இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் லெம்போகினி கார் ஒன்று கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lamborghini Huracán Coupé LP 610-4 ரக மோட்டார் வாகன கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனத்தை பெவரியன் மோட்டார் உரிமையாளர் ஜே.ஹமீட் என்ற பெண் ஒருவரே கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் உள்ள நிலையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இலங்கையில் பெண்ணொருவர் அதிக பெறுமதி கொண்ட காரை கொள்வனவு செய்தமை தொடர்பில் பல்வேறு மட்டங்கள் அதிகம் பேசப்படுகிறது.
கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் இலங்கைக்கு லெம்போகினி கார்கள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு நேற்று முன்தினம் (17.11.2017) காலை 8 மணியளவில் அம்மா சாமி, பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் 20க்கு மேற்பட்ட ஐயப்பன் பக்த அடியார்கள் மாலை அணிந்து கொண்டனர்.
குடைப்பிடிப்பது, காலணிகள் உபயோகிப்பது , சவரம் செய்து கொள்வது, புலால் உண்பது , பொய்களவு, சூதாடுதல், போதை வஸ்துகள் கூடாது. பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.
துக்க காரியங்களில் ஐயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது. அப்படி கலந்த கொள்ள நேரிட்டால்தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது. இவைகளை ஐயப்பன் மாலையணியும் அடியவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்களாகும் என பாபு குருசாமி தெரிவித்தார்.
வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் அனுசரணையில் பிரதான பிஷப் பி. என்.இராஜசிங்கம் (இ.பி.எம்) தலைமையில் நேற்று முன்தினம்(17.11) வவுனியா ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்தில் 2018ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள 110 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் வசதியற்ற வறுமைக்கோட்டில் வசிக்கும் 2018ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவு செய்யப்பட்ட 110 மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
வன்னிப்பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிசேச சபையின் அனுசரணையில் சென்ற விஷேட குழுவினரால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி, உத்தியோகத்தர்கள், வவுனியா தெற்கு வலய கல்வி அதிகாரிகள், ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் (17.11.2017) அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து ராதாகிருஷ்ணன் கலந்து சிறப்பித்தார். மேலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் க.கருணாநிதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இவ்வருட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி செல்வி டட்லி சோபனாவிடம் லண்டன் அறக்கட்டளை நிதியத்தால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் பல கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா நெளுக்குளம் பொலிஸார் நேற்று (18.11.2017) இரவு 8.30 மணிளவில் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது மூன்று மோட்டார் சைக்கிலுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான குழுவினர் குழுமாட்டுச்சந்திக்கு அருகே நேற்றிரவு மேற்கொண்ட திடிர் சோதனையின் போது மது போதையில் மோட்டார் சைக்கில் செலுத்திய 28,30,31வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் எனவும் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏட்டிக்கு போட்டியாக வவுனியாவில் மதுபானசாலைகள் உறுவாகுவதே இதற்கு முழுக்காரணமாகும். வவுனியா குழுமாட்டுச்சந்தியில் 100 மீற்றருக்குள்ளே இரு மதுபானசாலைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 10 கிலோ 23 கிராம் கேராள கஞ்சாவினை இ.போ.ச பேரூந்தில் கடத்த முற்பட்ட சந்தேக நபரோருவரை நேற்று (18.11.2017) அதிகாலை 12.15 மணியளில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுராட்சி தலைமையிலான பொலிஸார் மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமாக நின்ற யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த 33 வயது நபரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் 10 கிலோ 23 கிராம் கேராள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து கள்ளிக்குளம் செல்லும் பிரதான வீதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த 780 குடும்பங்கள் வசித்து வருகின்றதுடன் இப்பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்துள்ள இப்பிரதான வீதியைப் புனரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
வவுனியா கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள மொத்தம் 9 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு இப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. எனினும் ஓமந்தையிலிருந்து செல்லும் பிரதான வீதியானது அன்றிலிருந்து புனரமைப்புச் செய்யப்படவில்லை. அப்பகுதியில் கிரவல் அகழும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இதனால் பிரதான வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அவசியத் தேவை கருதி இப்பாதையில் ஒரு நோயாளரை எடுத்துச் செல்ல முடியாதளவிற்கு இப்பாதை மிகவும் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாகவும் இப்பாதையினூடாகவே எமது பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர், எனவே அவர்களின் சீருடைகளும் மிக விரைவில் பழுதடைந்து வருகின்றது.
அப்பகுதியில் கிரவல் அகழ்வுப்பணியினால் இப்பாதை மிகவும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் நினைவு தினம் வருடாவருடம் விவசாயக்கலிலூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் குறித்த நினைவு தினத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் 11ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (18.11.2017) இடம்பெற்றது
இந்நிகழ்வில் தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர்களின் படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று (18.11.2017) காலை முதல் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இ.போ.சபையின் வவுனியா சாலைக்கு விரைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வாசல இவர்கள் இருவரையும் ஒரு வாரத்தினுள் வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் செய்வதாகவும் இந்த இடமாற்றம் இடம்பெறாத பட்சத்தில் தானும் இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தில் இணைந்து கொள்வதாவும் தெரிவித்தார்.
இவ் வாக்குறுதிகள் நிறைவேறாத பட்சத்தில் வடமாகாணம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக வட பிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் வாமதேவன் தெரிவித்தார்.
தற்போது வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து வவுனியா சாலைக்கு சொந்தமான அனைந்து பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுகின்றன.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (17.11.2017) அதிகாலை 5.15 மணியளவில் 6 கிலோ 43 கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் அசோக பிரசாந்த தலைமையிலான பொலிஸ் சாஜன் குனசேன (56213) , பொலிஸ் கொஸ்தபர்களான கீர்த்தி (41672), கோத்தளவல (66412), பண்டார (14957), பிரதிப் (45980), சாரங்க (60249), சமரதுங்க (52389) ஆகிய பொலிஸாரினால் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திக்கிடமாக நின்ற சாவக்கச்சேரியைச் சேர்ந்த 37 வயதான நபரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் 6கிலோ 43 கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று (18.11.2017) காலை முதல் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வட பிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் வாமதேவன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா சாலையின் நடவடிக்கைகளை நாங்கள் இன்று முடக்கி வைப்பதற்குறிய காரணம் எங்களுடைய வட பிராந்திய முகாமையாளர் ஒருதலைப்பட்சமாக ஒரு குறிப்பிட்ட நபர்களின் கதைகளை கேட்டுக்கொண்டு செயற்படுவதுடன் பழிவாங்கும் செயற்பாட்டில் நடந்து கொள்கின்றார்.
வட மாகாணத்தில் தகுதியான பல உத்தியோகத்தர்கள் இருக்கின்ற போதும் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதுடன் அவரது கட்சி சார்பானவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.
எங்களது சாலையில் எரிபொருளை நிரப்பி விரயம் செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று தொடக்கம் தொடர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இ.போ.ச வடக்கு பிராந்திய முகாமையாளரை உடனடியாக மாற்று , சிலரின் சொல்லைக் கேட்டு வவுனியா சாலையை வதைக்காதே, வட பிராந்திய முகாமையாளர் தனது வாகனத்திற்கு வவுனியா சாலையில் மாத்திரம் ஒரு மாதத்திற்குள் 211 லீற்றர்க்கு அதிகமான எரிபொருளை விரயம் செய்துள்ளார், உனது சொந்தத் தேவைக்கான வவுனியா சாலையின் எரிபொருளையும் சொத்துக்களையும் வீணடிக்காதே, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மற்றவர்களை பழிவாங்காதே, வட பிராந்திய பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலமைக்காரியாலய பதவிமாற்றக்க கட்டளையை நடைமுறைப்படுத்தாதது ஏன் என பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதைகள் இ.போ.ச வவுனியா சாலைக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சைபீரியாவில் 19 பெண்களை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த ரஷ்யாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ரஷ்யாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரியான Evgeny Chuplinsky(52) தன் மீது சுமத்தப்பட்டுள்ள 19 கொலை குற்றம் தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு எதிர்கொள்ள உள்ளார்.
முன்னாள் ரஷ்ய பொலிஸ் அதிகாரியான Chuplinsky சைபீரியாவின் Novosibirsk பகுதியில் மட்டும் குறித்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளார். கொலைக்கென் ராணுவ கத்தியை பயன்படுத்தியுள்ள Chuplinsky பெண்களை மட்டுமே குறிவைத்துள்ளார். தம்மிடம் சிக்கும் பெண்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் மார்பகங்களை துண்டித்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் தலைகளை துண்டித்து உடல்களை புதருக்குள் மறைவு செய்து வந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் அளித்த Chuplinsky, பாலியல் தொழிலாளர்களை மட்டுமே தாம் கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் இந்த சமூகத்தின் சாபம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1998 முதல் 2000 வரையான காலகட்டத்தில் மொத்தம் 19 பெண்களை Chuplinsky கொடூரமாக கொலை செய்துள்ளார். மட்டுமின்றி சிலரது உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளார்.
தம்மீது விசாரணை அதிகாரிகளின் பார்வை திரும்பாமல் இருக்க, கொலை செய்யப்பட்ட உடல்களின் மர்மமான கோடுகளை கத்தியால் வரைந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் இதுவரை 5,000 பொதுமக்களை விசாரித்துள்ளனர். 8,000 சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் 300 தடையவியல் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
Chuplinsky பல் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து, குறித்த தம்பதிகளுக்கு இளம் வயதில் 2 பெண் மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்ய விரும்புவர்களை டுவிட்டரில் தொடர்பு கொண்டு அவர்களை கொலை செய்த கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஜமா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒன்பது பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், தகாஹிரோ ஷிராஷி என்ற 27 வயது நபர், தற்கொலை எண்ணம் உடையவர்களை தொடர்புகொண்டு, உங்களுக்கு நான் உதவி செய்கிறேன் என்றும் உங்களுடன் சேர்ந்து நானும் இறந்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.
இவனது பேச்சை கேட்டு தற்கொலை செய்ய விரும்பியவர்களை தனது வீட்டில் வைத்து கொலை செய்துள்ளான். தற்போது இந்நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு கொலையை செய்த காரணத்தால், இந்த நபரை டுவிட்டர் கொலையாளி என்றே அழைக்கின்றனர். இது தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.
எங்கள் சேவையை நேர்மறையாகவும் நல்ல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இடம்பெற்று 1ஆம் நாள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப்போட்டியின் போது அடிக்கடி மழை குறுக்கீடு செய்ததால் அவ்வப்போது போட்டி தடைப்பட்டது வெறுமனே 11.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்டது.
போட்டியில் பாரிய தடுமாற்றத்தை சந்ததித்த இந்திய அணி நேற்றைய நாள் நிறைவில் 3 முக்கியமான விக்கெட்களை இழந்து 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்தியாவின் இந்த பாரிய வீழ்ச்சிக்கு இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் காரணமாக அமைந்தார்.
நேற்று லோகேஷ் ராகுல், தவான், கோஹ்லி ஆகியோரை ஆட்டமிழக்க செய்து அசத்தினார். அவர் வீசிய 6 ஓவர்களில் (36 பந்துகளில்) எதுவித ஓட்டங்களையும் விட்டுக்கொடுக்காது மெய்டின் ஆக வீசி 3 விக்கெட்களை சாய்த்தநிலையில் புதிய சாதனை ஒன்றுக்காக காத்திருக்கிறார்.
2001 ம் ஆண்டுக்கு பின்னர் அதிகப்படியான பந்துகளில் தொடர்ச்சியாக எதுவித ஓட்டங்களையும் விட்டுக்கொடுக்காத வீரர் எனும் சாதனையே அதுவாகும்.
2015 இல் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டெயிலர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியான 40 பந்துகளில் எதுவித ஓட்டங்களை விட்டுக்கொடுக்காது மிகச்சிறப்பாக பந்துவீசினார்
அந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்புக்காக இலங்கையின் சுரங்க லக்மல் காத்திருக்கின்றார்.
அசாம் மாநிலத்தினை சேர்ந்த 70 வயது தொழிலதிபர் ஒருவர், 25 வயது பெண்ணை திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது.
அசாமை சேர்ந்த கோடீஸ்வரர் ராஜேஷ்குமார் ஹிமாத்சின்கா, இவரது மனைவி இறந்ததையடுத்து, தன்னை விட 45 வயது வித்தியாசம் உள்ள இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் வைரலாகவே, நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் இவரின் பெயரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரின் பெயரின் ஒரே மாதிரி இருந்ததால், சமூக வலைதளங்களில் குழப்பங்கள் ஏற்பட்டது.
ஆனால், ராஜேஷ்குமார் அசாமைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதும், ஹிமத்சின்கா மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இவருக்கு அசாமைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களிலும் விவசாயம், மருத்துவமனைகள், ரியல் எஸ்டேட் என பல தொழில்களும் உள்ளன.
இந்த திருமணம் குறித்து ராஜேஷ்குமாரின் உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது மனைவியின் இறப்புக்கு பின்னர் அவருக்கு ஒரு துணை தேவைதான். ஆனால், அதற்காக தனது பேத்தியை விட இளம் வயது பெண்ணை அவர் திருமணம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் என்பவர் தனது திருமணத்தின் போது, ஜெய்பூரில் இருந்து உத்திரப்பிரதேசத்தின் காபூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கியுள்ளார்.
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இவரை திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து ஷாருக்கான கூறுகையில், திருமணத்தின் போது எனக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டு என்பது தான் எனது நீண்ட நாட்கள் கனவு, அது தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.
இவர் மணமகன் கோலத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.