வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாவது மகோற்சவ பெருவிழாவில்  நேற்று  01.03.2018 வியாழகிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில் தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர். அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள் இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.

 

மனித உடல்களை பதப்படுத்தி வைத்திருக்கும் பயங்கரமான மியூசியம் எங்குள்ளது தெரியுமா?

 
துருக்கி நாட்டில் மிகச்சிறிய குகை ஒன்றில் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை முடிகளின் மியூசியம் என்று அழைக்கிறார்கள்.

இங்கே கிட்டத்தட்ட 16 ஆயிரம் பெண்கள் தலைமுடி, நகம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இவர்களின் பெயர் மற்றும் வாழ்ந்த இடம் கூட எழுதப்பட்டிருக்கிறது.

மியூசியத்தின் பெயரை வைத்தே அங்கேயிருக்கக்கூடிய பொருட்கள் என்னவென்பதை கண்டுபிடித்து விடலாம். மியூசியம் ஆஃப் பேட் ஆர்ட். மோசமான ஓவியம் என்று சொல்லப்பட்டவை எல்லாம் சேகரித்து அதனை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு இரண்டு கிளைகளும் இருக்கிறதாம்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெக்ஜாவிக் என்னும் இடத்தில் இந்த மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கே பல ஆண் உயிரினங்களின் பிறப்புறுப்புக்களை வைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட ஆண் உயிரினங்களின் பிறப்புறுப்புக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு இங்கே வைப்பதற்காக ஓர் ஆண் தன்னுடைய பிறப்புறுப்பை தானமாக அளித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இங்கே 12,000-க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிடுகிறார்களாம்.


இங்கிலாந்து

வடக்கு இங்கிலாந்தில் இந்த லான் மூவர் மியூசியம் இருக்கிறது. இங்கிலாந்தில் இருப்பதிலேயே மிகவும் விசித்திரமான மியூசியம் என்றால் அது இது தான்.

புல் தரையை சமன் செய்ய இந்த கருவியை பயன்படுத்துவார்கள். பல காலங்களாக பல வரலாற்று நாயகர்கள் பயன்படுத்திய லான் மூவர் கூட இங்கே உள்ளதாம்.


மெக்ஸிகோ

இது மெக்ஸிகோவில் இருக்கக்கூடிய அண்டர் வாட்டர் மியூசியம். உலகிலேயே மிகவும் வித்யாசமான மியூசியம் என்று சொல்லலாம்.

ஒரு வகையான களி மண்ணினால் சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றது.


குரோசியா

கொரோசியா என்ற நாட்டில் இந்த மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கே காதல் தோல்வியை குறிக்கும் வகையில் முன்னால் காதலர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்திருக்கிறார்கள்.

சிலர் இதனை வேடிக்கையாக பார்த்தாலும் பலரும் மிகவும் உணர்வுப்பூர்வமாக பார்த்துச் செல்கிறார்களாம்.

இந்த மியூசியத்தில் ஆரம்ப காலம் அதாவது கிமு 2500-லிருந்து தற்போது நவ நாகரிக டாய்லெட்டின் உருமாற்றம் எப்படியிருந்தது என்பதை காண்பிக்கும் வகையில் பலவகையான டாய்லெட்டுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப பயன்பாடு, அந்தப் பகுதியில் பின்பற்றப்பட்ட கலாச்சாரம், போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த மியூசியத்திற்கு சென்று வரலாம்.


நெதர்லாந்து

நெதர்லாந்தின் தலைநகரில் இந்த மியூசியம் அமைந்திருக்கிறது. ஆரம்பகாலத்தில் தங்களது மூதாதையர்கள் எத்தகைய கொடுமைகளை எல்லாம் அனுபவித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.

அதாவது முந்தைய காலத்தில் தண்டனை, டார்ச்சர் எப்படியெல்லாம் கொடுத்தார்கள் என்பதை உணர்த்தும் வகையில் சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள்.


குனாஜுவாட்டோ

உலகிலேயே சற்று பயம் தரக்கூடிய மியூசியம் என்று சொன்னால் அது இது தான். குனாஜுவாட்டோவில் அமைந்திருக்கும் இந்த மியூசித்தில் 1800-களில் வாழ்ந்த மனிதர்களை பதப்படுத்தி மம்மிக்களாக வைத்திருக்கிறார்கள். இங்கே கிட்டத்தட்ட 100 மம்மி உடல்கள் இருக்கின்றதாம்.

மாதவிடாய்க்கு எக்ஸிபிஷனா என்று அனைவரும் பிரம்மிக்கும் வகையில் இருக்கிறது இந்த மியூசியம் ஆஃப் மென்ச்சுரேசன்.மேரி லேண்டில் கடந்த 1995-ம் ஆண்டு இந்த மியூசியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது இதனை ஹேரி ஃபின்லே என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கே ஒரு நாளைக்கு மட்டும் 2,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். மலாக்கா நகரத்தின் அழகை பறைசாற்றும் விதமாக இங்கே மிக விசித்திரமான பொருட்களை வைத்திருக்கிறார்களாம்.

அங்கே பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள், கலாச்சார விடயங்களை இப்போதிருக்கும் இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் இந்த மியூசியத்தை அமைத்திருக்கிறார்கள்.

சர்வதேச மியூசியமான இது க்ரிப்டோஜுவாலஜி மியூசியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மியூசியத்தில் அழிந்த விலங்குகளின் தடையங்கள் மற்றும் அவற்றின் எச்சங்களை வைத்திருக்கிறார்கள்.

ஜப்பான்

இந்த மியூசியம் 1953-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஜாப்பானில் இருக்கும் டோக்கியோவில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கே மண் புழுக்களைப் பற்றிய முழு விவரங்களை கண்டறியும் விதத்தில் அவற்றின் முழுத் தொகுப்பு இங்கே அமைந்திருக்கிறது.

உலகிலேயே அதிகப்படியான ஆணுறைகள் தயாரிப்பது தாய்லாந்தில் தான். அங்கேயே ஆணுறைகள் மியூசியம் ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆணுறைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆணுறைகள் குறித்து மக்களிடையே இருக்கக்கூடிய தவறான எண்ணங்களை போக்கவுமே இதனை ஆரம்பித்திருக்கிறார்களாம்.

இரும்பு வேலிகளுக்கு ஒரு மியூசியம். அந்தப் பக்கம் செல்லக் கூடாது என்பதை நினைவூட்ட வேலி அமைத்துள்ளார்கள். இதனை 1970-களில் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இரும்பு வேலி பற்றிய வரலாறு சொல்வதற்காக என்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2400 விதமான வேலிகள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

39 பெண்களை மணந்து 103 குழந்தைகளுக்கு தந்தையான நபர் : 48 பெண்களை மணக்க திட்டம்!!

கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார்.

இவர் இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். இதோடு யோகனாவுக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர், இவரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர்.

சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை ஷேவ் செய்து கொண்டதில்லை. யோகனா கூறுகையில், நான் என் வருங்கால மனைவிகளை தேடி செல்வதில்லை, கடவுள் தான் என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார்.

கடவுளின் சொல்படி நான் 48 பெண்களை மொத்தம் திருமணம் செய்து கொள்ளவேண்டும், அதை செய்வேன் என கூறியுள்ளார். தான் 280 ஆண்டுகள் வாழ்வேன் என கூறும் யோகனா அதன் பின்னர் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறுகிறார்.

99 வயதில் உலக சாதனை : வயதை வென்ற வீரர்!!

அவுஸ்திரேலியாவில் நடந்த கொமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில், 99 வயது வீரர் ஒருவர் பங்கு பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜோர்ஜ் கோரோன்ஸ். 99 வயதாகும் இவர், குயின்லாந்தில் கொமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில் பங்கு பெற்றார்.

இது, 100 – 104 வயதுடையவர்களுக்கான போட்டியாகும். வரும் ஏப்ரல் மாதத்தில் தனது 100வது வயதை எட்ட உள்ள ஜோர்ஜ், இந்த சோதனை போட்டியில் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் பங்கேற்று 56.12 வினாடிகளில் போட்டி தூரத்தை எட்டினார்.

இதன்மூலம், கடந்த 2014ஆம் ஆண்டு கனடா வீரர், 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை, ஜோர்ஜ் முறியடித்துள்ளார்.

போட்டி முடிந்ததும் ஜோர்ஜ் கூறுகையில், அனைவருக்கும் நன்றி. உங்கள் கைத்தட்டல்கள் என்னை உற்சாகப்படுத்தின. நான் சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியெல்லாம் எடுக்கவில்லை. 80 வயதில் தான் நீச்சலில் ஆர்வம் அதிகரித்தது. ஒன்றைக் கற்றுக்கொள்ள வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளுடன் பிரார்த்தனை செய்த மதபோதகர்கள் : ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில், பாதிரியார்கள் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு பிரார்த்தனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், பென்சில்வேனியா நகரில் உள்ள கிறித்துவ தேவாலயம் ஒன்றில், பாதிரியார் சியான் மூன், துப்பாக்கி இன்றி யாரும் இந்தப் பிரார்த்தனைக்கு வரக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த ஜோடிகள் மற்றும் இதர பாதிரியார்கள் அனைவரும் தலையில் கிரீடமும், கையில் துப்பாக்கியும் ஏந்தியபடி பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

அந்த துப்பாக்கிகள் அனைத்தும் AR-15 ரைஃபிள் வகையை சார்ந்ததாகும். இந்த விடயத்தை அறிந்த பலர், தேவாலயத்தின் வாயிலில் கூடி தங்களது எதிர்ப்புக் கோஷங்களை முழங்கினார்கள்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘இவ்வளவு பேர் ஓரிடத்தில் மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் இருப்பதைப் பார்க்கும்போது, அது சிலருக்கு ஆர்வத்தைத் தூண்டலாம் என்பது கூடவா இவர்கள் யாரும் உணரவில்லை? அன்பே உருவான இறைவனை வழிபடும் தேவாலயத்துக்குள் எதற்கு இந்தத் துப்பாக்கி?’ என தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது குறித்து தேவாலயம் தரப்பில் கூறுகையில், ‘சாத்தானை விரட்டியடிக்கவே இந்தத் துப்பாக்கிப் பிரார்த்தனை. ஒவ்வொருவருக்கும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கினோம்.

இதைக் கொடுத்து, கடையில் இருந்து துப்பாக்கிகளை வாங்கிக் கொண்டனர். பார்ப்பதற்கு பயங்கரமான துப்பாக்கிகளாகத் தெரிந்தாலும், இவை அனைத்தும் குண்டு போடாத துப்பாக்கிகள்.

அதைப் பரிசோதித்த பிறகே தேவாலயத்துக்குள் அனுமதித்தோம். அதனால் எதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளது.

நான்காண்டுகளாக குழந்தைகளை மரப்பெட்டிக்குள் அடைத்து வைத்த பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்!!

 
நான்கு ஆண்டுகளாக மரப்பெட்டி ஒன்றில் வாழ்ந்து வந்த மூன்று குழந்தைகளை மீட்ட பொலிசார் அவர்களுக்கு சரியான உணவளிக்காமல் கொடுமைப்படுத்திய பெற்றோரைக் கைது செய்தனர்.

அமெரிக்காவில் Joshua Tree பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த 20 அடி நீள மரப்பெட்டி ஒன்றை ஆய்வு செய்த பொலிசார் அதற்குள் மூன்று பிள்ளைகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் நான்கு ஆண்டுகளாக அவர்கள் அந்தப் பெட்டிக்குள் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

அவர்களுக்கு சரியான உணவளிக்காமல் அந்தப் பெட்டிக்குள் அவர்களை அடைத்துக் கொடுமைப்படுத்திய அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான Mona Kirk(51) மற்றும் Daniel Panico(73)வை பொலிசார் கைது செய்தனர்.

சுமார் 30 முதல் 40 பூனைகள் சுற்றிக்கொண்டிருந்த அந்த பகுதி குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. அங்கு தண்ணீர் வசதியோ மின்சார வசதியோ இல்லை.

11, 13 மற்றும்14 வயதுடைய அந்தப் பிள்ளைகள் விலங்குகளைப்போல அந்த மரப்பெட்டிக்குள் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வெளி உலகத்துக்கு தெரியாமலே இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொட்டும் பனியில் நடந்தே வேலைக்குச் சென்ற பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியளித்த தொலைக்காட்சி!!

 
பிரித்தானியாவின் Lincoln Country மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸான Kay Mayer, தன் பணியின்மீது கொண்ட காதலால் கொட்டும் பனியிலும் சளைக்காமல் 10 மைல்கள் நடந்தே மருத்துவமனையை அடைந்தார். நடந்து செல்லும்போது அவர் எடுத்த வீடியோ வைரலானது. அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இதற்கிடையில் This Morning என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டபோது பலரது கண்களும் பனித்தன.

திடீரென்று நிகழ்ச்சியை நடத்தும் Phillip Schofield மற்றும் Holly Willoughby இருவரும் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தனர்.

மூன்று நாட்கள் Barcelonaவில் Kay Mayer தனது விடுமுறையைக் கொண்டாடுவதற்கான செலவை தொலைக்காட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்னும் மகிழ்ச்சியான செய்திதான் அது.

அந்த இன்ப அதிர்ச்சியால் Kay Mayer திக்கு முக்காடிப்போனார். நான் எனது வேலையை நேசிக்கிறேன், நான் மட்டுமில்லை பலர் என் போலவே கொட்டும் பனியில் வேலைக்கு வந்திருந்தார்கள் என்று அவர் பணிவுடன் கூறியது இன்னும் பலரை நெகிழச் செய்தது.

கொல்லப்பட்ட முதலையின் வயிற்றில் இருந்த மனித உடல் பாகங்கள்!!

இந்தோனேசியாவில், காணாமல் போன நபர் ஒருவரின் உடல் பாகங்கள், நதிக்கரையில் பிடிபட்ட முதலையின் வயிற்றில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்தோனேசியா நாட்டின், போர்னியோ பகுதியில் பாமாயில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.

அவரின் இருசக்கர வாகனமும், காலணியும் நதிக்கரையோரம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அவரை தேடிய போது குறித்த நபரின் உடல், கைகள் மற்றும் கால்கள் அற்ற நிலையில் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினரின் உதவியுடன் நதிக்கரைப் பகுதியில் நடமாடிய 20 அடி நீள முதலை ஒன்றை, அதிகாரிகள் சுட்டுப் பிடித்துள்ளனர். அதன் பின்னர், முதலையை பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் வயிற்றுக்குள் மனித கை மற்றும் கால்கள் இருந்துள்ளது.

இந்நிலையில், நதியில் இது போல் மேலும் சில முதலைகள் இருக்கலாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன் மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு!!

கனடாவில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 14வயது பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் லாவல்(Laval) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்த Athena Gervais என்னும் 14 வயது மாணவி கடந்த திங்களன்று பிற்பகல் மாயமாகியுள்ளார்.

சரியாக மதிய உணவிற்கு பின் மாணவியை யாரும் பார்த்திடாத நிலையில் மாணவி மாயமானது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிசார் கடந்த மூன்று நாட்களாக மோப்ப நாய், மற்றும் ஹெலிகொப்டர் உதவியுடன் தீவிரமாக தேடிவந்த நிலையில் மாணவி பயின்று வந்த பள்ளிக்கு பின்னால் இருக்கும் நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் இந்த மர்ம மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மையான காரணம் வெளியாகும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவி தன் வீட்டில் மிக மகிழ்ச்சியாக இருந்துள்ளதால் இது நிச்சயம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திடீரென கரையொதுங்கிய சுனாமி முன்னெச்சரிக்கை கருவி!!

 
வாகரை – காயான்கேணி, ஆணைக்கல் கடற்கரையில் ஆழ்கடல் நிலநடுக்கத்தை அளவிடும் சுனாமி முன்னெச்சரிக்கை கருவி திடீரென கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் நிலநடுக்கத்தை அளவிட்டு, அதனை சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்திற்கு தகவல் வழங்கும் மிதக்கும் “வோயா” எனப்படும் குறித்த கருவி நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய ‘வோயா”வில் அன்டனா மற்றும் பல்வேறு உபகரணங்கள் தென்பட்டதாகவும், தற்போது அவற்றில் எந்தவித உபகரணமும் இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை கருவியானது சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் எனவும், இந்த வோயாவை கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இதில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் தொடர்பாக வாகரை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம்.ஹசீர் தெரிவித்தார்.

புதிய வசதியை அறிமுகம் செய்த டுவிட்டர்!!

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்ட டுவிட்டர் புதிய வசதி ஒன்றினை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது.

புக்மார்க் எனும் இவ் வசதியின் ஊடாக பயனர்கள் ஒரு டுவீட்டினை மீண்டும் இலகுவாகவும், விரைவாகவும் பார்க்கக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதாவது மற்றவர்களின் டுவீட்களை புக்மார்க் வசதியின் ஊடாக சேமித்து வைக்க முடியும். பின்னர் விரும்பிய நேரத்தில் திரும்பவும் பார்க்க முடியும்.

இதற்கான வசதியை லைக் அல்லது அன்லைக் செய்யும் பொத்தானுக்கு அருகில் தரப்பட்டுள்ள பொத்தானில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து பயனர்களாலும் பெற்றுக்கொள்ளக்கூடிய இவ் வசதியினை iOS, Android சாதனங்களிலும், Twitter Lite அப்பிளிக்கேஷன் மற்றும் இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மணமகனின் தலை வழுக்கை என கண்டுப்பிடித்த மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

இந்தியாவில் திருமண சடங்கின் போது மணமகனின் தலை வழுக்கை என்பதை பார்த்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் ரவிகுமார். மருத்துவரான இவருக்கு அவர் வசிக்கும் பகுதியிலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ரவிகுமாரை அவரின் வருங்கால மனைவி நேரில் பார்க்காத நிலையில் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே முடிவு செய்தபடி சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ரவிகுமார் தனது தலையில் அவர்கள் குடும்ப வழக்கப்படி தலைபாகை அணிந்திருந்தார்.

அவர் தலைபாகையை கழற்றிய போது மணப்பெண் அதிர்ச்சியடைந்தார். காரணம் அவர் தலை வழுக்கையாக இருந்துள்ளது. இதையடுத்து ரவிகுமாரை திருமணம் செய்ய முடியாது என மறுத்த மணப்பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் திருமணம் ஆகாமல் தனது வீட்டு பகுதிக்கு சென்றால் அவமானம் என கருதிய ரவிகுமார் தனது தந்தையின் மூலம் ஏழை காய்கறி வியாபாரி ஒருவரிடம் பேசி அவர் மகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் : விலை என்ன தெரியுமா?

 
நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் துபாயில் ஏலத்துக்கு வரவுள்ளது.

மறைந்த ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் திரையுலகில் இருந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி பற்றிய பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில், ஓவியம் வரைவதில் அவர் கில்லாடி என தெரியவந்துள்ளது.

அவர் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது இயற்கை காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை ஓவியமாக தீட்டி வைத்துள்ளார். அந்த ஓவியங்களை துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் ஓவியங்களுக்கான விலை பட்டியல் இன்னும் தெரியாத நிலையில் அனைத்தும் அதிக விலைக்கு விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

என்னை மன்னித்து விடுங்கள் : தற்கொலைக்கு முன்னர் மாணவரின் உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் -தங்கம்மாள் தம்பதியின் மகன் விவேகானந்தன். 13 வயதே ஆன விவேகானந்தன், வீட்டருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுவன் பயின்றுவந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அவனை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த குறித்த மாணவன் தன் மழலைத் தன்மை மாறாமல் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

மாணவனின் கடிதத்தில், என்னுடைய சாவுக்கு ஆசிரியர் பிரபாகரன்தான் காரணம் என்றும், மற்றொரு ஆசிரியரான ரவி, என்னுடைய தந்தையிடம் போனில் பேசியபோதே இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். என்னால் எனது தந்தை மற்றும் தாய்க்கு எந்தவொரு அவமானமும் வரக்கூடாது. அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

மேலும், சக மாணவர்களும் விவேகானந்தனுக்கு உறுதுணையாக இல்லாமல் அவர்களும் சேர்ந்து கிண்டல் செய்ததால் தான் மாணவன் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலுக்கு வில்லியான பெண்ணை சினிமா பாணியில் பழிவாங்கிய இளைஞன்!!

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பிறிதொரு பெண்ணின் தலைமுடியை வெட்டிய இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காதல் தொடர்பு முறிய காரணமாக இருந்த பெண் என நினைத்து வேறு பெண்ணின் முடியை வெட்டிய சம்பவம் ஒன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய இளைஞர் ஒருவர் பேருந்துக்குள் சென்று 19 அங்குலம் வரை பெண்ணின் முடியை வெட்டியுள்ளார்.
தனது காதலி கூறிய உருவத்தை போன்ற உருவம் கொண்ட வேறு பெண் ஒருவரு இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

எனினும் இவ்வாறு முடி வெட்டப்பட்ட பெண் தனது காதலி கூறிய பெண் அல்ல என பின்னரே அவர் அறிந்து கொண்டுள்ளார்.

நேற்று முன் தினம் 12.30 மணியளவில் பயாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் முடியை வெட்டிய இளைஞனை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

21 வயதான பெண்ணின் தலை முடியை வெட்டிய இளைஞன் தப்பி ஓடுவதாக பேருந்து சாரதி, பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியிடம், குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பிரதேச மக்களின் ஆதரவுடன் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவரது சட்டை பையில் இருந்து தலைமுடி மற்றும் கத்தரிக்கோலினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பலபிட்டிய பிரதேசத்தின் பிரதான பாடசாலை ஒன்றில் தான் கல்வி கற்பதாகவும், தான் பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டதாகவும், தமது காதல் தொடர்பு குறித்து காதலியின் தாயாரிடம் பெண் ஒருவர் தகவல் வெளியிட்டதாகவும், இதனால் தமது காதல் முறிவுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தாயரிடம் தகவல் வெளியிட்ட பெண்ணின் அடையாளங்களை தனது காதலி கூறியதாகவும், அவரை தான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை எனவும், குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மொரட்டுவைக்கு சென்று திரும்பி வரும் போது காதலி கூறி உருவம் கொண்ட பெண்ணை கண்டதாகவும், அவரை பழிவாங்குவதற்காக அந்த இடத்திலேயே கத்தரிக்கோல் ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எல்பிட்டிய நோக்கி சென்ற பேருந்தில் அவரது முடியை வெட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தனது காதலி கூறிய பெண்ணின் முடியை வெட்டமால் வேறு பெண்ணின் முடியை வெட்டியதாகவும், இளைஞன் தெரிவித்துள்ளார்.

இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுமியை பார்க்க வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!!

 
மெதிரிய பிரதேசத்திலுள்ள சிறுமி ஒருவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த தினுல்யா சனாதி என்ற சிறுமியை ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நேற்று மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இதன்போது குறித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது நலன் விசாரிப்பதற்கும் ஜனாதிபதி மறக்கவில்லை. மிகவும் பரபரபான வேலைகளிலும் மிகவும் சிரித்த முகத்துடன் இந்த சிறுமியிடம் ஜனாதிபதி உரையாடியுள்ளார்.

அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியை பார்ப்பதற்காக மேடைக்கு வந்த சிறுமி ஒருவர் ஜனாதிபதி மடியில் அமர்ந்திருந்து உரையாடிய செய்தி வெளியாகி இருந்தன.

அந்தப் பகுதிக்கு ஜனாதிபதி வருகைத்தந்ததனை அறிந்து கொண்ட தினுல்யா, அவரை பார்ப்பதற்காக தனது தந்தையுடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.