சடலமாக கண்டெடுக்கப்பட்ட 22 வயதான பெண்!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நேற்று (31.01) காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பாக 250 முறைப்பாடு கிடைத்துள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயனர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிடும் போது ‘நண்பர்கள் மட்டும்’ பிரிவின் கீழ் வெளியிடுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

பேஸ்புக் பயனர்கள், தனிப்பட்ட முறையில் அறியப்பட்டவர்களிடமும், அறியப்படாதவர்களிடமும் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் போலி பேஸ்புக் கணக்கு தொடர்பில் 3400 முறைப்பாடுகள் இலங்கை கணனி அவசர பிரிவிற்கு கிடைத்துள்ளது. தங்கள் சொந்த படங்களை வேறு நபர்கள் தவறாக பயன்படுத்தி போலி கணக்குகள் திறந்துள்ளதாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் 80 சதவீதமான போலிக் கணக்குகளை பேஸ்புக் தலைமையம் முடக்கியுள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அதிகாலையில் வானில் ஏற்பட்ட மாற்றம்!!(காணொளி)

 
152 ஆண்டுகளுக்கு பின்னர், சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.

இதன்படி சந்திர கிரகணம் தென்பட்டதுடன், 36 ஆண்டுகளுக்கு பின்னர் சுப்பர் மூன் வானில் தென்பட்டுள்ளது.

அந்த வகையில், சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை வவுனியாவிலும் அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

152 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இன்று (31.01.2018) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மன்னார் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் ஓட்டுனரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்து 30 நிமிடங்கள் கடந்த போதிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தராமையினால் வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.

வட்ஸ்அ ப் மெசேஜ்களை லொக் செய்யும் வழிமுறை!!

புறா விடு தூது காலம் துவங்கி வட்ஸ்அப் வரை வந்திருக்கும் இக்கால மனிதர்களாகிய நாம் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் வேறொருவருடன் பகிர்ந்து வருகிறோம்.

வட்ஸ்அப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் வட்ஸ்அப் லொக் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வட்ஸ் அப் சட் லொக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இன்ஸ்ரோல் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு நமக்கு தகுந்த கடவுச்சொல்லை தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.

பின்னர் செயலியில் இடம்பெற்றுள்ள லொக் வட்ஸ்அப் சட் எனும் பகுதியை கிளிக் செய்தால், உங்கள் வட்ஸ்அப்ஐ திறக்க முடியும்.

அதையடுத்து விரும்பிய வட்ஸ்அப் Contacts மற்றும் Group-க்கு மிக எளிமையாக மெசேஜ் லொக் அமைக்க முடியும்.

பணத்துக்காக 15 வயது மூத்த பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!!

 
சீனாவில் பணம் மற்றும் நகைக்காக 14 வயதில் மகன் உள்ள 38 வயது பெண்ணை 23 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Qionghai நகரை சேர்ந்த 38 வயதான பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் 23 வயது இளைஞருடன் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டதில் அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து இளைஞரை திருமணம் செய்து கொள்ள பெண் முடிவெடுத்தார்.

ஆனால் வயதான பெண்ணை திருமணம் செய்து கொள்ள இளைஞரின் பெற்றோர் அவரை முதலில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஏராளாமான நிலங்களும், 784,000 டொலர்கள் மதிப்புடைய கார் மற்றும் 100,000 டொலர்கள் பணத்தை இளைஞரின் பெற்றோரிடம் பெண் கொடுத்ததையடுத்து திருமணத்துக்கு அவர்கள் சம்மதித்தனர்.

திருமணத்தின் போது அதிகளவில் நகைகள் அணிந்திருந்த மணப்பெண் திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் புதுக்காரில் புறப்பட்டு சென்றார்.

இரு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!!

திருச்சியில் பசு மாடு ஒன்று, இரு தலைகளுடன் கூடிய ஆண் கன்றை ஈன்றெடுத்துள்ளது. திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த இந்திரா நகர் நத்தர் தெருவைச் சேர்ந்த தம்பதி குமாரசாமி- ராணி. இவர்கள் 15 ஆண்டுகளாக கறவை மாடுகளை பராமரிப்பு பால் விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று காலை இவர்களது பசு மாடு கன்றை ஈன்றெடுக்க முயற்சித்தது, ஆனால் இரண்டு மணிநேரமாகியும் கன்று வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டது. ஒருவழியாக உடல் வெளியே வந்த நிலையில், தலை மட்டும் வரவில்லை. உடனடியாக கால்நடை மருத்துவர் வந்து சோதித்து பார்த்ததில் கன்றுக்குட்டிக்கு இரண்டு தலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கன்றுக்குட்டியை வெளியே எடுத்தார், இத்தகவல் வெளியானதும் ஏராளமான மக்கள் கன்றுக்குட்டியை பார்த்து செல்கின்றனர்.

கன்றுக்குட்டி நலமாக இருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். எனினும் தலை பாரமாக இருப்பதால் நிற்க சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்ற குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தந்தை தாக்கும் அதிர்ச்சி வீடியோ!!

ராஜஸ்தானில் பெற்ற குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தந்தை தாக்கும் பகீர் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானின் ராஜாசமாத்தை சேர்ந்தவர் ஜெயின் சிங், இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது இரு குழந்தைகளையும் ஜெயின் சிங் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் 5 வயது மகனை கட்டித் தொங்கவிட்டுள்ளார், 3 வயது மகளையும் கொடூரமாக அடிக்கும் போது வலியால் அக்குழந்தை கதறி அழுகிறது.

இச்சம்பவத்தை ஜெயின் சிங்கின் சகோதரர் வீடியோவாக எடுத்துள்ளார். இது வைரலாகவே பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இருவரும் மண்ணில் விளையாடி ஆடையை அசுத்தமாக்கியதால் அடித்ததாக கூறியுள்ளார். ஜெயின் சிங்குக்கு பயந்து குழந்தைகளின் தாய் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

என் மகளை கொன்று விடுங்கள் : அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அழகியின் தற்போதைய நிலை!!

 
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் அசிட் வீச்சுக்கு இரையான இளம்பெண் ரூபாலி தனக்கு நடந்த கொடூர அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் போஜ்புரி திரைப்படங்களில் நடித்துவந்த ரூபாலி, கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு அருகாமையில் உள்ள நகர் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கே அவர் அஜய் புஜரி என்பவரை சந்தித்துள்ளார். சில சந்திப்புகளுக்கு பின்னர் ரூபாலியிடம் தமது காதலை வெளிப்படுத்திய புஜரி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரூபாலி ஏற்கெனவே ஒருவரை காதலித்து வந்ததால், புஜரியின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புஜாரி, அழகு இருப்பதால் தானே இத்தனை ஆணவம் கொள்கிறாய், உனது அழகை சிதைத்து விடுகிறேன் பார் என அச்சுறுத்தியுள்ளார்.

ஆனால் இதை ரூபாலி கருத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 2015 அம் ஆண்டு யூலை 28 ஆம் திகதி ரூபாலியின் வாழ்வில் மறக்க முடியாத அந்த துயர சம்பவம் நடந்தது.

அன்றைய தினம் திரைப்பட படப்பிடிப்பு முடித்து தமது அறையில் வந்த ரூபாலிக்கு, தாம் அருந்திய உணவில் போதை மருந்து கலந்து விட்டிருந்தது தெரிய வந்தது. இதில் அவர் ஆழ்ந்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு ரூபாலியின் அறைக்கு வந்த புஜரி, தாம் மறைத்து வைத்திருந்த அசிட் போத்தலை திறந்து ரூபாலியின் மீது வீசியுள்ளார்.

இதில் முகம் வெந்து, உடல் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட ரூபாலியை மீட்டு அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். மருத்துவமனையில் ரூபாலி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரது தந்தை தமது மகளை கொன்றுவிடும்படி மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

இதே நிலையில் அவரை தமது குடியிருப்புக்கு அழைத்து செல்வது மரியாதை இல்லை என தெரிவித்து மருத்துவமனையில் இருந்து வெளியெறிய அவர் அதன் பின்னர் தமது மகளை வந்து பார்க்கவே இல்லை.

அதன் பின்னர் காயங்கள் குணமடைந்த நிலையில் தாம் தமது வீட்டுக்கு செல்லவில்லை என கூறும் ரூபாலி, புஜரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் போதிய ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் ரூபாலி குல்திப் என்பவரை சந்தித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான ரூபாலி லக்னோவில் உள்ள கொபி ஷொப் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். குறித்த கொபி ஷொப்பானது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களால் நடத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!!

தமிழகத்தில் தன்னந்தனியாக வசித்து வந்த பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சத்தியமூர்த்தி இறந்த நிலையில் தனியாக வசிக்கும் தனிலட்சுமி ராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு தனலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் அவரை கொன்றுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து சென்ற பவானி பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனலட்சுமி வீட்டிலிருந்து பணமோ, நகையோ திருடுபோகாததால் திருடர்களின் வேலை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே யாரோ முன்பகை காரணமாக தனலட்சுமியை கொலை செய்திருக்ககூடும் என பொலிசார் கருதுகின்றனர்.

வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டம்!!

 
வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று(31.01.2018) இடம்பெற்றது.

வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச தலைமையில் தேர்தல் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாமியாரை பொல்லால் அடித்துக் கொலை செய்த மருமகன் தலைமறைவு!!

 
நாவலபிட்டி நவ திஸ்பன கிராம பகுதியில் மாமியாரை பொல்லால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள மருமகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்மணி அனுலாவத்தி வயது 65 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகன், மாமியாரை மண்வெட்டி கணையினால் தாக்கியுள்ளார். காயமடைந்த மாமியார் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மருமகனை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் விசித்திர சிறுவன் : கவலையில் பெற்றோர்!!

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வைக்காமலேயே பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குறித்த குழந்தையின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தெரிவருவதாவது,

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் 2010ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 3ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பொதுவாக குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பெயர் வைப்பதற்கு பெற்றோருக்கு அவகாசம் வழங்கப்படும். எனினும் குழந்தைக்கு பெயர் வைக்காமலேயே குழந்தை பிறந்து மறு தினம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பெலமதுளை பகுதியைச் சேர்ந்த பெற்றோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் குறித்த குழந்தைக்கு 8 வயதாகும் வரை பெயர் வைக்கப்படவில்லை என்றும், இதனால் பாடசாலையில் சேர்ப்பதற்கு சிரமப்படுவதாகவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். தமது குழந்தையை பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிறப்புச்சான்றிதழ் என்பது ஒருவருடைய பெயரையும், பிறந்த திகதி, இடம், என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே வழங்கப்படுகின்றது. எனினும் பிறந்து 8 வயது வரை பெயரில்லாம் ஒரு சிறுவன் வளர்ந்து வருவதையிட்டு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் கோர விபத்தில் கணவன் பலி : உலகிற்கு எடுத்துக்காட்டாக உயிரை விட்ட மனைவி!!

 
பாதுக்க வெரகல – மாஹிங்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூளைச் சாவடைந்த பெண் தனது அனைத்து உறுப்புக்களை தானம் செய்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, திலினி ஜீவந்தி எல்விஸ் என்ற ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே மூளைச் சாவடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது கணவருடன் திருமண வீடொன்றிற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியமையினால் படுகாயமடைந்த நிலையில் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் 27 வயதான சமீர ஜயகொடி என்ற, குறித்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். எனினும் ஆபத்தான நிலையில் இருந்த பெண் மூளைச்சாவடைந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்தனர். அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஹோமாகம வைத்தியசாலையில் 5 மணித்தியாலங்கள் இடம்பெற்ற சத்திர சிகிச்சையின் பின்னர் அவரது உடற்பாகங்கள் நீக்கப்பட்டுள்ளன.

திலினி ஜீவந்தியின் சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள், பாத எலும்புகள் ஆகியவை சத்திர சிகிச்சை ஊடாக நீக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அவரது கல்லீரல் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கும் இன்னுமொரு சிறுநீரகம் மாளிகாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

பாத எழும்புகள் மனித திசு வங்கிக்கும், இரண்டு கண்களும் இலங்கை கண் நன்கொடை சங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஹோமாகம வைத்தியசாலையின் 72 வருட வரலாற்றில் இவ்வாறான சத்திரசிகிச்சை ஒன்று இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென வைத்தியசாலை இயக்குனர் பன்டுவாவெல தெரிவித்துள்ளார்.

150 வருடங்களுக்குப் பின் நிகழும் பூர்ண சந்திர கிரகணம் : தவறியேனும் இதைச் செய்துவிடாதீர்கள்!!

பகவான் ஸ்ரீமந் நாராயணனின் இரு திவ்ய நேத்ரங்களில் ஒருவரகாவும், நவக்கிரகங்களில் மனோகாரகர் என போற்றப்படும் சந்திரனுக்கு இன்று பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் பூர்ண சந்திரகிரகணம் இன்று வரவுள்ளது. மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த தினத்தில் சமுத்திரத்தில் குளித்தல் என்பது சிற்றபான விடயமாகும். இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும்.

குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

இந்த தினத்தில் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மறதி, மனச்சஞ்சலம் இருந்தால், சிறிதளவு தர்ப்பைப் புல், இந்துப்பு ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, குளித்தால் நல்லது.

ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது என குறிப்பிடப்படுகின்றது.

கிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம். பிறந்த ஜாதகப்படி சந்திர திசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதை தவிர்க்கவும்.

சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது.

கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

இரவு கிரகணம் விட்ட பிறகு, குளித்துவிட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் 191 கி.மீ ஆழத்தில் இன்று நண்பகல் 12.30 மணி அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அளவாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில், கடைகளில், வர்த்தக நிறுவனங்களில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி சாலைக்கு வந்துள்ளனர்.