அரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்!!

கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது..

மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21ம் திகதி பயணம் கிளம்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான்.

அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம்.
நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன்.

லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடுத்து என் மன்றத்தின் நற்பணிகளாக மடைமாற்றினேன். ரத்த தானம், கண்தானங்கள் எல்லாம் அப்படித் தொடங்கியவைதாம்.

ஒரு கட்டத்தில் அந்த கிளப்புகளே வியந்து, ‘இங்கு வந்து செயல்படுத்துங்கள்’ என்று அழைக்கும் அளவுக்கு தானத்தில் உச்சம் தொட்டோம்.

அடுத்த கட்டமாக, ‘உங்கள் ஊரில் என்ன பிரச்சினைகள்’ என்று மக்களிடம் கேள்விகளை முன் வைத்தோம். ‘தெருவிளக்கு சரியாக எரியவில்லை’ என்பது தொடங்கி, ‘தெருவே இல்லை’ என்பது வரை விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அப்படி வந்ததில் ஒன்று தான், ‘சாக்கடை அடைத்துக் கொள்வதால் அதைக் கடந்து பிள்ளைகளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதைச் சரிசெய்து தரமுடியுமா’ என்ற ஒரு வேண்டுகோள்.

நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த நற்பணிமன்ற நிர்வாகிகள், ‘இடுப்பளவு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யணும்’ என்றும் ‘பிள்ளைகள் போக அதன் மீது பாலம் கட்டணும்’ என்றும் இருவேறு யோசனைகளை முன் வைத்தனர். ‘பாலம் கட்டுகிறோம் என்று அணில் விளையாட்டு விளையாட முடியாது. அணிலும் வராது. மனிதர்கள் நாம்தான் செய்ய வேண்டும்’ என்றேன். அடுத்தடுத்த நாள்களில் வந்த சம்பந்தப்பட்ட நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி ஒரு போட்டோவைக் காட்டி, ‘அந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டோம்’ என்றார்.

இடுப்பளவு சாக்கடையில் வரிசையாக கழிவுகளை ஏந்திய பக்கெட்டுகளுடன் நின்ற நற்பணிக் காட்சியைப் பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன.

நண்பர்களின் இத்தகைய நற்பணி என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றன. ஏழை வள்ளல்களால் கட்டமைக்கப்பட்டதுதான் என் நற்பணி இயக்கம். இப்படி அடுக்கடுக்கான தேவைகளும், எங்களுக்கான கனவுகளும் நிறைய உண்டு. அதை நோக்கிய பயணத்தில் அங்கும் இங்குமாக நின்று நிறைய செய்து கொண்டிருந்ததை இப்போது நடுவில் மையத்தில் நின்று செய்யப் போகிறோம்.
ஆமாம், நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச் சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது, நாங்கள் செய்து காட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத்திட்டம்.

இது என் நம்பிக்கை மட்டுமன்று, எங்களுள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. இந்தியாவின் பலம் கிராமங்களில்தான் இருக்கிறது என்று காந்தியார் விதைத்தது. நகரத்தை நோக்கிப் புலம் பெயர்பவர்கள் எல்லாம் தேவைக்காகத்தான் நகர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அந்தத் தேவைகள் அவர்களைச் சென்றடையும் பட்சத்தில், அவர்கள் நகரம் நோக்கி நகரமாட்டார்கள். அப்படிப்பட்ட முன்மாதிரி கிராமங்களை நிஜமாகவே உருவாக்கிக் காட்டுவதற்கான முனைப்புதான் இது.

ஆனால், மாவட்டத்துக்கு ஒன்று, மாநகராட்சிக்கு ஒன்று என்று ஏகப்பட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அகலக்கால் வைக்கப்போவது இல்லை. முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

விரைவில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துக்குப் பயணமாகும் நான், அங்கு பேசப்போவதும் இதைப் பற்றித்தான். ஆம், நான் போவதே, திறமைகளைச் சேர்க்கத்தான். அவர்களை என் தமிழகக் கிராமங்களை நோக்கி அழைக்கப் போகிறேன்.
எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது.

ஆனால், அந்த உதவி நமக்கு அதி அவசியம். நிச்சயம் ஆர்வத்துடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இது நாட்டுக்குச் செய்யும் மரியாதை. ஏனெனில், கிராமங்களில்தான் நம் பலமிருக்கிறது. நகரங்களில் புற்றீசல் போல் எல்லோரும் ஓரிடத்தில் அடைந்து கொண்டு க்யூ கட்டுவது மட்டுமே மிச்சமிருக்கிறது.

சரி கிராமத்தானுக்கு என்ன வேண்டும்? ‘ஏழு கடல் கடந்து வண்டுக்குள் இருக்கும் அரக்கனின் உயிர்’ என்று சொல்லும் பழங்கதைபோல் காடு, மலை கடந்து ஏழுமலை தாண்டிப் போய்க் கற்கும் ஒரு பொருள்தான் கல்வி என்ற நிலைமாறி நவீனக் கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்கன் பள்ளியிலும், பிரிட்டீஷ் கல்விக் கூடங்களிலும் சேர்க்கிறார்களே அந்தக் கல்வியை நம் கிராமங்களுக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

இதற்கான முன் விதைகளை காமராஜர் போன்றோர் விதைத்துவிட்டார்கள். அவ்வளவு ஏன் ஜஸ்டீஸ் பார்ட்டி காலத்திலேயே அந்த விதை விதைக்கப்பட்டுவிட்டது. அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நான் மூத்தோர்களைப் பார்த்து வியந்தும் நிற்க முடியாது, வரப் போகும் இளைஞர்களைப் பார்த்து இகழவும் முடியாது. அவர்களின் அறிவையும் இவர்களின் பலத்தையும் சேர்த்து கிராமத்துக்குள் பாய்ச்ச வேண்டும்.

அடுத்து நல்ல குடிநீர் வேண்டும், சுற்றம் சுத்தம், சுகாதாரம் வேண்டும், கலை நயம் கொண்ட பொழுது போக்கு வேண்டும், வெளியே போய் ஊர் திரும்ப நல்ல போக்குவரத்து வசதி வேண்டும், நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். இப்படி அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் செய்யப் போகிறோம்.

ஆம், ‘முற்றும் கோணல்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. ஆடிக்காட்டு என்றால் ஆடிக்காட்ட வேண்டும். இப்போது நாங்கள் ஆடிக்காட்டப் போகிறோம். முதலில் ஒரு கிராமம். அதை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுபவப் பாடத்தைக் கொண்டு அடுத்தடுத்த கிராமங்களில் பணி முடிக்கப் போகிறோம்.

இந்த ‘நாளை நமதே’வுக்கான முதல் கிராமத்தேடலுக்காகச் சென்ற நம் குழுவினர், ‘‘ஒவ்வொரு கிராமமுமே அந்த முதல் கிராமத்துக்கான ‘லட்சணங்களுடன்’ இருக்கின்றன’’ என்ற அதிர்ச்சியை சொன்னார்கள்.

முக்கியமாக, தமிழாசிரியர்கள் இல்லை என்றார்கள். மொழிப்பாடம் கற்றுத்தரத் தமிழாசிரியர்கள் இல்லாமல் எதிர்காலத் தமிழகத்தை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம் என்ற கவலை எனக்கு.

மடிக்கணினியையும் கைப் பேசியையும் சாப்பிட முடியாது. ஆனால், அவை தாம் பலருக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. மடிக் கணினி கொடுத்துவிட்டதாலேயே அறிவு வந்துவிடும் என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.

அதை இயக்குவதற்கே தனி அறிவு வேண்டுமே. அது ஒரு கருவிதானே. மீன் இருக்கும் இடம் வேறு, தூண்டில் இருக்கும் இடம் வேறு எனும் போது அதைக் கொண்டு போய்ப் போட்டு எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தந்தால்தானே அவன் சுயமரியாதையுடன் சுயமாக வாழ்க்கை நடத்த முடியும்.

டுவிட்டரில் போட்டு பார்த்துவிட்டேன். ட்வீட் மழையே பொழிந்து விட்டேன். ஆனால் பெய்வது, தோல் கனத்தில் அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அப்படியிருக்க நான் மழை பொழிந்து என்ன பயன்? அதனால்தான் களம் காணத் தயாராகிவிட்டேன். அதற்கான முயற்சிதான் இந்த ‘நாளை நமதே.’

ஆம், நாளை நிச்சயம் நமதே. களத்தில் சந்திப்போம், கரம் கோர்ப்போம், தமிழகம் காப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!

கபாலி படத்தை தொடர்ந்து தற்போது காலா படத்தில் பணியாற்றி வருகிறார் ரஜினிகாந்த். அரசியல் கட்சி துவங்கும் பணிகள் ஒருபுறம் நடக்க தற்போது இந்த படத்திற்கு டப்பிங் பேசி வருகிறார் அவர்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

படத்தின் தலைப்பில் காலா என்ற பெயரை பயன்படுத்த கூடாது என மனுதாரர் கேட்டிருப்பது பற்றி விளக்கமளிக்க ரஜினி, இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய வர்த்தகசபைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற பிரித்தானிய கோடீஸ்வரர்!!

 
பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

55 வயது Robert Peters, பிரித்தானியாவில் Blenheim Roadஇல் வசித்து வரும் கோடீஸ்வரர் ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி இவர், தனது 7 வயது மகள் சோபியாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இதனால் இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், தனது கவனக்குறைவினால் சோபியா இறந்துவிட்டதாக முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஏப்ரல் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வீட்டில் வசித்துவரும் Robert, மூன்று திருமணங்கள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ் கோல் மூலம் காதலில் விழுந்த இளம் பெண் : காதலன் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் காதலன் ஏமாற்றியதல் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவரான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் சந்தியா (19) என்ற மகளும் உள்ளனர்.

தனியார் கிளினிக்கில் தாதியாக பணிபுரிந்து வரும் சந்தியாவுக்கும், தாம்பரத்தை சேர்ந்த அஜிஸ் என்ற ரபீக் (26) என்பவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன், மிஸ் கோல் மூலம் நண்பராகினர். அதன் பின் இது காதலாக மாறியுள்ளது.

ஆனால் இவர்களின் காதலுக்கு ரபீக்கின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழந்து வந்தனர்.

இந்நிலையில் சந்தியாவின் தந்தை மகள் காணமல் போனது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் திருவண்ணாமலை பகுதியில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை மீட்ட பொலிசார், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்நிலையத்திற்கு வந்த அவர்கள் நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வதாக கூறி சென்றுள்ளனர்.

ஆனால் ரபீக்குக்கோ வேறு இடத்தில் பெண் பார்க்கும் முனைப்பில் அவரின் பெற்றோர் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் சந்தியாவுக்கு தெரியவர, ரபீக்கிடம் கேட்ட போது, அவர், ராயபுரத்தில் போக்குவரத்து பொலிசாக இருக்கும் எனது பெரியப்பா நமது திருமணத்திற்கு உதவி செய்வார் என்று கூறியுள்ளார். சந்தியாவின் வீட்டிற்கு சென்ற பெரியப்பா இதைப் பற்றி பேசியுள்ளார். அப்போது சந்தியா அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கண்ணீர்விட்டுள்ளார்.

இதுபற்றி நான் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிச் சென்ற அவர் பின்னர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கைவில்லை. இதன் காரணமாக சந்தியாவின் பெற்றோர், ரபீக்கின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளனர். அதற்கு அவர்கள் எங்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, தன்னை ரபீக் ஏமாற்றிவிட்டான் என்று கூறி நேற்று முன் தினம் வீட்டில் மண்ணெண்ணயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 வயதுச் சிறுவனை தலைகீழாக தொங்கிவிட்டு அடித்த வளர்ப்புத் தந்தை!!

மத்தியபிரதேசத்தில் வளர்ப்பு தந்தையொருவர் 3 வயது சிறுவனை தலைகீழாக கட்டித் தொங்கிவிட்டு செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தின் ஷாஜாபூரிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவத்தின் போது தடுக்க வந்த சிறுவனின் தாய்க்கும் அடி விழுந்ததாகவும், அக்கம்பக்கதினர் சிறுவனை மீட்க முயன்றும் பயன் அளிக்கவில்லை எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை தர்மேந்திரா 1 முதல் 10 வரை எண்களை மனனம் செய்து ஒப்புவிக்க சொல்லி சிறுவனை வலியுறுத்தியுள்ளார், ஆனால் சிறுவனுக்கு 1 முதல் 10 வரை மனப்பாடமாக தெரியாததால் ஒப்புவிக்கும் போது திணறியுள்ளான், இதனால் கடும் ஆத்திரமடைந்த தர்மேந்திரா சிறுவனை தாக்க தொடங்கியுள்ளார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த சுற்றத்தாரிடமும் கோபத்தை காட்டியுள்ளார், செய்வதறியாது திகைத்தபடி சிறுவனை காப்பாற்ற முயன்ற மனைவியையும் அடித்துள்ளார் தர்மேந்திரா.

இதைஅடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 100 க்கு போன் செய்து பொலிஸ்க்கு தகவல் தெரிவித்தனர், பொலிஸ் வருவதை அறிந்த தர்மேந்திரா தப்பியோடியுள்ளார்.

தந்தையின் சித்ரவதையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு கண், உதடு, கை, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

தப்பியோடிய தர்மேந்திராவை பிடிக்க தீவிரம்காட்டி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான ஐஸ்வர்யா ராய்!!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் 44 வயதினை தொட்டாலும், இன்றும் அழகு பதுமையாக வலம் வருகிறார்.

இவர் எங்கு சென்றாலும் இவரை பார்ப்பதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது, இவர் தனது வயதுக்கு ஏற்றாற்போல் ஆடைகளை அணிந்துகொள்வதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் டுபாயில் உள்ள மகால் ஒன்றின் திறப்பு விழாவிற்கு, நீல நிற ஆடையில் சென்றிருந்தார். இவரை கண்டதும், ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். ரசிகர்களின் அருகில் சென்ற ஐஸ்வர்யா, தனது ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு பக்கம் மட்டுமே Sleeve உள்ளதால், மற்றொரு பக்கத்தை தனது கைகளால் மறைத்துக்கொண்டு, ரசிகர்களுடன் கைகுலுக்கியுள்ளார். இது முதல் முறை கிடையாது, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவர், பெருமைப்பட வேண்டிய நேரத்தில் தனது ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞன்!!

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்து, சடலத்துடன் பாலியல் உறவு கொண்ட சம்பவத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Artyom Iskhakov என்ற 19 வயது இளைஞர் Tatiana Strakhova என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில் Tatiana வேறொரு இளைஞருடன் நெருக்கமாக பழகிய நிலையில் Artyom உடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர் Tatiana வை திட்டமிட்டு தமது அறைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவரை கொடூரமாக தாக்கிய இளைஞர் சித்திரவதை செய்து கத்தியால் குத்தியுள்ளார். குற்றுயிராக கிடந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

இதனையடுத்து உணவருந்த சென்ற இளைஞர் தமது அறையில் படுத்து உறங்கியுள்ளார். சில மணி நேரங்கள் கடந்த நிலையில் மீண்டும் அந்த சடலத்துடன் குறித்த இளைனர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட Artyom Iskhakov, இரு வீட்டாருடன் மன்னிப்பு கோரியதுடன், இருவரது உடல்களும் எங்கே உள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் சமூக வலைதள பக்கத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் விலாவாரியாக விவரிக்கப்பட்டிருந்தது. கடைசியாக, காதல் தமது கண்ணை மறைத்ததாகவும், ஆனால் வேறொரு ஆணுடன் அவர் நெருக்கமாக பழகி வந்தது கேள்வியுற்றதும், காதலை விட அவருடன் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலி!!

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் தர்மபுரி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நிலையில் அதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

இரண்டு சடலங்களையும் மீட்ட பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்தார்கள். விசாரணையில், அந்த ஆண் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சோலைகுருசாமி (வயது 25) என்பதும், உடன் இறந்து கிடந்த பெண்ணின் பெயர் கவுசல்யா (17) என்பதும் தெரியவந்தது.

சோலகுருசாமியும் கவுசல்யாவும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காதல் ஜோடி இருவரும் நேற்று காலையில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பியைக் கூட தவறாகத்தான் பார்க்கிறார்கள் : மைனா நந்தினி ஆவேசம்!!

சின்னத்திரை நடிகை நந்தியினியின் கணவர் கார்த்திகேயன் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர், இறப்பதற்கு முன்னர் தற்கொலைக்கு தனது மாமனார் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார்.

இதனால் நந்தியினியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் நந்தினியின் மீதும் கார்த்திகேயனின் நண்பர்கள் சில குற்றங்களை சுமத்தியதால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.

தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள இவர் இழப்பு என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் கொடுமையான ஒன்று, எனது கணவர் இறந்தது எனக்கு இழப்பு தான். ஆனால், அதனை நினைத்துக்கொண்டு எனது குடும்பத்தை கைவிட முடியாது. எனது பெற்றோரை இரண்டு கண்களாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது, அந்த பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

நடிப்புதுறையில் இருக்கும் எனக்கு எனது நடிப்பு தொடர்பான குறைகளை மட்டும் சொல்லுங்கள், அதனை தவிர்த்து எனது சொந்த விடயங்களில் தலையிட வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டேன், அடுத்த திருமணநாள் வருவதற்கு முன்னரே எனது கணவர் இறந்துவிட்டார். நான் அவருக்கு மிகவும் உண்மையாக இருந்தேன். ஆனால் அவர் எனக்கு உண்மையாக இல்லை. இப்போது கூட எனக்கு பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

எனது தம்பி ஒரு டான்ஸர் நான் அவனோடு சென்றால், நந்தினி ஒரு டான்ஸரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின. அப்படியென்றால் பார்ப்பவர்களின் பார்வை தவறாக இருக்கின்றது.

தம்பியை கூட தவறாகத்தான் பார்க்கிறார்கள், ஆனால் அதனை நான் கண்டுகொள்ளப்போவதில்லை என கூறியுள்ளார்.

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த இளைஞர் மீது மோதிய ரயில்!!

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் விரைவு ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்று ரயிலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர் பெயர் சிவா. அவர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், பாரத் நகர் ரயில் நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் ரயில் வந்துகொண்டிருக்கும் தண்டவாளத்தின் அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார்.

தொலைவிலிருந்து வரும் ரயில், அருகில் வரும்வரை செல்பி ஸ்டைலில் தொடர்ச்சியா வீடியோ எடுத்துள்ளார். அவர், தன் மீது ரயில் மோதும் என்பதை கணிக்காமல் தண்டவாளத்தின் மிக அருகே நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே ரயில் அவர் மீது மோதியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த அவரை, ரயில்வே பொலிஸார் அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணொருவர் மரணம்!!

வைத்தியரின் கவனக்குறைவால் தனது மனைவி உயிரிழந்துள்ளதாக கணவன் குற்றம் சாட்டியுள்ளார். பேராதனை – சகபோகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

42 வயதுடைய பெண் ஒருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் பேராதனை வைத்தியசாலை வைத்தியரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சையின் பின்னர் கடும் நோய்வாய்ப்பட்ட இந்த பெண் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வைத்தியரின் சத்திர சிகிச்சை காரணமாக பெண்ணின் உடற் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம்!!

 
நியூசிலாந்தில் 8 வருடங்களாக வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் குறித்த குடும்பம் நியூசிலாந்தில் தொடர்ந்தும் அந்த நாட்டில் வசிப்பதற்கு மனிதாபிமான முறையீடு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குடும்பத்திலுள்ள பிள்ளைகள் அங்கு பாடசாலை கற்கையை தொடர்வதற்கு நியூசிலாந்து அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

பிள்ளைகளின் தாய் தினேஷா அமரசிங்க மற்றும் தந்தை சாம் இந்த செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். “நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது பிள்ளைகளின் கற்கைகள் பாதிக்கும் என வருத்தத்தில் இருந்தேன். எனினும் இந்த செய்தி என்னை மகிழ்ச்சியடைய செய்துள்ளது” என தாய் தெரிவித்துள்ளார்.

11, 10 மற்றும் 8 வயதுடைய விஜேரத்ன என்பவரின் பிள்ளைகள் குயின்ஸ்டவுன் முதன்மை பாடசாலையில் கல்வி கற்று வந்த திறமையான மாணவர்களாகும்.

2010ஆம் ஆண்டு இந்த சிறுவர்களின் தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார். அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஒக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ்டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார். 2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி ஏற்பட்டமையினால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும், அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோம்பர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் இனி வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவர்களது குடும்பம் கடந்த நவம்பர் 21ம் திகதி நியூசிலாந்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் அந்த குடும்பத்தினர் தொடர்ந்து அங்கு தங்குவதற்கு மனிதாபிமான முறையீடு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அதன் முடிவிற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்புக்கு கிடைத்த வாய்ப்பு!!

யாழ். பல்கலைக்கழக தொழிநுட்ப பீட முதலாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு போட்டி மற்றும் கண்காட்சியில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.

இப்போட்டியும் கண்காட்சியும் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை பேங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் 97 நாடுகளை சேர்ந்த 1000க்கு மேற்பட்ட பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் பங்குபெற்றவுள்ளனர்.

வினோஜ்குமார் கண்டுபிடித்த கணித உதவியாளன் (Maths Helper) எனும் கணித கருவி மூலம், கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணமாகும்.

இதன் மூலம் அனைத்து மாணர்களும் பிறரின் உதவியின்றி இலகுவான முறையில் கற்கக்கூடியதாகவும் செலவு மிக மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும்.

மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழிநுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தப்படாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் கற்கக்கூடியதாக இருக்கின்றது.

இக்கண்டுபிடிப்பு 2017ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி நடத்திய ஆயிரம் படைப்புக்கள் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.

இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்து 31 தேசிய விருதுகளும் ஒரு சர்வதேச விருதையும் பெற்றுள்ளார்.

கிழக்கிலங்கையின் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், “நான் தரம் 6 இல் கல்வி கற்கும் போதே இவ்வாறான கணிதம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதுப்புது தொழிநுட்பங்களை ஒருங்கிணைத்து தற்போது இதனை உருவாக்கியுள்ளேன்.

புத்தாக்க சிந்தனைகள் பாடசாலை மாணவர் பருவத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக மாணவர்கள் தங்கள் ஓய்வுநேரங்களில் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் வரலாறு பற்றி ஆர்வத்துடன் தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அன்றாட சூழலில் காணப்படும் பிரச்சினைகளை குறிப்பெடுத்து அவற்றுக்கான தீர்வுகளை இனங்கண்டு கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் பொறுமையும் செயலில் விடாமுயற்சியும் இருந்தால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியுமென குறிப்பிட்டிருந்தார்.

சிறுமி கொலை : 1,150 டி.என்.ஏ சோதனைக்குப் பின்னர் சந்தேக நபர் கைது!!

பாகிஸ்தானில் 6 வயதான ஜைனப் என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேச நபரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீஃப் அறிவித்துள்ளார்.

அந்த சந்தேக நபர் 24 வயதான இம்ரான் அலி என லாகூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பஞ்சாப் முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கசூர் நகரை சேர்ந்த இம்ரான் அலி தொடர் கொலையில் ஈடுபட்டவர். இரண்டு வருட காலத்தில், 6-7 பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இம்ரான் அலி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பஞ்சாப் முதல்வர் கூறுகிறார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க, 1,150 பேரின் டி.என்.ஏ சோதிக்கப்பட்டதாகவும், ஆனால், கசூர் நகரில் குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் இம்ரான் அலியின் டி.என்.ஏ 100 சதவீதம் ஒத்துப்போவதாகவும் பஞ்சாப் முதல்வர் கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்படும் நபரிடம் இருந்தோ அவரது வழக்கறிஞர்களிடம் இருந்தோ உடனே எந்த கருத்துகளும் வரவில்லை.

சிறுமி ஜைனப் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

பல நாட்களாகக் காணாமல் போன ஜைனப்பின் உடல், இந்த மாத தொடக்கத்தில் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமி ஜைனப்பின் தந்தை அமீன் அன்சாரியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். வழக்கு நடக்கும் விதம் திருப்திகரமாக இருப்பதாக அவர் கூறினார்.

சந்தேக நபர் இம்ரான் அலி, ஜைனப்பின் குடும்பத்திற்கு தெரிந்தவர் என ஜியோ செய்திகள் கூறியிருந்தது. ஆனால், இம்ரான் தனது உறவினர் என கூறப்படும் வதந்திகளை அமீன் அன்சாரி மறுத்தார்

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்!!

பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர். நடிகர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. இவர் பிரபுசாலமன் இயக்கும் கும்கி-2 படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை.

இந்நிலையில் ஷிவானி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஷிவானி தனது முதல் படமாக இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்த 2014ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘2 ஸ்டேட்ஸ்’ என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் தெலுங்கில் பல படங்களை இயக்கி, நடித்துள்ள அடிவி சேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தியில் ஆலியாபட் நடித்த நாயகி பாத்திரத்தில் ஷிவானி நடிக்கிறார்.

வெங்கட் ரெட்டி இயக்கும் இந்த படத்தை லக்‌ஷ்யா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனூப் ரூபன்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அக்காவும் தம்பியும் இணைந்து செய்த மோசமான செயல்!!

புத்தளம் நீதிமன்றத்திற்குள் கஞ்சா விற்பனை செய்ய சென்ற அக்காவும், தம்பியும் கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டி – பள்ளிவாசல்துறையில் வசித்து வரும் இவர்கள் வழக்கிற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி குழந்தையுடன் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் பெண்ணை சோதனையிட்ட போது, அவரது மார்பு கச்சையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்ணின் சகோதரனுடைய பணப் பையை சோதனையிட்ட போது அதில் ஒரு கஞ்சா பொதி இருந்துள்ளது.

சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகளுக்கு மிகவும் தந்திரமான முறையில் அதிக விலைக்கு இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்து வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.