வவுனியா நெளுக்குளம் மகா வித்தியாலய மாணவி செந்தில்நாதன் ஆப்தவி மாவட்ட ரீதியில் 8வது இடம்!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய பாடசாலை மாணவி செந்தில்நாதன் ஆப்தவி 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் சிவநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

122 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 25 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 100க்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையினை இதுவரையில் பெறமுடியவில்லை என அதிபர் மேலும் தெரிவித்தார்.

வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் 8மாணவர்கள் சித்தி

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் கலையகன் 175புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 45வது இடத்தினை பெற்றுள்ளதாக பாடசாலையில் அதிபர் எஸ். வஸ்சியம்பிள்ளை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

64 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 8மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 32 மாணவர்கள் 100க்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு  வவுனியா நெற்  நிர்வாகமும் தனது பாராட்டுக்களை  தெரிவித்து கொள்கின்றது.

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் 6ஆம் இடம்!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி மனோகரன் கனிஷா 185 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் திருமதி நந்தபாலன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

46 மாணவர்கள் புலமைப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதில் 09 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

185புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் ஆறாவது  இடத்தினை பெற்ற மாணவி உட்பட 9 மாணவர்களும்  ஆசிரியர்களதும், பெற்றோர்களதும் அயராத முயற்சியினால் புலமைப்பரீட்சையில் திறமைச் சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு  வவுனியா நெற்  நிர்வாகமும் தனது பாராட்டுக்களை  தெரிவித்து கொள்கின்றது.

வவுனியா விபுலாநந்த கல்லூரியில் புலமை பரிசில் பரீட்சையில் 49 மாணவர்கள் சித்தி!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் 49 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அமிர்தலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தரம் 5 புலமைப்பரீட்சையில் 182 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 49 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 88 மாணவர்கள் 100க்கும் 153க்கும் இடையே பெறுபேற்றினையும்  35 மாணவர்கள் 70க்கும் 100க்கு இடையே பெறுபேற்றினையும் 10 மாணவர்கள் 70க்கு குறைவான புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

சோபிகா தர்மராசா 186புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினையும் சிவதாசன் தேனுஷன் 179 புள்ளிகளையும் செபமாலை தரணீதரன் 177 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமையினை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு  வவுனியா நெற்  நிர்வாகமும் தனது பாராட்டுக்களை  தெரிவித்து கொள்கின்றது.

வவுனியா கோவிற்குளம் இந்துக் கல்லூரியில் இரு மாணவர்கள் சித்தி!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில்  வவுனியா கோவிற்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களான எட்ரியன் ஜெபிரியல் 174புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 55வது இடத்தினையும்  க.வினுசிகா 155 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 302வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் க.புலோகசிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

43 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் இரு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 20 மாணவர்கள் 100க்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு  வவுனியா நெற்  நிர்வாகமும் தனது பாராட்டுக்களை  தெரிவித்து கொள்கின்றது.

வவுனியா பாவற்குளம் படிவம்-3  இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி!

வவுனியா பாவற்குளம் படிவம்-3  இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் .

T.டனுர்ஜன்-172 புள்ளிகள்

A.அரிசாந்-171 புள்ளிகள்

P.ருஜினிகா-166  புள்ளிகளையும்  பெற்று பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளதாகவும் மிகவும் பின்தங்கிய கிராம சூழல் கொண்ட பாடசாலையில்  தமது தளராத   முயற்சியுடனும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு  மிக்க கற்பித்தல் செயல்பாடு காரணமாகவும் இம்மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் திரு. செல்லத்துரை ஜனந்தன் தெரிவித்திருந்தார்

இம்மாணவர்களுக்கு  வவுனியா நெற்  நிர்வாகமும் தனது பாராட்டுக்களை  தெரிவித்து கொள்கின்றது.

வவுனியா பன்றிகெய்தகுளம் அ.த.க பாடசாலையில் மூன்று மாணவர்கள் சித்தி!

வ/பன்றிக்கெய்தகுளம் அ.த.க  பாடசாலையிலிருந்து  இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் மூன்று மானவர்கள் சித்தியடைந்துள்ளனர் . மிகவும்  பின்தங்கிய கிராம குடும்ப சூழ்நிலையை கொண்ட பன்றிக்கெய்தகுளம் அ.த.க  பாடசாலையிலிருந்து

செல்வன் T.பரிதியன்176 புள்ளிகள்

செல்வன் .A.லியூட்சன் 172 புள்ளிகள்

செல்வன் N.டினோயிதன் 162 புள்ளிகள் பெற்று   பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வறுமை வாட்டியபோதும் தளராது தமது திறமையை வெளிப்படுத்திய இவர்களுக்கு   வவுனியா நெற்   நிர்வாகமும் தமது  பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் அவிர்சாஜினி, லெவீந் 190 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

 
நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த இருவர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளரின் மகளான உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவருமே 190 புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றுள்ளனர்.

இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த இவ் இரு மாணவர்களும் ஆசிரியை லெனின் இராஜேஸ்வரியின் மாணவர்களாவர்.

நேற்று இரவு வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இருவர் முதலாமிடத்தினை பெற்றுள்ளதுடன், மூன்றாமிடத்தினை புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த வி.ரவிசாந் 186 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

முகப்புத்தகத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை!!

மாலபே – கஹன்தொட பகுதியை சேரந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றியவர் எனவும், அவர் குறித்த பாடசாலையில் இருந்து அண்மையில் பதவி விலகியுள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தனது மகளுக்கு பிரச்சினைகள் எதுவும் கிடையாது என உயிரிழந்த பெண்ணின் தாய் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எதுவும் நிரந்தரமல்ல என உயிரிழந்த பெண் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் 194 புள்ளிகளைப் பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்!!

 
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட வெட்டுப்புள்ளி 155ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் 216 மாணவர்கள் தேற்றியதில் அவர்களில் 120 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் புலமை பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தான் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்று கல்விகற்கவில்லை எனவும், பாடசாலை கல்வியை பயின்றே பரீட்சையில் சித்தியெய்தியதாகவும் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலையில் கற்கும் பாடங்களை வீட்டில் மீண்டும் படிப்பதன் மூலம் நல்ல பெறுபேற்றினை பெறமுடியும் எனவும் குறித்த மாணவி தெரிவித்தார்.

இதேவேளை மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்றமாணவி கருத்து தெரிவிக்கையில் தான் இந்த பெறுறேற்றினை பெற்றுக்கொள்வதற்கு தனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் வழங்கிய ஊக்கமே காரணம் என குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராகி வட மாகாண தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே தனதும், தனது பெற்றோரின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!!

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மாவட்ட ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தை சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளி விபரங்கள்…

 

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியால மாணவன் மாவட்ட ரீதியில் 3ம் இடம் பெற்று சாதனை!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் வி.ரிசான் 186 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கமலாம்பினை சொக்கலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இம் மாணவனின் பெறுபேறு பாடசாலை வரலாற்றிலே முதற்தடவையாகும் . 55 மாணவர்கள் புலமைப்பரிட்சைக்கு தோற்றியிருந்தனர். இதில் 24 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 26 மாணவர்கள் 100க்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

186 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினை பெற்ற மாணவன் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவன். தனது வறுமையினை பொருட்படுத்தாது அவரது அயராத முயற்சியினால் புலமைப்பரிட்சையில் திறமைச் சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.​

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவரின் விபரம் வெளியானது..!

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவரின் விபரம் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதயில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவன் மாவட்ட நிலையில் மூன்றாம் இடம்!

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடம் இடம்பெற்ற  புலமைப்பரிசில் பரீட்சையில்    வவுனியா வடக்கு  வலயத்துக்குட்பட்ட  புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த  மாணவன் ஒருவர் மூன்றாம் இடத்தையும்   பெற்றுள்ள்ளார்.

பின்தங்கிய கிராம குடும்ப சூழ்நிலையை உடைய செல்வன் வி.ரிசான் 186 புள்ளிகளை பெற்று வவுனியா மாவட்டத்தில் 3வது இடத்தை பெற்றுள்ளான் வறுமை வாட்டியபோதும் தளராது தன் திறமையை வெளிப்படுத்தி மாவட்ட மட்டத்தில்  மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவர் இருவர் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!

நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த இருவர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளரின் மகளான உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவருமே 190 புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றுள்ளனர்.

இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த இவ் இரு மாணவர்களும் ஆசிரியை லெனின் இராஜேஸ்வரியின் மாணவர்களாவர்.

நேற்று இரவு வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இருவர் முதலாமிடத்தினை பெற்றுள்ளதுடன், மூன்றாமிடத்தினை புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த வி.ரவிசாந் 186 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய மானம்பூ திருவிழா மற்றும் கௌரி விரத ஆரம்பம்!

வவுனியா ஓமந்தை அர்சர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள் ஆலயத்தின்  மானம்பூ திருவிழா  கடந்த30.09.2017  சனிக்கிழமை இடம்பெற்றது .

தொடர்ந்து    கௌரி விரத ஆரம்பநிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.