தமிழகத்தில் ஹெல்மட் போடாத காரணத்தினால் தம்பதியினர் சென்ற இரு சக்கர வாகனத்தை பொலிசார் எட்டி உதைத்தில் 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மனைவியை இழந்த ராஜா என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் பொலிசார் எட்டி உதைத்துவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நானும் என் மனைவி உஷாவும் துவாக்குடி டோல் பிளாசா அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு ஆய்வாளர் காமராஜ் உட்பட பொலிசார் பலர் அங்கு நின்று கொண்டு ஹெல்மட் போடாதவர்களை வழிமறித்துக் கொண்டிருந்தனர்.
அதில் இருந்த ஒரு பொலிசார் எங்களை வழிமறித்தார். நான் வண்டியை நிறுத்துவதற்குள் அந்த பொலிசார் என் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதனால் நான் அவரிடம் ஏன் ஒரு குற்றவாளியைப் போன்று நடத்துகிறீர்கள் என்று கேட்டேன்.
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கும் எனக்கும் வாக்குவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து கால்மணி நேரம் பொலிசார் எங்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார்.
அதன் பின் என்னிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, மற்ற வண்டிகளைப் பிடிக்கும் வேலைகளைச் செய்ததால், உஷாவை ரோட்டி நிற்கவைப்பது சரியாக இல்லை, என்பதால் நாங்கள் அங்கிருந்து கிளம்பி வந்தோம்.
சிறிது தூரம் சென்ற்போது உஷா, பின்னால் ஒரு பொலிசார் விரட்டிவருவதாகக் கூறினார். அவள் சொல்லி முடிப்பதற்குள், வேகமாக அந்தப் பொலிசார் கோபமாக எட்டி உதைத்தார்.
அடுத்து வண்டி நிறுத்துவதற்குள் மீண்டும் உதைத்தார். இதில் நிலைதடுமாறிய நாங்கள், வண்டியோடு கீழே விழுந்தோம்.
அதில் இருவருக்கும் பலத்த அடி. உஷாவுக்கு தலையில் அடி. அடுத்து அம்புலன்ஸ் வர வைத்து, அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள்.
துவாக்குடி மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையளித்தபோதுதான், உஷா இறந்துவிட்டார் என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பொலிசாருக்கும் குடும்பம் இருக்கும். என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
வவுனியாவில் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொள்வதில்லை என வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா நகரப்பள்ளிவாசலினால் நாளை கடையடைப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நாட்டில் அவரசகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள காரணத்தினாலும் வவுனியாவில் மூவின மக்களும் செறிந்து வசித்து வருவதையும் கருத்திற்கொண்டு வர்த்தகர் சங்க பிரதிநிதிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் கடையடைப்பு மேற்கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வடிகாலமைப்பு சீராக்கப்படாமையால் அந்தப் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதுடன் அதிலிருந்து நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலேயே தற்போது பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. புதிய பேருந்து நிலையத்தின் முதன்மை வாயிலிலுள்ள வடிகால் அமைப்பு சீரான முறையில் தண்ணீர் வடிந்து செல்வதற்கு ஏற்றவகையில் காணப்படவில்லை.
இதனால் அதில் தண்ணீர் தேங்கிக்காணப்படுவதுடன் காலை மற்றும் மாலை வேளைகளில் நுளம்பு அப்பகுதியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து இவற்றைச் சீர் செய்து பயணிகளின் ஆரோக்கியத்துக்கு உதவ வேண்டும் என்று குறித்த பேருந்து நிலையத்துக்கு வந்து தினமும் போக்குவரத்தில் ஈடுபடும் பயனிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஹெல்மெட் போடாத தம்பதியை பொலிசார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே காவல் ஆய்வாளர் கமராஜ் தலைமையில், ஹெல்மெட் அணியாதவரை பிடிக்கும் சோதனையில் பொலிசார் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா மற்றும் உஷா என்ற தம்பதியினர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர்.
இதைக் கண்ட பொலிசார் அவர்களை வழிமறித்துள்ளனர். ஆனால் ராஜா வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் காமராஜ் ஒரு கட்டத்தில் தர்மராஜின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார்.
இதில் தர்மராஜ்-உஷா நிலைதடுமாறி அங்கிருந்த சாலையில் விழுந்துள்ளனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் ஒன்று 3 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்த உஷாவின் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, ஆய்வாளர் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் ஷோபாவிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனா். ஆனால் ஷோபா காவலரை எதுவும் சொல்லாமல் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் வாகனத்தின் மீது கற்களை எறிந்ததுடன், ஆய்வாளரை கைது செய்யும் படி கூறியுள்ளனர். அதன் பின் ஆய்வாளர் காமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கை செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய பன்னாட்டு மகளிர் தினம் நேற்று (08.03.2018) மதியம் 2.00 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது .
பெண்களின் முன்னேற்றத்துக்கான அழுத்தம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா,செட்டிகுளம் பிரதேச செயலாளர்
கே.சிவகரன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி இந்திரா ரூபசிங்க, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர் மற்றும் பொது அமைப்புகள் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் வங்கியின் வவுனியா கிளையிலும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. முகாமையாளர் கு.கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக சட்டத்தரணி கௌதமன் யாழினி, கூட்டுறவு உதவி ஆணையாளர் சுபசிங்கே, வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவு அதிபர் தியாகசோதி யுவராஜா , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்ப பிரிவு அதிபர் மோ.ஞானமதி மற்றும் மக்கள் வங்கி வவுனியா கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி நேற்று (08.02.2018) பாடசாலையின் அதிபர் திரு.நிமலன் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அதிதிகளாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர்களான சத்தியேந்திரன், பொ.தேவராஜா, வி .யேசுதாகர் ஆகியோரும்
நெடுங்கேணி பிரதேச சபையின் செயலாளர் சத்தியசீலன், வவுனியா வடக்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் மாலதி முகுந்தன், கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் வவுனியாவில் முழுக் கதவடைப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்தது
இதற்கு வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகம், வவுனியா வர்த்தக சங்கத்திடம் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், ஆதரவு வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாளைய தினம் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கில் இன்றைய தினம் வவுனியா நகர பள்ளிவாசலுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி செயலிகளை சிலர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறானவர்களை மிகவும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நாளைய தினத்திற்குள் நீக்கிக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வவுனியா நகரப்பள்ளிவாசல் வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.
எனினும் இது தொடர்பாக இன்று (08.03.2018) வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளைய தினம் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா நகரப்பள்ளிவாசலினால் நாளை (09.03.2018)வவுனியாவில் கடையடைப்புப்போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நாட்டில் அவரசகாலச்சட்டம் நடைமுறையிலுள்ள காரணத்தினாலும் வவுனியாவில் மூவின மக்களும் செறிந்து வசித்து வருவதையும் கருத்திற்கொண்டு வர்த்தகர் சங்க பிரதிநிதிகளின் இன்றைய கலந்துரையாடலுக்குப்பின்னர் நாளைய தினம் கடையடைப்பு மேற்கொள்வதில்லை எனத்தீர்மானித்துள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார்.
மகளிர் தினமான இன்று (08.03) வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 378 ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஒரு வருட பூர்த்திக்கும் ஆதரவு தெரிவித்தும் இன்று இப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.
பிள்ளைகள் தான் பெற்றோருக்கு சந்தோசம் பிள்ளைகள் இல்லாது நாங்கள் இந்த வீதியோரத்தில் இருக்கின்றோம். எப்போது பிள்ளைகள் எமக்கு கிடைகின்றார்களோ அப்போது தான் எமக்கு மகளிர் தினம் என்பதாக போராட்டத்தில் இருந்த தாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடன் மகளிரும் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
சாராயக்கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம் ஒன்று இன்று (08.03.2018) வியாழக்கிழமை வவுனியா பிரதேச செயலகம் முன்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு இக்கண்டன போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்ணணி அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
பெண்களின் உடல், உள, சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கும் சாராய பார் மற்றும் கள்ளுக்கடைகளை இழுத்து மூடு என்ற பிரதான கோசத்துடன் இக்கண்டன போராட்டம் நடைபெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உழைக்கும் பெண்களை நிம்மதியாக வாழ விடு, பெண்களின் வாழ்வுரிமையை சிதைக்கும் சாராயக்கடைகளை இழுத்து மூடு, கிராமங்களில் போதைப்பொருட்களை உடனே கட்டுப்படுத்து, பெண்களுக்கு கடன் திட்டமா தற்கொலை திட்டமா? கேரள மாவா பாக்கை தடை செய் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த காணிகள் மற்றும் விவசாய மறுசீர் அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு குருமன்காடு காளி கோவில் வீதியில் வசித்து வரும் 90 வயதுடைய ஓய்வு நிலை ஆசிரியரான இராசம்மா நாகலிங்கம் என்பவர் இன்று (08.03.2018) காலை 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், கிராம சேவையாளர்கள், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஐயூப்கான் அம்ஸாத் அலி என்ற இளைஞரே மின்மாற்றி பொருத்தப்பட்ட மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
புதன்கிழமை நள்ளிரவு வேளையில் இவர் மோட்டார் சைக்கிளில் தனியாக முஹாஜிரீன் கிராமத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த மின்மாற்றிக் கம்பத்துடன் மோதியுள்ளது.
காயமடைந்தவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று வியாழக்கிழமை பகல் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் இளைஞர்கள் ஸ்டைல் ஆக பல பேஷன்களில் தாடி வளர்க்கின்றனர். அதற்காக அங்குள்ள சலூன்களுக்கு சென்று சீரமைத்து கொள்கின்றனர்.
ஆனால் பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பேஷன் ஆக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெஷாவரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது. அதில் இத்தகைய தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. அப்போது பேஷன் ஆக தாடி வளர்க்கவும் அதை முடிதிருத்தும் தொழிலாளர்கள் வெட்டி சீரமைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தலிபான்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையிலும் தற்போது அங்கு இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மீண்டும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதை முடிதிருத்தும் தொழிலாளர் சங்க தலைவர் ஷரீப் காலு மறுத்துள்ளார். பயங்கரவாதிகள் மிரட்டலால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பலவித பேஷன்களில் தாடி வளர்ப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் தான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றார்.
பக்துன் கவா மாகாணத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். தங்கள் சலூன்களில் பேஷன் ஆக தாடி வெட்ட மாட்டோம் என சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.