தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் 2.0 வெளியீடு?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுமார் 400 கோடி செலவில் உருவாகி வரும் படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் படம் வருகிற ஜனவரி 25 ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

டீசர், டிரைலரும் தாமதமாகவே ரிலீஸ் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் வெளியீட்டு திகதி குறித்து வெளியான வதந்தியை தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மறுத்திருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போக இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப் ஒரு பித்துப் பிடித்த கிழவர் : பதி­லடி கொடுக்கும் ட்ரம்ப்!!

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பை பித்துப் பிடித்த கிழவர் என வட கொரிய அர­சாங்க ஊடகம் குறிப்­பிட்­டி­ருந்த நிலையில், அதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் தனது டுவிட்டர் இணை­யத்­தளப் பக்­கத்தில் செய்­தி­யொன்றை நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ளார்.

“நான் அவரை (வட கொரிய தலைவர் கிம் யொங் – உன்னை) குள்­ள­மா­னவர் என்றோ கொழுத்­தவர் என்றோ ஒரு­போதும் அழைத்­தி­ராத நிலையில், அவர் ஏன் என்னை கிழவர் என அழைத்து அவ­தூறு செய்­கிறார்?” என டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் இணை­யத்­தளப் பக்­கத்தில் தன்னால் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

வட கொரிய தலை­வ­ருடன் நட்பை ஏற்­ப­டுத்த கடு­மை­யாக முயற்­சித்து வரு­வ­தா­கவும் ஒருநாள் தாம் நண்­பர்­க­ளாக மாறக்­கூடும் என நம்­பு­வ­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரி­வித்தார்.

கொரிய அர­சாங்க ஊட­க­மான கொரிய மத்­திய செய்தி முகவர் நிலையம் அன்­றைய தினம் மேற்­படி செய்தி வெளி­யா­வ­தற்கு முன்னர் வெளி­யிட்ட பிறி­தொரு செய்­தியில் டொனால்ட் ட்ரம்பின் ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான விஜயம் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.

டொனால்ட் ட்ரம்ப் உலக சமா­தானம் மற்றும் ஸ்திரத்­தன்­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­ப­வ­ரா­கவும் கொரிய தீப­கற்­பத்தில் அணு ஆயுதப் போரொன்றை ஆரம்­பிக்க கெஞ்­சு­ப­வ­ரா­கவும் உள்ளார் என அந்த செய்­தியில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது.

தமது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து மக்­களை ஒதுக்­கி­வைப்­ப­தற்­கான முயற்­சியை ட்ரம்ப் மீண்டும் முன்­னெ­டுத்­துள்­ள­தாக வட கொரிய வெளி­நாட்டு அமைச்சர் அந்த செய்­தியில் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். வட கொரியா முழு­மை­யான அணு ஆயுத நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்­பதை டொனால்ட் ட்ரம்ப்பால் தடுத்து நிறுத்­து­வது சாத்­தி­ய­மில்லை என அவர் கூறினார்.

அதே­ச­மயம் டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் யொங்­ – உன்னிற்கு நேர­டி­யாக விடுத்த செய்­தியில், “ நீங்கள் உட­மை­யாகப் பெறும் அணு ஆயுதங்கள் உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கப் போதில்லை. மாறாக அவை உங்கள் ஆட்சியை மரணப் புதைகுழியில் தள்ளுவதாக அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை!!

 
முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்ஸில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி வெரோனிக் ஏஜிஐ என்ற ரொக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனை 15 நிமிடத்துக்கு பிறகு பத்திரமாக பராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது.

இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை இந்த பூனை.

இந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது அதற்கான ஏற்பாடுகளை லண்டனை சேர்ந்த மாத்யூ செர்ஜ் செய்து வருகின்றார்.

பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்!!

நடிகை தீபிகா படுகோனே நடித்த இந்திப் படம் பத்மாவதி வருகிற 1ம் திகதி திரைக்கு வருகின்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது ஆசைகொண்டு படை எடுத்தான். இந்த காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தடைவிதிக்க மறுத்து மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா அளித்த புகார் மனுவும் தள்ளுபடி ஆனது.

இதற்கிடயே குஜராத், ராஜஸ்தானில் வசிக்கும் ராஜபுத்திர வம்சத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

குஜராத்தில் சூரத் மற்றும் காந்திநகரில் விஷ்வ இந்து பரி‌ஷத், பஜ்ரங்தளம், ரகபூத், கர்னசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கண்டனப் பேரணி நடந்தது.

ராஜஸ்தானில் ராஜபுத்ர சமூகத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா வழிகாட்டிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையே பத்மாவதி படம் டிசம்பர் 1ம் திகதி நாடு முழுவதும் திரைக்கு வருகிறது. அன்றைய தினம் ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

பேய்ப் படங்களில் நடிக்க ஆசை!!

பேய்ப் படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். இதுகுறித்து நடிகை திரிஷா அளித்த பேட்டி வருமாறு..

சினிமாவில் 10 ஆண்டுகளை தாண்டுவது கஷ்டம். ஆனால் நான் 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அழகி போட்டிகளில் வென்று இன்னொரு நடிகைக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

தற்போது 7 படங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் 3 படங்கள் பேய்கள் சம்பந்தமானது. மோகினி என்ற முழு நீள பேய் படத்தில் நடிக்கிறேன். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. காதல், அதிரடி படங்களை விட பேய் படங்களைத்தான் நான் விரும்பி பார்ப்பேன். ரசிகர்களை பயமுறுத்தும் பேய் படங்களில் நடிக்கவும் பிடிக்கும்.

பலர் பேயை பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தடவையாவது பேயை பார்த்து விட வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆண்டவன் இருப்பது உண்மையென்றால் பேய் கூட இருக்கலாம். மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.

பல கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது போன்ற கதைகள் வந்தால் நடிப்பேன். ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் ஒரே படத்தில் நடிப்பது புதிய அனுபவமாக இருக்கும். போட்டியும் இருக்கும். இந்தி பட உலகில்தான் இதுபோன்று பல நடிகர்-நடிகைகள் சேர்ந்து நடிக்கும் வழக்கம் உள்ளது.

பெரிய கதாநாயகர்களும் சேர்ந்து நடிக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும்போது அந்த படத்தை இருவரது ரசிகர்களும் பார்ப்பார்கள். இது தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும். நான் பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் பார்த்து நடிக்க மாட்டேன். கதை நன்றாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிப்பேன். இவ்வாறு திரிஷா கூறினார்.

வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தினமும் கலை நிகழ்வும்!!

 
பூந்தோட்டம் பிரதேச 17 முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தினமும் கலை நிகழ்வும் பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.2017) மிகச் சிறப்பாக பூந்தோட்ட பிரதேச முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் K.வேலாயுதம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினராக G.T.லிங்கநாதன் (மாகாணசபை உறுப்பினர்), கௌரவ விருந்தினராக S.மயூரன் (முன்னாள் மாகாணசபை உறுப்பினர்), K.தர்மபாலன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-முன்பள்ளி) K.சந்திரகுலசிங்கம் (முன்னாள் நகரசபை உப பிதா, திருமதி K.நந்தபாலன் (அதிபர் – பூந்தோட்டம் மகா வித்தியாலயம்), திருமதி S.அருள்வேல் நாயகி (வவுனியா நகரக் கோட்ட இணைப்பாளர் -முன்பள்ளி)
S.காண்டீபன் (தலைவர்-இளைஞர் கழகம் -திருநாவற்குளம்) மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்களும் பெருமதி மிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா வேலையற்றபட்டதாரிகள் எடுத்துள்ள திடீர் முடிவு!!

 
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 2013-2016 ஆண்டுக்கான இணைப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா குடியிருப்பு பூங்காவில் நேற்று (12.11.2017) இடம்பெற்றது.

இதன் போது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான முடிவிகள் எதுவும் எட்டப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் தேர்தலிற்கு முன் எமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் எனவே எதிர்வரும் 15.11.2017 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் நிர்வாக தலைமைகள் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

எனவே வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் 15.11.2017 அன்று காலை 6.30 மணிக்கு வவுனியா அரச பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். என வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது .

சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது .

“பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் …. கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம் .

ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது ?

சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம் .

“நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்” இது ஒரு அபலைப்பெண்ணின் குரல் .

இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது. ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட்டது.

தாலி பற்றி..

தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது. தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .

அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள். தாலி பொருளாகு பெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .

பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.

தமிழனின் பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு.

ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது.

கை, கால்கள் இல்லாத இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு : பதற வைக்கும் சம்பவம்!!

கனடாவில் காணமல்போன இளம்பெண்ணின் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள ஓண்டாரியோ மாகாணத்தில் Rori Hache(22) என்ற இளம்பெண் பெறோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டதாக பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற பொலிசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேடையை நடத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 11ம் திகதி ஓண்டாரியோ ஆற்றில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் ஒரு இளம்பெண்ணின் உடல் மிதந்து வந்துள்ளது.

உடலை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

டி.என்.ஏவை சேகரித்த பொலிசார் அதனை காணாமல் போன இளம்பெண்ணுடன் ஒப்பிட்டு பார்த்தபோது அது அவர் தான் என உறுதி செய்யப்பட்டது.

இத்தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக பெற்றோர்களிடம் தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

எவ்வித விவகாரத்திலும் ஈடுப்படாத தங்களது அன்பு மகளை துண்டு துண்டாக வெட்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பொலிசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஹொட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் தயாதி (40) என்பவர் ஹொட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது ஹொட்டலில் மார்கிஸ் டெவிட் (23) என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை அங்கு பணியில் இருந்த காவலாளி வெளியில் அனுப்பியுள்ளார். இந்தநிலையில் துப்பாக்கியுடன் ஹொட்டலுக்குள் நுழைந்த அந்த நபர் ஆகாஷ் தயாதியை நோக்கி சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அங்கிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவலாளியும் தனது துப்பாக்கியை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் டெவிட் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் டெவிட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை அமெரிக்காவில் நடைபெற்றுள்ள 307 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 530 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை உடைந்த நிலையில் பிச்சை எடுத்த 10 வயது சிறுவன்: விசாரித்த போது வெளியான திடுக் தகவல்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் மருத்துவ செலவுக்காக பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் சந்திப்பையொட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு 10 வயது சிறுவன் ஒருவன் உடைந்த கையில் கட்டுகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் சிறுவன் இருக்கும் பகுதிக்கு வந்து, சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பொலிசார் அவனிடம் விசாரித்த போது, நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவன் என்றும் கை உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததால் முதல்முதலாக பிச்சை எடுத்ததாக கூறியுள்ளான்.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுவனுக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவைச் செய்வதாகவும், சிறுவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவி தாக்கியதால் குடிபோதையில் இருந்த கணவன் பலி!!

குடி போதையில் மனைவியை தாக்க முயற்சித்த நபர் ஒருவர், மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3.45 அளவில் நடந்துள்ளது.

வென்னப்புவ பாத்திமா மாவத்தை வசித்து வந்த 49 வயதான மாசேவ்வகே சுஜி சமிந்த துஷார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் 48 வயதான மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தினமும் குடி போதையில் வரும் கணவன் தன்னை அடிப்பதாகவும் சம்பவம் நடந்த நேரத்தில் கணவன் தன்னை பொல்லால் தாக்க முயற்சித்ததாகவும் அப்போது அந்த பொல்லை பறித்து தான் கணவனை தாக்கியதாகவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

நீதவான் விசாரணைகள் நேற்று காலை நடைபெற்றுள்ளதோடு, சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் மைத்திரி!!

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், மக்களின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கொழும்பு காலி முகத்திடலில் நேற்றைய தினம் தேசிய நீரிழிவு தின நடைப் பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேசத்தின் மத்தியிலும், இலங்கை மக்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எளிமையான ஒருவர் என்ற கருத்து காணப்படுகின்ற நிலையில் மக்கள் மத்தியில் அவர் சிறப்பான ஒரு இடத்தையும் பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த மாதம் 26ஆம் திகதி கட்டாருக்கு இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஒரு கட்டடத்திற்கு வெளியில் அமர்ந்து சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காளான் சமைத்து சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!

பதுளை, கந்தகெட்டிய புதுகேகந்த கிராமத்தில் மதிய உணவுடன் உட்கொண்ட காளான் விஷமானதால், மூன்று பேர் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் முளைத்திருந்ததாக கூறப்படும் காளான் வகை ஒன்றை பிடிங்கி சென்று மதிய உணவுக்காக சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் இரத்த வாந்தி வர ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுள் சிறு பிள்ளையும் இருப்பதாக வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளனர்

முற்றாக சேதமடைந்த பாலத்தால் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

 
மட்டக்களப்பு மாவட்டத்தில், திக்கோடை தும்பாலை ஊடாக நவகிரி நகர் மற்றும் பாலையடிவட்டைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள கந்தக்குடாமடு ஆற்றுக்கு குறுக்காக உள்ள பாலம் முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளது.

போரினால் முற்றாக பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசங்களில் இவ்வாறான கிராமங்களின் முக்கிய தேவைகள் இன்னமும் நிறைவேற்றபடாமல் உள்ளது.

இந்த பாலத்தினை இப்பிரதேச விவசாயிகளும் பாலையடிவட்டை பிரதேசங்களுக்கு செல்பவர்களும் அதிகமாக பயன்படுத்துகின்ற பாதையாகும்.

குறித்த பாலம் மட்டுமல்ல பாதையும் வெள்ள நீரோடி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகள் இந்த பாதையினை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வேளாண்மை விதைப்பு காலங்களிலும், அறுவடை காலங்களிலும் மிகவும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பாலம் சுமார் 40 வருடங்களுக்கு முற்பட்டது. இது மக்கள் பாவனைக்கு ஏற்றதாக இல்லை. பலமான மழை பெய்யுமாக இருந்தால விழுகின்ற நிலையில் உள்ளது.

அச்சத்துடனே இப்பாலத்தால மக்களும், விவசாயிகளும் பயணிக்கின்றனர். பிரதேச மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான கிராமங்களுக்கு தேர்தல் திருவிழாக்களுக்கு மட்டுமே செல்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் வாக்களித்த மக்களையும், கொடுக்கப்ட்ட வாக்குறுதிகளையும் மறந்துவிடுகின்ற நிலையே உள்ளது. இந்த அதிஷ்ட பிரதேசங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கால்தடங்கள் பட்டிருக்குமோ என்பது கேள்விக்குறிதான்.

மீன்களிடம் பேசும் ரோபோ கண்டுபிடிப்பு!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோவைக் கண்டு பிடித்துள்ளது. ஜெனிவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளது.

இந்த ரோபோ மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே உள்ளது. மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளி (சோலார்) மூலம் இயங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவை மீன்களைப் போன்று அவற்றை நீந்தச் செய்யும் திறன் படைத்தவை. மேலும், அதில் உள்ள டிரான்ஸ் மீட்டர் நமக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த ‘ரோபோ’ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி கூறும் திறன் படைத்தவை. அதன் மூலம் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் முடியும். இது கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

இது இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர்.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம் மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்து இதைக் கண்டுபிடித்துள்ளனர்