன் இருந்த நிலையில், அதுவே அதிக காலம் தலையில்லாமல் வாழ்ந்த கோழி என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
அண்டிபயாட்டிக்குகள் என்று அழைக்கப்படும் மருந்துகளுக்கு அடங்காத ஒரு வகை நோய்க்கிருமியால் உண்டாக்கப்படும் அரிய பால்வினை நோய்த்தொற்று ஒரு பிரித்தானியருக்கு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது மருத்துவ உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மோசமான பால்வினை நோய்களில் ஒன்று Gonorrhoea. தவறான பாலுறவுப் பழக்கங்கள் கொண்டவர்களை இந்நோய் தாக்கும்.
பொதுவாக Azithromycin மற்றும் Ceftriaxone என்னும் இரு அண்டிபயாட்டிக்குகள் இந்த நோயை குணமாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.
ஆனால் இந்த மனிதருக்கு ஏற்பட்டுள்ள நோய் இந்த இரண்டு மருந்துகளாலும் குணமாக்கப்பட இயலாததாக உள்ளது.
அதனால் மருத்துவர்கள் இந்த நோயை super-gonorrhoea என்று அழைக்கிறார்கள். ஒரு மருத்துவ ஆய்வு இவ்வகை நோய் ஏற்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று தெரிவித்துள்ளது.
குணமாக்கப்படாவிட்டால் ஆண்மை இழப்பு போன்ற பிரச்சினைகள் உட்பட பல மோசமான பக்க விளைவுகளை இந்நோய் ஏற்படுத்தும்.
ஒரு வேளை எந்த மருந்தாலுமே இந்த நோயை குணமாக்க இயலாமல் போகலாம் என்னும் விடயமே மருத்துவ உலகிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு சென்றிருந்த திருமணமான அந்த மனிதர் அங்குள்ள ஒரு விலைமாதுடன் தகாத பாலுறவு கொண்டதன் விளைவாகவே இந்நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் வெவ்வேறு அண்டிபயாட்டிக்குகள் மூலம் அந்த மனிதருக்கு சிகிச்சைகள் அளித்து எந்த மருந்து வேலை செய்கிறது என்பதைக் கண்காணித்து வருகிறார்கள்.
தகாத பாலுறவுப் பழக்கம் உடையோருக்கு இந்த செய்தி ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது எனலாம்.
இந்தியாவில் மகனுடன் சேர்ந்து அவரின் அம்மாவும் பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்றாக எழுதும் சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி ரஜினி பாலா (44). பாலா கடந்த 1989-ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்த நிலையில் அதோடு படிப்பை நிறுத்தி விட்டார்.
பின்னர் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் விட்டு போன படிப்பை முடிக்க முடிவு செய்த பாலா பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒன்றாக படித்து வருகிறார்.
தற்போது தெரிவையும் மகனுடன் சேர்ந்து ஒன்றாக பாலா எழுதி வருகிறார். அவர் கூறுகையில், மீண்டும் படிப்பை தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது.
என் கணவர் தான் இதற்கு ஊக்கம் கொடுத்தார், அவருக்கு என் நன்றிகள் என கூறியுள்ளார்.
ராஜ்குமார் கூறுகையில், பாலா தனது படிப்பை தொடர்வதோடு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.