வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த கிணறு ஒன்றிலிருந்து டெங்கு நுளம்புகள் பெருகியுள்ளதாக பூச்சியியலாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அபாய நிலை எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் க. தியாகலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டெங்கு நுளம்புகள் பெருக்கமடைவதை கட்டுப்படுத்துவது ஒரு சவாலாகும்.
கைவிடப்பட்ட கிணறுகள் தொடர்பாக உடனடியாக உங்கள் பகுதிகளிலுள்ள பொது சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, மலேரியா தடை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு கிணறுகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவ வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வான் வவுனியா ஓமந்தைப் பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இராணுவ வாகனத்துடன் மோதுண்டுள்ளது.
இதன்போது வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியற்றத்தினால் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசத்தின் இருப்பினை தக்க வைப்பதற்காகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நாங்கள் பாடுபட்டிருந்தோம்.
இதில் நானும் வட மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தோம்.
இந் நிலையில் அப்பகுதிக்கான தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவின் போது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அப்பகுதியினை தக்க வைப்பதற்கு உதவியவர்கள் என்ற வகையிலும் எனக்கோ அல்லது என்னுடன் செயலாற்றியவர்களுக்கோ அழைப்பு விடுக்கவில்லை.
எனவே இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர்களில் தெரிவில் எமக்கு எவ்விதத்திலும் உடன்பாடு இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடனான சந்திப்பின்போதே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன் நிமிர்த்தம் வவுனியா நகரசபைக்கு தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட நா.சேனாதிராஜாவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னாள் விவசாய போதனாசிரியரான தர்மலிங்கம் பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நகரசபையின் உப தவிசாளராக க.சந்திரகுலசிங்கம்(மோகன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் எஜமானரால் கொடுமைப்படுத்தப்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் Adelina, இவர் Penangஇலுள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அவரை வேலைக்கு அமர்த்தியவர்கள் அவருக்கு உணவளிக்காமலும், அவரது காயங்களுக்கு சிகிச்சையளிக்காமலும் அவரைத் துன்புறுத்தியுள்ளனர்.
பத்து நாட்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் திகதி பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இது குறித்து Steven Sim என்னும் அரசியல்வாதியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட போதும், நோய்த்தொற்று அதிகம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனைதொடர்ந்து 36 வயதுப்பெண் அவரது சகோதரர் மற்றும் அவர்களது 60 வயது தாயார் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலைக் குற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து Steven Sim கூறுகையில், Adelinaவின் மரணம் இந்தோனேசியர்களைக் கோபம் அடையச் செய்துள்ளது. நான் சென்று பார்த்த போது Adelinaவின் நிலைமை மோசமாக இருந்தது, அவரது கைகளிலும் கால்களிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன.
கடந்த மாதம் அவர் வீட்டுக்கு வெளியே நாயுடன் படுத்து உறங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார், அவருக்கு உணவளிக்கப்படவில்லை, அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், நாய்க்கடிகள், உணவுப்பற்றாக்குறை போன்றவை காரணமாக இருக்கலாம் என்று இந்தோனேசிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்ணளவாக 2.5 மில்லியன் இந்தோனேசியர்கள் மலேசியாவில் வேலை செய்கிறார்கள் என்றும், அவர்களில் பாதிபேர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
ஆவியை திருமணம் செய்து கொண்ட வட அயர்லாந்தைச் சேர்ந்த Amanda Teague என்னும் 45 வயதுப்பெண் கர்ப்பமுற்றிருக்கலாம் என மருத்துவர் கூறியதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற Amanda Teague என்னும் பெண் தான் ஜாக் என்னும் ஆவியைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.
அந்த ஆவி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கடற்கொள்ளையனின் ஆவியாம். முறைப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விரும்பாத Amanda Teague, திருமணம் சட்டப்பூர்வமானதாக இருப்பதற்காக சர்வதேச கடற்பகுதியில் தனது திருமணத்தை நடத்தினார்.
மணமகனுக்கு மோதிரம் அணிவிக்க முடியாது என்பதால் மணமகன் சார்பாக ஒரு மெழுகுவர்த்திக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. தான் ஜாக்குடன் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை மேற்கொள்வதாகவும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் Amanda Teague தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டு அதிர்ச்சியடைந்தவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவரது அறிகுறிகளை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறியதும் அதிர்ச்சியடைந்த Amanda ஜாக்கிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
ஜாக்கோ தான் ஆவி என்பதால் குழந்தைக்கு தந்தையாக முடியாது என கூற, தொடர் பரிசோதனைகளின் மூலம் இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் யென் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ்ஸை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 1 ரூபா 47 சதமாக உள்ளது. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பை 10 சதவீதத்தால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 50 லட்சம் ரூபா பெறுமதியான வாகனமொன்றின் விலையானது, 5 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டுமே அமுலாக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு களனிவௌி புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (16.02) இரவு 08 மணிமுதல் 19ம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் அந்த மார்க்கத்திலான புகையிரத சேவை இடைநிறுத்தப்படும் என்று புகையிரதப் பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.
எதிர்வரும் 19ம் திகதி முதல் வழமை போன்று மீண்டும் புகையிரத சேவை இடம்பெறும் என்றும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘மில்லியன் டாலர் மணப்பெண்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட கேக் ‘துபாய் மணமகள் 2018’ விழாவில் கலந்துகொண்டு காண்போரைக் கவர்ந்துள்ளது.
120 கிலோ எடையில் மணப்பெண் போல் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை உருவாக்கியவர் டெபி விங்ஹாம். இவர் மிகவும் செல்வாக்குப் பெற்ற கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் இவர் 16 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷு, 4.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைர ஆடை, 67 மில்லியன் டாலர் மதிப்புள்ள திருமண கேக் போன்றவற்றைத் தயாரித்து அசத்தியுள்ளார்.
இவரது சமீபத்திய படைப்பும் மிகவும் விலை குறைந்த படைப்பும் இந்த மணப்பெண் கேக்தான். இந்த கேக் பெண்ணிற்கு அரேபிய பாரம்பரிய திருமண உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 கிலோ சாக்லெட்டும் 50 கிலோ இனிப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் நிஜமான மணப்பெண் போலவே தோற்றமளிக்கும். கற்பனையாக ஒரு விஷயத்தை உருவாக்குவதைவிட, நிஜத்தை என்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பதையே விரும்புகிறேன். இந்த மணப்பெண் உடையில் 5 ஆயிரம் பூக்களும் 10 ஆயிரம் சாப்பிடக்கூடிய முத்துக்களும் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, 5 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வைரமும் 2 இலட்சம் டாலர் மதிப்புடையது என டெபி விங்ஹாம் கூறியுள்ளார்.
கனா கானும் காலங்கள் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களும் மிக பிரபலம்.
தற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் காதலர் தினமான நேற்று முன்தினம்தான் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து கொடுத்துள்ளனர்.
இந்த தகவலை யுதன் பாலாஜி தன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணம் நடந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இப்படி இருவரும் பிரிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் வைத்தியசாலை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகை இல்லாததால் அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த செய்தி இணையத்தில் வெளியானது. இதையடுத்து சமூகவலைத்தள பயனாளிகள் அந்த தாய்க்காக பணம் வசூலித்து கொடுத்தனர். இதன்மூலம் பில் தொகை கட்டப்பட்ட பின்னர் ஒருவழியாக ஐந்து மாதங்கள் கழித்து குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐந்து மாதங்களாக தாயிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்ததாக வைத்தியசாலையின் இயக்குனர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை போலிஸார் விடுதலை செய்தனர்.
காளையிடமிருந்து தனது தம்பியை எட்டு வயது சிறுமி துணிச்சலாக போராடி மீட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
கர்நாடகாவின் ஹன்னவர் தாலூக்காவிலுள்ள நவிலக்கோன் கிராமத்தில், எட்டு வயது சிறுமி தன்னுடைய இரண்டு வயது தம்பியுடன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அந்த வழியாக வேகமாக வந்த மாடு ஒன்று, இவர்களை நோக்கி முட்ட ஆரம்பித்தது.
இதில் அந்த சிறுமி தனது தம்பியை கடை வரை விடாமல் கையில் பிடித்துக் கொண்டு அந்த மாடுடன் இணையாக போராடிக் கொண்டிருந்தார்.
வீட்டின் உள்ளே இருந்த நபர் வெளியில் வந்த அந்த மாட்டை உடனடியாக விரட்டியடித்தார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் மக்களுடைய நலன்கருதி தமிழ் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.தியாகராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டு பல நாட்களாகியும் தமிழ் தலைமைகள் சபைகளை அமைத்து ஆட்சி நடத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். தமிழ் தலைமைகள் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் இதுவரைகாலமும் இல்லாத அளவுக்கு தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளமை.
தமிழர் விடுதலைக் கூட்டணி தனியாக தேர்தலில் நின்றபடியால் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். இல்லாவிட்டால் அந்த வாக்குகள் கூட தேசியகட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும். தமிழ் தலைமைகள் எங்களுடைய கதவு திறந்திருக்கிறது என சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் ஒன்றாக செயல்படுவதற்கு முன் வருகிறார்களில்லை. தமிழ் கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காக வாக்களித்தார்கள் என்பதை தமிழ் தலைமைகள் உணராமல் மௌனம் காப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கிறேன். தமிழ் தலைமைகள் ஒன்றிணையாவிட்டால் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
மன்னார் முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தேசிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி ஆட்சியை கைப்பற்ற முனைப்புக்காட்டும் இவ்வேளையில் தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்களுடைய நலன்கருதி தமிழ் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் அவ்வாறு இல்லாத விடத்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தமிழ் தலைமைகளை முற்றுமுதாக நிராகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மகிந்த ராஜபக்சவைப்பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தமிழ் தலைமைகள் ஐக்கியபட்டு செயற்பட முன் வரவேண்டும். கட்சிக்குள் தங்கள் தலைமைகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம். தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் தேசியத்தையும் வென்றெடுப்பதற்கு ஒன்றுபடவேண்டும் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞனின் சடலத்தை மீட்டதுடன், அவர் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
வெலிக்காக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தையா பிரகாஸ் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடென்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்து எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்மணி தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், முதியோர் கொடுப்பனவு பெற வராததையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பாரத்த போது அவர் கட்டிலிலேயே உயிரிழந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா என்பது தொடர்பாக நோட்டன் பொலிஸாரும், ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
கடந்த வாரம் யூடியூப் தளத்தில் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலேயே பாடல் வைரலானது.
பாடல் பிரபலமானதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியரும் அவர் கண்களால் செய்யும் மாயாஜால ரொமான்ஸூம் தான்.
இந்தப் பாடல் வைரலானதால், பிரியா பிரகாஷின்து இன்ஸ்டாகிராம் கணக்கில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது B.Com முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம்.