பிரியா வாரியருக்கு விதிக்கப்பட்ட தடை!!

‘ஒரு அடார் லவ்’ படத்தில் இருந்து வெளியான ‘மாணிக்க மலராய பூவி’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பிரியா வாரியருக்கு படத்தின் இயக்குநர் தடை விதித்துள்ளாராம்.

ஓமர் லூலூ இயக்கி வரும் மலையாள படம் ‘ஒரு அடார் லவ்’ இந்த படத்தின் மூலம் நாயகி ஆகி இருப்பவர் பிரியா வாரியர்.
இந்த படத்தின் ஒரு பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் பிரியா வாரியர் கண்ஜாடை காட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.

இதை பார்த்தவர்கள் அனைவருடைய மனதையும் கவர்ந்த பிரியா ஒரு சில நாட்களில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.

இதனால் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு போனிலும், இணைய தளங்களிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து குவிந்துள்ளன.

இந்த நிலையில், அவர் நடித்து வரும் படம் பற்றி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். இதை பார்த்த இயக்குனர் பிரியாவிடம், ‘ஒரு அடார் லவ்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் வரை இனி யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது” என்று தடை விதித்துள்ளார்.

படம் திரைக்கு வரும் முன்பு ஒரு கண் அசைவில் பரபரப்பு ஏற்படுத்திய பிரியா வாரியர் மீது, திரை உலக பிரபலங்களின் பார்வை விழுந்திருக்கிறது. எனவே, தமிழ் படங்களிலும் அவர் கால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முதல் திருநங்கை!!

அமெரிக்காவில் அறுவை சிகிச்சைகள் எதுவும் செய்துகொள்ளாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திருநங்கை ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றார். ஆனால், அக்குழந்தைக்கு வாடகைத் தாய் தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டார்.
எனவே, திருநங்கை தானே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார்.

திருநங்கை ஒருவர் குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க முடியும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பின்னர் இது சாத்தியமாகியுள்ளது.

ஆனாலும் குறித்த திருநங்கைக்கு அறுவை சிகிச்சைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. மவுன்ட் சினாய் பார் டிரான்ஸ்ஜென்டர் எனும் மருத்துவமனையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஹோர்மோனை மாற்றியமைக்கும் மருத்துவ முறைகள் மூலம் திருநங்கைக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்தபடியே மருத்துவர்கள் அவருக்கு இந்த சிகிச்சையை வழங்கியுள்ளனர்.

குழந்தை பிறப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பே இம்மருத்துவ முறை மூலம் பால் சுரக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தற்போது இவர் ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் தாய்ப்பால் குழந்தைக்கு புகட்டி வருகிறார்.

இதன் மூலம் இவர் இன்னும் 6 மாதத்திற்கு பால் கொடுக்க முடியும். அதன் பின் சரியான உணவு முறைகள் மூலம் மேலும் கொடுக்க வழிவகை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

திருநங்கையின் பெயர் வௌியிடப்படவில்லை. அவருக்கு 35 வயதாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் உலகிலேயே தாய்ப்பால் கொடுக்கும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் : ஏற்பட்ட தர்மசங்கடம்!!

ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர்தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார்.

ஆனால் இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், மிகவும் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்துள்ளார் ரகுமான். அப்போது குடும்ப நிலை காரணமாக 10ம் வகுப்பு முடிந்ததுமே வேலைக்கு சென்றுள்ளார், சில நாட்கள் கழித்து 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

அவர் அந்த சமயத்திலும் பள்ளிக்கு சரியாக வராத காரணத்தால், ரகுமான் அம்மாவை அழைத்து அந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் ‘உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் ரோட்டிற்கு செல்லுங்கள். இந்த பள்ளியில் இவனுக்கு இடமில்லை’ என்று கூறி அனுப்பிவிட்டார்களாம், அன்று தன் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

யாழில் சிக்கிய கொள்ளைக் கும்பல்!!

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி, நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பில் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த இருபது தொடக்கம் இருபத்து மூன்று வயதுகளையுடைய குறித்த மூவரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பதினைந்து பவுண் உருமாற்றப்பட்ட பவுண் கட்டிகள் இரண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த கொள்ளைக்கும்பலின் திருட்டு நகைகளைப் பெற்று அதை உரு மாற்றும் வேலை செய்து வந்த கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கனடிய தமிழ் மக்களிடம் உதவி கோரும் பெண்!!

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

அதில் நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் மூவரே முதன்மையானவர்களாக பார்க்கப்படுகின்றனர். கரலைன் மல்ரூனி கிரிஸ்ரீன் எலியட் மற்றும் டக் போட் ஆகியோருக்கு இடையிலேயே போட்டி நிலவுகிறது.

ஜூன் முதற்பகுதியில் நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநில பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமைத் தேர்தலில் உள்ள ஒரே வேட்பாளரும் இளையவரும் முன்னாள் கனடிய பிரதமரும் தமிழ் மக்களுக்கு மிக நெருங்கிய பிரைன்மல் ரூனியின் புதல்வியுமான கரலைன் மல்ரூனி தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தேர்தலுக்கு வாரங்களே உள்ள நிலையில் பழமைவாத கட்சி உறுப்பினர்களுக்கு முன் முக்கிய தெரிவு உள்ளது. வரும் ஜூன் தேர்தலில் கதலீன் வேயினை வெற்றி கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ள அந்தத் தலைவர் யார்? தமது கடுமையான உழைப்பின் மூலம் பங்களிப்புச் செய்து வரும் இளையவர்களாக இருந்தாலும் தாய்மார்களாக இருந்தாலும் புதிய குடிவரவாளர்களாக இருந்தாலும் ஏனைய அனைவர்களாக இருந்தாலும் அவர்கள் மனங்களை வென்று கட்சியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் தனித்துவமான நிலையில் கரலைன் உள்ளார்.

கரலைன் வியாபாரம் மற்றும் சட்டத்துறையில் தேர்ந்த துறைசார் வல்லுனர் மட்டுமன்றி கணவர் அன்ரூவுடன் நான்கு பிள்ளைகளை ஒருதாயாராக இருந்து வளர்த்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பை எதிர்கொள்ளும் பெண்கள் சிறுமிகளுக்கு உதவியாக ஒரு தர்மஸ்பாபனத்தையும் நடாத்தி வருகிறார். 1986இல் கனடிய கரையை வந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாத கட்சியைச் சார்ந்த பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகளும் ஆவார்.

கரலைன் கட்சியல் மட்டுமல்ல ஒன்ராரியோவின் முன்னேற்றகரமாக மாற்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறார்.

தலைமைத்துவ தேர்தலில் உள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே யோக் சிம்கோ வேட்பாளார்மட்டுமன்றி கட்சியின் வளர்ச்சி கருதி அதற்கான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு கட்சிக்கு வலுச்சேர்த்துள்ளார்.

முன்னேற்றகரமாக மாற்றத்தை ஒன்ராரியோ மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் அதிகரித்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அதற்கான தலைவரை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு என்பது வலியுறுத்தப்பட்டு அதற்கான பொறுப்பை ஏற்று அதனை திறப்பட செய்ய கரலைன் காத்திருப்பதாகவும் அவரை தலைவராக தெரிவு செய்வதன் மூலம் முன்னேற்றகரமான மாற்றங்களை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2 முதல் 9 வரை நடைபெறவுள்ள வாக்களிப்பில் கட்சியின் உறுப்பினர்கள் புதிய தலைவருக்கான வாக்களிப்பில் கலந்து கொள்வர். அதற்கான முடிவுகள் மார்ச் 10ஆம் நாள் வெளியாகும்.

முக்­கிய அமைச்­சுக்­க­ளுக்கு குறி­வைக்கும் ஜனா­தி­பதி!!

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய அர­சாங்­கத்தில் பாரிய நெருக்­கடி ஏற்­பட்­டுள்ள நிலையில் இரண்டு தரப்­பி­னரும் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் பாரிய முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் மஹிந்த தரப்பின் ஆத­ரவைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.

எனினும் இவ்­வாறு தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சி வெற்­றி­பெ­றாமல் தேசிய அர­சாங்­கமே தொட­ரு­மாயின் முக்­கிய அமைச்­சுக்­களை சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்கம் எடுத்­துக்­கொள்­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கின்றார்.

விசே­ட­மாக நிதி அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு, சர்­வ­தேச வர்த்­தக மூலோ­பாய அமைச்சு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஆகி­ய­வற்றை சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்கம் எடுக்­கும்­நோக்கில் ஜனா­தி­பதி அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கின்றார்.

பொரு­ளா­தாரம் மற்றும் நாட்டின் அமைதி தொடர்­பி­லான பொறுப்­புக்­களை கொண்­டுள்ள இந்த அமைச்­சுக்­களை தம்­வசம் எடுப்­ப­தற்கே சுதந்­தி­ரக்­கட்சி முயற்­சிக்­கின்­றது.

சுதந்­தி­ரக்­கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் முயற்­சிகள் ஒரு­பக்கம் இடம்­பெறும் சூழலில் மறு­பக்கம் தேசிய அர­சாங்­கத்தை எவ்­வாறு முன்­னெ­டுத்து செல்­வது குறித்தும் ஆராயப்­பட்டு வரு­கின்­றது.

இந்த நிலை­யி­லேயே முக்­கி­ய­மான அமைச்சுக்களை ஐக்கிய தேசியக்கட்சியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன அவதானம் செலுத் தியிருக்கின்றார்.

-வீரகேசரி-

இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க இவற்றை செய்யுங்கள்!!

பொதுவாக சில பெண்களுக்கு இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிந்து இடுப்பு பகுதி அகண்டு காணப்படும். இதற்கு ஜிம் சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருந்தப்படியே எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும்.

இடுப்புப் பகுதியைக் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உடற்பயிற்சிகள் நாம் பார்ப்போம்.

கார்டியோ பயிற்சிகள்

கொழுப்புக்களைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் அவசியம். இந்த பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும் செயலை ஊக்குவிக்கும்.

கார்டியோ பயிற்சிகள் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.தினமும் ரன்னிங், ஜோக்கிங், ஸ்கிப்பிங், சைக்கிளிங், மாடிப்படிக்கட்டுக்களை ஏறி இறங்குவது போன்ற அனைத்துமே கார்டியோ பயிற்சிகள் தான்.

அதேப் போல் நீச்சல், பட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கைப்பந்து போன்றவைகளும் கார்டியோ பயிற்சிகளுக்கு நிகரானவைகளாகும்.

ஸ்குவாட்ஸ்

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க ஸ்குவாட்ஸ் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். வீட்டிலேயே இந்த பயிற்சியை தினமும் 12 முறை என குறைந்தது 5 செட் செய்தாலே போதும்.

இதனால் இடுப்பிற்கு கீழே தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் அனைத்தும் கரைவதோடு, கால்களின் வலிமையும் அதிகரிக்கும்.

வோக்கிங் லஞ்சஸ்

இது இடுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைத்து, இடுப்புத் தசைகளை நல்ல வடிவத்திற்கு கொண்டு வர உதவும் பயிற்சிகளுள் ஒன்றாகும்.

இதற்கு 2 டம்பெல் மட்டும் தேவைப்படும். பின் நேராக நின்று கொண்டு கைகளில் டம்பெல்லை பிடித்துக் கொண்டு, ஒரு காலை முன்புறம் எடுத்து வைத்து மண்டியிட்டு, பின் நேரான நிலைக்கு வந்து, மற்றொரு காலை முன்புறம் எடுத்து வைத்து மண்டியிட வேண்டும்.

இப்படி ஒரு செட்டிற்கு 8 முறை என 5 செட்டுகள் செய்ய வேண்டும். இதனால் இடுப்பு பகுதியிலி காணப்படும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

ஜிமெயிலின் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம்!!

தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது. இவ் வசதிக்காக Accelerated Mobile Pages (AMP) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றது.

இதன் மூலம் இலகுவாக வீடியோ, படங்களை பார்வையிடலாம். எனவே எதிர்காலத்தில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் அதனை விட்டு அகலாமல் ஜிமெயில் அப்பிளிக்கேஷனுள்ளேயே இணையத்தளங்களையும் பார்வையிட முடியும்.

இவ் வருட இறுதியிலேயே மேற்குறிப்பிட்ட வசதி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு எச்ஐவி-யை பரப்பிய திருநங்கைக்கு ஏற்பட்ட நிலை!!

அவுஸ்திரேலியாவில் வாடிக்கையாளருக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி கிருமியை பரப்பிய திருநங்கை பாலியல் தொழிலாளிக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பால்மர் (40) என்ற திருநங்கை பாலியல் தொழிலாளிக்கு எச்ஐவி வைரஸ் இருந்துள்ளது. இதை தனது 20 வயதான வாடிக்கையாளரிடம் கூறாத அவர் கடந்த 2014ல் அவருடன் பலமுறை உறவு வைத்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நபரையும் எச்ஐவி கிருமி தாக்கியுள்ளது.

இது குறித்து பெர்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பால்மர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

தனக்கு எச்ஐவி நோய் உள்ளது என தனக்கே தெரியாது என பால்மர் கூறியும் அதை நீதிபதி ஏற்காத நிலையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பால்மருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகள் பால்மர் சிறையில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்ற நிலையில் 2021ல் தான் அவருக்கு பிணை கிடைக்கும்.

இது ஒரு மோசமான குற்றம் எனவும், பாதிக்கப்பட்டவரிடம் பால்மர் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடுரோட்டில் இளம்பெண் கொலை : புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

காதலர் தினத்தை உலகெங்கும் இளைஞர்கள் கொண்டாடி வந்த சந்தோஷ நாளில் இளம்பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது.

காசியாபாத்தை சேர்ந்த பெண் பிரியங்கா(வயது 22), சில நாட்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார், மாலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு சென்று வீடுதிரும்பிக் கொண்டிருந்த பிரியங்காவை வழிமறித்த சச்சின் சர்மா சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பிரியங்காவின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சச்சின் சர்மாவை கைது செய்துள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரி தேர்வு எழுத வந்த பிரியங்காவை சச்சின் நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததும், இதனால் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.

சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் பழிவாங்கும் நோக்குடன் பிரியங்காவை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சச்சினை சிறையிலிருந்து வெளியேவிட்ட பொலிஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆண் வேடமிட்டு இரண்டு பெண்களை மணந்த பெண் : திடுக்கிடும் காரணம்!!

 
வரதட்சணை பணத்துக்காக ஆண் வேடமிட்டு இரண்டு பெண்களை மணந்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் நகரை சேர்ந்தவர் ஸ்வீட்டி சென் (25). இவர் கிருஷ்ணா சென் என்ற பெயரில் ஆண் போல கடந்த நான்கு ஆண்டுகளாக பேஸ்புக்கில் வலம் வந்துள்ளார்.

அப்போது வெவ்வேறு காலக்கட்டங்களில் இரண்டு பெண்களை வரதட்சனைக்காக மணந்துள்ளார். இதில் இரண்டாவது மனைவிக்கு கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டு பொலிசில் புகார் அளித்ததையடுத்து இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரித்ததில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவயது முதலே ஆண் போல வேடமிட்டு நடமாடுவது, தலைமுடியை வெட்டிக் கொள்வது போன்ற பழக்கம் ஸ்வீட்டிக்கு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது ஸ்வீட்டி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது என்ற நிலையில் ஆண் வேடமிட்டு ஏமாற்றியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவரின் கண்முன்னே பலியான இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

 
ஹரியானா மாநிலத்தில், ‘Go Kart’ எனும் கார்பந்தயத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர், தனது கணவரின் கண்முன்பே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ராம்புரா புல் பகுதியைச் சேர்ந்தவர் அமர்தீப் சிங், இவருக்கு புனித் கவுர் எனும் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தங்கள் குடும்பத்தினருடன் ஹரியானா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பூங்கா ஒன்றிற்கு சென்ற போது, ‘Go Kart’ எனும் சிறிய ரக கார் பந்தய விளையாட்டில் ஈடுபட்டனர்.

புனித் கவுரும், அவரது கணவரும் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொள்ள, அவர்களது மகன் பாட்டியுடன் பின் பகுதியில் அமர்ந்து கொண்டான். மேலும், அவர்களது உறவினர்களும் ஆளுக்கொரு காரில் ஏறிக்கொள்ள, பந்தயம் தொடங்கியது.

கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியாத புனித் கவுரின் தலைமுடி, காரின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டது. அதன் பின், நொடிப்பொழுதில் அவரின் மண்டைத் தோலோடு தலைமுடி முழுவதும், துண்டாகத் தனியே போய் விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமர்தீப் சிங், காரை நிறுத்திவிட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு புனித் கவுரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பூங்காவின் ‘Go Kart’ பகுதி உடனடியாக மூடப்பட்டுள்ளது, இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை சும்மாவிடக்கூடாது : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!

சென்னை அருகே கொள்ளையர்களால் தாக்குதலுக்கு ஆளான பெண் பொறியாளர், தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது என்று அழுதவாறே வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா(26), இவர் நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை, அவர் பணிமுடிந்து பெரும்பாக்கம் தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த வழிப்பறி கும்பல், லாவண்யாவை வழிமறித்து சாலையோர முட்புதருக்குள் தூக்கிச்சென்று, இரும்புக் கம்பியால் கொடூரமாக தலையில் தாக்கியுள்ளனர்.

மயங்கி விழுந்த லாவண்யாவிடம் இருந்து நகைகள், கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் லாவண்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் செம்மஞ்சேரியில் உள்ள மதுபான கடையில் நின்றுக் கொண்டிருந்த லாவண்யாவின் இருசக்கர வாகனத்தை பொலிசார் மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது. இதனைத் தொடர்ந்து, அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அச்சம்பவம் குறித்து கூறுகையில், என்னை இரும்பு கம்பியால் தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது, அவர்கள் மனிதநேயமற்றவர்கள், எனக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சில வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!!

தமிழ்நாட்டில் திருமணத்தில் விருப்பமில்லாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (27) இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் அவர் பெற்றோருக்கு எழுதிய கடிதம் சிக்கியது.

அதில் நான் மிகுந்த மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என எழுதியிருந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் சந்தோஷ்குமாருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் சந்தோஷ்குமாருக்கு விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் மனித வலுவில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர கார் : 16 கோடிக்கு வாங்கிய இலங்கையர்!!

 
இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட அதிக விலையுடனான மோட்டார் வாகனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவரால் கொள்வனவு செய்யப்பட்ட Bentley Mulsanne Hallmark என்ற மோட்டார் வாகனம் இதுவரையிலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 மில்லியன் எனப்படும் 16 கோடி ரூபாயாகும்.

தம்மிக்க பெரேராவினால் கொள்வனவு செய்யப்பட்ட Blue மற்றும் Porcelain White நிறத்திலான Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனம் விமானம் மூலம் நேற்றைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Bentley Mulsanne Hallmark என்ற வாகனம் உலகில் மொத்தமாக 50 மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறுதியாக நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தை தம்மிக்க பெரேரா கொள்வனவு செய்துள்ளார்.

அதற்கமைய தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு எல்லையில் Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனத்திற்கு உரிமை கோரும் ஒரே நபராக தம்மிக்க பெரேரா மாறியுள்ளார்.

பிரித்தானியாவில் H. J. Mulliner & Co நிறுவனத்தினால் Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனம் தாயரிக்கப்பட்டுள்ளது. அந்த மோட்டார் வாகனம் முழுமையாக மனிதர்களின் கைகளினால் (handcrafted cars) தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.

Mulsanne Hallmark என்ற மோட்டார் வாகனங்களின் தயாரிப்பு 50க்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனத்தின் ஆரம்ப விலை 390,000 ஸ்டெர்லிங் பவுண்டாகும். இலங்கை பெறுமதியில் 84 மில்லியன் ரூபாயாகும். அத்துடன் இலங்கை சுங்க பிரிவு தகவல்களுக்கமைய இதற்காக 76 மில்லியன் தீர்வை வரி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிக்கிய மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு!!

 
இலங்கையில் உயிர்வாழும் பாம்பு இனங்களில் மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“மல்சரா” என அழைக்கப்படும் “பொல்மல் கரவல” என்ற பாம்பு ஒன்று அண்மையில் குருவிட்ட, தெப்பானவ பிரதேசத்தில் கிடைத்துள்ளதாக தெஹிவளை விலங்கியல் பூங்காவின் கல்வி அதிகாரி நிஹால் செனரத் தெரிவித்துள்ளார்.

விஷத்தன்மை குறைந்த இந்த பாம்பை கண்டவுடன் சிலர் கொல்ல முயற்சித்து வருவதாகவும் இந்த பாம்பை கொல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மல்சரா என்ற இந்த பாம்பு இனம் மரங்களை தமது இருப்பிடங்களாக கொண்டுள்ளது. சிகப்பு நிறமான பூ அடையாளம், மஞ்சள் மற்றும் கறுப்பு நிறமான சிறிய கோடுகளை பாம்பின் தோலில் காணமுடியும். வயிற்று பகுதியில் பச்சை மற்றும் மஞ்சள் நிற கலவையுடன் காணப்படும் எனவும் நிஹால் செனரத் குறிப்பிட்டுள்ளார்.