கடற்படை வாகனம் மோதி  புங்குடுதீவில் பள்ளி மாணவி பலி மேலுமொருவர் படுகாயம்!!

யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் தலத்திலேயே பலியாகியுள்ளார்.

அதே இடத்தினைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே கடற்படையின் வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனமே மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இந்த நிலையில் மாணவியுடன் பயணித்த அவரது மாமனார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதேவேளை சம்பவ இடத்திற்கு ஊர்காவற்துறை பொலிஸார் சென்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

நாய் கடிக்கு இலக்காகி மாணவன் பலி : யாழில் சம்பவம்!!

யாழ். வடமராட்சி பகுதியில் நாய் கடிக்கு இலக்கான மாணவன் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாய் கடிக்கு இலக்கான மாணவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த நாயொன்று சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும் கடித்துள்ளது. இதனையடுத்து, குறித்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நாய்க் கடி காரணமாக சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை கடித்ததாக கூறப்படும் நாயை கண்டுபிடிக்க பிரதேச மக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் கைது!!

இலங்கை அகதி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரச பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொள்ளாச்சி – ஆழியாறில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் நான்காம் ஆண்டில் படித்து வரும் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த மாணவியை, பாடசாலையில் தலைமை நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில், வீடு திரும்பிய மாணவி பாடசாலையில் நடந்தவற்றை தாயிடம் கூறியதையடுத்து, ஆழியாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். எனினும், தலைமை ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாகன விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 25 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை!!

 
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை நேற்று மாலை கண்டெடுத்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

56 வயதுடைய எம். புனேஸ்வரி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் புத்தளத்தில் அமைந்துள்ள நீர்ப்பாசன அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் புத்தளம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பெண்ணுடன் அவரது சகோதரியும் அவ்வீட்டில் வசித்து வந்துள்ளதோடு கொலை இடம்பெற்ற தினம் குறித்த சகோதரி வவுனியாவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வீட்டிற்கு வந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொண்டுவந்ததாக கருதப்படும் சைக்கிள்கள் அவ்வீட்டுக்கு அருகிலுள்ள காட்டினுள் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுர குணவர்தன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கால் மேல் கால் போட்டு உட்காருவது ஏன் தவறு தெரியுமா?

வீட்டிலோ, பொது இடங்களிலோ சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, பேப்பர் படிக்கும் போது, தொலைக்காட்சி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது என பல சமயங்களில் நாம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்போம்.

முன்பெல்லாம், நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என கூறுவார்கள். இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், இன்றைய உலகில் இது சர்வசாதாரணம்.

ஆனால், சமீபத்திய அறிவியல் கூற்றின் படி, கால் மீது கால் போட்டு அமர்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள்!
ஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் கால் மீது கால் போட்டு அமரும் வாடிக்கை அதிகமாக இருக்கிறது.
இதை அழகு நயம் வாய்ந்தது அல்லது பெண்பால் உடல்மொழி என்பது போன்ற மனப்பான்மை உருவாகும் அளவிற்கு பெண்கள் அதிகமாக கால் மீது கால் போட்டு அமர்கிறார்கள்.

ஒரே நிலையில்!
கால் மீது கால் போட்டு அல்லது கால்களை மடக்கி ஒரே நிலையில் பல மணி நேரம் அமர்ந்திருத்தல் ஆழப் பெரோன்னியல் நரம்பு (peroneal nerve ) எனும் பாரலசிஸ் உண்டாக காரணியாக அமைகிறது.

முக்கியமாக கால்களை குறுக்காக, கால் மீது கால் போட்டு அமரும் போது இது உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

2010 ஆய்வு
கடந்த 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கால் மீது கால் போட்டு நீண்ட நேரம் அமர்வது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.
மேலும் இரத்த அழுத்தம் சார்ந்த வேறுசில உடல்நல குறைபாடுகள் ஏற்படவும் இது காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இது உடல் முழுவதும் சீரான முறையில் செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து, ஆரோக்கியத்தை சீர்குலைய செய்கிறது.

இரத்த ஓட்டம்!
கால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக இரத்த சுழற்சி உண்டாகிறது.
இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது.
இது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது.

இடுப்பு நிலை
நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பின் சமநிலையை பாதிக்கிறது. இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். மூட்டு வலி அதிகமாகலாம்.

ஸ்பைடர் வெயின்!
சிலந்து போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின் என்பார்கள்.
கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.

மூன்று மணிநேரம்
ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது.

எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.

வெப்பமடையாமல் மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் கண்டுபிடிப்பு!!

மின்சாரத்தினை கடத்தும் உலோகங்கள் பொதுவாக வெப்பமடைவதாகவே காணப்படும். எனினும் வெப்பமடையாத நிலையில் மின்சாரத்தைக் கடத்தக்கூடிய புதிய உலோகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலோக வனேடியம் டைஒக்சைட் என அழைக்கப்படுகின்றது. இதனை அமெரிக்காவில் உள்ள Lawrence Berkeley National Laboratory ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மின் கடத்தலின்போது இலத்திரனின் அசைவுகளே கடத்திகளில் வெப்பம் உண்டாவதற்கு காரணமாகின்றன.

ஆனாலும் இவ் உலோகத்தில் அவ்வாறு நிகழவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீர் கழிக்க காரை நிறுத்திய கணவன் : 22 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவின் குர்கானில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மைத்துனருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையில் நான்கு நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்டார் 56 பகுதியிலுள்ள, பிசினஸ் பார்க் டவர் என்ற சாலையில் இரவு ஒன்பது மணியளவில் இவர்களது கார் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக கணவர் காரை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கே வந்த நான்கு பேர், எதற்காக இங்கு காரை நிறுத்தியுள்ளீர்கள் என அதிகாரமாக கேட்டுள்ளனர். இதற்கு, காருக்குள் இருந்த மைத்துனர் பதில் சொல்லிக்கொண்டிருக்கையில், அவர்களின் பார்வை காருக்குள் இருந்த அப்பெண்ணின் மீது பட்டுள்ளது.

அதன்பிறகு, அவர்கள் நால்வரும் துப்பாக்கி முனையில் கணவர் மற்றும் மைத்துனரை மிரட்டி நிற்கவைத்துவிட்டு, அப்பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

இப்படி மாறி, மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பின்னர் நால்வரும் காரில் தப்பினர். பலாத்கார கொடூரர்கள் தப்பிச் சென்ற கார் ஒன்றின் பதிவு எண்ணை அப்பெண்ணின் கணவர் கவனித்துக்கொண்டார்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, குர்கான் பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கார் பதிவு எண்ணை வைத்து, சோஹ்னா பகுதியிலுள்ள ஜோகல்கா கிராமத்தை சேர்ந்த நான்கு குற்றவாளிகளான Faridabad, Jind, Fatehabad, Hisar மற்றும் Kurukshetra ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலிலிருந்து கீழே விழுந்து இளம் நடிகர் மரணம்!!

மும்பையில் ரயிலிலிருந்து கீழே விழுந்து இளம் நடிகர் உயிரிழந்துள்ள நிலையில் அது விபத்தா அல்லது தற்கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மராத்தி மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பிரபுல் பலிரோ (22). இவர் திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

ரயிலானது மும்பையின் மலாட் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தடைந்து பின்னர் புறப்பட்டது. ரயில் புறப்பட்ட போது படிக்கட்டில் தொங்கியபடி இருந்த பிரபுல் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தார்.

படுகாயங்களுடன் கிடந்த பிரபுலை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பிரபுலின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரபுல் அவ்வளவு அதிகாலை ஏன் ரயிலில் சென்றார் மற்றும் ரயிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தில் குதித்தாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

பிரபுலின் மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டது ஏன் : இளம்பெண்ணின் உருக்கமான வீடியோ!!

 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பெண் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஜாஸ்லின் கவுர், 30 வயதாகும் ஜாஸ்லின் சமீபத்தில் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் தனது மாமியார் தன்னை அவமானப்படுத்தியதால் வாழ்வை முடித்துகொள்ளப் போவதாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய கனவர் பவ்னீத் கூறுகையில், தன் மனைவி சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வுக்கு தயாராகிகொண்டு இருந்தார் எனவும், அதில் தோற்றதும் தற்கொலைக்கு காரணமாக அமைந்து இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கான்பூர் பாண்டூ நகர் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் (மேற்கு) கவுராவ் குரோவர் கூறுகையில், ஜாஸ்லினின் உடலை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது பெற்றோர் தரப்பை கேட்டறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

11 மாதக் குழந்தையின் உடலில் 16 தையல் ஊசிகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

 
உஸ்பெகிஸ்தான் நாட்டில் 11 மாதமேயான குழந்தையின் உடலில் 16 தையல் ஊசிகள் சிக்கியிருந்த சம்பவம் மருத்துவர்களையே கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் குழு மேற்கொண்ட 9 மணி நேர அறுவைசிகிச்சைக்கு பின்னர் 13 ஊசிகளை அரும்பாடுபட்டு அகற்றியுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் தாயார் ஒருவர் தமது 11 மத குழந்தைக்கு தொடர்ந்து சில நாட்களாக விட்டுமாறாத காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவர்களை நாடியுள்ளார்.

மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தைக்கு காய்ச்சலுக்கான் காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து குழந்தையை எக்ஸ்ரே எடுத்து பரிசோதிக்க முடிவு செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குழந்தையின் உடலில் இருதம், கழுத்து, முதுகெலும்பு மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட பகுதிகளில் தையல் ஊசிகள் கொத்தாக சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள் குழு ஒன்றிணைந்து குழந்தையின் உடலில் இருந்து 13 ஊசிகளை அகற்றியுள்ளனர். இதில் இருதயநோய் நிபுணர் ஒருவர் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு 3 ஊசிகளை அகற்றியுள்ளார். எஞ்சிய மருத்துவர்கள் குழந்தையின் அடிவயிறு மற்றும் கழுத்தில் இருந்து 9 ஊசிகளை அகற்றியுள்ளனர்.

மேலும் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். குழந்தையின் உடலில் ஊசியை எவரேனும் நுழைத்திருக்க வாய்ப்பு உண்டு எனக் கூறிய மருத்துவர்கள், 11 மாத குழந்தை ஒருபோதும் ஊசியை விழுங்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால் குழந்தையின் தாயாருக்கு இந்த விடயத்தில் ஏதும் தெரியாது எனவும், அவரது கணவர் ரஷ்யாவில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்துக்கு பெண் தேவை என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

 
நைஜீரியாவில் திருமணத்துக்கு பெண் தேவை என இளைஞர் பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில் அதன் மூலம் பெண்ணொருவருடன் ஆறே நாளில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

சிடிமா அமீடு என்ற இளைஞர் கடந்த 30ஆம் திகதி தன்னை திருமணம் செய்து கொள்ள பெண் யாராவது தயாராக இருந்தால் தன்னை அணுகலாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு இரண்டு நாட்களிலேயே சிலர் பதிலளித்த நிலையில் சோபி இஜியோமா என்ற பெண்ணும் சிடிமாவை மணக்க விருப்பம் தெரிவித்தார்.அவர் புகைப்படத்தை பார்த்தவுடன் சிடிமாவுக்கு பிடித்து போக இரண்டு நாட்கள் அதன் மூலமே இருவரும் தங்கள் காதலை வளர்த்தனர்.

பின்னர் தனது வீட்டிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சோபி வீட்டுக்கு சென்ற சிடிமா அவரிடம் தன் காதலை நேரில் வெளிப்படுத்தி காதலியின் குடும்பத்தாரிடம் தங்கள் திருமணம் குறித்து பேசினார்.

இதையடுத்து தனது மாமா வீட்டுக்கு சோபியை அழைத்து சென்ற சிடிமா அவரிடமும் தனது திருமணத்துக்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து ஜனவரி 6ஆம் திகதி சிடிமா – சோபி திருமணம் நடைபெற்றது. சோபி கூறுகையில், முதல்முறை சிடிமாவை பார்க்கும் போதே அவரை எனக்கு பிடித்துவிட்டது.

நான் பார்த்ததிலேயே அழகான ஆண் சிடிமா தான் என கூறியுள்ளார். தங்களுக்கு திருமணமான புகைப்படங்களை புதுமண தம்பதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞர் : பதைபதைக்கும் நிமிடத்தை கமராவில் பதிவு செய்த பெண்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் பெண்ணொருவர் குளித்து கொண்டிருந்த நிலையில் தண்ணீரில் தவறி விழுந்த இளைஞர் நீரில் மூழ்குவதை தற்செயலாக புகைப்படம் எடுத்துள்ளார்.

விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசியா பூங்காவில் அமைந்துள்ளது மெக்கன்சி நீர்வீழ்ச்சி. இங்கு அனிகா பேடிங் (24) என்ற இளம்பெண் தனது நண்பர்களுடன் சனிக்கிழமை நீச்சலடிக்க சென்றார்.

அப்போது கமரா மூலம் தன்னையும் தனது நண்பர்களையும் புகைப்படம் எடுத்தப்படி இருந்தார். அந்த சமயத்தில் பாறையின் மீது தனது மூன்று நண்பர்களுடன் உட்கார்ந்திருந்த தைவான் இளைஞர் தடுக்கி நீரில் விழுந்துள்ளார்.

தன்னையும் தனது நண்பர்களையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த அனிகாவின் கமராவில் இளைஞர் மூழ்கும் காட்சியும் பதிவானது. இதையடுத்து நீரில் மூழ்கிய இளைஞரின் நண்பர்கள் அவரை யாராவது காப்பாற்றுங்கள் என கத்தினார்கள்.

அப்போது அனிகா உட்பட அங்கிருந்த பலரும் போன் மூலம் அவசர உதவியை தொடர்பு கொள்ள முயன்ற நிலையில், நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் அடர்ந்த பகுதி என்பதால் யாருக்கும் சிக்னல் கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர் தண்ணீரில் குதித்து இளைஞரை மீட்க முயன்றும் நீரில் வேகம் அதிகமாக இருந்ததால் அது முடியவில்லை.

பின்னர் தனது காரை எடுத்து கொண்டு அனிகா சில கிலோமீட்ட தூரம் சென்ற பின்னரே போனில் சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் வந்த நிலையில் நீரில் மூழ்கிய இளைஞர் தண்ணீருக்கு அடியில் இருந்த பாறைகளில் சிக்கியதை உறுதி செய்தனர்.

மிகுந்த முயற்சிக்கு பின்னர் ஞாயிறு காலை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. இது நீச்சல் தடை செய்யப்பட்ட பகுதி என்று எழுதிவைக்கப்பட்ட வாசகம் தனது கண்ணில் படவேயில்லை என அனிகா கூறிய நிலையில் மூன்று இடங்களில் அப்படி எழுதிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்மா… அவன் என்னை கொல்லப்போகிறான் : இளம்பெண்ணின் இறுதி எஸ்எம்எஸ்!!

பிரித்தானியாவில் மோசமான கொலையாளி ஒருவன் 20 வயது இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.

Kingston இல் வசித்து வரும் Mujahid Arshid (33) என்ற நபர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கோ கொலையாளி ஒருவரால் ஈர்க்கப்பட்டுள்ளார்.<

நல்ல தொழிலுடன் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வரும் Arshid, தானும் பல கொலைகள் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டுள்ளான். அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் 20 வயது இளம்பெண்ணான Celine Dookhran ஐ கடத்தியுள்ளான்.

அந்த இளம்பெண் இறப்பதற்கு முன்னர், தனது தாய்க்கு, அம்மா அவன் என்னை கொலைசெய்யப்போகிறான் என இறுதியாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் இந்த செய்திக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன்பின்னர், குற்றவாளியிடம் இருந்து அந்த இளம்பெண்ணின் தாய்க்கு, நீ வாழ்வதற்கு 10 நிமிடங்கள் கிடைத்துள்ளது என்று அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவன் இதற்கு முன்னால் இரண்டு இஸ்லாம் பெண்களை பலாத்காரம் செய்துள்ளான். இவன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு Vincent Tappu என்பவர் உதவியாக இருந்துள்ளார். பெண்களை கடத்திகொண்டு வரும் பணியினை செய்வார். தற்போது, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் கற்பழிப்பு, கொலை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர்.

உலக சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்!!

 
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில் இலங்கை வீரர் ஹசித போய­கொட 191 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

U19 உலக கிண்ண தொடரின் காலிறுதி ஆட்டத்தில், இலங்கை அணி கென்யாவுடன் மோதியது. முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய இலங்கை அணியில், ஹசித போய­கொட அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

மிகவும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் ஷொட்டுகளை அடித்து விளையாடிய ஹசித, 39 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தினை தொடங்கியவர், U19-யில் புதிய வரலாறு படைத்தார். 152 பந்துகளை சந்தித்து 191 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதில், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 28 பவுண்டரிகள் அடங்கும்.

இதன் மூலமாக, U19யில் ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், Jakob Bhula-வின் சாதனையையும் முறியடித்தார். ஹசித, பெரும்பாலும் ‘Front Foot Stroke’ ஷொட்டுகளையே விளையாடினார்.

இந்த போட்டியில் இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 419 ஓட்டங்களை குவித்தது. மேலும், கென்ய அணியை 108 ஓட்டங்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.

கண்டுபிடிக்கப்பட்ட பாத சுவடுகள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம் : குழப்பத்தில் மக்கள்!!

 
மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாத சுவடுகளை இன்று கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் குழுவொன்று ஆய்வு செய்துள்ளது.

மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப் பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 2 பாத சுவடுகளே சந்தேகத்திற்கு மத்தியில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது அந்த பாதச்சுவடுகளை குறித்த குழுவினர் புகைப்படம் எடுத்ததுடன் பரிமாணங்களையும் அளவீடு செய்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் தற்போதைய நிலையில் எதனையும் கூற முடியாது என அந்த குழு கூறியுள்ளதுடன், இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்த பின் அறிக்கையொன்றை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் அனுமான் கடவுளின் பாத சுவடுகள் என தெரிவித்து தற்போது பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மூன்று நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாதச் சுவடுகள் சிவனுடையது என தெரிவித்து மக்கள் மஞ்சள் பூசி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திடீரென கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பாதச் சுவடுகளால் மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.