பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி(73) உடல்நலக் குறைவால் காலமானதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயந்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்ப்ட்டுள்ளது.
குறிப்பாக மிஸ் மாலினி என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அன்றை இந்திய பிரதமர் இந்திரா காந்தி கைகளால் தேசிய விருதை பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெயந்தி.
பெங்களூரில் வசித்து வந்த ஜெயந்திக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நண்பகல் 1.45 மணியளவில் ஜெயந்தி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்க்கின்றனர்.
பாலாஜி தன்னை சாதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி தனக்கு தொல்லை தருவதாகவும், இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என நித்யா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரிந்த வாழும், இவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் சிம்பு. பாலாஜியின் மனைவி நித்யாவுடன் சுமார் 1 மணிநேரம் வீடியோ அழைப்பில் பேசிய சிம்பு, குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும், உங்கள் குடும்ப பிரச்சனையை பார்த்து மிகவும் வேதனையடைந்தேன்.
எனக்காகவும், உங்கள் கணவர் பாலாஜிக்காகவும் இந்த ஒரு முறை மட்டும் மன்னித்து அவருடன் சேர்ந்து வாழுங்கள் என கூறியதாக நித்யா தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய ஸ்டார், இவ்வாறு என்னிடம் கேட்டுக்கொண்டும் அப்போதைக்கு பதில் எதுவும் சொல்ல முடியவில்லையே என்பதை நினைக்கையில் கவலையாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் ஆராயி வழக்கின் குற்றவாளி பொலிசாரிடம் சிக்கியது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஆராயி என்பவர், தனது 10 வயது மகன் சமயன், 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி 21 ஆம் திகதி இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுவனை கழுத்தில் மிதித்து கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த ஆராயி மற்றும் தனம் இருவரும் மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் தற்போது தில்லைநாதன் என்பவரை கைது செய்துள்ள பொலிசார் கூறுகையில், 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிய போது புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன்(36) என்ற சிறையில் இருந்து விடுபட்டுச் சென்றவன் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்தோம்.
அவன் கடலூர் சிறையில் இருந்தபோது திருக்கோவிலூரைச் சேர்ந்த ராமு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக அவன் அடிக்கடி திருக்கோவிலூருக்குச் சென்றுள்ளான்.
இருட்டிய பின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் நுழைந்து கைவரிசை காட்டும் பழக்கத்தை கொண்டிருந்த தில்லைநாதன், அன்று இரவு ஆராயி வீட்டில் ஆண் இல்லை தாழ்ப்பாளும் இல்லை என்பதை அறிந்து வீட்டிற்குள் புகுந்துள்ளான்.
முதலில் ஆராயியின் சங்கிலியை பறிக்க முயன்ற போது சிறுவர்கள் கண் விழித்த நிலையில், சமயனை தாக்கிவிட்டு இருவரையும் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.
ஆனால் இருவரும் சத்தம் போட்டதால் நகை, 9000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.” என கூறுகின்றனர்.
மேலும், இந்த வழக்கின் தொடர்பில் திட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது என்றும் 90-க்கும் மேற்பட்ட பொலிசார் தூக்கமின்றி உழைத்ததாகவும் எஸ்.பி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் தனது கணவர் முறையற்ற உறவுக்கு எதிர்ப்பாக இருந்த காரணத்தால், அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தேனி அருகேயுள்ள குள்ளக்கவுண்டபட்டியை சேர்ந்த சாமியும் அதே பகுதியை சேர்ந்த சுகந்தியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சுதாகரன் என்பவர் மீது மூலம் புயல் வீசியது. சுகந்திக்கும், ராமநாதபுரத்தில் ஆயதப்படை காவலராக பணியாற்றி வரும் சுதாகரன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இது சாமிக்கு தெரிந்து தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இருப்பினும், தனது கணவனின் எதிர்ப்பை மீறி உறவினை தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் தனது மனைவியின் நடைமுறைகளில் சந்தேகம் அடைந்த சாமி, அவரது கைப்பேசியை எடுத்து சோதனை செய்ததில், தன்னை கொலை செய்துவதற்கு சுதாகரனோடு சேர்ந்து திட்டம் போட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாட்சியங்களை சேகரித்துக்கொண்டு பொலிசில் சாமி புகார் அளித்துள்ளார். கூலிப்படையை ஏவிய காவலர் சுதாகர், சாமியை கொலை செய்வதற்கு சரியான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருந்துள்ளார் என்பதை உறுதி செய்த பொலிசார், கொலைக்கு திட்டமிட்ட சுகந்தி, காவலர் சுதாகர், சுதாகரின் நண்பர் மணிகண்டன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
தமிழகத்தில் மதுக்காக ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி கலாவதி(54), மகன் நீலகண்டன்(25) ஆவர், கலாவதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கலாவதி தனது வீட்டிற்கு கீழே சாலையில் குடிபோதையில் படுத்திருந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், நீலகண்டனிடம் இதுகுறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தனது தாயை வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நீலகண்டன், தான் வாங்கி வைத்திருந்த மதுவை தேடியுள்ளார். ஆனால், மது அவரது தாய் கலாவதி குடித்தது அவருக்கு தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த நீலகண்டன், கலாவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனது தாயை அவர் கீழே தள்ளிவிட்டார். இதனால் தலையில் பலத்த அடிபட்டு கலாவதி அங்கேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர், நீலகண்டனை சரமாரியாக தாக்கினர். மேலும், சம்பவத்தை அறிந்த பொலிசார், கலாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நீலகண்டனிடம் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியா ஓமந்தையில் பட்டா ரக வாகனம் ஒன்று இன்று (27.03.2018) மாலை 5 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பேருவலை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சென்ற பட்டா ரக வாகனம் வவுனியா ஓமந்தை பாலத்திற்கு அருகே ரயர் வெடித்து சாரதியின் கட்டுப்பாட்டை மீறி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
2017ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 969 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த பக்த அடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகியாள் அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்று வரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது தீபத்தில் திருவுருமாகத் தோன்றி அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்த அம்மனின் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின் போது ஒவ்வொரு விதமாக அம்மனின் அற்புதக் காட்சிகள் தென்படுவதுடன் அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் புடைசூழ்ந்து வந்து கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று 30-03-2018 அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளம் ஊடாக ஏதாவது ஒரு தகவலை பரிமாற்றி கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல என சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்க தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
இன்று 3 பிள்ளைகளின் கல்வி உரிமையை இந்த அரசாங்கம் இழக்க செய்துள்ளது. பேஸ்புக்கில் ஏதோ ஒன்றை பகிர்ந்தமையினால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்திலேயே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடையவர்கள் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. மின்னஞ்சல் ஒன்றை பகிர்வது இலங்கை சட்டத்தில் தவறு அல்ல.
ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுறுவிய மாணவன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஏன் இந்த இரட்டை நடைமுறை? சமமான நீதி எங்கே?
அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் மனித உரிமையை மீறினால் அமைதியாக இருக்க வேண்டாம். அந்த நேரத்திலேயே சத்தமிடுங்கள். முடிந்தால் அதனை காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிடுங்கள். பொலிஸ் அதிகாரி யாரையாவது தாக்கினால் அதனை பயமின்றி காணொளியாக பதிவிட்டு இணையத்தளத்தில் பதிவேற்றுங்கள்.
அதற்கு எதிராக யாரையும் கைது செய்ய முடியாது. மதிய நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றனர். கிராண்ட்பாஸ் பகுதியில் தலையை கொண்டு வந்து போடுகின்றார்கள். இவ்வாறான தவறுகள் செய்ய முடியும். இவற்றிற்கு விசேட நீதிமன்றங்கள் கிடையாது. அப்படி என்றால் இது தான் நீதியான சட்டமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அபுதாபியில் இருந்து இலங்கை வந்த பெண்ணே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்ல பிரதேச ஹோட்டலின் சமையல்காரர் ஒருவர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரினால் ஓட்டி சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்திய பெண், அதே முச்சக்கர வண்டிக்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து தப்பிய பெண் ஹோட்டலுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கிருந்து மேலும் சில வெளிநாட்டவர்களுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளார்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளையை சேர்ந்த 28 வயதுடைய ஒருவராகும். ஹோட்டலுக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை அனுமதியின்றி கொண்டு சென்று இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையில் கணவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று உணவருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட புடவை அணிந்திருந்ததாகக் கூறி பெண் ஒருவருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத குறித்த பெண் அதிர்ச்சியடைந்தார். இந்தியாவில் இருந்து வாங்கி வந்த புடவை ஒன்றை அணிந்து தனது கணவருடன் வெள்ளவத்தையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர் ஒருவரின் உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற தமிழ் தம்பதிகளை கடை உரிமையாளர் சற்று வித்தியாசமாக பார்த்துள்ளார். இதைச் சற்றும் கணக்கில் கொள்ளாமல் உள்ளே சென்று அவர்கள் உணவு உட்கொண்டுள்ளனர்.
இதன்போது திடீரென பொலிஸார் அந்த உணவகத்துக்கு வந்துள்ளனர். கடை உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அங்கு வந்துள்ளனர்.
உடனடியாகப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த பெண்ணை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.
நடப்பது ஒன்றும் அறியாமல் அதிர்ச்சிக்குள்ளாகிய கணவர் ஏன் எனது மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கின்றீர்கள் என பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு உங்களின் மனைவி அணிந்திருக்கும் புடவை தான் என பொலிஸார் கூறியுள்ளனர்.
புடவையா? புடவை அணிந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை எனக் கணவர் கேட்டுள்ளார். புடவை அணிவதால் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால் உங்கள் மனைவி அணிந்திருக்கும் புடவையில் எமது புத்த பெருமானின் படங்கள் உள்ளன. இந்த செயல் மதத்தை நிந்திக்கும் செயலாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போதே தனது மனைவி அணிந்திருந்த புடவையை சற்று உற்று நோக்கியுள்ளார் கணவர். ஆனால் பொலிஸார் கூறிய வகையில் புத்த பெருமானின் புகைப்படம் அதில் இருக்கவில்லை.
அந்த புடவையில் பொம்மை படமே காணப்பட்டுள்ளது. அந்த படம் சற்று புத்த பெருமானை போன்று தென்பட்டுள்ளது.
எனினும் பொலிஸார் குறித்த பெண்ணை வெள்வத்தை பொலிஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று புடவையை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர் கணவர் வீட்டுக்கு சென்று வேறு ஒரு உடையை எடுத்து வந்து தனது மனைவியிடம் கொடுத்து உடையை மாற்றுமாறு கோரியுள்ளார்.
பொலிஸ் நிலையத்தினுள் வைத்தே உடையை மாற்றிய பின்னர் புடவையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் உடை அணிந்தார் என குற்றம் சுமத்தி நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தான் மதத்தை நிந்திக்கும் வகையில் செயற்படவில்லை. நான் அனைத்து மதத்தையும் மதிப்பவள். இலங்கையில் இவ்வாறான புடவைகளை அணியக் கூடாது எனத் தனக்கு தெரியாது.
எனவே தனக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என குறித்த பெண் கூறியுள்ளார்.
எனினும் இதனைக் கேட்க மறுத்த பொலிஸார் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வவுனியா பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அக் கிராம மக்கள் கடந்த 23ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்ழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த இரு அரச உத்தியோகத்தர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிராம மக்களை பிளவுபடுத்தி மக்களை திசை திருப்புவது, பெண்களை அவமரியாதையாக நடத்துதல் அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல், பொது நோக்கு மண்டபத்தில் அவர்களுக்கு என அலுவலகம் இருந்தும் வீதியோரங்களில் அலுவலக நேரம் முடிந்த பின்பும் கடமையாற்றுவது, எவ்வளவோ வறிய மக்கள் கிராமத்தில் இருந்தும் அவர்களுக்கு இசைவானவர்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகளையும் உதவித்திட்டங்களையும் வழங்குவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டிய சமயத்திலும் பிரதேச செயலாளர் போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நிலவரம் கைமீறிப் போன சந்தர்ப்பத்தில் வீதியில் கூட்டம் போட்ட சந்தர்ப்பத்தில் (அலுவலக நேரம் முடிந்த பின்னர்) சனசமூக நிலையம் உள்ளது அங்கு கூட்டத்தினை கூட்டுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கிராம சேவையாளர் அயலில் உள்ள முஸ்ஸிம் இனத்தவர்களை (கிட்டத்தட்ட 20 நபர்களை ) தொலைபேசியில் அழைத்து பாரிய கலவரத்தினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமை ஆணைக்குழு அக்கிராமத்தினை மையப்படுத்தும் உளுக்குளம் பொலிஸ் நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ் விடயங்கள் தொடர்பாக வினவியிருந்தோம்.
இது தொடர்பில் நாளைய தினம்(28.03) மாலை 3 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன, குறித்த குற்றச்சாட்டுக்குரிய கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அவர்களுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்ட இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உதவி செய்துள்ளார்.
அநாதரவாக கைவிப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி சந்தியின் தெருவோரத்தில் வசித்து வரும் இளைஞருடன் குறித்த பெண் உரையாடியுள்ளார்.
குறித்த இளைஞன் அனைவராலும் ஒதுக்கப்பட்ட நிலையில், கண்டுகொள்ளாத தன்மை காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இளைஞனுடன் பேசும் வெளிநாட்டுப் பெண், உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கியதுடன், அவருடன் அருகில் இருந்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வெளிநாட்டு பெண்ணின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள மக்களின் இயலாமை குறித்து வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கம்பஹா கனேமுல்ல குடா பெல்லன ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு முகமூடி அணிந்துகொண்டு நேற்று திங்கட்கிழமை கம்பஹா வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளார்.
தென்னிலங்கையில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை மாணவி ஒருவர் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் அதனால் அவரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பாடசாலை நிர்வாக அதிகாரிகள் தடைவிதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட பாடசலை அதிபரை அழைத்து, மாணவியை மீண்டும் பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.
எனினும் மீண்டும் அதே குற்றச்சாட்டு குறித்த மாணவி மீது சுமத்தப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி இந்த வருடம் நடைபெறவுள்ள ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதோடு ஒவ்வொரு வருடமும் தவணைப் பரீட்சைகளில் முதலாவது இடத்தையே வகித்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் எயிட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்து புறக்கணிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து தலையீடு செய்த மனித உரிமை ஆர்வலர்கள் கல்வியமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவனுக்கு கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அவருக்கான சகலவித நலன்திட்டங்களும் வழங்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27.03) 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இன்று 75 மில்லி லீற்றர் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடுமையான காற்று வீசக்கூடும். இடியினால் ஏற்படும் அபாயங்களை குறைத்துக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையூடாக காங்கேசன்துறை வரையான கரையோர பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
ஏனைய கரையோர பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச்சூழவுள்ள கடல் கரையோர பிரதேசங்களில் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி காற்று வீசும்.
காலியில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் காற்றின் வேகம் 30- 40 கிலோமீற்றர் வரை வீசக்கூடும்.
ஏனைய பிரசேதங்களில் 20- 30 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் காணப்படக்கூடும்.
இடியின் போது குறித்த பிரதேசங்களில் கடுமையான காற்று வீசுவதுடன் கடல் அலையின் வேகமும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
வவுனியா இரண்டாம் குறுக்கு தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் நேற்று (26.03.2018) இரவு கண்ணாடியுடைத்து திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை அச்சுருத்தும் வகையில் அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து ஏன் புகைப்படம் எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் கேட்டபோது தலைமைக் காரியாலயத்தினால் யார் வந்தது என கேட்டார்கள் அதனால் புகைப்படம் எடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் தெரிவிக்கையில்..
நான் அங்கு சென்று நடந்தவற்றை வினவிய போது அவர் தற்போது புகைப்படம் எடுக்க முடியாது எனத் தெரிவித்தார். இதனையடுத்து நான் வெளியேற முற்பட்ட சமயத்திலிலேயே என்னை புகைப்படம் எடுத்தார்.
என்னை நான் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தியிருந்தேன். சந்தேகம் இருந்தால் எனது அடையாள அட்டையினை காண்பிக்குமாறு கேட்டிருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடு என்னை அச்சுருத்தும் வகையில் அமைந்துள்ளது எனத்தெரிவித்தார்.