வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனிமூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஸ்ரீநகர் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிங்கராசா ஆரோக்கியராசா (ஓய்வுபெற்ற டெலிகொம் ஊழியர்) 11.12.2017 அன்று காலமானார்.
அன்னார் சிங்கராசா மரியரட்ணம் அவர்களின் அன்பு மகனும், ருக்மணிதேவிவின்(ஆசிரியை-வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) அன்புக் கணவரும், கந்தையா தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மருமகனும், தர்ஷிகா(அவுஸ்திரேலியா), சிந்துகா (ஆசிரியை – வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரிட்டோ(அவுஸ்திரேலியா), விமல்ராஜ்(கணக்காய்வாளர்-முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 14.12.2017 அன்று பூந்தோட்டம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரூந்துகள் இன்றியும் வியாபார நிலையங்களில் மக்கள் இன்றியும் வெறிச்சோடிக்காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இன்று காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருவதைக்காணக்கூடியதாக இருந்தது.
வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் (03.01.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபையின் மகாறம்பைக்குளம் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது நேற்று (02.01.2018) இரவு 7 மணியளவில் இனந்தெரியாத நபர் மூவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாயார் தர்மகுலசிங்கம் சத்தியதேவி ( வயது 56 ) என்பவர் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றிரவு 7 மணியளவில் மூவர் வீட்டிக்கு வந்து உங்களது மகன் எங்கே என கேட்டனர். நான் அவர் வீட்டில் இல்லை வெளியே சென்று விட்டார் என தெரிவித்தேன் . அவர் என்ன தேர்தலா கேட்கின்றார். அவனை வரச் சொல்லுங்கள் வெட்டாமல் விட மாட்டேன் என கூறி விட்டு என்னை தகாத வார்த்தையினால் பேசினார்கள்.
அப்போது அவ்வாறு கதைக்க வேண்டாமென நான் தெரிவித்த போது எனக்கு தலைக்கவசத்தினால் அடித்து விட்டு, வீதியில் உங்கள் மகளை கண்டால் வெட்டுவோம் வீட்டுடன் கொழுத்துவோம் என அச்சுறுத்திவிட்டு தப்பித்து சென்று விட்டனர் என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டனில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டதால் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் இயக்கப்படும். இந்த கருவியின் மொத்த மதிப்பு 73 லட்சமாகும்.
இது அடங்கிய கருவியை ஹூசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் அந்த பையை எடுத்து கொண்டு தான் செல்வார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘என் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட உதவிய ஹரிபீல்ட் மருத்துவமனைக்கு நன்றி. நான் உயிருடன் வாழ ஒரு தீர்வை உருவாக்கியது மிக சிறப்பானதாகும்’ என கூறியுள்ளார்.
இதயத்தை பையில் சுமந்து கொண்டு பிரிட்டனைச் சேர்ந்த பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் 8.5 தொன் எடை கொண்ட விண்கலம் ஒன்று 2018 ஆம் ஆண்டு பூமியை நோக்கி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விண்கலம் எங்கு, எப்போது விழும் என்பதை ஆய்வாளர்களால் கணிக்க முடியாதுள்ளது.
2011 செப்டெம்பரில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுவப்பட்ட டியாங்கொங்–1 விண்கலம் 2018 ஜனவரி மாதமளவில் பூமியை நோக்கி விழும் என்று கடந்த ஒக்டோபர் மாதம் அது பற்றி ஆய்வு நடத்திய நிபுணர்கள் கணித்திருந்தனர்.
இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டை இழந்து விட்டதை சீன விண்வெளி அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு உறுதி செய்தனர். இது 2017 பிற்பகுதி மற்றும் 2018 நடுப்பகுதிக்குள் பூமியை நோக்கி விழும் என்று அந்த அதிகாரிகள் கணித்தனர்.
இந்த விண்கலம் அட்சயரேகையின் 43 பாகை வடக்கும் மற்றும் 43 தெற்கு பகுதியால் மீண்டும் பூமிக்குள் நுழையும் என்று ஆய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். இது நடுக் கடல் பகுதியாகும். எனினும் இதன் பாகங்கள் மனிதர் வாழும் பகுதியில் விழுவதற்கு 10,000இல் ஒரு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக கருத்து பரிமாறி வருபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது..
வணக்கம்.
பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது.
அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.
உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள், தமிழர்களும் புரிவார்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு சூரியனில் ஆய்வு நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்புகிறது.
ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து ‘நாசா’ அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘நாசா’ விண்வெளியில் இதுவரை உலக நாடுகள் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த ஆண்டு சூரியனில் ஆராய்ச்சி செய்வது என முடிவு செய்துள்ளது. அதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்பவுள்ளது.
இது சூரியனின் அதீத வெப்பம் மற்றும் சோலார் கதிர்வீச்சு குறித்து ஆய்வு மேற்கொள்ளும், சூரியனின் மேலடுக்கு 10,000 டிகிரி வெப்ப நிலையில் உள்ளது. அதன் வளிமண்டலமோ அதைவிட 3 மடங்கு அதிக வெப்பத்தில் இருக்கிறது.
இதன்மூலம் சூரியனை தொட்டுவிட வேண்டும் என்ற முடிவில் அமெரிக்காவின் நாசா மையம் உள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் உட்புற ஆய்வு மற்றும் வெளிப்புற தோற்றத்தை தொடர்ந்து ஆராய திட்டமிட்டுள்ளது. தற்போது அங்கு முகாமிட்டிருக்கும் விண்கலத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது.
போதைக்கு அடிமையானவர்கள் இலங்கையில் மட்டும் சுமார் 45 ஆயிரம் பேர் இருப்பதாக ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
மேற்படி சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர ஃபெர்னாண்டோவே இத்தகவலை வெளியிட்டார்.
“நாட்டிலுள்ள 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு கிலோ ஹெரோயினைப் பயன்படுத்துகின்றனர். இதனடிப்படையில், வருடத்துக்கு ஏறக்குறைய ஒன்றரை டன் ஹெரோயின் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.
“தடைசெய்யப்பட்ட போதை மருந்து என்பதால் பெரும்பாலும் ஹெரோயின் நாட்டுக்குள் கடத்தப்பட்டே கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கைக்குள் ஹெரோயின் எடுத்துவரப்படுகிறது.
“இது தவிர, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 500 ஹெக்டெயாருக்குச் சமமான பரப்பளவில் கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது.
“எனினும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இலங்கையை போதைப் பழக்கம் அற்ற ஒரு நாடாகப் பிரகடனப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை தற்போதைய அரசு ஆரம்பித்துள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.
தென் கொரியத் தலைநகர் சோலிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள, பனியால் போர்த்தப்பட்ட நகரம் இது. இங்கு வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே பதிவாகியிருக்கிறது, சாலையில் மக்கள் நடமாட்டமும் மிகவும் குறைவாகவே உள்ளது.
நாங்கள் தேடி வந்தவர் ஒரு குடியிருப்புப் பகுதியின் ஒற்றை அறை வீட்டில் வசிக்கிறார். அழைப்பு மணியை அழுத்தியவுடன் 48 வயது பெண்மணி ஒவர் கதவை திறந்தார். அச்சத்துடன் காணப்பட்ட அந்த பெண் எங்கள் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்துக்கொண்டார்.
அமர்வதற்கு தரையில் ஒரு விரிப்பு போடப்பட்டிருந்தது. அதே அறையில் சமையலறையும் இருந்தது. கழிவறைக்கு செல்லும் கதவும் அருகிலேயே இருந்தது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் உரிமையாளராக இருந்தவர் மி ரியோங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின்சகோதரியின் குடும்பம் தென்கொரியாவுக்கு ஓடிவந்துவிட்டது, அவர்கள் தொலைகாட்சியில் ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார்கள்.
உடனே இவரது குடும்பத்திற்கு பிரச்சனை தொடங்கியது. சிறையில் சில காலத்தை கழித்த இவர் பிறகு, சீனாவின் தேவாலயங்களில் ஒளிந்து தலைமறைவாக வாழ்ந்தார்.
பேசும்போதே விசும்புகிறார் மி ரியோங். “என்னை சிறையில் அடித்தார்கள், துன்புறுத்தினார்கள். வேறு பலரின் சடலங்களை புதைக்கச் செய்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்ததும் எனக்கு விவாகரத்து செய்து வைக்கப்பட்டது. என் மகள் அங்கேயே இருந்துவிட்டாள், நான் மட்டும் சீனாவுக்கு தப்பி ஓடிவிட்டேன்” என்று அவர் கூறினர்.
சீனாவில் பல ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த பிறகும் வடகொரியாவில் இருந்து தனது மகளை வெளியே கொண்டு வரமுடியவில்லை என்று சொல்லி வருந்துகிறார் மி ரியோங்.
தென்கொரியாவில் ஒரு நகரில் வந்து வசிக்கும் தனது சகோதரியின் முயற்சிகளால் தென்கொரியா வந்துவிட்டதாக கூறும் மி ரியோங், அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறார்.
“உணவு விடுதி ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினேன். நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தேன். அப்போதுதான் தங்குவதற்கு ஒரு கூரையாவது கிடைக்கும். இவ்வளவு கடினமான வேலைகளை செய்து பழக்கமும் இல்லை” என்கிறார் மி.
“பிரச்சனை அத்துடன் முடியவில்லை, மாரடைப்பு ஏற்பட்டு, பல மாதங்கள் படுத்த படுக்கையாகிவிட்டேன். சம்பாதிக்கும் வாய்ப்பும் முடங்கிவிட்டது. வருமானமே இல்லாமல் எப்படி வாழ்வது? பசி என்று ஒன்று இருக்கிறதே? ” என்று நிதர்சனத்தை பேசுகிறார் மி ரியோங்.
“அதன்பிறகு முதியவர்களுக்கு பணிபுரியும் வேலையைத் தொடங்கினேன். இதுவும் சுலபமானது இல்லை. மிக மோசமாக நடந்துக் கொண்டாலும் சகித்துக் கொள்ளவேண்டும். ஆனால் என் மகளை வடகொரியாவின் நரகத்தில் இருந்து மீட்கவேண்டும், அதற்காகவாவது பணம் சம்பாதிக்கவேண்டும்” என்று சொல்கிறார் மி.
1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிவுக்கு வந்தபிறகு சுமார் 30 ஆயிரம் மக்கள் வடகொரியாவை விட்டு வெளியேறிவிட்டனர்.
பல தசாப்தங்களாக தொடரும் கிம் குடும்பத்தினரின் ஆட்சியின் வலிமிகுந்த நினைவுகளை மறந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கும் நம்பிக்கையில் மக்கள் இருக்கின்றனர்.
பலர் சீனாவிற்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் தென்கொரியாவுக்கு வந்தால் மிக நீண்ட விசாரணைகளை சந்திக்கவேண்டும்.
தகவல்கள் திருப்தியளித்தால் பிறகுதான் அவர்கள் அங்கு குடியேற அனுமதிக்கப்படுவார்கள். வட கொரியாவை விட்டு வெளியேறிய மக்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதில் கோபமோ வருத்தமோ எதுவுமே இல்லை.
வெளியேறிவர்களின் மிக நெருங்கிய உறவினர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ஆபத்தான வடகொரியாவில் இருந்து வெளியே வரவில்லை, அவர்கள் தற்போதும் மிகவும் மோசமாக நிலையில் இருக்கிறார்கள்.
முன் மி ஹவாவைப் போலவே அங்கிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. முன் மி ஹாவின் கணவர் ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். குடும்பம் நன்றாகவே சென்றுக் கொண்டிருந்தது. 1990களில் ஏற்பட்ட வறட்சியினால் அவர்களது குடும்பத்தினர் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
அவர்களது கருத்துப்படி, தலைநகர் பியோங்யாங்கில் இருந்து ஒன்றரை மணி நேரம் பயணிக்கும் தொலைவில் இருக்கும் ஹயரோங்-சி என்ற நகரத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது, எதிர்ப்பவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தனது மகளுடன் நாட்டை விட்டு வெளியேறிய முன் மி ஹவா லாவோஸில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
அவர் கூறுகிறார், “அங்கிருந்து எல்லையை கடக்கும்போது என்னுடைய ஒரு மகள் காணமல் போய்விட்டாள். நானும், எனது மற்றொரு மகளும் மட்டுமே நாட்டை விட்டு தப்பமுடிந்தது. அதன்பிறகு என் கணவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார், போலி ஆவணங்களை தயாரித்து அவரது சகோதரர் காப்பாற்றினார்”.
“அங்கே எந்தவொரு மனிதருக்கும் முக்கியத்துவம் கிடையாது, எல்லோரும் ரோபோக்களே. நானும் என் மகளும் இங்கே தென் கொரியாவில் சிறிய ஹோட்டல்களில் வேலை செய்கிறோம். வேலைக்கு மற்றவர்களுக்கு சமமான ஊதியம் கிடைக்காவிட்டாலும் நான் இங்கிருந்து திரும்பிப் போக விரும்பவில்லை” என்று அவர் உறுதியுடன் சொல்கிறார்.
அண்மை ஆண்டுகளில் வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பியோடி வரும் மக்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. ஆனால் அப்படி தப்பி வந்தவர்களும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தென்கொரியாவின் எம்.பி.யான ஓக்னீம் சுங், ´வட கொரிய அகதிகள்´ குழுவின் தலைவராகவும் பணிபுரிந்தவர்.
அவர் கூறுகிறார், “வட கொரியாவில் இருந்து தப்பித்து வந்தவர்கள் ஜனநாயக சமுதாயத்தில் பங்கேற்கவேண்டும் என்பதற்கான முழு முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம். ஆனால் ஐந்து முதல் ஆறு தசாப்தங்களாக மாறியிருக்கும் இவர்களின் சிந்தனையை மாற்றுவது எளிதாக இல்லை. தென் கொரியாவின் குடிமக்களாக இல்லை என்பது மற்றவர்களுடன் ஒன்றிப்போக அவர்களுக்கு தடையாக இருக்கிறது, அதனால் அவர்கள் இயல்பாக அதிக காலம் ஆகிறது. ”
வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு தப்பி வந்தவர்களில் பலர் பலர் இன்னும் பழைய நினைவுகளுடன் போராடி வருகின்றனர்.
வட கொரியாவின் எல்லைக்கு அருகே இருக்கும் எந்தவொரு தென் கொரிய நகரத்திலும் என்னால் வசிக்க முடியாது, இரவில் தூக்கம் வருவதில்லை, ஏனென்றால் மோசமான நினைவுகளை நெஞ்சம் மறப்பதில்லை” என்று துயர நினைவுகள் நீங்கா வடுக்களாக இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார் மி ரியோங்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு தொடர்பான மோதல் மீண்டும் பெருவெடிப்பாக மாறியிருக்கிறது. அரச பேருந்துகள் தமது சேவையை நிறுத்திப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த இழுபறி கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து வருகின்றது.
அதனை ஆறப்போட்டு ஆறப்போட்டு பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று முதலமைச்சரும் முயன்று முயன்று இயலாமல்போக, அதிரடியாகச் சில முடிவுகளை அறிவித்தார். அது இப்போது பூதாகரமாகி நிற்கின்றது.
வவுனியா மத்திய பேருந்து நிலையம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சிறிய நெருக்கடியான வவுனியா நகரினுள் பேருந்து நிலையமும் இருப்பதால் மேலும் நெருக்கடியும் போதாமைகளும் இருக்கின்றன.
அரச பேருந்து நிலையம் நகரின் மத்தியில் இருப்பதால் தனியார் பேருந்துகளும் நகரில் உள்ள குறுக்கு வீதிகளில் நின்றே சேவைகளில் ஈடுபடுகின்றன.இது நகரினுள் போக்குவரத்து நெரிசலை இன்னும் அதிகமாக்குகின்றது.
வவுனியா நகர விரிவாக்கத் திட்டங்களின் கீழ் பேருந்து நிலையம் நகரின் மையத்தில் இருந்து அகற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் 195 மில்லியன் ரூபா செலவில் தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் முக்கால் கிலோ மீற்றர் தூரத்தில் யாழ் வீதியில் அமைக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு தை மாதத்தில் அது திறந்து வைக்கப்பட்டது. திறந்த அன்று தவிர ஒரேயொரு நாள்கூட கடந்த வருடத்தில் அந்த நிலையத்தில் இருந்து சேவைகள் இடம்பெற்றதில்லை.
இந்தப் பிரச்சினையின் பின்னணியில் கட்சி அரசியல் பலமாகக் காலூன்றி நிற்கின்றது என்கிற குற்றச்சாட்டும் உண்டு.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு தரப்பிலும் அரச போக்குவரத்துச் சேவையினர் ஒரு தரப்பிலுமாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
இது ஒருபுறமிருக்க வவுனியா நகர வர்த்தகர்களும் அரச போக்குவரத்துச் சேவையினர் பக்கமே நிற்கின்றனர். பேருந்து நிலையத்தை நகரின் மத்தியில் இருந்து அகற்றி விட்டால் தமது வர்த்தக நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு விடும் என்பது அவர்களின் கரிசனை.
வவுனியா நகருக்குள் காணப்படும் இட நெருக்கடியை ஒப்பிடும்போது வர்த்தகர்களின் இந்தக் கோரிக்கை உண்மையில் நியாயமானது அல்ல.
நகரின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நவீன மயமாக்கலின் கீழ் வர்த்தக நடவடிக்கைகள் விரிவாகும்போது பேருந்து நிலையம் அங்கு அமைந்திருப்பது வர்த்தகர்களுக்குத்தான் தலையிடியாக அமையும். எனவே பேருந்து நிலையத்தை அங்கு தக்க வைப்பதற்கு வர்த்தகர்கள் எடுக்கும் முயற்சி ஏற்புடையதல்ல.
தமது வர்த்தகம் பாதிக்கப்படாத வகையில் பேருந்து சேவையை நகருக்குள் ஈர்ப்பது குறித்த மாற்று வழிகளைத்தான் அவர்கள் உண்மையில் நாடவேண்டும். அதுதான் அவர்களுக்கும் நகருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் தனித் தனியாக அன்றி ஒரே இடத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதே தற்போதைய முரண்பாடுகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
நிலையத்தை அரச மற்றும் தனியார் பகுதிகளாகப் பிரித்து விட்டால் இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விடும் என்று அரச போக்குவரத்துச் சேவையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் தற்காலிகமான ஓர் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இது ஓர் சரியான உபாயமாகவும் இருக்கக்கூடும் என்பதால் அதனைப் பரிசீலித்துப் பார்ப்பதிலும் தவறில்லை.
அரச போக்குவரத்துச் சேவையினரிடம் 35 பேருந்துகளே உள்ள நிலையில் தனியாரிடம் 150 பேருந்துகள் உள்ளன. இதனால் தனியார் சேவைகளின் ஆதிக்கத்தில் தமது தனித்துவத்தை இழந்து விடப்போகின்றோம் என்கிற அரச சேவையினரின் ஆதங்கமும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றே!
சம்பந்தப்பட்ட தலைவர்களும் பேருந்து சேவை பிரதிநிதிகளும் இணைந்து பேசி இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.
தலைவர்கள் இருந்த இடத்தில் இருந்து முடிவுகளை எடுக்காமலும் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் விடாப்பிடியாக நிற்காமலும் இருப்பதன் மூலமே அதனைச் சாத்தியமாக்க முடியும்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல நிற்காமல் பொதுமக்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டியது இந்தத் தரப்பினர் அனைவரதும் கடமை.
கடந்த ஒருவருடமாக தொடரும் வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை தீர்க்க மாவட்ட செலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைத்த உதவுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவசரக்கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் மா.ச.உறுப்பினர் நேற்று (02.01.2018) முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
02.01.2018
வவுனியா.
மாண்புமிகு சி.வி.விக்கேஸ்வரன் அவர்கள்
முதலமைச்சர்
வடக்கு மாகாணம்.
கௌரவ முதலமைச்சர் அவர்களே
வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருதல்
மேற்படி விடயம் தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கு தயவுடன் தெரிவித்துக்கொள்வதாவது, வவுனியா மாவட்டத்தின் நகர அபிவிருத்தி தொடர்பில் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சார்லஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட நகர அபிவிருத்திக் குழுவொன்று 2010 ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு துறைசார்ந்த நிபுணத்துவம் மிக்கவர்கள் அங்கத்தவர்களாக இருந்தார்கள். சுகாதார துறைசார்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாக நானும் அங்கம் வகித்திருந்தேன். அதில் நகரின் இடநெருக்கடியை கருத்தில்கொண்டு வவுனியா நகரை விரிபுபடுத்தும் வகையில் 2010-2020ற்கான நீண்டகால அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. அதில் சிலமுன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையை விரிவுபடுத்தம் வகையில் தற்போதைய மாவட்ட செயலக காணியை பயன்படுத்துவதெனவும்,
உள்வட்ட வீதி, வெளிவட்ட வீதிகள் அடங்கிய அரச உத்தியோகத்தர் விடுதிகள் உள்ள பிரதேசத்தை மாவட்டத்திற்கான போக்குவரத்து சந்திப்பு பிரதேசமாக ஆக்குவதெனவும்
தற்போதைய அரச விவசாயப்பண்ணையை நகருக்கு வடக்கே புளியங்குளம் பகுதிக்கு நகர்த்தி 200 ஏக்கர் காணியில் விவசாயப்பண்ணை அமைப்பதெனவும்
அரசாங்க நிர்வாக செயலகங்களை தற்போதைய அரசபண்ணைப்பகுதிக்கு நகர்த்துவதோடு
அரச உத்தியோகத்தர் விடுதிகளை பூந்தோட்டம் கல்வியல்கல்லூரி பிரதேசத்திற்கு அருகில் அமைப்பதென்பனவும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த அரசாங்கத்தில் 2013ம் ஆண்டில் வவுனியா மாவட்டத்திற்கென மத்திய பேரூந்து நிலையம் அமைப்பதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டதுடன் துறைசார் திணைக்களங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படாது தன்னிச்சையாக ஏற்கனவே முன்மொழியப்பட்ட போக்குவரத்து சந்திப்பு பிரதேசத்தை புறந்தள்ளி தற்போதைய அரச பண்ணை பகுதியில் பேரூந்து நிலையம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவானது வடக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவாகும்.
எனினும் இதுதொடர்பில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலர் மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் தொடர்புகொண்டபோதும் வவுனியாவில் தாங்கள் கோரும் இடத்தில் காணி வழங்கப்படாவிட்டால் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த பேரூந்து நிலையத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் வேறுவழியின்றி இந்த இடத்தில் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டது.
எது எப்படியோ பெருமளனவிலான நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த பேரூந்து நிலையத்தை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதற்காக திறந்துவிடுவதற்கு பலமுயற்சிகள் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டிருந்தும் ஒருவருடமாக இந்த பேரூந்து நிலையம் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளால் முடிவெதுவும் எட்டப்படாமல் தொடர்கதையாக இருந்துவந்துள்ளது.
எனினும் கடந்த வருடம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மேற்படி பிரச்சனை தொடர்பிலான விசேட சந்திப்பொன்றில் தனியார் போக்குவரத்து சங்கப்பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் ஆகிய மூன்று தரப்பினரும் கலந்துகொண்டு பின்வரும் முடிவு எட்டப்பட்டது.
அதாவது பழைய பேரூந்து நிலையத்தை உள்ளுர் சேவைக்கான நிலையமாக மாற்றுவதுடன் புதிய மத்திய பேருந்து நிலையத்தை வெளி மாவட்டங்களுக்கான மாகாணங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் பொருட்டு பயன்படுத்துவதற்கு அனைவரினதும் சம்மதம் பெறப்பட்டிருந்தது.
ஆனாலும் தாங்கள் தற்போது எடுத்துள்ள அதிரடிமுடிவான பழைய பேருந்து நிலையத்தை மூடும் செயற்பாடானது எமது மாவட்டத்தில் ஒரு பதற்றமான நிலைமையை தோற்றுவித்துள்ளதுடன் போக்குவரத்து சேவைகளில் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தியமையானது ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் அங்குள்ள 130ற்கு மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்கள் செயலிழந்துள்ளதுடன் அதில் வேலைசெய்யும் 600ற்கு மேற்பட்ட வேலையாட்களின் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக இந்த வருடம் பிறந்த முதல்நாளிலிருந்து இந்த பிரச்சனை உருவெடுத்துள்ளமை பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
எனவே இதுதொடர்பில் ஏற்கனவே மூன்று தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தனியார், அரச போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் அவசரமானதும் அவசியமானதுமான சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தி இந்தப்பிரச்சனையை அனைவருக்கும் சாதகமான விதத்தில் தீர்த்துவைப்பதற்கு ஆவன செய்யுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
உண்மையுள்ள
மருத்துவர் ப.சத்தியலிங்கம்
மாகாண சபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் குலசிங்கம் திலீபன் கருத்து தெரிவிக்கையில்,
“இன்று மாலை தமது வேட்பாளரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் வேட்பாளர் எங்கே? என அவரது தாயாரிடம் வினவியதோடு, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தவறினால் விளைவு வேறுவிதமாக இருக்குமென கூறியதுடன், தாங்கள் வைத்திருந்த தலைக் கவசத்தால் வேட்பாளரின் தாயாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் எமக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்துக்கொள்ளாத விசமிகள் இப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சிலரது தூண்டுதலின் பெயரில் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றை யோசித்துக்கொள்ளுங்கள். யார் உங்களை தூண்டிவிட்டார்களோ அவர்கள் இறுதியில் உங்களை கை விட்டுவிடுவார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப்பரிவில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவன் சுந்தர் சுதர்சன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டார்.
இதன்போது புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி முதன்முறையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் சுந்தர் சுதர்சன் கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் குறித்த பாடசாலையிலிருந்து வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.
பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை! தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே!
ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள்.
தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான். கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான். சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே!
கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம்.
உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள் மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர்.
வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்!
கருத்தரித்திருப்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?
மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி. பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.
முன்புபோல 40, 45 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறியுள்ளது.
எந்த வயதில் கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்?
இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம். அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும். கருவுறுதலுக்குக் கைகொடுக் கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த வயதில்தான்.
முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கரு தங்கும்?
மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள். அப்பொழுதுதான் சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும். மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து கருவாகும்.
இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் ‘அந்த’ நாள் என்பதை கண்டுபிடிக்கலாம்.
ஆணும் பெண்ணும் உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை.. ஓ.கே. அதன்பிறகு என்ன நடக்கிறது?
உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும். அவை அனைத்தும் பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில் வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான். உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும். இப்போது வெற்றி பெற்ற உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி ஆகிறாள்.
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும். ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான். சினைமுட்டை யின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக் கிறது.. அதுவும்கூட உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே!
கர்ப்பம் என்றதும் உடனே தலை காட்டும் மசக்கை எதனால் ஏற்படு கிறது?
புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவா கிறதே.. இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே! இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தி யும் மயக்கமும் ஏற்ப டும். இதைத்தான் மசக்கை என்கிறோம்.
கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம் பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.
எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.
அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனை யில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும். இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.
அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும் என்கிறார்களே.. உண்மையா?
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ.. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல் துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தை களாகவும் இருக்கலாம்! ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!
முத்துப்பிள்ளை கர்ப்பமா? அப்படியென்றால்?
கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக் காமல் குட்டிக் குட்டி உருண்டை களாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.
‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்களே.. அது என்ன? எதனால் ஏற்படுகிறது?
முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்!
ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும். ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள்.
ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.
அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது.
கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.
மசக்கைக்கு பின் வேறு ஏதாவது உடல்ரீதியாக பிரச்னை வருமா?
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை.
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு அதிக உப்பு ஆகாது.
சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
ஆண் குழந்தை என்றால் சீக்கிரமே பிறந்துவிடும் என்கிறார்களே, உண்மையா?
‘பத்து மாத பந்தம்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் கருப்பை ஒரு கருவைச் சுமப்பது, மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரம்தான் (இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கணக்குதான்). இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் இயற்கை இரு வகையான குழந்தைகளையும் சமமான நாட்கள்தான் தாயின் வயிற்றில் இருக்கச் செய்கிறது.
‘ட்ரைமெஸ்டர்’ என்கிறார்களே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்..
பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும் கர்ப்ப காலம் மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறோம்.
முதல் மூன்று மாதங்கள் வரை ‘முதல் ட்ரைமெஸ்டர்’.. நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை இரண்டாவது ட்ரைமெஸ்டர்.. ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை ‘மூன்றாவது ட்ரைமெஸ்டர்!’
முதல் ட்ரைமெஸ்டரில் மசக்கையும், அதனால் உண்டாகும் சோர்வும்தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் மசக்கை நின்றுவிடும். வெகு சிலருக்குத்தான் அது மேலும் தொடரும். முதல் ட்ரைமெஸ்டரில் டாக்டரிடம் செக்கப் செய்துகொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை கர்ப்பம் போன்றவற்றை தடுத்துவிடலாம்.
முதல் ட்ரைமெஸ்டரில் கரு, கருப்பையில் அழுத்தமாக தங்கியிருக்காது என்பதால் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும் கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது என்பது கூடவே கூடாது.
சரி… இந்த ட்ரைமெஸ்டர் காலங்களில் கருவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
முதல் மாதத்திலேயே கருவுக்கு நரம்பு மண்டலம் உருவாகத் தொடங்கி விடும். நாற்பது நாட்களுக்குள் முதுகுத் தண்டு, இதயம் ஆகியவை ஓரளவு உருவாகி, கருவுக்கான ரத்த ஓட்டமும் ஆரம்பித்துவிடுகிறது. கருவின் ரத்த ஓட்டத்தை தாயோடு இணைக்கும் ரத்தக் குழாயின் மற்றொரு பெயர்தான் தொப்புள்கொடி.
இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம் மெதுவாகத் துடிக்கவே துவங்கிவிடும். கை, கால்களும் காதுகளும் வடிவம் பெறுவது இப்போதுதான். மூன்றாவது மாதம், முகத்தின் அங்கங்கள் முறையாக வளர ஆரம்பிக்கும்.
இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடக்கத்தில் அதாவது, நான்காவது மாதத்தில் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும். வயிற்றின் தசைகளும் தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி விரிவடையும்.
(பிரசவத்துக்கு பிறகு, விரிவடைந்த தோல் மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் களுக்கு அடிவயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுகின்றன. கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து விட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒன்றை அடிவயிறு முழுக்கத் தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளித்தால், வயிற்றில் வரிகள் விழாது. சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து தடவினாலும் நல்ல பலன் இருக்கும்.
சில பெண்களுக்கு மார்பகம்கூட பெரிதாகி பிறகு சிறிதாகும். அதனால் மார்பகங்களிலும் இதேபோன்று வரிகள் விழலாம். அதற்கும் மேற்கூறிய ஆயில் மஸாஜ் பலனளிக்கும்)
தொல்லைகள் அற்ற கர்ப்ப காலம் என்றால் அது இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான். மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும். உற்சாகமாக சுழல வைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாக சுரப்பதால் இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின் முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்!
குழந்தை ஆண், பெண் என்பதை தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது இந்த நான்காம் மாதத்தில்தான்! ஐந்தாவது மாதத்தில், கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிட்ட கரு, அசைந்து தன்னைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும்.
ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருவின் அதாவது குழந்தையின் உருவ, உள் உறுப்புகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புருவ முடி வளர்ச்சி முதற்கொண்டு முகம் முழுமையாக உருப்பெறும்.
ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு மட்டுமேயான தனித்தன்மையாக கை விரல்களில் ரேகைகள் அமையும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில் அதாவது, ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து எழுந்துகொள்ள முடியாது. மூச்சு வாங்கும். படுத்து எழுவது சிரமமாகத் தோன்றும். இடுப்பு, முதுகில் அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். நேரத்துக்கு சாப்பிட்டு, வாக்கிங் போய்வருவது நல்லது.
எட்டாவது மாதத்தில் லேசான அசதி இருக்கும்தான். ஆனால், கை கால் வலி, தலை சுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலோ, நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
மூன்றாவது ட்ரைமெஸ்டருக்கு முன்பே, அதாவது ஏழாவது மாதத்துக்கு முன்பே கருவிலிருக்கும் குழந்தை வெளியேறினால் அது ‘அபார்ஷன்’. ஏழு மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறினால் அந்தக் குழந்தையை இன்குபேட்டர் மாதிரி இயந்திரங்களில் வைத்து காப்பாற்றலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் வர வாய்ப்பு அதிகம்.
குழந்தை வெளியே வர ஏதுவாக ஒன்பதாவது மாதத்தில், தலைப் பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது!
குழந்தையின் அசைவுகள் பற்றி..?
ஐந்தாவது மாதத்திலேயே குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடியும். அப்போதிருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால் பின்னாளில் இடநெருக்கடி காரணமாக சும்மா கை, கால்களை மட்டும் அசைக்கும்.
இதனால், ஐந்தாவது மாதத்தில் குழந்தை உதைத்ததற்கும் இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சிலர் இதனை புரிந்து கொள்ளாமல், ‘குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை’ என்று கவலையோடு வருவார்கள். அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்தப் புகார்கள் அதிகரிக்கும்!
ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் துடிப்பு குறைவாக இருக்கும். கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சம் ஐந்து முறை துடித்தாலே போதும். அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.. அப்போதும் குறைவாக இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி சுத்தியிருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?
கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும். கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய. செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே..
அதேபோல், ஒன்பதாவது மாதத் திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள். ‘இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்ப தற்காகத்தான் இந்த அட்வைஸ்!
அப்படியானால் மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?
எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம். கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது. அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.
கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்கப் படுத்தால் கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும் என்கிறார்களே.. உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?
மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல. மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும். இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ‘பி.பி’ இறங்கும். அதனால் தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
குழந்தைக்கு நிறம் தரும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை. சிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. மசக்கை சமயத்தில் அது இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும். அதனால்தான் மாறுதலான மணம் மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது. அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரையாக வரும் மரபணுக்கள்தான்!
சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான்.சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே..
கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.
தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.
சாப்பாட்டில் மட்டுமல்ல.. குடிநீர் விஷயத் திலும் கவனம் தேவை. சுத்த மான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம்.
சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப் படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.
இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடைஅதிகரித்தால்..?
அதிலும் கவன மாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களை விட கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது.
கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி பல்வேறு பிரச்னைகளைத் தரும். பிரசவத்திலும் சிக்கல் வரும்.
சில பெண்களுக்கு, எட்டாம், ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை கால்கள் வீங்கிவிடும். இவர்கள் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தாலும் உடல் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.
கர்ப்பம் உறுதியானதுமே டாக்டர்கள் பட்டை பட்டையாக இரும்புச் சத்து மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து தொடர்ந்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என்ற ஒரு பேச்சு பரவலாக இருக்கிறதே?
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதை நம்பாதீர்கள். ரத்த விருத்திக்காகக் கொடுக் கப்படுவதுதான் இரும்புச் சத்து மாத்திரைகள். கர்ப்பிணிகள் அதிலும் குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் ரத்தசோகை நோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஃபோலிக் (folic) ஆசிட் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் ரத்தசோகை நோயை இரும்புச் சத்து மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடுவதன் மூலமே சரிப்படுத்தி விட முடியும்.
சரிவிகித உணவுகளைத் தவறாமல் சாப்பிடுபவர்களாக இருந்தாலும், மேற்கொண்டு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
சிலருக்கு கருப்பையில் புண் வருகிறதே.. ஏன்?
அதற்காகத்தான் கர்ப்பமான ஆறு முதல் எட்டாம் மாதத்திற்குள் டி.டி எனப்படும் ‘டெட்டனஸ் டாக்ஸாய்டு’ தடுப்பூசியை இரண்டு முறை கட்டாயம் போடச் சொல் கிறோம். பிரசவ சமயத்தில் தாய்க்கும், சேய்க்கும் கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க வும் இந்தத் தடுப்பூசி உதவும்.
இரண்டு தடுப்பூசியும் முடிந்தபின் அல்ட்ரா ஸ்கேனிங் செய்வது நல்லது. பிரசவ நேரத்தில் வரும் எத்தனையோ பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு ஸ்கேனிங் மிக அவசியம். வயிற்றில் குழந்தை சரியான நிலையில் தான் இருக்கிறதா என்று சந்தேகமின்றித் தெரிந்துகொள்ளவும் இது பயன்படும்.
கருவுறுதலுக்கு முன் விசேஷ பராமரிப்பு எதுவும் தேவையா?
கருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன் பிரத்யேகப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் எடுத்துக் கொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்ற நிலையில் வைத்துக்கொண்ட பிறகே கருவுறுதல் நல்லது. இதனால் கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். அவற்றைப் பற்றிகொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்..
சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக தேவைதான்.
ஏன் மாத்திரை வேண்டாம் என்றால்.. அதனால் குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாத்திரையில் இருக்கும் வீரியம் தாயிடமிருந்து குழந்தைக்கும் போகும்.ஆனால், இன்சுலின் அப்படி குழந்தைக்குப் போகாது.
வளர்ந்த பிறகு அதாவது டீன்|ஏஜ் கால கட்டத்தில் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும் தவிர்த்துவிட்டு உணவு, உடற்பயிற்சி மூலமே சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
ஏற்கெனவே குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் ஐந்தாம் மாதத்தில் ‘குளுகோஸ் டாலரன்ஸ் பரிசோதனை’ செய்து சர்க்கரையின் அளவைத் தெரிந்து அதற்கேற்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக உயர் ரத்த அழுத்தம்..
ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் (பி.பி) இருப்பவர் களுக்கு அதன் பாதிப்பு ஏழாவது மாதத்திலிருந்துதான் தெரியத் தொடங்கும். கால் வீக்கம் முக்கியமான அறிகுறி. அடிக்கடி தலைசுற்றி படபடப்பு வரும். சாதாரணகர்ப்பிணிகளைவிட இவர்களுக்கு அடிக்கடி ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்வது நல்லது.அதிக பிரச்னை இருந்தால் உடனடி யாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பைப் பெற வேண்டும்.
இதய நோய்..
சிறுவயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது கர்ப்பம் உறுதியான உடனேயோ டாக்டரிடம் தனக்கு இதய நோய் இருப்பதையும், அதற்காக சாப்பிடும் மருந்துகளையும் பற்றி தெளிவாக சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் கூடுதல் கவனத்தோடு அந்தத் தாயையும், அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் எந்த ஆபத்தும் இன்றி காப்பாற்ற முடியும்.
இப்போதெல்லாம் இதய நோய் உள்ளவர்கள்தான் என்றில்லை.. பொதுவாக கர்ப்பிணிகள் அனைவரையுமே ஈ.ஸி.ஜி, கார்டியாக் எக்கோ போன்ற இதயம் தொடர்பான பிரச்னை களைத் துல்லியமாக அறிவிக்கும் சோதனை களைச் செய்யச் சொல்கிறோம். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை,வருமுன் காக்கும் நல்ல விஷயமாகத்தான் இது இருக்கிறது.
வலிப்புபற்றி சொல்ல வேண்டும் என்றால்.. சிறுவயதிலிருந்தோ அல்லது மணமான பிறகோ வலிப்பு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை எடுத்து முதலில் வலிப்பை குணப்படுத்திவிட்டு, பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்றுதான் பெரும்பாலும் நினைக் கின்றனர்.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரு முறை வலிப்பு வந்துவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அது திரும்ப வரலாம். முழுக்க அதனை குணப்படுத்தி விட்டோம் என்று சொல்ல முடியாது. அதனால் வலிப்புக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டேதான் கர்ப்பம் ஆக வேண்டி இருக்கும்! குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று வலிப்புக்கான மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது. அது தாயின்உயிருக்கே உலை வைத்துவிடலாம்.
இவர்களுக்குப் பிரசவ சமயத்தில் டாக்டரின் அதீத கவனிப்பு தேவை. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ‘பிரசவ வலி வரட்டும்.. பிறகு, மருத்துவ மனைக்கு போகலாம்’ என்று காத்திருக்காமல் பிரசவ தேதி இதுவாகத்தான் இருக்கும் என்று டாக்டர் குறிப்பிடும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னமே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது.
வலிப்பு நோய் உள்ளவர் கள் கருவுற்றதும் மருத்துவ ரிடம் வரும்போதே, தனக்கு அந்நோய் உள்ளது என்று கூறிவிடுவது நலம். அப்படி சொல்லாமல் விடும் பட்சத்தில், பிரசவ சமயத்தில் வலிப்பு வந்தால் அது பிரசவகால வலிப்பா, இல்லை எப்போதும் வரும் வலிப்பா எனத் தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் குழப்பம் ஏற்படும்.
ஆஸ்துமா:இந்த பாதிப்பு உள்ளவர் களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை யுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய்..
இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் டி.பி\க்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? இதுபற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகிறதே..
பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்ச்சல், தலைவலி என்று எந்த தொல்லை வந்தாலும் அதற்கான மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில்! தானாக மருந்துக் கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறே தவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை. சொல்லப் போனால், அப்போது மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் விடுவதுதான் தவறு. தொந்தரவுகள் முற்றிவிடும்.
கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள்.
காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த நாளில் பிரசவம் நடைபெறும் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், மிகச்சரியாக இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை கர்ப்பிணியே உணர்ந்து கொள்வது எப்போது?
பிரசவம் எப்போது நடக்கும் என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு தோராயமாகத்தான் பிரசவ தேதி கணிக்கப்படுகிறது.
ஆனாலும், பிரசவத்துக் கான அறிகுறியாக இயற்கையே மூன்று விதமாக எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது. பிரசவ வலி, ஷோ, பனிக் குடம் உடைவது ஆகியவைதான் அந்த மூன்று அறிகுறிகள்.
பிரசவ வலி என்பது மாதவிலக்கு சமயத்தில் வருவதுபோல் இருக்கும். இடுப்பின் மேலிருந்து கீழாக வலி எடுக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு வலிக்கும்.ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடுதான்இதற்குக் காரணம்.
கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். உடனே வலி ஏற்பட்டு பிறகு கருப்பையின் கழுத்து மெள்ள விரிவடையும். பிறகு, கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து மெள்ள மெள்ள தலை, நெஞ்சு என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும்.
கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை.
பத்து நிமிடம், இருபதுநிமிடம் என்று விட்டு விட்டுத்தான் பிரசவவலி வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வலி ஏற்பட்டவுடன் இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது!
சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவதுதான்‘ஷோ’ என்று சொல்லப்படுகிறது. கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித் ததும் அங்கே இந்த திரவம் சுரக்கும்.
கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்கத் தொடங்கியதுமே குழந்தையைச் சுற்றியிருக்கும் பலூன் போன்ற பனிக்குடத் தின் ஒரு பகுதியும் இறங்கும். சில சமயம் அந்த பலூன் பாகம் உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதை புரிந்துகொள்ளாமல் சில பெண்கள் தங்களுக்கு அதிகப்படியான சிறுநீர் வெளியேறுகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.
வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குட நீரும் வழிந்துவிடும். இது பிரசவத்தை சிக்கலாக்கி விடும்.
இந்தப் பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக, மஞ்சள் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருந்தால் உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வாரிசை வரவேற்க ஒரு தாய் உடலளவில் தயாராவது போல, மனதளவிலும் தயாராவது முக்கியம். அதிலும் பிரசவம் என்னும் அற்புதமான நிகழ்வை எதிர்கொள்ள சந்தோஷமும் ஆவலுமாகக் காத்திருத்தல் அவசியம். பிரசவத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மனதைக் குழப்பிக்கொள்ளாமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல படங்களை பார்த்தல், இனிய இசை கேட்டல் போன்றவை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும். அழுமூஞ்சி சீரியல் களை இந்த சமயத்திலாவது பார்க்காமல் தவிர்க்கலாமே!
புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம்.
கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக, சுகமாக நடைபெற உதவும்.
பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும். அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால் டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார்.
கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின் வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும். ‘எபிசியோட்டமி என்று சொல்லப்படும் இந்த காரியத்தை பெரும்பாலும் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குத்தான் செய்வார்கள்.
குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும். கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாக வும் வெளியே வரும்.
சவுக்கால் அடித்ததுபோலவும், உலகிலுள்ள அத்தனை வலிகளையும் ஒருசேர போட்டு அழுத்தியது போலவும் பிரசவ வலி கஷ்டப்படுத்தினாலும், அத்தனையும் தான்பெற்ற குழந்தையை முதன்முதலாக பார்க்கும் அந்த மந்திர நிமிடத்தில் மாயமாக மறைந்துவிடும்.
ஆர். ஹெச். டைப் என்கிறார்களே.. அப்படியென்றால் என்ன?
ரத்தத்தில் A, B, O, AB என நான்கு முக்கியமான வகைகள் உண்டு. இதுதவிர, ரத்தத்தில் Rhபாசிட்டிவ், Rh நெகட்டிவ் என்ற இருபிரிவுகளும் உண்டு. இதில் Rh நெகட்டிவ் உள்ள தாய் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்.
அம்மா Rh நெகட்டிவ்வாக இருந்து, அப்பா Rh பாசிட்டிவ்வாக இருந்து குழந்தை Rhபாசிட்டிவ்வாக உருவாகி விடுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பிரசவ நேரத்தில் அம்மாவின் ரத்தத்தில் அவருடைய ரத்தத்துடன் தொடர்பில்லாத ‘ஆன்டிபாடி’ உருவாகிறது. அதாவது குழந்தை கருப்பையில் விட்டுச் செல்கிற பாசிட்டிவ் ரத்தத்தால் இது உருவாகிறது.
முதல் பிரசவத்தின்போதுதான் குழந்தை இப்படி ஒரு ‘ஆன்டிபாடி’யை விட்டுச் செல்வதால் அப்போது குழந்தைக்கோ அம்மாவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அந்த தாய் மீண்டும் கருவுறும்போது இரண்டாவது குழந்தைக்குத்தான் மிகப் பெரிய பாதிப்புகளை அது உண்டாக்குகிறது.
இதைத் தவிர்க்க, முதல் குழந்தை பிறந்ததுமே குழந் தைக்கு ரத்தப் பரிசோதனை செய்து அதன் வகையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் ரத்தம் பாசிட்டிவ் வகையாக இருக்கிற பட்சத்தில் இதற்கென்றே இருக்கிற விசேஷ ஊசியை 24 மணி நேரத்துக் குள் அந்த தாய்க்குப் போட்டால் இந்த ஆன்டிபாடி உருவாகி இரண்டாவது குழந்தைக்கு எதிரியா காமல் தடுக்க முடியும்.
முதல் டிரைமெஸ்டரில் ரத்தப் பரிசோதனை செய்யும்போதே அம்மாவின் ரத்த வகையைத் தெரிந்து கொண்டால் இந்த விஷயத் தில் கவனத்துடன் இருக்க முடியும்.
Rh பாசிட்டிவ் அம்மாக்களுக்கு இந்தப் பிரச்னையெல்லாம் இல்லை. அதேபோல், தாய் Rhநெகட்டிவ்வாக இருப்பினும் குழந்தையும் Rh நெகட்டிவ்வாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை.
இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது.
முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு (பெல்விஸ் சிறியதாக இருந்தால் வேறு வழியேஇல்லை. இரண்டாவது குழந்தை யையும் அறுவைசிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்).
முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், ‘ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்’ செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச் சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும். பாதுகாப்பான பிரசவத்துக்கு அது உதவும்.
இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் முதல் குழந்தை. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எங்கே தன் தாயின் கவனமும் பாசமும் மொத்த மாய் அந்தக் குழந்தைக்கே போய்விடுமோ என்ற ஏக்கம் முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும்.
அந்த சமயத்தில் தாயுடன் தந்தையும் அந்தக் குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்ட வேண்டும். `நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும்.
அது உன்னை அண்ணா/ அக்கானு கூப்பிடுமே.. அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே’ என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், `பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு கண்ணு’ என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை ஜோராக உங்களைவிட ஆர்வமாக தனது உடன்பிறப்பை வரவேற்கத் தயாராக இருக்கும்.
9 மாதங்கள் வரை குறிப்பிடத் தகுந்த உடல் மாற்றங்களோ, பிரச்னைகளோ இல்லாதவரை, வழக்கமான தடுப்பூசி, ஸ்கேனிங் போன்றவை தொடரலாம்.
பிரசவத்துக்கு முந்தின நாள் வரை அலுவலகத் துக்குச் சென்று வேலை பார்த்த தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு!
எதைத் திரும்பப் பெற்றாலும் போன உயிரையும் கடந்து போன நேரத்தையும் ஒருபோதும் மீளப்பெற முடியாது என்று கூறுவார்கள்.
ஆனால் 2018 ஆம் ஆண்டில் நியூஸிலாந்தின் ஆக்லான்டிலிருந்து புறப்பட்ட விமானமொன்று 2017 ஆம் ஆண்டு ஹொனலுலு விமான நிலையத்தில் தரையிறங்கி புதுமை படைத்துள்ளது.
மேற்படி ஹவாயியன் எயார்லைன்ஸ் விமானமான எச்.ஏ.எல். புது வருட தினத்திற்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 11.55 மணிக்கு புறப்படுவதாக ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் மேற்படி விமானத்தின் பயணம் சுமார் 10 நிமிடத்தால் தாமதமானதால் அந்த விமானம் புது வருடம் பிறந்து 5 நிமிடம் கழித்து ஆக்லான்டிலிருந்து பயணத்தை ஆரம்பித்து ஹொனலுலு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஆக்லான்டிற்கும் ஹொனலுலுவிற்கு இடையில் 23 மணி நேர இடைவெளி நிலவுகின்றது. இதன் பிரகாரம் அந்த விமானம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி காலை 10.16 மணிக்கு ஹொனலுலுவில் தரையிறங்கியுள்ளது.