யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(27.02.2018) இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆடுகளைத்திருடி பொலிசாரிடம் விற்பனை செய்வதற்கு முயன்ற மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.02) மூன்று ஆடுகளைத் திருடியவர்களை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர்களிடம் பொலிசார் வியாபாரிகள் போன்று சென்று அவர்கள் திருடிய மூன்று ஆடுகளையும் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையில் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸ் சாஜன் சுமித் தலைமையில் நிஷாம், சானக்க, சரத் ஆகியோர் மேற்கொண்டதுடன் சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஏற்கனவே மாடு திருடிய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று (27.02.2018) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தாயார் இன்று காலை 8 மணியளவில் வேலைக்குச் சென்ற சமயத்தில் வீட்டில் தனிமையில் கலைச்செல்வன் என்ற 28 வயது இளைஞன் இருந்துள்ளார். மீண்டும் தாயார் 12.30 மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அயலவரின் உதவியுடன் சடலம் கீழே இறக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – கிச்சிராபுர பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 14பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசியல் கட்சிகளின் இரண்டு முக்கிய முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்களை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தகவல்கள் குறிப்பிடுகின்ற போதிலும், பொலிஸ்தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரிய அரசு நிகழ்த்திய இராசாயன தாக்குதலில், தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும் ISIS பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அல்கொய்தா தொடர்பு பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் தாக்குதல் நிகழ்த்தி சிரியா ராணுவம் அந்த பகுதிகளை மீட்டு வருகிறது.
அந்தவகையில் சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த இராசாயன தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர் பலர் கொல்லப்பட்டனர்.
அப்போது இராசாயன தாக்குதலில் பாதிப்படைந்த ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தங்கையை காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்கை ஒக்ஸிஜன் கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் அதிகப்படியான இராசாயன தாக்குதலால் அந்த சிறுமி உயிரிழந்தார்.
தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் இளம் தம்பதி ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இது சம்மந்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் பன்சல். இவர் மனைவி டிம்பிள். தம்பதிக்கு ஆயூஸ் எனற மகன் உள்ளான்.
இந்நிலையில் சஞ்சயின் சொத்துக்கள், பணம் மற்றும் காரை யாரோ சிலர் மிரட்டி அவரிடமிருந்து பறித்துள்ளனர் அவர்களிடமிருந்து அதை திரும்ப வாங்க முயன்றும் சஞ்சயால் முடியவில்லை, இதையடுத்து மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் அவரை டிம்பிள் காப்பாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் அந்த நபர்கள் தம்பதிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து சஞ்சயும், டிம்பிளும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
அதற்கு முன்னர் டிம்பிள் ஒரு வீடியோவையும், சஞ்சய் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளனர். அதில் குற்றவாளிகளிமிருந்து பணம், சொத்துக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தால் அதை எங்கள் மகன் ஆயூஸ் பெயரில் எழுதிவிடுங்கள் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சஞ்சயும், டிம்பிளும் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதன் பின்னர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றியுள்ள பொலிசார் வழக்கு தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள்.
சிரியாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை, சிரிய சிறுவன் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில், கடந்த ஒருவாரமாக சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதல்களினால் இதுவரை, 600 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கவுடா பகுதியைச் சேர்ந்த முகமத் நஜிம் என்ற 15 வயது சிறுவன், அரசுப் படைகளின் தாக்குதல்களை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நஜிம் கூறுகையில், ‘என் பெயர் முகமத் நஜிம், எனக்கு 15 வயது ஆகிறது, நான் பஷார் அல் ஆசாத் செய்யும் குற்றங்களை உங்களிடம் கொண்டு வரப் போகிறேன்.
மக்கள், குண்டுவீச்சுகளுக்கு இடையில் பசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இங்கு நடப்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இங்கு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது, நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நாங்கள் இப்பகுதியில் சிரிய அரசையும், ரஷ்யாவையும் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம். இதுதான் எனது கருத்தும், இங்குள்ள குழந்தைகள் கருத்தும். உங்கள் மனசாட்சிக்கே நாங்கள் விட்டுவிட்டோம்.
நாங்கள் அமைதியாக வாழ வேண்டும். நாங்கள் தொடர்ந்து உங்கள் அமைதியால் கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறோம். பஷார் அல் ஆசாத், புதின், கொமைனி எங்களது குழந்தை பருவத்தை கொல்கிறார்கள்.
எங்களை காப்பாற்றுங்கள் ஏற்கனவே மிகுந்த தாமதமாகிவிட்டது’ என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் குழந்தைகள் பலரும், சர்வதேச சமூகத்தினரிடம் எங்களுக்கு உதவுங்கள் என்று உதவி கேட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பிரித்தானியாவில் திருநங்கை ஒருவருக்கு லொட்டரியில் £4 மில்லியன் பணம் பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த பணத்தின் மூலம் பல அழகு சிகிச்சைகள் மேற்கொண்டு அழகாக மாறியுள்ளார்.
ஹல் நகரை சேர்ந்தவர் மெல்லிசா எடி (57), சாதாரண டாக்ஸி ஓட்டுநரான இவருக்கு லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. மெல்லிசா வாங்கிய நேஷனல் லொட்டரி சீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் £4 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மெல்லிசா தன்னை அழகாகவும், இளமையாகவும் மாற்றி கொள்ள முடிவு செய்தார். அதன்படி உடல் தோல்களில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை இதுவரை £30,000 செலவில் மேற்கொண்டுள்ள மெல்லிசா மிக அழகாக மாறியுள்ளார்.
அவரின் பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படத்தை பார்த்தால் இரண்டுக்கும் மிக பெரியளவில் வித்தியாசம் உள்ளது. இந்த விடயம் மெல்லிசாவை விரைவில் மணக்கவிருக்கும் அவரின் காதலர் ரேச்சேல் நேசனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அவர் கூறுகையில், பழைய மெல்லிசாவுக்கும் தற்போது இருக்கும் மெல்லிசாவுக்கு அதிக வித்தியாசம் உள்ளது மகிழ்ச்சிளிக்கிறது என கூறியுள்ளார்.
மெல்லிசா கூறுகையில், எனக்கு எப்போதும் இளமையாகவும், பெண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என ஆசை, என்னுடைய மூக்கு மற்றும் பற்களை மாற்றவும் விரைவில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளேன் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை கொன்று அதன் சடலத்துடன் ஷொப்பிங் சென்ற இளம் தாயாருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்தவர் டியோனா ரோட்ரிக்ஸ். இவரே 4 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை கழிவறையில் வைத்து கொலை செய்து அதன் பின்னர் ஏதும் அறியாதது போன்று மன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் ஷொப்பிங் வளாகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
ஷொப்பிங் சென்றவர் தனது குழந்தையின் சடலத்தையும் தனது கைப்பையில் கூடவே எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் குறித்த ஷொப்பிங் வளாகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றில் சிக்கிய அவரை பொலிசார் விசாரித்தபோது நடந்த சோதனையில், அவரது பையில் இருந்து குழந்தையின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது 21 வயதாகும் டியோனாவுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, குறித்த தீர்ப்பானது தனது வாழ்க்கையை ஒரு நாள் கூட வாழாமல் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு கிடைக்கும் நீதியாக இருக்கட்டும் என நீதிபதி தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட குழந்தையானது டியோனாவின் 3வது பிள்ளையாகும். அவருக்கு 14 வயது இருக்கும்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குளியலறை தொட்டியில் தவறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் துபாய் பொலிசார் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் ஞாயிறு காலை உள்ளூர் நேரப்படி 10.30 மணி அளவில் உடற்கூறு சோதனை மேற்கொள்ளப்படும், அதன் பின்னர் 90 நிமிடங்கள் நீளும் எம்பாமிங் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியானது.
மட்டுமின்றி அன்றைய தினமே மாலை 3 மணி அளவில் உடற்கூறு சோதனைக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டு, அடுத்த 3 மணி நேரத்தில் ஸ்ரீதேவியின் உடலானது இந்தியா கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஞாயிறு முழுவதும் உடற்கூறு சோதனை முடிவடையாத நிலையில், துபாய் பொலிசார் குறித்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
அதில் ஸ்ரீதேவி பிரபலமான நபர் ஆகையால் விரிவான உடற்கூறு சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அதனால் காலதாமதமாகும் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை, உடற்கூறு சோதனை முடிவடைந்து அவர் உயிரிழக்க மதுபோதையில் குளியலறை தொட்டியில் தவறி விழுந்ததே காரணம் என தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவு செய்துள்ள துபாய் பொலிசார் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இது வழக்கமான முடிவு என்றும், இதுபோன்ற விவகாரங்களில் கடைபிட்டிக்கப்படுவது தான் எனவும் துபாய் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்ந்து வருகிறேன் என பாலியல் வன்கொடுமையில் சிக்கி மீண்டு வந்த ஹரிஷ் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீதேவி(54) கடந்த சனிக்கிழமை இரவு மறைந்தார். முதலில் மாரடைப்பு தான் காரணம் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மது போதையில் தவறுதலாக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குழந்தை பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்போது மீண்டு வந்து சமூக சேவைகளை செய்து வரும் ஹரிஷ் ஐயர் ஒரு உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஆமீர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் ஹரிஷ் கலந்துகொண்ட போது, ஸ்ரீதேவி அளித்த இன்ப அதிர்ச்சி குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் தான் வாழ்வதற்கு ஸ்ரீதேவியும் அவர் அளித்த அந்த மன உறுதியும் தான் காரணம் என ஹரிஷ் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஸ்ரீதேவிக்கு என் பெயரை தெரிய வைத்த அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் ஹரிஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையில் இன்று (26.02.2018) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் திட்டியதால் மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குனமாகிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார்.
இந் நிலையில் இன்று மாலை வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். வெளியே சென்றிருந்த தாய் வீடு திரும்பிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகளை பார்த்துள்ளார். எனினும் மகள் இறந்த நிலையிலிலேயே காணப்பட்டுள்ளார். அயலவர்களின் உதவியுடன் சடலத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
தற்போது சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேககம் வெளியிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேத பரிசோதனை அறிக்கை ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழக்கவில்லை எனவும், குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீதேவியின் இரத்த பரிசோதனை அறிக்கையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததும் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மது போதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நடிகை ஸ்ரீதேவி மூச்சுதிணறி உயிரிழந்திருக்கலாம் என டுபாய் நாட்டின் “கல்ஃப் நியூஸ்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக இன்று (26.02) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து வசதியற்ற நான்கு மாணவர்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மாணவர்கள் நான்கு பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர் விக்னா, மாணிக்கம் ஜெகன், பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜெயக்கெனடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘தடைகளை நீக்கினால் எமது சாதனைகளும் சரித்திரம் படைக்கும்’ என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (Seed) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று இறுதி நாள் நிகழ்வானது நேற்று முன்தினம் (24.02) வவுனியா தேக்கவத்தை பொது விளையாட்டு மைதானத்தில் 300 க்கும் மேற்பட்ட விருத்தினர்களின் முன்னிலையில் நிறைவிற்கு வந்தது.
இவ் விளையாட்டு நிகழ்வானது வெறுமனே விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாமல் மாறாக விசேட தேவைக்குட்பட்டவர்களின் உரிமைகள் சார்பான விழிப்புணர்வும் அவர்களின் திறன்களை வெளிகொண்டு வருவதாகவும் அமைந்திருந்தது.
கருத்தோன்றியுள்ள இவ் விளையாட்டு போட்டியை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேட மற்றும் பிரதம அதிதிகளாக வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கமலதாஸ், வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர் கா.உதயராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி கெனடி, ஓய்வு பெற்ற கல்வியற்கல்லூரி பீடாதிபதி சஹாப்தீன், மாவட்ட சமூக சேவை அதிகாரி இராஜசேகர், விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன், பாடசாலை அதிபர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களான ஒகான் மற்றும் வரோட் நிறுவன உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு அங்கத்தவர்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் கொடியேற்றும் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வவுனியா உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் மாவட்ட கொடியினை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராஜாவும் சீட் நிறுவன கொடியினை சீட் நிறுவன இயக்குனர் திருமதி.வாசுகி இராஜேந்திரனும், சீட் – விசேடபாடசாலை கொடியினை இணைப்பாளர் சு.சந்திரகுமாரும், காலச்சக்கர இல்ல கொடியினை மாணவி செல்வி. சுகததாச சஞ்சுலாவும் வண்ணச்சிறகுகள் இல்லக்கொடியினை மாணவன் ரவிக்குமார் – பிரகாஸ் ஆகியோர் ஏற்றி வைத்து கௌரவப்படுத்தி இருந்தனர்.
அத்துடன் இந்த விளையாட்டு நிகழ்வை திறன்பட நடாத்துவதற்கான நடுவர் குழாமை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வழங்கி இருந்தமையும் விசேட அம்சமாகும்.
அத்துடன் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக வாழ்த்துச் செய்தியினை சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி ஜெ.கெனடி வழங்கினார்.
இதில் இயற்கை வளப்பாதுகாப்புடன் பராம்பரிய முறைகள் மற்றும் அனைவரும் ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம் என்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் சாதாரண பாடசாலைகளுக்கு நிகராக நடைபெற்றது என்பது விசேட அம்சமாகும்.