திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளாகியவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திம்புள்ள, பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணம் எனவும், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் கிறிஸ்தவ தம்பதியரை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் அருகே அமைந்துள்ள சக் என்ற கிராமத்தில் செங்கல் சூளை ஒன்றில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.
குறித்த சூளையின் அருகே இந்த தம்பதியர், தங்களது 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கூலி பாக்கியை கேட்டு அந்த சூளை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி கூலி பாக்கியை தராவிட்டால் வேலையை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் சஹ்ஜாத் மசி கூறியுள்ளார்.
ஆனால் வேலையை விட்டு வெளியே போக வேண்டும் என்றால் தமக்கு 5 லட்சம் ரூபாயை தந்து விட்டுதான் செல்ல முடியும் என்று சூளையின் உரிமையாளர் மிரட்டியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சஹ்ஜாத் மசி குரானை அவமதித்ததாக கூறி அப்பகுதியில் தகவல் பரவியது. இதைக் கேட்டு கொதித்தெழுந்த அப்பகுதி மக்கள் சஹ்ஜாத் மசியின் குடியிருப்புக்குள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர்.
மேலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் அந்த தம்பதியர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50 பேரை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அவர்களில் 5 பேருக்கு கடந்த 2016-ம் ஆண்டில் மரண தண்டனையும், மேலும் 10 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள 20 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து லாகூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் உலகில் உள்ள 30 சதவீதம் இணையதளங்களை அனுமதியின்றி வேவு பார்க்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வினை ஜேர்மனியைச் சேர்ந்த Cliqz எனும் நிறுவனம் நடத்தியுள்ளது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களைப் பற்றியும் அவற்றைப் பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி அவர்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது
பேஸ்புக்கில் தகவல் திருட்டு நடபேற்றதால் அதற்கு எதிராக #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ள நிலையில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியகியுள்ளது.
நாம் பேஸ்புக் கணக்கை வேண்டாம் என டெலீட் செய்தாலும் அந்த கணக்கை வைத்திருந்தவரையும்
அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவுபார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் விடயத்தை அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
முக்கியமான தகவலாக பெரும்பான்மை பயனர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இன்டர்நெட் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடுகின்றன என்பதை அந்த அய்வு உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் தொலைக்காட்சியில் செய்தியை தொகுத்து வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில், திருநங்கைகள் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக் கொள்ள மற்றும் பாலின அடையாளத்தை முடிவு செய்து கொள்ளும் அதிகாரத்தை வழங்கும் மசோதா ஒன்றை சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை திருநங்கை ஒருவர் முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார்.
மாவியா மாலிக் எனப் பெயரிடப்பட்ட திருநங்கை பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் Kohenoor News என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்துள்ளார்.
இதனிடைய வரலாற்றில் முதன் முறையாக செய்தியை தொகுத்து வழங்கிய மாவியா மாலிக்கிற்கு ஏராளமானோர் சமூக வளைத்தளங்களில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில், எங்கள் வீட்டுள் மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் சுமார் 16 இளம்பெண்கள் கலந்துகொண்டு ஆர்யாவின் மனதை கவர வேண்டும்.
அதில் தனது மனதுக்கு பிடித்த பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்வார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்யா மற்றும் நிகழ்ச்சி குழுவினர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் படப்பிடிப்புகள் யாழ்ப்பாணத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் நூலகத்தில் நடைபெற்று வந்தது.
இந்த படப்பிடிப்பால், நூலகத்தின் அமைதியை கெடுத்துவிட்டதாகவும், நூலகத்திற்கு வெளியே படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, உள்ளே சென்று நடத்துகிறார்கள்.
எனவே, இந்த படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, வேறு இடத்தில் நடத்தலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய வணிக வளாக தீ விபத்தின்போது தப்புவதற்காக ஜன்னல் வழியாக குதித்த Sergei Moskalenko(11) என்னும் சிறுவன் கோமாவில் உள்ளான்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செய்தியாக அவனுடைய பெற்றோர், சகோதரி உட்பட நான்கு பேர் தீ விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நேற்று ரஷ்யாவின் Kemerovo நகரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளில் ஒன்று லைட்டர் ஒன்றை வைத்திருந்ததாகவும், trampoline ஒன்று தீப்பிடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று விடுமுறை தினமாதலால் பல குழந்தைகளும் பெற்றோரும் வணிக வளாகத்திற்கு வந்திருந்தனர். இதனால் இறந்தவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. இதுவரை 64 பேராவது உயிரிழந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் Sergei Moskalenko என்னும் சிறுவனும் ஒருவன்.
அவன் தீயிலிருந்து தப்புவதற்காக 40 அடி உயரத்திலிருந்து ஜன்னல் வழியாகக் குதித்தான். அவனைக் காப்பாற்றும்படி தீயணைப்பு வீரர்கள் போர்வை ஒன்றை பிடித்துக் கொண்டு நின்றார்கள்.
ஆனால் அந்த சிறுவன் கீழே விழும்போது நேரடியாகக் கீழே விழாமல் ஒரு தடுப்பில் மோதி கீழே விழுந்ததால் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் கோமா நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்தில் அவனது மொத்தக் குடும்பமும் இறந்து போனதால அவனது பாட்டிகள் இருவருமே அவனைப் பார்த்துக் கொள்கின்றனர்.
இன்னும் பல குழந்தைகளைக் காணாததால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் தனது மகள் தாழ்ந்த சாதி நபரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருந்ததால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தந்தை கோபம் கொண்டு திருமணம் நடப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக மகளை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிரா என்ற பெண்ணும், இராணுவ வீரரான பிரிஜேஷ் என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
மணமகன் தரப்பில் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாலும், மணமகளின் தந்தை வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.
தந்தை எதிர்த்தாலும் பரவாயில்லை, நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் முடிவு செய்தனர், திருமணக்கனவுகளுடன் கேரளா வந்த பிரிஜேஷ் தற்போது, மண்ணுக்குள் புதைந்து போன காதலை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்.
இறக்கை இன்றி வானில் பறக்கும் அளவிற்கு, மகிழ்ச்சியாக இருந்த காதல் ஜோடி வாழ்க்கையில், சாதி எனும் காலன் நுழைந்து அவர்களின் கனவை சிதைத்துவிட்டார்.
தனது காதலியின் பிரிவை தாங்கமுடியாமல் பிரிஜேஷ் கதறுவது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைக்கிறது.
மருத்துவமனையில், ஆதிரா அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை அறிந்து அங்கு சென்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அவர், அங்கு பார்த்தது ஆதிராவை அல்லது அவளது சடலத்தை. அப்பவே, தனது அப்பாவின் வீட்டிற்கு போகமாட்டேன் என்று சொன்னாள். நான் தான் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன், நானே அவளை கொன்னுட்டேனே என கதறி அழுதுள்ளார்.
ஆதிராவின் மரணத்தால், பிரிஜேஷ் உணவு சாப்பிடாமல், வாழ்க்கையை வெறுத்த நிலையில் இருக்கிறார்.
ஒடிஷாவில் திருமண பரிசை திறந்தபோது குண்டு வெடித்ததில், மணமகன் மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை அந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தெரியவரவில்லை.
பிப்ரவரி 18ஆம் திகதியன்று சௌமியா ஷேகர் என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு முடிந்த ஒருசில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு திருமண பரிசு வந்திருந்தது.
ராய்ப்பூரில் இருக்கும் ஷர்மா என்பவரால் அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்துள்ளது.
அதனை திறந்தவுடனேயே குண்டு வெடித்துள்ளது, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாஹூ மற்றும் அவரது பாட்டி ஜெமமணி சாஹூ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
ரீமா தீக்காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். புதுப்பெண்ணாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்க வேண்டியவர், இன்று தனது சிதைந்துபோன வாழ்க்கை குறித்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்.
சம்பவம் நடைபெற்று 1 மாதம் ஆகியும், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
நாங்கள் மிகவும் சாதாரணமான மனிதர்கள். எங்களுக்கு எதிரிகள் யாருமில்லை. எனது மகளுக்கோ அல்லது மருமகனுக்கோ எதிரிகள் யாருமில்லை. இதை யார் செய்திருப்பார்கள் என்று என்னால் சந்தேகிக்க முடியவில்லை” என்று ரீமாவின் தந்தை கூறுகிறார்.
இதில் பயன்படுத்தப்பட்ட குண்டு எவ்வளவு நுட்பமானது என்பதை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
க்ருடு குண்டாக(Crude bomb) கருதப்படும் இது சணலினால் சுற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதுதான் வெடிப்பிற்கு பிறகு வெள்ளை நிற புகையை வெளியேற்றியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
முன்னாள் காதலர்கள் எவராவது இதை செய்திருப்பார்களா? சொத்து பிரச்சனையின் காரணமாக இது நடந்திருக்குமா?
ஆறு வருடத்திற்கு முன்பு ரீமா பள்ளியில் படித்துக்கொண்டிருபோது தொந்தரவு செய்த சக மாணவருக்கு இதில் தொடர்பிருக்குமா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் அஸ்வினி(19).
அவரை அழகேசன் என்ற நபர் கடந்த 9-ஆம் திகதியன்று கல்லூரி வாசலில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர கொலை சம்பவத்தை தொடர்ந்து அழகேசன் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்த அழகேசன், நேற்றிரவு லுங்கியை கிழித்துக் கொண்டு இருந்த போது சிறைக்காவலர்கள் கண்களில் சிக்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பொலிசார், ஏன் லுங்கியை கிழிக்கிறாய்? என அழகேசனிடம் கேட்டதற்கு அவர் மவுனமாக இருந்ததால் தற்கொலை முயற்சியா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே புழல் தான் சிறையில் நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைதாகியிருந்த ராம்குமார், மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கணவர் மறைவால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, சொத்துக்காக உறவினர்கள் போடும் சண்டை கடும் அதிருப்தியை ஏற்படுத்தவே மிகுந்த கவலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடரஜன் இறந்த பின்னர், அவரின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜன் உறவினர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் இருந்து 15 நாட்கள் பிணையில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து தனது கணவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை அவர் முன்னின்று நடத்தி வருகிறார்
இந்நிலையில், நடராஜனுக்கு தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பல சொத்துக்கள் இருக்கின்றன. அவைகளை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஏற்பட்ட போட்டி மோதலாக மாறியுள்ளது.
இதனால் எரிச்சல் அடைந்த சசிகலா பிணை முடிவதற்கு முன்னரே சிறைக்கு சென்றுவிடும் முடிவில் உள்ளாராம்.
சசிகலா கணவர் நடராஜனுக்கு தமிழகம் முழுதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. தற்போது அவர் மரணமடைந்து விட்டதால், அனைத்து சொத்துக்களும் சசிகலாவிற்கு வர வேண்டும் என்பதுதான் சட்டவிதி. ஆனால், இதற்கு நடராஜனின் உடன் பிறந்தோர் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.
ஆனால், இதற்கு நடராஜனின் சகோதரர்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில் சசிகலா அவரின் குடும்பத்தினரை மட்டுமே வளர்த்துவிட்டார், நமக்கு எதுவும் செய்யவில்லை என்கிற கோபம் ஏற்கனவே நடராஜன் உடன்பிறந்தோர் குடும்பத்தினருக்கு இருப்பதாக தெரிகிறது.
அதனால் நடராஜன் வாங்கியுள்ள சொத்துக்களை சசிகலா தரப்பிற்கு கொடுக்க மாட்டோம் என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நடராசனுக்கு மைத்துனர் என்கிற முறையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனை எந்த சடங்கும் செய்ய விடாமல் நடராஜன் குடும்பத்தினரே செய்து விட்டார்கள்.
ஏனெனில், கொள்ளி வைப்பவருக்கே சொத்துக்கள் சொந்தம், அதை நடராஜனின் சகோதரர் மகனே செய்து விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா, எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். நான் பிணை முடியும் முன்பே சிறைக்கு சென்று விடுகிறேன் என கோபாமாக பேசியுள்ளார்.
பிணை முடியும் முன்பே சிறைக்கு சென்று விடுகிறேன் என்று சசிகலா கூறியுள்ளது மன்னார்குடி குடும்ப உறவினர்களிடயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்து ஒருவர் வவுனியா வைத்திய சாலையிலும் இன்னுமொருவர் கொழும்பு தேசிய வைத்திய சாலையிலும் அனுமதிக்க பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
செட்டிகுளம் பிரதேசத்துக்கு உட்பட்ட வீரபுரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தமையால் இருவரும் சில மாதங்களாக பிரிந்து இருந்ததுடன் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் மதியம் குறித்த பெண் தனது சிறிய தாய் வீட்டில் இருந்ததுடன் அங்கு சென்ற கணவன் அவரை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த பெண்ணின் உறவினர் ஒருவரும் பெண்ணின் சிறிய தாயும் தடுப்பதற்காக குறுக்கே சென்ற சமயம் அவர்கள் இருவர் மேலும் வெட்டு காயம் ஏற்பட்டதுடன் சிறிய தாயின் மணிக்கட்டு பகுதி முற்று முழுதாக துண்டிக்கப்பட்டதுடன் துண்டிக்க பட்ட பகுதியுடன் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு உடனடியாக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டார்.
குறித்த சம்பவத்தில் 33 வயதுடைய பெண்ணே கைப் பகுதி துண்டிக்க பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் 45 வயதுடைய நபா் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாா் ஒருவரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சகோதரியின் கண்முன்னே தங்கை பலியானதால், அவர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் அஞ்சுகம் பகுதியைச் சேர்ந்தவர் சியாம்குமார். சொந்தமாக தொழில் செய்து வரும் இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ(22) மற்றும் ஜானவி(16) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள ஜானவி நேற்று மதியம் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஜானவி பின் பக்கம் உட்கார, ஜெயஸ்ரீ வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக லொறி ஒன்று அவர்களை கடக்க முற்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ஜெயஸ்ரீயும், ஜானவியும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதால், அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து, லாரியின் அடியில் சிக்கினர்.
அப்போது லொறியின் பின்பக்க சக்கரம் ஜானவி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயஸ்ரீ காயங்களுடன் தப்பினார். தன் கண் முன்னே தங்கை ஜானவி பலியானதைக் கண்டு, அக்காள் ஜெயஸ்ரீ கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயஸ்ரீயும், ஜானவியும் கீழே விழ காரணமாக மோடார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் யார் எனத் தெரியவில்லை எனவும் லொறியின் ஓட்டுனரும் தப்பி ஓடிவிட்டதால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில், அடுத்த நாள் திருமணம் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்ணை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொயிலாண்டியை சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான் இவர் உத்தர பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறார்.
மலப்புறம் அருகிலுள்ள பூவதி கண்டியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ஆதிரா. மஞ்சரி பகுதியில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பிரிஜேஷ் மற்றும் ஆதிரா இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆதிராவை தாம் காதலிப்பது தொடர்பாக பிரிஜேஷ் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் ஆதிரா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் எதிர்த்த குடும்பத்தினர், பின்னர் பிரிஜேஷின் காதலை புரிந்துகொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆதிராவின் வீட்டில் பூகம்பவே வெடித்தது. ஆதிராவின் காதல் அவரது தந்தைக்கு தெரிய வரவும், உடனே அவர் தமது மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த நிலையில் ஆதிரா தமது காதலை தெரிவிக்க, ஒட்டுமொத்த குடும்பவும் கொந்தளித்துள்ளது.
மேலும் ஆதிராவின் தந்தை ராஜன், பிரிஜேஷை அழைத்து மிரட்டவும் செய்துள்ளார். இருப்பினும் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார் பிரிஜேஷ்.
இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் ஆதிரா வீட்டை விட்டு வெளியேறி தனது தோழி ஒருவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜன் உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தமது மகளை பிரிஜேஷ் கடத்தி சென்றுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஒருவாரம் கடந்த நிலையில் திடீரென்று ராஜன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறி பொலிசாரிடம் இருந்து பிரிஜேஷுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரிஜேஷும், தோழியின் வீட்டில் இருந்து ஆதிராவும் கொயிலாண்டி வந்துள்ளனர்.
5 நாட்களில் திருமணம் என இருதரப்பினரும் பேசி முடிவெடுத்துள்ளனர். திருமணத்திற்கென தாலி, நகைகள், துணிகள் என அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருந்தார் பிரிஜேஷ்.
திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் ஆதிராவிடம் இருந்து பிரிஜேஷுக்கு அழைப்பு வந்துள்ளது. தமது தந்தை மிரட்டுவதாகவும், திருமணம் நடக்காது எனவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
23 ஆம் திகதி மாலையில் பிரிஜேஷுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஆதிராவுக்கு சின்னதாக விபத்து நேர்ந்துள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தெரியவந்தது.
பதறியடித்து மருத்துவமனை சென்ற பிரிஜேஷுக்கு கண்ட காட்சிகள் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தந்தையுடன் நடந்த வாக்குவாதத்தில் ஆதிரா மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ஆதிராவின் தந்தை மது போதையில் கத்தியால் சரமாரிடாக ஆதிராவை தாக்கியுள்ளார்.
இதில் சம்பவயிடத்திலேயே 21 வயது ஆதிரா துடிதுடிக்க இறந்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆதிராவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்
மத்தியபிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் பணியில் இருந்த போது நடைபெற்ற தாக்குதலால் உடல்நிலை மோசமடைந்தும் போதிய நிதியுதவி அரசாங்கத்தால் இன்றுவரை வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மொரேனா பகுதியைச் சேர்ந்த மனோஜ் தோமர் என்பவர், மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சண்டிகர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலில் மனோஜ்ஜின் வயிற்றில் 7 குண்டுகள் பாய்ந்தன.
வயிற்றில் இருந்த குண்டுகள் வெளியில் எடுக்கப்பட்டாலும், தோமரின் வயிற்றுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் பெருங்குடல் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகிறார்.
எனது ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. நாட்டுக்காக 16 ஆண்டுகள் சேவை செய்த எனக்கே இந்த நிலைமை என்றால் என்ன செய்வது என தோமர் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் தன் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் தருவதாக கூறியிருந்தாலும், அது எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. தனக்கு நிதியுதவி கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு பின்புறமாகவும் செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் பௌத்த கட்டடக்கலையை பிரதிபலித்து முப்படையினரின் அனுசரணையில் சர்வமதத்தலம் ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த 17.03.2018 அன்று சர்வமதத்தலத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கான குழிகள் வெட்டப்பட்டிருந்தன . இதனை ஊடங்கங்கள் வெளிக்கொண்டமையினையடுத்து வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடி தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இவ்வாறான வழிபாட்டு தலத்தினை அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்ததுடன் அவ்வாறு அமைக்க வேண்டிய தேவையேற்படின் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடுவோம் என வேண்டுகொள் விடுத்தார். இதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (26.03.2018) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமதத்தலம் தேவையா? என வினாவினை எழுப்பினர். இதன் போது சபையில் இருந்த அனைத்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கேள்வி எழுப்பினர்கள் .
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமதத்தலம் தேவையா என வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினாவிய போது நாங்கள் பலருடன் கலந்துரையாடியே சர்வமதத்தலம் கட்டுவதற்குறிய தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தோம் . அது தேவையில்லை என்றால் அந்த திட்டத்தினை விடுவதாக தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து முதலமைச்சர் இத் திட்டத்தினை கைவிடுமாறு தீர்மானத்தினை தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்டத்திற்கு 11000 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 7500 வீடுகள் தேவை என பிரதேச செயலாளர்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வா.கிருபாசுதன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் அபிவிருத்திகுழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா மாவட்டததிற்கான வீட்டுத்திட்ட தேவைகள் அதிகமாக காணப்படுகின்றன. இவ்விடயங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சு தேசிய நல்லிணக்க அமைச்சு என்பவற்றுக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் 50000 வீட்டுத்திட்டம் தொடர்பாக கேள்விப்பத்திரம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஒப்பந்தக்காரர்கள் இவ்விடயத்திற்கு பத்திரத்தினை வழங்கியிருந்தனர். அவை சரி வந்ததும் அனைத்து பிரதேசத்தில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கும் என தெரிவித்தார்