வவுனியாவில் மனைவியைக் காணவில்லை என கணவன் பொலிசில் முறைப்பாடு!!

மனைவியை காணவில்லை என கணவன் ஓருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நேற்று குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நான்காம் கட்டை கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஆரோக்கியஜோதி லெம்பேட் திவியா என்ற தனது மனைவி கடந்த திங்கள் கிழமை காலை தான் வேலைக்கு செல்லும் போது வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு சென்ற போது மனைவியை காணவில்லை எனவும், தனது மனைவியின் தொலைபேசியும் இயங்கவில்லை என கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் மகோற்சவம் -2018

வவுனியா குட்செட்வீதி   ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம் மஹோற்சவ பெருவிழா-2018

படங்களை முழுமையாக பார்க்க  அவற்றின் மேல்   அவற்றின் மேல் அழுத்துங்கள் …

கொடியேற்றம் -22.03.2018

[images type=”carousel” cols=”three” auto_slide=”true” lightbox=”true”]
[image link=”176801″ image=”176801″]
[image link=”176800″ image=”176800″]
[image link=”176799″ image=”176799″]
[image link=”176798″ image=”176798″]
[image link=”176797″ image=”176797″]
[image link=”176796″ image=”176796″]
[image link=”176795″ image=”176795″]
[image link=”176794″ image=”176794″]
[image link=”176793″ image=”176793″]
[image link=”176792″ image=”176792″]
[image link=”176791″ image=”176791″]
[image link=”176790″ image=”176790″]
[image link=”176789″ image=”176789″]
[image link=”176788″ image=”176788″]
[image link=”176787″ image=”176787″]
[image link=”176786″ image=”176786″]
[image link=”176785″ image=”176785″]
[/images]

23.03.2018 வெள்ளிகிழமை இடம்பெற்ற  இரண்டாம் நாள் உற்சவம்
லிங்கரூப நாகவாகன காட்சி.

[images type=”carousel” cols=”three” auto_slide=”true” lightbox=”true”]
[image link=”176807″ image=”176807″]
[image link=”176808″ image=”176808″]
[image link=”176809″ image=”176809″]
[image link=”176810″ image=”176810″]
[image link=”176811″ image=”176811″]
[image link=”176812″ image=”176812″]
[image link=”176813″ image=”176813″]
[image link=”176814″ image=”176814″]
[image link=”176815″ image=”176815″]
[/images]

24.03.2018 சனி இடம்பெற்ற மூன்றாம்  நாள் திருவிழா
கற்பகதரு விருட்ச காட்சி.

[images type=”carousel” cols=”three” auto_slide=”true” lightbox=”true”]
[image link=”176817″ image=”176817″]
[image link=”176818″ image=”176818″]
[image link=”176819″ image=”176819″]
[image link=”176820″ image=”176820″]
[image link=”176821″ image=”176821″]
[image link=”176822″ image=”176822″]
[image link=”176823″ image=”176823″]
[image link=”176824″ image=”176824″]
[image link=”176825″ image=”176825″]
[image link=”176826″ image=”176826″]
[/images]

25.03.2018 ஞாயிற்றுகிழமை  இடம்பெற்ற நான்காம் நாள் திருவிழா

நவசக்திஅர்ச்சனை நிகழ்வுகள்

[images type=”carousel” cols=”three” auto_slide=”true” lightbox=”true”]
[image link=”176817″ image=”176817″]
[image link=”176818″ image=”176818″]
[image link=”176819″ image=”176819″]
[image link=”176820″ image=”176820″]
[image link=”176821″ image=”176821″]
[image link=”176822″ image=”176822″]
[image link=”176823″ image=”176823″]
[image link=”176824″ image=”176824″]
[image link=”176825″ image=”176825″]
[image link=”176826″ image=”176826″]
[image link=”176827″ image=”176827″]
[image link=”176828″ image=”176828″]
[image link=”176829″ image=”176829″]
[image link=”176830″ image=”176830″]
[image link=”176831″ image=”176831″]
[image link=”176832″ image=”176832″]
[image link=”176833″ image=”176833″]
[image link=”176834″ image=”176834″]
[image link=”176835″ image=”176835″]
[image link=”176836″ image=”176836″]
[image link=”176837″ image=”176837″]
[image link=”176838″ image=”176838″]
[image link=”176839″ image=”176839″]
[image link=”176840″ image=”176840″]
[image link=”176841″ image=”176841″]
[image link=”176842″ image=”176842″]
[image link=”176843″ image=”176843″]
[image link=”176844″ image=”176844″]
[image link=”176845″ image=”176845″]
[/images]

 

26.03.2018 திங்கட்கிழமை  இடம்பெற்ற ஐந்தாம் நாள் திருவிழா

பிச்சாந்தேவி பாவனா உற்சவ நிகழ்வுகள்

[images type=”carousel” cols=”three” auto_slide=”true” lightbox=”true”]
[image link=”176847″ image=”176847″]
[image link=”176848″ image=”176848″]
[image link=”176849″ image=”176849″]
[image link=”176850″ image=”176850″]
[image link=”176851″ image=”176851″]
[image link=”176852″ image=”176852″]
[image link=”176853″ image=”176853″]
[image link=”176854″ image=”176854″]
[image link=”176855″ image=”176855″]
[image link=”176856″ image=”176856″]
[image link=”176857″ image=”176857″]
[image link=”176858″ image=”176858″]
[image link=”176859″ image=”176859″]
[image link=”176860″ image=”176860″]
[/images]

 

27.03.2018 செவ்வாய் கிழமை  இடம்பெற்ற
சுவர்ணகௌரி காட்சி

அன்னபூரனி உற்சவ நிகழ்வுகள்

[images type=”carousel” cols=”three” auto_slide=”true” lightbox=”true”]
[image link=”176862″ image=”176862″]
[image link=”176863″ image=”176863″]
[image link=”176864″ image=”176864″]
[image link=”176865″ image=”176865″]
[image link=”176866″ image=”176866″]
[image link=”176867″ image=”176867″]
[image link=”176868″ image=”176868″]
[image link=”176869″ image=”176869″]
[image link=”176870″ image=”176870″]
[image link=”176871″ image=”176871″]
[image link=”176872″ image=”176872″]
[image link=”176873″ image=”176873″]
[image link=”176874″ image=”176874″]
[image link=”176875″ image=”176875″]
[image link=”176876″ image=”176876″]
[image link=”176877″ image=”176877″]
[image link=”176878″ image=”176878″]
[/images]

வலது கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.

அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம்.

கண்கள் துடிப்பது ஏன்?

உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.

கண் துடிப்பை தடுப்பது எப்படி?

கண் துடிப்பினை தடுக்க, நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.

பெற்றோரின் செயற்பாட்டால் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

 
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வில் தோட்டத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய சதீஸ்வரன் என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனின் பெற்றோர் திட்டியதன் காரணத்தினால் குறித்த சிறுவன் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மாணவனின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 வயது மகனை கொடூரக் கொலை செய்த தாய்!!

பிரித்தானியா – ஸ்ரோப்ஷைர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து வாழும் நிலையில் தனது 7 வயது மகனை கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

தனது மகனை கொலை செய்வதற்கு முன்னர் தனது முன்னாள் கணவருக்கு எழுதிய கடிதத்தில் “நீ சாகும் வரை இந்த வலியை அனுபவிப்பாய் என்று நம்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு பிறகு பொலிஸ் விசாரணையின் போது குறித்த பெண்ணின் தற்போதைய கணவர், தனது மனைவி தன்னைத்தானே தாக்கிக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களுடன் குளியலறையில் கிடந்ததாகவும், தன்னைக் கண்டதும் ” நான் அவனைக் கொன்று விட்டேன், முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்று விட்டேன் அவன் இப்படிக் கஷ்டப்படுவதை என்னால் பார்க்கமுடியவில்லை” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது பெண்ணின் அறையில் கிடந்த கடிதங்களில் “ஆர்ச்சி செத்தாலும் கூட பரவாயில்லை ஆனால் அவனை அவனது தந்தையுடன் போக விட மாட்டேன்”என்று எழுதி வைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை, “எனது மகனின் இழப்பு வாழ்நாள் முழுவதும் எனக்கு ஒரு பேரிழப்பாகவே இருக்கும் சொந்த மகனை அடக்கம் செய்யும் துயரம் யாருக்கும் வரக்கூடாது” என்று துயரம் பொங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பத்து பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்கிய நடுவர்கள் குழு ஒன்று இரண்டு வார விசாரணைக்கு பின்பு குறித்த பெண் குற்றவாளி என்று தீர்மானித்து தீர்ப்பை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

கைக்குழந்தையுடன் பரீட்சை எழுதிய பெண் : பின்னணி என்ன?

 
ஆப்கானிஸ்தானில் பெண்ணொருவர் தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய புகைப்படம் ஒன்று வைரலானது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஜஹன்தாப் அஹம்தி(25), மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், பல்கலைக்கழக தேர்வை தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்து எழுதியுள்ளார்.

இந்த புகைப்படத்தினை பல்கலைக்கழக் பேராசிரியர் நாசிர் குஸ்ரா வெளியிட்டதுடன், ‘நீதான் இந்த உலகின் உண்மையான சம்பியன். ஒரு பெண் நினைத்தால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.

அதுவும் எந்த சூழ்நிலையிலும் என்பதை பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கும் உணர்த்தியுள்ளாய்’ என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது.

இதுகுறித்து ஜஹன்தாப் கூறுகையில், ‘தைகுந்தி என்ற எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் இருந்து வருகிறேன். எனது படிப்பை எந்த காரணத்திற்காகவும் விட்டுவிட நான் விரும்பவில்லை.

நான் வீட்டுக்கு வெளியே வந்து பணியாற்ற விரும்புகிறேன், நான் மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஜஹன்தாப்பின் புகைப்படத்தால் மாவட்ட நிர்வாகம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ள நிலையில், அவரின் துணிவுக்கு உலக நாடுகளில் இருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!

 
இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன.

அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு? அந்தப் பெண் இறந்த பின் அந்தக் குழந்தை வெளியேறியதா? அப்படியானால் அந்தப் பெண் இறந்த பிறகும் அந்தக் குழந்தை உயிருடன் இருந்ததா?

இறந்தபின் அந்தப் பெண் தானாக பிரசவித்தாளா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. அது மட்டுமின்றி அந்தப் பெண்ணின் தலையில் ஒரு துளை காணப்பட்டது. அது அவள் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட துளை அல்ல. medieval எனப்படும் இடைக்காலத்தில் அவ்வாறு துளையிடுதல் ஒரு சிகிச்சையாக விளங்கியது.

மன நலம் பாதிக்கப்பட்டோர் முதல், கர்ப்பிணிப்பெண்கள் வரை இந்த சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
அப்படியானால் இந்த உடல் இடைக்காலத்தைச் சேர்ந்தது. அந்த காலத்திலேயே Neurosurgery எனப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை அல்லதுமூளை அறுவை சிகிச்சை நடைபெற்றதற்கு இது ஒரு சான்று.

நவ யுகத்தில் கர்ப்பிணிப்பெண்கள் சிலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை Eclampsia.கர்ப்ப காலத்தின் 20 ஆவது வாரத்திற்குப்பின் கர்ப்பிணிகளைத் தாக்கும் இந்நோய்பல கர்ப்பிணிகளின் உயிரைக் குடித்திருக்கிறது.

இந்நோய் இடைக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கும் அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும் இந்த கண்டுபிடிப்பு ஒரு சான்று.

அந்த காயம் ஆறத் தொடங்குவதன் அறிகுறிகள் தெரிவதிலிருந்து அறுவை சிகிச்சைக்குப் பின் ஒரு வாரமாவது அவள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவள் 38 வார கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும். தாயும் சேயும் இறந்திருந்தாலும் புதைக்கப்பட்டபின் அவளது உடல் அவளது குழந்தையின் உடலை வெளியே தள்ளியிருக்க வேண்டும்.

அவளுக்கு எதற்காக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் கர்ப்பகால வலிப்பு நோயிலிருந்து அவளை குணமாக்குவதற்காகவே அது செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அவள் எப்படி இறந்தாள் என்று உறுதியாகக் கூற இயலவில்லை. அவள் கர்ப்பகால பிரச்சினைகளாலோ அல்லது அந்த அறுவை சிகிச்சை காரணமாகவோ கூட இறந்திருக்கலாம்.

எப்படியானாலும் trepanation மற்றும் சவப்பெட்டிக்குள் பிரசவம் ஆகிய அரிய நிகழ்வுகள் ஆகிய இரண்டையும் ஒரே கண்டுபிடிப்பில் காண்பது அபூர்வம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆவணப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளில் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் trepanation மற்றும் கர்ப்பிணிப்பெண்ணின் கண்டுபிடிப்பு ஆகியவை சேர்ந்து கிடைத்தது மிக சிலவாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வவுனியா பாவற்குளம் படிவம் 01 அரச உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டு : கிராம சேவையாளர் மறுப்பு!!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாவற்குளம் படிவும் 1 கிராமத்தை சேர்ந்த மக்கள் அக்கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி கடந்த (23.03.2018) அன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தனர்.

இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு குறித்த கிராம அலுவலகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்..

கடந்த 22.03.2018 அன்று வெளியான செய்தி அறிக்கைக்கு பாவற்குளம் படிவம் 01 கிராம உத்தியோகத்தராகிய நான் உண்மையான சில தகவல்களை தருவதுடன் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.

பாவற்குளம் படிவம் 01 கிராமத்தில் 82 குடும்பங்கள் பதிவு செய்து வசித்து வருகின்றனர். அங்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் 6 குடும்பங்களுடன் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கி பாவற்குளம் பகுதியிலிருந்து புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களிடம் பெருமளவு நிதி பெற்று கிராம அபிவிருத்தி என்ற போர்வையில் சுகபோக வாழ்க்கை நடாத்துவதை அவதானிக்கக் கூடியதாகஉள்ளது.

கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரை பயன்படுத்துவதை இந்த 6 குடும்பங்கள் தவிர ஏனைய மக்களும் தலைவர் தவிர்ந்த ஏனைய சங்க உறுப்பினர்களும் முழுமையாக நிராகரித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு அறிக்கை செய்யப்பட்டு புதிய கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 6 நபர்களினாலும் அரச காணி அத்து மீறி பிடிக்கப்பட்டும் பனை வளங்கள் அழிக்கப்பட்டும் உள்ளதுடன் இவை என்னால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு சில பொலிஸ் அலுவலர்களும் இவர்களின் செயலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது பற்றி செட்டிகுளம் பகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வர இருக்கிறேன்.

கிராம அபிவிருத்தி சங்கத் தலைவராக இருந்த குறித்த நபர் கிராம அபிவிருத்தி சங்க தலைமைப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டால் எதுவும் செய்ய முடியாத நிலையில் என் மீதும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

நானோ, அபிவிருத்தி உத்தியோகத்தரோ எந்த தவறும் இழைக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எம்மைத் தூண்டிவிடும் செயலாகவே அமைகின்றது.

மேலும் எனது பிரிவில் சுமார் 730 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 06 குடும்பங்கள் சேர்ந்த 9-10 நபர்கள் மட்டும் கையொப்பமிட்டு என்னையும் அபிவிருத்தி அலுவலரையும் இடமாற்றம் செய்யுமாறு கோரியுள்ளனர். இதன் காரணமாக பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த காலப்பகுதியில் படிவம் 01 பகுதியில் செட்டிகுளம் பிரதேச செயலகம் ஊடாக பெருமளவான அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த நபரின் செயல் காரணமாக கிராமம் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. இச் செயலுக்கு கிராம மக்கள் சார்பிலும் கிராமத்திற்கு பொறுப்பான அலுவலர் என்ற வகையிலும் கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவிக்கின்றேன். என தெரிவித்தார்.

5G இணையத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிப்பு!!

அதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு தொடர்பில் அனைவரது எதிர்பார்ப்பும் திரும்பியுள்ளது.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் குறித்த தொழில்நுட்பம் தொடர்பில் முன்னோட்டப் பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இப் பரிசோதனை KDDI எனும் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இப் பரிசோதனையானது 30,000 பேரை கொள்ளக்கூடிய ஜப்பானிலுள்ள Okinawa Cellular ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தரவிறக்கம் மற்றும் 4K வீடியோ பிளே செய்தல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் குதித்த புது மணப்பெண் சசிகலா புஷ்பா!!

தமிழக மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா திருமணம் முடிந்த அடுத்த நாளே ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து 44வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இருதரப்பினரும் கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் கைக்குழந்தையுடன் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த எம்பி சசிகலா புஷ்பா நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பதாகையை தாங்கியவாறு போராட்டத்தில் கல்ந்துகொண்டார்.

நச்சு வாயு உயிரைக் கொல்கிறது எனவே தமிழ் நாட்டில் இருந்து ஸ்டெர்லைட்டை தடை செய்ய வேண்டும் என அவர் தாங்கி இருந்த எதிர்ப்பு பதாகையில் எழுதப்பட்டிறுந்தது.

சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமி என்பவருக்கும் நேற்று டெல்லியில் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அவர் போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்த வெளிநாட்டுப் பெண் துரதிஷ்டவசமாக மரணம்!!

 
திக்வெல்ல மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 48 வயதான சீன பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்ற பெண் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, கதிர்காமம் ரயில்வே நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சீன நாட்டவரின் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியின் பிரேக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதி மாறிய சீன பெண் மீது எதிர்பாராத விதமான மோதியதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி மாத்தறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 25 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர் : அதிர்ச்சி வீடியோ!!

குரோஷியாவில் நடைபெற்ற டிவிசன் கால்பந்து போட்டியின் போது மார்பின் மீது பந்து பட்டதால் Bruno Boban மைதானத்திலேயே அதிர்ச்சி மரணமடைந்தார்.

இந்த சம்பவம் அங்குள்ளவர்களை பரபரப்புக்கு ஆளாக்கியுள்ளது.

குரோஷியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டிவிசன் கால்பந்து தொடரில் Marsonia மற்றும் Slavonija Pozega அணிகள் விளையாடின.

இதில் போட்டியின் போது Marsonia அணி வீரர் Bruno Boban மார்பின் மீது பந்து பட்டது. காயம் ஏதுமின்றி தொடர்ந்து போட்டியில் விளையாடிய அவர் மைதானத்திலேயே விழுந்தார் பின், போட்டியை நிறுத்தி அவரை பார்த்த நடுவர் அசைவு ஏதுமின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின், மைதானத்திற்குள் வந்த அனைத்து வீரர்களும் அவருக்கு முதலுதவி அளித்த போதும், அவர் மூச்சு ஏதும் விடாமல் இருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மைதானத்தில் விழுந்த அவர் திடீரென மரணமடைந்தார். இதனைக்கண்ட சக வீரர்கள் மைதானத்திலேயே அதிர்ந்து போனர். பின், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போட்டியின் போது, பந்து பட்டு திடீரென வீரர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/watch?time_continue=1&v=mqXizexvNnQ

மைதானத்தில் நிலைகுலைந்து போன வீரர் : நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம்!!

கால்பந்து தாக்கியதில் மைதானத்திலேயே நிலைகுலைந்து போன வீரர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் Slovakia’s King’s Cup-ன் இறுதிப்போட்டி நடந்தது, இதில் கால்பந்து தாக்கியதால் அதிர்ச்சியைடைந்து மைதானத்திலேயே சரிந்த முன்னாள் லிவர்பூல் அணி வீரர் Martin Skrtel நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் 27வது நிமிடத்தில் சக அணி வீரர் அடித்த பந்து மார்டினின் பின்பக்க தலையில் அடித்தது, அதில் நிலைதடுமாறிய Martin Skrtel-ன் மயக்கமடைந்து மைதானத்திலேயே விழுந்தார், அதிர்ச்சியில் அவரது நாக்கு அவரின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

உடனே சுதாரித்த சக அணி வீரர் Ondrej Duda சற்றும் தாமதிக்காமல் மார்ட்டின் வாயில் கையை விட்டு, அவரது தொண்டையில் சிக்கியிருந்த நாக்கை வெளிப்புறமாக இழுத்து இயல்பு நிலைக்கு மாற்றினார்.

இந்த எதிர்பாராத திடீர் சம்பவத்தால் தாய்லாந்தின் ராஜமங்கல ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Slovakia அணி மருத்துவர் முதலுதவி சிக்கிச்சை அளித்த பின்னர் தான் இயல்பாக இருப்பது போல் உணர்ந்ததாக Martin Skrtel-ன் போட்டிக்கு பின்னர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் 3-2 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை ஸ்லோவேக்கியா அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.

வீடீயோவைக் காண

கொலை செய்யப்பட்ட காதலி : தாலி, பட்டுப்புடவையுடன் கதறும் காதலன்!!

கடந்த வாரம் கேரளாவை அதிர வைத்த ஆணவக்கொலையால், காதலன் பிரிஜேஷ் பித்துப் பிடித்தவர் போல் இருக்கிறார் .

சாதி குறைந்த நபரை தனது மகள் ஆதிரா காதலித்துவிட்டாளே என தந்தை ராஜன், சற்றும் இரக்கமன்றி கத்தியால் குத்தி சாய்த்தார். தனது மகளின் காதலை எதிர்த்த ராஜனும் காதல் திருமணம் செய்துகொண்டவர் தான்.

கல்யாணக்கனவோடு இருந்த பிரிஜேஷின் கனவு கலைந்து, அவரது நிம்மதியும் போய்விட்து. திருமணக் கனவுடன் கிராமத்துக்கு வந்த பிரிஜேஷ், இப்போது செய்வதறியாது திரிகின்றார்.

காதல் மனைவிக்காக வாங்கிய தாலியையும், பட்டுப்புடவையையும் கட்டிக்கொண்டு கதறும் அவரைத் தேற்ற முடியாமல் நண்பர்கள் தவிக்கின்றனர். `

வீட்டிற்கு வரப்போகும் மருமகளை வரவேற்க காத்திருந்த மாமியாரும் ஒரு வார காலம் சாப்பிடாமல் கவலையில் இருக்கிறார்.

என்னைப் போன்ற நிலை இனி யாருக்கும் வரக் கூடாது. தாழ்ந்த சாதி என்றால் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளக்கூட உரிமை இல்லையா? என உணர்ச்சி பொங்க கேள்வி எழுப்புகிறார்.

படுக்கையறையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்!!

பிரபல தொலைக்காட்சி நடிகரான கரண் பரஞ்பே படுக்கையறையில் பிணமாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கரண் பரஞ்பே(26), அந்நிகழ்ச்சியில் ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்ததால் குறித்த கதாபாத்திரத்தின் பேரிலேயே ஜிக்னேஷ் என அழைக்கப்படுவார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டு படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார், இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவரது மரணம் சக நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.