வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு!

வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில்  தை பூச தினமான இன்று  பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோரின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.

வட மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மலை மீது முருகன் மற்றும்  ஓளவையாரது  சிலைகள் நிறுவப்பட்டு   இன்றைய  தினம்  திறந்து வைக்கப்பட்டது.

வெளிநாடு செல்ல முயற்சித்த தாய், மகள் உட்பட நால்வர் கட்டுநாயக்கவில் கைது!!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி வீசாவை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்த 4 பேரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் போலி வீசாக்களை கொண்ட கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் மற்றும் பேரன் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ம் திகதி சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த ஈரானியர்கள், வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஆயிரம் ரூபா!!

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத்தாளின் சிறப்பம்சங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.

ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத்தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆயிரம் ரூபா நாணயத்தாளும் 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சி சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் பெற்று கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ் இளைஞன் : ஆபத்தான நிலையில் தாய்!!

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி 40 வயதான ஸ்கந்தராஜ் காணாமல் போயிருந்தார். அறிமுகம் இல்லாத நபருடன் கனடாவில் உள்ள Zipperz என விடுதியில் இருந்து சென்றதாக இறுதியாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அன்று முதல் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 7 வருடங்களாக அண்ணன் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் தாயாரை ஸ்கந்தராஜின் சகோதரர், நவசீலன் நவரட்னம் பாதுகாத்து வருகின்றார். தாயாருக்கு தற்போது 80 வயதாகின்றது. அவர் ஒரு இருதய நோயாளி. அவரை காயப்படுத்த நான் விரும்பவில்லை. தனது சகோதரனுக்கு என்ன நடந்ததென யாருக்கும் தெரியாது.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் சென்றுள்ளார் என ஸ்கந்தராஜின் சகோதரன் நவசீலம் நவரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பேர் 2010 மற்றும் 2012ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளளனர். 58 வயதான Majeed Kayhan மற்றும் 42 வயதான Abdulbasir Faizi ஆகியோரே காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியை பொலிஸார் 18 மாதங்கள் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் டொறொன்டோ நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த கொலை வழக்கு ஒன்றில் இந்த மூவரின் பெயரும் அடிப்படுவதாக நேற்றைய தினம் பொலிஸார் அறிவித்துள்ளனர். ஸ்கந்தராஜின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்னமும் அவர் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்காமலே உள்ளனர்.

கனேடிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நவசீலம் நவரட்னம், எனக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். இருவர் இலங்கையில், காணாமல் போன சகோதரனுக்கு ஒன்றும் நடந்திருக்க கூடாதென எதிர்பார்க்கின்றோம்.. கடவுளை வேண்டுகின்றோம். ஸ்கந்தராஜ் 4 பேரில் இரண்டாவதாக பிறந்தவராகும். இந்த வருடம் அவர் தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

காணாமல் போவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே ஸ்கந்தராஜ் இலங்கையில் இருந்து கனடா சென்றுள்ளார். எங்கள் குடும்பம் தமிழ், சிறுபான்மை இனத்தை சேர்ந்தமையினால் இலங்கை பல இன, அரசியல் பிரச்சினைகளை சந்தித்தோம்.

இதனால் இலங்கையை விட்டு வெளியேற ஸ்கந்தராஜ் தீர்மானித்தார். அவர் அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பவே இல்லை. நாங்கள் அவரை இலங்கைக்கு அழைத்தோம். எனினும் அவர் விரும்பவில்லை. நாங்கள் பேஸ்புக் ஊடாக எங்கள் உரையாடலை தொடர்ந்தோம். இவ்வாறு நாட்கள் கடந்துவிட்டது. அவர் திடீரென காணாமல் போய்விட்டார்.
அவரை இன்னமும் தேடி வருகின்றோம். பொலிஸாரும் தொடர்ந்து தேடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்!!

இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருப்பதால் போரில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் விகிதாச்சாரத்தை விட பெண்களின் விகிதாசாரம் கூடிக்கொண்டே செல்கிறது.

இதனை சரி செய்ய அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, இரண்டாவது திருமணம் கணவர் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ இரண்டு பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

அதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி!!(வீடியோ)

மனிதர்களைப் போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டுக் குளியலறையில் கண்ட விநோதமான இந்தக் காட்சியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்க்கும் சிலர் இது கிராஃபிக்ஸாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

வேறு சிலர் எலி தனது உடலில் உள்ள சோப்பு நீரைத் துடைக்க முயன்ற போது அது குளிப்பது போல் தெரிகின்றது என கூறுகின்றனர்.

இளம் பெண்ணின் சடலம் நீர்த்தேகத்திலிருந்து மீட்பு!!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச் சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே காசல்ரீ பிரிதேசத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காணாமல்போய் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சடலம் காணாமல் போனதாக கருதப்படும் பெண்ணுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

35 ஆயிரம் அடி உயரத்தில் பிரசவம் பார்த்த வைத்தியர்!!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவருக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் கிளவ்லேண்டில் உள்ள சிறுநீரகவியல் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகவியல் வைத்தியராக பணியாற்றி வருபவர், வைத்தியர் சிஜ் ஹேமல். 27 வயதான இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர், டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்று, அங்கிருந்து ஏர்பிரான்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்று கொண்டிருந்தார்.

விமானம், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, 41 வயதான ஒரு நிறைமாத கர்ப்பிணி பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, விமானத்தை தரை இறக்கவும் வாய்ப்பில்லாமல் இருந்தது.

அதனால், விமானத்தில் வைத்தியர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று விமான சிப்பந்திகள் கேட்டனர். வைத்தியர் சிஜ் ஹேமல், சிறுநீரகவியல் டாக்டராக இருந்தபோதிலும், ஏற்கனவே 7 குழந்தைகளை பிரசவிக்க செய்துள்ளார். அதனால், அவர் பிரசவம் பார்க்க முன்வந்தார்.

அவரும், பிரான்ஸைச் சேர்ந்த குழந்தைகள் நல வைத்தியர் ஒருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

அரை மணி நேர முயற்சிக்கு பிறகு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது காலணி கயிற்றால் தொப்பிள் கொடியை துண்டித்தார். இதையடுத்து, அந்த பெண்ணும், அவருடைய கணவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இது, தன்னால் மறக்க முடியாத விமான பயணம் என்று அவர் நெகிழ்வுடன் தெரிவித்தார்.

விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

சிலாவத்துறை, முருங்கன் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாவத்துறை நோக்கி சென்ற ட்ரக்டர் ஒன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் பயணித்த சிறுமி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அகத்திமுருத்து பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமி ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ட்ரக்டர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரணப்படுக்கையில் கொலையாளியின் பெயரை வெளிப்படுத்திய இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

பாகிஸ்தானில் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறக்கும் தருவாயில் தமது கொலைகாரன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் Kohat பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது தமது உறவின பெண் ஒருவருடன் ரிக்‌ஷா ஒன்றில் பயணத்தில் இருந்துள்ளார் இளம்பெண் Aasma Rani. மருத்துவ மாணவியான இவரை பல மாதங்களாக தொடர்ந்து திருமண கோரிக்கையுடன் அணுகியுள்ளார் இளைஞர் ஒருவர்.

ஆனால் மாணவி ஆஸ்மா தமக்கு இதில் விருப்பம் இல்லை என பலமுறை மறுப்பு தெரிவித்தும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆஸ்மா தனது உறவினருடன் செல்லும்போது மீண்டும் குறித்த நபர் தம்மை திருமணம் செய்துகொள்ளும்படி கோரியுள்ளார்.

அப்போதும் மறுப்பு தெரிவிக்கவே பட்டப்பகலில் அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை உருவி ஆஸ்மா மீது மூன்று முறை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆஸ்மாவை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் குற்றுயிராக இருந்த ஆஸ்மா தாம் இறக்கும் தருவாயில் தமக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் Mujahid Afridi என்ற நபர் எனவும், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாலையே அவர் துப்பாக்கியால் சுட்டார் எனவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளி யார் என தெரிந்தும் இதுவரை அவரை கைது செய்யவில்லை என ஆஸ்மாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

துண்டு துண்டாக்கி வீதியில் வீசப்பட்ட பெண்!!

தெலுங்கானாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டாக்கப்பட்டு சாக்கு மூட்டையில் வைத்து தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் கொண்டப்பூர் பகுதியில் உள்ள ஐடி மையத்துக்கு அருகில் உள்ள சாலையில் இன்று காலை சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. மூட்டையிலிருந்து ரத்தம் வடிவதை பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் பெண்ணின் சடலம் துண்டாக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து சில தடவியல் ஆதாரங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது இன்னும் தெரியாத நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமரா காட்சிகளை வைத்து பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கவுள்ளார்கள். சம்பவமானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதலியுடன் வட்ஸ்அப்பில் பேசியபடியே தற்கொலை செய்து கொண்ட காதலன்!!

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் வட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவின் சையச்சக் பகுதியில் வசித்து வந்தவர் ஏ.கே.ஏ. ஆகாஷ்குமார், 19 வயதான இவர் தனது வீட்டுப் படுக்கையறையில் தலையில் குண்டுக் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார், அவரின் அருகிலேயே கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது.

தனது காதலியுடன் வட்ஸ்அப்பில் பேசிக்கொண்டே, தற்கொலை செய்து கொள்ள போவதாக துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியுள்ளார். அச்சமயம் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால், அவர் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த இளைஞர் தேர்வில் தோல்வி அடைந்ததுடன், காதல் பற்றியும் குடும்பத்திற்கு தெரியவந்ததால் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிசார் ஆகாஷின் காதலி மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மின்சார ரயிலில் வன்முறை: கொடூர ஆயுதங்களுடன் வெறியாட்டம்!!

கொரட்டூர் – அம்பத்தூர் இடையே பட்டறைவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்து வெளியேறியுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி விரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதைப்பார்த்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் எற்பட்டுள்ளது.

ஆயுதம் கொண்டு வந்த மாணவர்கள், ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களை துரத்தி துரத்தி வெட்டினர். இதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கையில் கத்தியுடன் சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலைய பிளாட்பார்மில் பயணிகளை அச்சுறுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த மஹேல – சங்காவின் உணவகம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவுக்கு சொந்தமான உணவகம் உலகின் மிக சிறந்த 50 உணவகங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.

Ministry of crab என்ற உணவகமே இவ்வாறு சிறந்த உணவங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.

தர்ஷன முனிதாஸ என்ற சமையல் கலைஞருடன் புதிய முறையில் உணவக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் இந்த உணவகத்தை கொண்டு செல்வதற்கும், பல்வேறு முறையிலான உணவு வகைகளை மக்கள் சுவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மஹேல மற்றும் சங்கக்கார இந்த உணவகத்தின் வளர்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளை இலக்கு வைத்து இதன் கிளை ஒன்று மும்பாயில் திறக்கப்படவுள்ளது.

தேர்த்திருவிழாவில் வியப்பை ஏற்படுத்திய பௌத்த துறவி!!

 
கொழும்பு – 12, ஆமர்வீதியில் உள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.

இதன்போது பக்தர்கள் வடம் இழுக்க தேர் வீதிவலம் வந்துள்ளது. இந்த நிலையில் பௌத்த துறவியொருவரின் செயற்பாடு அங்கிருந்த இந்துக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீற்றிருந்த தேர் வடத்தினை இந்துக்கள் இழுத்த பொழுது குறித்த பௌத்த துறவியும் வடம் இழுத்துள்ளார்.

யாழ். இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!!

 
இலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துரடி தொடர்பில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் பிரபல தனியார் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தில் நடிப்பவரே சரண்யா. சென்னையை சேர்ந்த இவர் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் MA Broadcasting Communication படித்து, ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர் பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் 2 தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இவர் இலங்கைத் தமிழரை காதலித்து மணமுடித்த நிலையில் இவர்களின் காதல் கதை தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் மயிலாப்பூர் – கபாலீஸ்வரர் கோவிலுக்கு அமுதனின் குடும்பத்தினர் வந்தபோது அமுதனை சரண்யா சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி கல்யாணம் வரை சென்றுள்ளது.

லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்து ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார் என சரண்யா தெரிவித்திருக்கின்றார். மேலும், என்னுடைய கணவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர். யோகா மற்றும் தியானக் கலையிலும் அவர் நிபுணர் எனவும் தனது காதல் கணவரைப்பற்றி கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பின் இந்தியாவில் இருந்து செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தங்கி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.