பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்ட அறிமுக நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் 45 இலட்சம் மாணவர்களைப் பாதுகாப்பதற்கான முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விகாரைகளில் பயிலும் தேரர்கள் மற்றும் ஏனைய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தத் திட்டத்திற்காக 2900 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனையை படைத்தார்.
39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 84 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 153 இன்னிங்ஸ்களில் விளையாடி 23,835 பந்துதுகளை வீசி 11,128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக கொடுத்து 400 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரங்கன ஹேரத்திற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் டானியல் வெற்றேரி 362 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் 188 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 ஆவது இடத்திலுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரங்கன ஹேரத் 40 ஓவர்கள் பந்து வீசி 93 ஓட்டங்களைக் கொடுத்து 12 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
2 ஆவது இன்னிங்ஸில் 21.4 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து 4 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணிடம் நபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் கடந்த வெள்ளியன்று வதந்தியால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண்ணை காப்பாற்ற முயலாமல் நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே குறித்த பெண் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் பரவிவருகின்றது.
இந்நிலையில், சனநெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்களிடமிருந்து பணப்பை, நகைகள் ஆகியவற்றையும் சிலர் திருடி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BiggBoss வீட்டில் சுட்டி பையன் என்று அனைவராலும் விரும்பப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். நிகழ்ச்சியில் பாதியில் வந்த இவர் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
இவருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது. தற்போது ஹரிஷ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், BiggBoss வீட்டில் ஒவ்வொரு நிமிடமும் நல்ல அனுபவம். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி என பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்கும் ஐந்தாண்டு வேலைத் திட்டமொன்று சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகளின் படி ஆண்களில் இருவரில் ஒருவர் புகைத்தல் பழக்கமுடையவர்கள் என உள்நாட்டில் இனம் காணப்பட்டுள்ள நிலையில் 2030ம் ஆண்டு அந்த விகிதத்தை 5 சதவீதமாக குறைப்பதே இதன் நோக்கம் என சுகாதார அமைச்சு கூறுகின்றது.
உலக சுகாதார தாபனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத் திட்டத்திற்கு பிரிட்டன் 20மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது.
ஆண்களை புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் வகையில் 15 நாடுகளில் ஐந்தாண்டு வேலைத் திட்டம் உலக சுகாதார தாபனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அதில் முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார தாபனம் கூறுகின்றது.
புகையிலை பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களிலும் அது தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதிலும் முன்னேற்றத்தை காண முடிவதாகவும் உலக சுகாதார தாபனம் குறிப்பிடுகின்றது.
இலங்கையில் தற்போது சுமார் 35 ஆயிரம் பேர் புகையிலை செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 2020ம் ஆண்டு புகையிலை செய்கையை முற்றாக நிறுத்த சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது.
உள்நாட்டில் புகைத்தல் பழக்கம் காரணமாக வருடாந்தம் 25 ஆயிரம் பேர் மரணமடைகின்றார்கள். 5 சதவீதமான பிள்ளைகளும் அதனால் பாதிப்புக்குள்ளாகுவதாக கூறுகின்றார் சுகாதார அமைச்சரான டாக்டர் ராஜித சேனாரத்ன
“இலங்கையில் ஏற்கனவே சிகரெட் பெட்டிகளில் 80 சதவீதம் படத்துடன் கூடிய புகைத்தல் பற்றிய எச்சரிக்கை அச்சிடப்பட்டுள்ளது. புகையிலைக்கு 90 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலகிலே புகையிலைக்கு அதிக வரி இலங்கையில்தான் விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளினால் உள்நாட்டில் புகைத்தல் பழக்கமுடையவர்களின் எண்ணிக்கை தற்போது 46 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
“எதிர்காலத்தில் மேலும் சில நடவடிக்கைகளை சட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ள நிலையில் இந்த சதவீதத்தை மேலும் குறைக்க முடியும்” என்கின்றார் டாக்டர் ராஜித சேனாரத்ன.
“குறிப்பாக கடைகளில் தனியாக சிகரெட் விற்பனை முற்றாக தடை செய்யப்படவுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
“எதிர்காலத்தில் எவ்வித படமும் இன்றி வெறும் வெள்ளையாக சிகரெட் பெட்டி அறிமுகம் செய்யப்படும் , பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீற்றர் எல்லைக்குள் சிகரட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய சட்ட ரீதியாக தடை செய்யப்படும்” என்றும் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டார், என பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.
வேலங்குளம் கிராம சேவகப்பிரிவுக்குட்பட்ட ஏழு கிராமங்களை கொண்டு செயற்படுகின்ற இவ் கிராமசேவகப்பிரிவு மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து 2010ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றப்பட்டனர்.
சுமார் 350 குடும்பங்களுக்கு மேலதிகமாக காணப்படும் இக் கிராம சேவகப்பிரிவில் அபிவிருத்தி திட்டங்கள் எவையும் இடம்பெறுவதில்லை என கோரி இன்று (02.10.2017) காலை 8.30 மணியளவில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை மறித்து பூவரசங்குளம் சந்தியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015.02.04 காலப்பகுதி வரையிலும் முழுமையான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாமையும் சீராக போக்குவரத்து , வீதி புரணமைப்பு மேற்கொள்ளாமையும் கண்டித்து 2016ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் வீதி புனரமைப்போ, போக்குவரத்து சேவையோ இடம்பெறாதா நிலையில் இன்று (02.10.2017) வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தினை தடை செய்து வேலங்குளம் சந்தியிலிருந்து பூவரசங்குளம் சந்தி வரை வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் காரணமாக சுமார் 2 மணித்தியாலங்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் பொதுமக்களுடன் கலந்துரையாடி போக்குவரத்தினை சீர்செய்தனர்.
போராட்ட இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் , வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், இ.போ.சபை பணிப்பாளர் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் பொதுமக்களுடன் சுமார் 2 மணித்தியாலங்களாக கலந்துரையாடி இவ் வீதியினை 2019ம் ஆண்டு காபட் வீதிகளாக மாற்றி தருவதாவும் தற்போது கிரவல் போடப்பட்டு மக்கள் பயன்பட்டிற்கு ஏற்ப வகையில் வீதியினை செப்பனிட்டு தருவதாகவும் வாக்குறுதியளித்தமையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் போது பொதுமக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் , வடமாகாண சபை உறுப்பினர், வவுனியா பிரதேச சபை செயலாளர் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.
வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று (02.10) காலை 8 மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
பூவரசன்குளம் பகுதியிலிருந்து வேலன்குளம், சின்னடம்பன், கந்தன்குளம், செட்டிகுளம், கோயில்புளியங்குளம், சின்னத்தம்பனை போன்ற பிரதான மன்னார் வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கோரியே இன்றைய தினம் பொதுமக்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இதன் காரமணாக அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டும் குறித்த மக்கள் இவ்வீதியை புனரமைத்துத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டபோது அவ்விடத்திற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குறித்த வீதியைப்புனரமைத்துத்தருவதாக வாக்குறுதிகள் அளித்திருந்தனர்.
தமது அடிப்படைத் தேவைகளான கிணறு, வீட்டத்திட்டம் வீதி போன்வற்றை போராட்டங்கள் மேற்கொண்டே பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாவுகம் இதனால் மக்கள் பிரதிநிதிகள் தமக்கான வேலைகளை செய்யத்தவறியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், சமூகமளித்து தமது தரப்பு நியாயங்களை மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிரதான வீதியை மறித்து மக்கள் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்குப்பின்னர் பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் பொதுமக்களுடன் கலந்துரையாடி வீதியின் ஊடான போக்குவரத்தினை தடையின்றி மேற்கொண்டு வந்ததுடன் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து குறித்த வீதியை புனரைமப்பது தொடர்பாக கலந்துயைராடி வருகின்றனர்.
திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.
இனி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜொலிக்கப்படும் பிரபலமாக மாறவிருக்கிறார் அஞ்சலி. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழிலும் ராம் இயக்கத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.
கேரளா கோழிக்கோட்டில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அதன்பின்னர் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை விவரிக்கிறார் அஞ்சலி.
நான் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர் தான் எனது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். நான் ஆணாக பிறந்தாலும், பெண்கள் போன்று இருப்பது, பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போன்றவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது.
நான் திருநங்கை என்பதால், எனது தந்தை என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை வீட்டை விட்டு வெளியேறினேன். அதன்பின்னர் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் இருக்கும் திருநங்கை இனத்தவர்களுடன் வாழ்ந்து வந்தேன்.
அங்கு வாழ்ந்து வந்தபோது, எனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன். நடனம் ஆடும் வாய்ப்பு, பாலியல் தொழில் வாய்ப்புகளே அதிக வந்து என்னை மனதளவில் காயப்படுத்தின, ஆனால் இவற்றையெல்லாம் கண்டு மனம் தளராமல், எனது வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
நடிப்பு என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சிறுவயதில் இருந்தே அதன் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். இதனால் மொடலிங் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கால்பதித்தேன். ஆனால் நான் திருநங்கை என்ற காரணத்தால், ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் என்னை நிராகரித்தன.
அதன்பின்னர் தான், நடிகர் மம்முட்டியின் உதவியுடன் சினிமாவிற்குள் நுழைந்துள்ளேன். நான் நடிப்பதற்கு அவர் என்னை பல வகைகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். சினிமா துறையில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதுமட்டுமின்றி, நான் இப்போது ஒரு கலைஞர், இதனால் என்னை திருநங்கை என்று அழைக்க முடியாது. ஏனெனில் ஆண் கலைஞர், பெண் கலைஞர் என்று அழைப்பதில்லை. மாறாக கலைஞர் என்றுதானே அழைப்பார்கள். அதுபோன்று நானும் இப்போது ஒரு கலைஞர் ஆவேன் என கூறுகிறார் அஞ்சலி.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டுகள் தடை உத்தரவு தற்காலிகரமாக நீக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் பண்டுரா கிரிக்கெட் கிளப் மற்றும் களுத்தர கலாச்சார சங்கம் இடையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இரு அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களும் வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை என குற்றம்சாட்டபட்டது.
இதையடுத்து இரு அணி தலைவர்களான சாமர சில்வா மற்றும் மனோஜ் தேஷப்பிரியாவுக்கு இரண்டாண்டுகள் கிரிக்கெட் விளையாடவும் அது தொடர்பான விடயங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இதோடு இரு அணிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சமர சில்வா இலங்கை சர்வதேச அணிக்காக கடந்த 2011 வரை பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், தடை உத்தரவை நீக்க சாமர சில்வா உட்பட தடைசெய்யப்பட்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்தனர்.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட வீரர்களின் தடை உத்தரவு தற்காலிகரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட வீரர்களின் மேல்முறையீட்டு கோரிக்கையின் முடிவு வெளியாகும் வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோய் இருப்பதாக பொய் கூறியதால் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பெல் கிப்சன்(25). இவர் இயற்கை மருத்துவத்தின் மூலம் தனது புற்றுநோய் குணமடைந்ததாக கூறி, அவுஸ்திரேலியாவில் பிரபலமானார்.
அதன் பின் சமூக வலைத்தளங்களில், ஆயுர்வேத மருத்துவம், பிராணவாவு சிகிச்சை, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை இல்லாத உணவு முறை ஆகியவற்றின் மூலம் தான் தனது புற்றுநோய் தீர்ந்ததாக கூறி புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
அந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளதாக உறுதி அளித்திருந்தார்.
ஆனால் அந்தப் பணம் எந்த தொண்டு நிறுவனத்தையும் சென்று சேரவில்லை என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் கூறியது அனைத்துமே பொய் என்று தெரியவந்ததால், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது பெல் கிப்சன் தான் கூறியது பொய் என்று ஒத்துக் கொண்டதால் வாசகர்களை ஏமாற்றியதற்காக அவருக்கு 3,22,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கோவில் திருவிழா ஒன்றில் சாட்டை அடி வாங்கினால் பேய் ஓடிவிடும் என்று நம்பப்படுவதால், அடி வாங்கிய பெண்கள் சிலர் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டைக்கு அடுத்து உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு இருக்கும் அச்சப்பன் கோயிலில் பெண்களுக்கு பேய் விரட்டும் விநோத திருவிழா நடைபெற்றது.
இதையடுத்து அக்கோவிலில் உள்ள மற்ற தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின் பெண்களைச் சாட்டையால் அடித்து பேய்களை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் அமர்ந்து சாட்டையடி பெற்றனர். அப்போது பூசாரி கையில் மிக நீளமான சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார்.
அருகில் இருந்த பூசாரிகள் மட்டை போன்று நீளமான குச்சியை கையில் வைத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில், தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர்.
பூசாரி, வேகமாகச் சாட்டையை சுழற்றி அடிக்க, ஒரு சில பெண்கள் நான்கு, ஐந்து முறை சாட்டையால் அடி வாங்கினர். சிலர் ஒரு அடியிலேயே பதறியடித்து ஓடினர்.
இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் இங்கு சாட்டை அடி திருவிழா நடைபெறும். இந்த கோவிலுக்கு வந்து சாட்டையால் அடிவாங்கினால் திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க முடியும், கடன் பிரச்னை அகலும், தொழில் வளர்ச்சி அடைய முடியும், விவசாயம் செழிக்கும்.
அதுமட்டுமின்றி பேய் பிடித்தவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்டையடி வாங்கினால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாகவே சாட்டையால் அடிவாங்குவது கூறியுள்ளார்.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தலை, கை, கால்கள் வெட்டி அகற்றப்பட்ட மனித உடல் பாகத்தினை கண்டெடுத்த துப்புரவு பணியாளர்கள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த பாகங்களை பிரேத பரிசோதனை செய்ததில், மர்மநபர்கள் அவரை கொன்று, உடல் உறுப்புகளை துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசி உள்ளனர். இதனால் கொலையானவர் யார்? என்பது குறித்த விசாரணையில் சில தகவல்கள் வெளியாகின.
முகப்பேர் மேற்கு 3வது பிளக் பகுதியில் உள்ள தையல் கடையும், எதிரே உள்ள இறைச்சி கடையும் கடந்த 26ம் திகதி முதல் பூட்டிக்கிடப்பது தெரிந்தது. இது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது தையல் கடையில் வேலை செய்துவந்த தையல்காரர் பாபுவும், இறைச்சி கடையில் வேலை செய்துவந்த ரசூலும் காணாமல்போனது தெரிந்தது.
அந்த தையல் கடைக்கு எதிரில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்க்கும் ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த முகமது ரசூல் (22) என்பவர்தான் பாபுவை வெட்டிக்கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான முகமது ரசூலை பொலிசார் பொலிசார் கண்டுபிடித்தனர், அப்போது பாபுவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் பொலிசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு..
நானும், தையல்காரர் பாபுவும் நட்புடன் பழகிவந்தோம். எனது கடையின் உரிமையாளர் வெங்கடேஷ் என்னை நம்பி கடையின் முழுபொறுப்பையும் ஒப்படைத்து இருந்தார். இரவு 8 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை மூடிய பின்பு கடையின் மாடியில் தங்கிக்கொள்வேன். தினமும் பாபு வேலை முடிந்து கடைக்கு வருவார். நாங்கள் இருவரும் கடையில் மது வாங்கி வந்து அருந்துவோம்.
அப்போது பாபு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தருவார். அப்படித்தான் கடந்த 25ம் திகதி இரவு போதையுடன் கடைக்கு வந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். அன்று காலையில் இருந்தே அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். நானும் பலமுறை அவரிடம் பொறுமையாக பேசியும் கேட்கவில்லை.
இதனால் பாபு மீது கடும் கோபத்தில் இருந்தேன். அன்று இரவு 11 மணியளவில் மீண்டும் என்னிடம் வந்து பணம் கேட்டு பிரச்சினை செய்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தில் கையால் ஓங்கி குத்தினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவர் இறந்துவிட்டதாக நினைத்து, கடையில் ஆடு வெட்ட வைத்து இருந்த கூர்மையான வெட்டுக்கத்தியால் முதலில் அவரது 2 கைகளையும், பின்னர் அவரது தலையையும், 2 கால்களையும் தனித்தனியாக வெட்டினேன்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க வெட்டி எடுத்த உடல் பாகங்களை தனித்தனியாக 6 சாக்குப்பைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசினேன். பின்னர் கடையை பூட்டிவிட்டு பல்லாவரத்துக்கு தப்பி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ பயிற்சி அழிக்கும் வகையில் துபாயில் மாதிரி கிரகம் உருவாக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில பன்னாட்டுத் தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய குடியிருப்புக்களை அமைத்து அங்கு மனிதர்களை குடியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது இத்தகைய நடவடிக்கையில் ஐக்கிய அரபு இராச்சியம் கடும் முனைப்புடன் இறங்கியுள்ளது.
இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி கிரகம் உருவாக்கப்படுகிறது. இதற்காக 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் இராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது.
இது துபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக இலங்கை மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபா செலவிடப்படுகிறது.
கனடாவில் மொடல் ஒருவர் கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்ட காரணத்தால் அவர் தனது ஒரு கண்பார்வையை இழந்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து மக்களிடம் தெரியப்படுத்தி, டாட்டூ போட்டுக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த காட் காலிங்கர்(24) என்பவர் மொடலாக இருக்கிறார். இவர் சமீபத்தில் தனது கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்டதால் கண் பார்வையை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவர் உருக்கமாக கூறியுள்ளதாவது, கண்ணில் டாட்டூ வரைந்துகொள்வது இன்று சாதாரணமானது. இப்படி ஒரு கொடூரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு என் கண்ணிலிருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. உடனே மருத்துவமனைக்குச் சென்றேன். சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது. கண் பெரிதாக வீங்கியது. இமையைத் திறக்க முடியாமல் போனது. டாட்டூ மை கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வையும் குறைந்தது.
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் என் பழைய பார்வையை மீட்க முடியவில்லை. கண்ணும் பழைய நிலைக்கு வரவில்லை. இன்னும் வெளிர் ஊதா நிறத்தில்தான் இருக்கிறது.
என் பார்வை முழுமையாக மீண்டும் கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இன்னும் மோசமாவதற்குள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறேன். அதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட பாதிப்பை உலகத்திடம் சொல்லிவிட முடிவு செய்தேன். என்னைப்போல் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் என்னுடைய படங்களை வெளியிட்டிருக்கிறேன்.
கண்களில் டாட்டூ போடும் முன்பு ஆயிரம் தடவை யோசியுங்கள். தகுதியான, தரமான டாட்டூ கலைஞரா என்று விசாரித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் கண்களில் டாட்டூ போடுவதைத் தவிர்த்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மேலபுலிவார்டு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(36). எலக்ட்ரிக் கடை நடத்தி வந்த இவருக்கு, நஷ்டம் ஏற்பட்டதால், தூத்துக்குடியை சேர்ந்த தனது உறவினர் மாரியப்பன் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது அவர் சில பூஜைகள் செய்தால் இது எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி, திருச்சிக்கு சென்று சில பூஜைகள் செய்துள்ளார்.
அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ஷிப்பிங் தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும் கூறியதால், கவிதா 5 லட்சம் ரூபாய் பணத்தை மாரியப்பனிடம் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தொழில் மேலும் உச்சமடைய வேண்டும் என்றால் தேக சுத்தி, நிர்வாணபூஜை நடத்த வேண்டும் என்றும் பூஜையின் முடிவில் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, தான் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பணத்தை தரமறுத்த மாரியப்பன், கவிதாவுக்கு நேரிலும், போன் மூலமும் கொலை மிரட்டல் விடுத்ததால், அவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
பொலிசில் புகார் கொடுத்தால், மாரியப்பன் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகிய மாரியப்பனை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மாரியப்பன் திருச்சியில் பதுங்கியிருப்பது பொலிசாருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து அவனை கைது செய்தனர்.
விசாரணையில் மாரியப்பன் போலி சாமியார் என்பதும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதுபோல மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
கிராம சேவகரின் அலுவலகத்திற்கு பின் புறம் உள்ள வீட்டில் ஒரு மூலையில் இருந்த நிலையில் சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 24 வயதான சகோதரனும் அவரது மனைவியும் இந்த சிறுவனை சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எப்படி இருந்த போதிலும் தம்மை விட பலத்திலும், வயதிலும் குறைந்த சிறுவர்களை துன்புறுத்துவதும், சித்திரவதை செய்வதும் மிகவும் கொடுமையானது என சிறுவர் உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.