வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (02.03.2017) மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக வானமொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த வாகனம் வவுனியா மாவட்ட செயலக வாகன தரிப்பிடத்தில் தரித்து நிற்காது மாவட்ட செயலக வளாகத்தில் அரச மரமொன்றின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று வவுனியாவில் வீசிய காற்றின் காரணமாக மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குறித்த வாகனம் பகுதியளில் சேதமடைந்துள்ளது.
வவுனியா நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமமான பாரதிபுரம் கிராமத்தில் 1983ம் ஆண்டு பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்ட பாரதிபுரம் பாரதி வித்தியாலயம் பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 5 வரை காணப்படுகின்றது.
இப் பாடசாலைக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் வருகின்ற போழுதும் கிராமப்புர பாடசாலையாக காணப்படுவதாலும் நகரிலிருந்து பல கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருப்பதாலும் சில மாதங்களிலேயே அவர்களை மீண்டும் வேறோரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாவும் தற்போது இப் பாடசாலையில் பணிபுரிகின்ற அதிபருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமனையினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலைக்கு மாணவர்கள் சழூகமளிக்காது காலை 7.45 மணியளவில் பாடசாலை வாயிலுக்கு முன்பான மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து சுமார் 30நிமிடங்களுக்கு மேல் எமது அதிபரை எமக்கு தா? அதிபரை இடமாற்றாதே என பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்தனாயக்கா தலை மையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாடசாலை சமூகத்தினரிடமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் சுமார் 20 நிமிடங்களாக கலந்துரையாடி போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து மாணவர்கள் பாடசாலைக்கு சென்றனர்.
இப் பாடசாலையில் 7 நிரந்தர ஆசிரியர்களும் 2 தொண்டராசிரியர்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணனிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
குறித்த அதிபரிடன் சம்மதத்துடனேயே அவருக்கு வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு உப அதிபராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடசாலை மாணவி தற்கொலை செய்தமை தொடர்பாக அவருக்கு வவுனியா பாரதிபுரம் பாரதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.
தண்டணையின் அடிப்படையில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த அதிபரை வேறு பாடசாலைக்கு ஐந்து வருடத்துக்குள் இடமாற்றம் செய்ய முடியும். குறித்த அதிபர் பாரதி வித்தியாலயத்தில் தான் கடமையாற்ற விருப்பம் என தெரிவித்தால் அவரை அந்த பாடசாலைக்கே மீண்டும் வழங்கத் தயார் எனத் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளிற்கு இனங்க வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் நேற்று (02.10.2017) மதியம் 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கிருபாகரன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் செயலாளர் ஆர்.தர்சன், சமூக கல்வி பொறுப்பாளர் த.நவீன், முன்னாள் செயலாளர் தி.சிவகுமார் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், சின்னடம்பன் கிராம சேவையாளர் எஸ்.சிவகாந்தன், நெடுங்கேனி தெற்கு கிராம சேவையாளர் எஸ்.சுபாஸ், குளவிசுட்டான் கிராம கிராம சேவையாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் வசித்த மக்கள் தற்போது சின்னடம்பன் பகுதியில் குடியேற்றப்பட்டனர். அங்குள்ள பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தெரிவு செய்யப்பட்ட 12 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பண்டாரிகுளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர் சிறுவர் தின விழா நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு பண்டாரிகுளம் கிராமஅபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறுவர்கள் முதியோரின் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் வயதில் மூத்த முதியவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றது.
பண்டாரிகுள முதியோர் சங்கத்தலைவர் து.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், முதியோர் மேம்பாட்டு உதவியாளர் திருமதி அ.பிரகாசினி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பண்டாரிகுளம் கிராம சேவை உத்தியோகத்தர் திரு.சி.உமாபதி, உக்குளாங்குளம் முதியோர் சங்கத் தலைவர் கௌரவ விருந்தினர்களாக பண்டாரிகுளம் கிராம சங்கத் தலைவர் செ.துரைசிங்கம், உக்குளாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆர்.பரமேஸ்வரன் ஆகியோரும் விருந்தினர்களாக ம.அருளானந்தம், க.சுமந்திரன் , இ.புரட்சிமாறன், மு.ஜெகநாதன், இரா.கதிரவேல் , ப.கார்த்திகேசு, பொதுமக்கள், சிறுவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நேற்று (02.10.2017) பாடசாலையின் அதிபர் எஸ்.பாலச்சந்திரன் தலமையில் சிறுவர்களுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன் தமிழ் செ.ஸ்ரீநிவாசன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வுகளில் விசேட விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன் தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மாணவர்களுக்கு மூத்த குடிமக்கள் தொடர்பான விழுமியப் பண்புகள் தொடர்பில் உரை நிகழ்த்தினார் .
மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா வெளிக்குளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர் சிறுவர் தின விழா 01.10.2017 ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.
முதியோர் சங்கத்தலைவர் க.நடராஜா தலைமையில் வெளிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் வெளிக்குளம் சனசமூக நிலையம் வெளிக்குளம் ஆலய பரிபாலன சபை என்பன இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் இப்பிரதேச சிறார்கள் முதியோர் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக கிராமசேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் பவித்திரா மற்றும் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.மோகன் ராஜ்மோகன் குருக்கள் பரிபாலன சபைத்தலைவர் க.கந்தசாமி திருமதி நடராஜா கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு. தியாகராஜா, சனசமூகநிலையத்தலைவர் திரு முத்துக்குமார் , திருமதி சிவராஜா , திரு பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவர்கள் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.
என்பது வயது கடந்த முதியவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரை நிகழ்திய மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன்,
மூத்தோர்களின் உடல் உள நலத்தைப்பேனுவதற்கு அவர்களுக்கான யோகாசனப் பயிற்சி, நடைப்பயிற்சி என்பனவற்றை மாவட்ட சமூகசேவை அலுவலகம் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இது உழைக்கவேண்டும் எறும்பு போல தாத்தா நீதி சொன்னதை வலியுறுத்தும் எனவும் , மூத்தோர் பத்திரிகை வாசித்தல், புத்தகம் படித்தலை மீண்டும் ஆரம்பித்து சிறுவருக்கு வழிகாட்டிகளாக இருப்பதுடன் பழைய நல்ல கதைகள் எல்லாம் பாட்டி சொல்லித்தந்தார் என்ற மொழிகளை நிதர்சனமாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் தாஜ்மஹால், உத்தரப் பிரதேச அரசின் புதிய சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப் பிரதேச அரசு புதிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், காசி நகர் முதலிடத்தில் உள்ளது.
இந்து கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் மதுரா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதல்வர் யோகியின் கோரக்பூர் மடம் 4வது இடத்தில் உள்ளது.
காதலின் சின்னமாகப் போற்றப்படும் முகலாய அரசர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹாலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில், அதனை சுற்றுலாத்தலமே இல்லை என்று அறிவிப்பது போல இருக்கிறது என விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்படவில்லை என்பதால் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
களுத்துறையில் சர்வதேச சிறுவர் தினத்தன்று சில மாணவர்கள் மது அருந்தி கொண்டாடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று சிறுவர் தின கொண்டாட்டங்களும், சித்திரக் கண்காட்சியொன்றும் நடைபெற்றது.
இந்தப் பாடசாலையில் தரம் 12 இல் கல்வி கற்கும் 6 மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் மதுபான விருந்துபசாரமொன்றை நடத்தியுள்ளனர்.
பாடசாலை மைதானத்தில் வெற்று மதுபான போத்தல், சோடா போத்தல் என்பனவற்றை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில் பாடசாலை அதிபர் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து கடுமையாக எச்சரித்து, மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த பாடசாலை மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் அருந்திய மாணவர்களை களுத்துறை வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற போதும் பொலிஸாருக்கு அறிவிக்காது மாணவர்களை பரிசோதனை செய்ய முடியாது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பொலிஸாரும் பெற்றோரும் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வேகாஸ் இசை நிகழ்ச்சின் போது stephen Paddock என்ற நபர் நடத்திய கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டின் போது 58 பேர் பலியாகியுள்ளனர். 515க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் stephen Paddock என்ற நபரை பொலிசார் சுட்டு கொன்றுள்ள நிலையில் அவரது தோழியை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த தாக்குதலின் போது இடையில் சிக்கிக் கொண்ட தம்பதி தான் Sonny Melton-Gulish Melton. இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த போது, தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடியுள்ளனர்.
ஆனால் எதிர்பாரத விதமாக Sonny Melton இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார். இது குறித்து Gulish Melton கூறுகையில், எனது கணவர் ஒரு துணிச்சலானவர், அவர் அந்த தாக்குதலின் போது தன் கையை பிடித்துக் கொண்டு ஓடினார். தனக்கு பாதுகாப்பாகவும் இருந்தார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரின் மீது பட்டு விட்டது.
தன்னை காப்பாற்றி விட்டு அவர் இறந்துவிட்டார் என்று வருத்தமாக கூறியுள்ளார். இவர்களின் திருமணம் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் Tennessee பகுதியில் உள்ள Big Sandy பகுதியில் வசித்து வந்ததுடன், Henry County Medical Center-ல் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரைம் தொடர் பார்த்து மாமனார், மாமியார் மற்றும் மைத்துனரை கொன்ற இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் குர்கான் பகுதியை சேர்ந்தவர் கீதா டோமர்(24). இவர் கிரைம் தொடர்களை விரும்பி பார்ப்பது வழக்கம். இவரது கணவர் போதைக்கு அடிமையாகி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து தனது மாமியார் புஷ்பா(60), மாமனார் சத்பால்(65), மைத்துனர் பங்கஜ் குமார்(38) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் சொத்து தகராறு வெடித்துள்ளது. தனது கணவனின் குடும்பத்தை கொன்று விட்டால் 18 கோடி மதிப்பிலுள்ள மொத்த சொத்தும் தமக்கு கிட்டிவிடும் என கீதா திட்டம் போட்டுள்ளார்.
இவரது திட்டத்திற்கு வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் இளைஞரும் உதவ முன்வந்துள்ளான். இதனையடுத்து தக்க சந்தர்ப்பம் வாய்த்தபோது 3 பேரையும் கழுத்தை நெறித்துக் கொன்று உடல்களை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.
இந்த நிலையில் சத்பாலின் மகள் ஹேமலதா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
தற்போது கீதாவையும் கொலை செய்ய உதவிய ராஜஸ்தான் இளைஞரையும் கைது செய்துள்ள பொலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
மயங்கி விழுந்து காலையில் இறந்த ஆட்டோ டிரைவர் மாலையில் உயிர்பெற்று மீண்டும் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தின் அய்யம்பட்டியை சேர்ந்தவர் அறிவுச்செல்வம் (33) ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை, அந்த பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
அதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவுச்செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதையடுத்து அவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதற்கிடையில், சுமார் 8 மணி நேரம் கழித்து அறிவுச்செல்வத்தின் கை, கால்களில் திடீரென அசைவு ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ந்த உறவினர்கள் மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவர் பரிசோதித்ததில் அறிவுச்செல்வத்துக்கு நாடித்துடிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்து அம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அம்புலன்ஸ் வர நேரமானதால் ஜீப்பில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அம்புலன்ஸ் வந்த நிலையில் அறிவுச்செல்வத்தை அதில் ஏற்றி கொண்டு மருத்துவமனை சென்றனர்.
அங்கு அறிவுச்செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அறிவுச்செல்வம் உயிர் பிழைத்ததால் உறவினர்கள் அடைந்த மகிழ்ச்சி சில மணிநேரங்கள் நிலைக்காமல் போனது.
அண்மையில் தற்கொலை செய்த கொண்ட இலங்கை நடிகர் தசுன் நிஷான் தொடர்பாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நடிகர் தசுன் உயிரிழப்பதற்கு முன்னர் உலக புகழ்பெற்ற ஆபத்தான ப்ளுவேல் விளையாட்டினை விளையாடியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் முறை, தற்கொலை செய்து கொள்ளும் விதங்களை அவர் தொடர்ந்து இணையத்தளங்களில் பார்வையிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதனை பார்வையிட்டதன் ஊடாக அவரது மனநிலை மேலும் மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தசுன் மதுபாவனைக்கு அடிமையானதாக தெரிய வருகிறது.
உயிரிழப்பதற்கு முன்னர் தசுன் இறுதியாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவும் அவரது மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் – மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த இலங்கை புகலிட கோரிக்கையாளரின் உடலை ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம் அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.
மனுஸ் தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த இவரை அவுஸ்திரேலிய அரசாங்கம், மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பியிருந்தது.
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தனது உடலுக்குத் தானே தீங்கிழைக்க முற்பட்டதையடுத்து, ரஜீவ் ராஜேந்திரன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு உரிய உளவளச் சிகிச்சைகள் அளிக்கப்படாத நிலையில், தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரனின் உடலை, இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தை தொடர்பு கொண்டனர்.
ரஜீவின் உடலை கொண்டு வந்து ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று ரஜீவ் ராஜேந்திரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்தளவு பணத்தை எப்படிப் பெறுவது என்று எமக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள். எமது அன்புக்குரிய ரஜீவை எம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள். அது போதாதா? இப்போது, பணமும் கேட்கிறார்கள்?“ என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, ரஜீவ் ராஜேந்திரனின் உடலை, எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல், கூடிய விரைவில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் அகதிகள் பேரவை அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
மேலும், அநீதியான முறையில் தடுத்து வைத்திருந்ததால் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளையும், இழப்பீட்டையும் வழங்குமாறும் அவுஸ்திரேலிய அரசிடம் தமிழ் அகதிகள் பேரவை கேட்டுள்ளது.
அத்துடன், மனுஸ் தீவு மற்றும் நவுறு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் விரைவில் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பை விக்ரம் நேற்று வெளியிட்டிருந்தார்.
தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம்.
அவரது மகனான துருவ் விக்ரம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன.
அதற்கேற்றாற் போல் துருவ்வும் அவரது டப்ஸ்மேஷ் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமாகி வந்தார்.
இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் விக்ரம் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கிறது, இதுகுறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை பயன்படுத்தி இயக்கும் நடவடிக்கையில் லுப்தான்சா, ஏர்பிரான்ஸ்-கே.எல்.எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏர்பஸ் விமானம் பட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் ஆக மாற்றப்பட்டது, ஆனால் அது 2 பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த விமானங்களை வியாபார ரீதியில் அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதற்கான நடவடிக்கையில் இங்கிலாந்தின் ஈ.சி.ஜெட் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ரைட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் பொறியியலாளர்கள், பட்டரி நிபுணர்கள் இணைந்து இத்தகைய முயற்சியில் இறங்கினர்.
அதன் விளைவாக 2 இருக்கைகளுடன் கூடிய பட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பெரிய அளவில் விமானம் தயாரித்து பயன்பாட்டில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகையை விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. மேலும் பலத்த ஒலி வெளியாகாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.