விபத்தில் சிக்கி வலியால் துடித்த பிரபல நடிகையின் தாய் : கண்டுகொள்ளாத மக்கள்!!

வீதி விபத்தில் சிக்கிய நடிகை சிந்து மேனனின் தாய் வலியால் துடித்து கொண்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் சண்டையிட்ட ஓட்டுனர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து மேனன். பெங்களூரில் சிந்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சிந்துவின் தாய் ஸ்ரீதேவி அருகில் உள்ள இடத்துக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

சிக்னலில் முச்சக்கரவண்டி நின்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கால் டக்சி ஒன்று முச்சக்கர வண்டியில் மோதியது.

இதில் ஸ்ரீதேவியின் மார்பில் அடிப்பட்டு வலியால் துடித்தார். அதை பொருட்படுத்தாத கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர்.

இதையடுத்து, தனது மகனுக்கு தொலைபேசி அழைப்பில் ஸ்ரீதேவி தனது நிலையை தெரிவித்துள்ளார். பின்னர் ஒருமணி நேரத்துக்கு பின்னரே ஸ்ரீதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோழிக்கறிக்குள் சிக்கிய மர்மம் : யாழில் நடந்த விநோத சம்பவம்!!

யாழ். சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற உணவுப் பொதியில் போதைப்பொருள் சிக்கியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்றவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ். சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது. விளக்கமறியலில் இருக்கும் கைதியொருவரைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் போத்தல் ஒன்றினுள் கோழிக்கறி கொண்டு சென்றுள்ளார்.

குறித்த கோழிக் கறி மீது சந்தேகம் கொண்ட சிறைக்காவலர்கள் அதனை பரிசோதித்துள்ளனர். அப்போது கோழிக்கறியின் குழம்பினுள்ளே சிறு சிறு பொலித்தீன் பைககள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் அடங்கிய சிறிய பொதிகள் பல அதில் காணப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கோழிக்கறி கொண்டு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபரிடமிருந்து 02 கிராம் 500 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் விசித்திர வாழைமரம் : பார்வையிட குவியும் மக்கள்!!

 
காரைதீவு 1ஆம் பிரிவு விபுலானந்த வீதியிலுள்ள வீடொன்றில் விசித்திர வாழை மரம் ஒன்று காணப்படுகின்றது. இதில் வாழை மரம் ஒன்றின் அடியிலிருந்து 2 அடி உயரத்தில் இடைநடுவில் வாழைக்குலை தள்ளியுள்ளது.

6 அடி மெலிந்த உயரமான வாழை மரத்தின், அடியிலிருந்து 2 அடி உயரத்தில் சுமார் 4 சிறிய சீப்புகளுடன் இக்குலை தள்ளியிருக்கிறது.

வாழை மரத்தின் மேற்பாகத்தில் குலை தள்ளுவதே வழமை. எனினும் இந்த வாழைமரம் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது.

இடைநடுவில் குலைதள்ளி உள்ள குறித்த அதிசயத்தை அப்பகுதியில் இருக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

பேஸ்புக்கில் திருமணத்திற்கு பெண் தேடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் எழுதிய பதிவு வைரலான நிலையில் அவருக்கு பெண் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்ஜீஷ் மஞ்சேரி. 34 வயதான இவருக்கு பல வருடங்களாக திருமணத்துக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில் பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த யூலை மாதம் பேஸ்புக்கில் ரஞ்ஜீஷ் ஒரு பதிவை எழுதினார். அதில், எனக்கு இன்னும் திருமணம் நிச்சயிக்கபடவில்லை. திருமணத்துக்கு பெண் தேடி வரும் நிலையில், உங்களுக்கு பெண் யாராவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். என் வயது 34. எனக்கு எந்த கோரிக்கைகளும் இல்லை. பெண்ணை எனக்கு பிடிக்க வேண்டும், நான் புகைப்படகலைஞராக உள்ளேன் என பதிவிட்டிருந்தார்.

பதிவில் பெற்றோருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ரஞ்ஜீஷ் வெளியிட்டார். இந்த பதிவை 4100 பேர் பகிர்ந்த நிலையில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு பதிவை ரஞ்ஜீஷ் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு பெண் கிடைத்துவிட்டது. அது குறித்த மற்ற விபரங்களை நேரம் வரும் போது அனைவரிடமும் தெரிவிப்பேன். எனக்கு உதவிய அனைவருக்கும் மற்றும் மீடியா நண்பர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவுசெய்து செய்து வருவதோடு, ரஞ்ஜீஷ் திருமணத்துக்கு செல்ல ஆர்வத்தோடு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

பொலன்நறுவை – வெலிகந்தை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் ரிதிதென்ன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இந்த நபர் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்குதல் நடந்த இடம் மாதுருஓயா மற்றும் சோமாவதி தேசிய வானங்களுக்கு யானைகள் சென்று வரும் பாதை என தெரியவந்துள்ளது.

மர்மமாக இறந்து கிடந்த பெண் : தான் கொல்லப்படலாம் என முன்னரே எழுதிய அதிர்ச்சிக் கடிதம்!!

 
இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவர் செய்த கொடுமைகளை கடிதமாக அவர் எழுதியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷத்பூரை சேர்ந்தவர் பிரீத்தி குமாரி, திருமணமான இவர் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் மர்மமான சூழலில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து பிரீத்தியின் குடும்பத்தார் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசில் புகார் அளித்தனர்.

இதனிடையில், பிரீத்தி இறப்பதற்கு ஒருமாதத்துக்கு முன்பு தான் கொலை செய்யப்படலாம் என அவருக்கு தோன்றிய நிலையில் தந்தைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கணவரும், மைத்துனரும் எப்படியெல்லாம் தன்னை கொடுமைப்படுத்தினார்கள் என எழுதியுள்ளார்.கணவர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, சிகரெட் பிடிக்க வைத்ததாகவும், வாயை துணியால் கட்டி அடிப்பதாகவும் எழுதியுள்ளார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரீத்தியின் கணவர் மற்றும் மைத்துனரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நெருப்பில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பர்தாவைக் கழற்றி காப்பாற்றிய பெண்!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீப்பற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சாரதியை பெண் ஒருவர் தனது பர்தாவை கழற்றி காப்பாற்றியுள்ளார்.

அமீரகத்தில் ஆஜமன் நகரில் உள்ள வீதியில் வாகனங்கள் திடீரென்று மோதின. இதனால் அதில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த சாரதி உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே ஜவாஹெர் என்ற இளம் பெண் தன் பெண் நண்பிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் உயிருக்கு போராடியதை கண்டுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தன் பர்தாவை கழற்றியதோடு, தோழியின் பர்தாவையும் கழற்றித், ஓட்டுனரை கீழேத் தள்ளி பர்தாவை வைத்து தீயை அணைத்துள்ளார்.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மீட்பு படையினர் தீயில் சிக்கியவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தீயில் சிக்கிய ஓட்டுனரின் பெயர் சிங் என்றும் அவருக்கு உடலில் 50 சதவீத அளவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜவாஹெர் மட்டும் சமயோசிதமாக பர்தாவைக் கழற்றித் தீயை அணைக்கவில்லை என்றால், தீக்காய சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜவாஹெர் மற்றும் அவரின் தோழியின் துணிச்சலைப் பாராட்டி சமூகவலைத் தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் : வேறுநாட்டிலிருந்து பார்த்த தந்தை : நெகிழ்ச்சி தருணம்!!

ஒரே பிரசவத்தில் மனைவிக்கு நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், வேறுநாட்டில் இருந்த கணவர் குழந்தைகளை கைத்தொலைபேசி மூலம் பார்த்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் அண்டனி புர்ச். இவர் மனைவி மேரி பேட். ராணுவ அதிகாரியான அண்டனி தனது வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பலநாட்கள் பிரிந்து தான் இருப்பார்.

மேரி கர்ப்பமாக இருந்த நிலையில் அண்டனி தென் கொரியாவில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் மேரிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது.

குழந்தைகளுக்கு ஹென்றி, மோலி, நதானியல் மற்றும் சாமுவேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6000 மைல் தூரம் தொலைவில் இருந்த அண்டனி நவீன தொழில்நுட்பமான கைத்தொலைபேசியில் காணொளி மூலம் தனது குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அமெரிக்காவுக்கு சென்று அவர்களைப் பார்த்துள்ளார்.

வவுனியா ஈச்சங்குளத்தில் சட்டவிரோதமாக மரம் கடத்திய இருவர் கைது!!

 
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (30.09.2017) சட்டவிரோதமாக மரம் கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈச்சங்குளம் கரப்பங்குளம் குள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்ன வழிகாட்டலில் பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் நிமால்சிறி தலைமையில் பொலிஸ் கொஸ்தபர்களான மதுர 40849 , குமார 61533 , தர்சநாயக்க 87250 , பாரதிராஜா 73919 , குமார 33787 ஆகியோர்களினால்,

இன்று ( 30.09.2017) மதியம் 1 மணியளவில் கடத்தலில் ஈடுபட்ட கருவேப்பங்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த 27வயதுடைய இருவரையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெட்டு இயந்திரம் , சிறிய ரக உழவு இயந்திரம் , ரூபா ஒரு லட்சம் பெறுமதியான மதுர மரக்குற்றிகள் 30 என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சர்வதேச குருதிக்கொடையாளர்கள் தினம்!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (30.09.2017) காலை 10 மணியளவில் சர்வதேச குருதிக்கொடையாளர்கள் தினம் இரத்த வங்கியின் வைத்தியர் தலமையில் இடம்பெற்றது.

மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆரம்பமான இந் நிகழ்வில் , கலை நிகழ்வுகள், 10க்கு மேற்ப்பட்ட தடவைகள் இரத்தம் வழங்கிய குருதிக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், பம்பைமடு இறை இரக்க ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்லி ஜெகானந்தன், இரத்த வங்கி வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், குருதிக்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா இளைஞன் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் சாதனை!!

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நடாத்தும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின்10,000 மீட்டர் நெடுந்தூர ஓட்டத்தில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் கிந்துசன் வெள்ளிப் பதக்கத்தை பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் குறித்த போட்டியை 35:00:65 நிமிடத்தில் பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது. கிந்துசன் கடந்த காலங்களில் தேசிய மட்டத்தில் சாதனைகள் படைத்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் யானைகளினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் : ஜி.ரி.லிங்கநாதன்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணி மற்றும் செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் யானைகளினால் பல உயிரிழப்புகள் அதிகரித்து வருவதுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பயிர் சேதங்களுக்கு உள்ளாகி  உடைமைகளையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் வனஜுவராசிகள் அலுவலகம் ஒன்றை திறந்து யானைகளினால் வருகின்றன இடரினை தடுக்கும் முகமாக மின்சார வேலி அமைத்தல் , தற்காப்பு உபகரணங்களை கையளித்தல் (யானை வெடி) போன்றவற்றிற்கான நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு வட மாகாண  சபை உறுப்பினர்  ஜி.ரி.லிங்கநாதன் வனஜுவராசிகள் அமைச்சர்  ஜெய விக்ரம பெரேராவிற்கு  கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளார்.

 

வவுனியாவில் இரவு வேளையில் ஒளிராத வீதி மின் விளக்குகள் பகலில் ஒளிர்கின்றன!!

 
வவுனியா நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில நேரங்களில் இரவு வேளைகளில் ஒளிராத இந்த வீதி விளக்குகள் பகல் வேளைகளில் இவ்வாறு ஒளிர்வதாகத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இரவு வேளைகளில் ஒளிரவிடப்படும் மின் விளக்குகள் பகல் வேளைகளில் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24நேரமும் எரிந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது

இன்று (30.09.2017) பிற்பகல் 1 மணியளவில் வவுனியா நகரின் சகல வீதி மின் விளக்குகளும் ஒளிர்ந்து இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் வவுனியா பிராந்திய காரியாலய மின் பொறியியலாளரிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

வீதி மின்விளக்குகளை பகல் நேரங்களில் அணைப்பது வவுனியா நகரசபையினரே, இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வீதி மின்விளக்குகள் குறித்து வவுனியா நகரசபையினர் எவ்வித அக்கறையும் எடுப்பதில்லையென கவலை தெரிவிக்கும் மக்கள் மின்சாரம் வீணாகுவது குறித்து தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வாணி விழாவும் இறுவட்டு வெளியீடும்!!

 
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (29.09.2017) வெள்ளிக்கிழமை வாணி விழா கல்லூரி முதல்வர் திரு.நற்குனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . பூஜை வழிபாடுகளும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இதில் சிறப்பாக இடம்பெற்றன.

சிறப்பு பேச்சாளராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு ‘வாணி விழாவின் மானிடவிழுமியங்கள் ‘ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

கல்லூரி விரிவுரையாளர் திரு.தினேஸ் தலைமையில் மாணவர்கள் பங்குகொண்ட ‘தொலைபேசிப்பாவனை மாணவர்களை சீரழிக்கின்றதா வளப்படுத்துகின்றதா’ என்ற தலைப்பில் பட்டிமண்டபமும் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சமாக கல்லூரி கீதம் இயற்றப்பட்டு இறுவட்டு வடிவில் வெளியிடப்பட்டது. கல்லுர்ரி அதிபர் திரு.நற்குனேஸ்வரன் இதனை வெளியிட்டு வைத்தார். பகுதி நேர விரிவுரையாளர் சு.பூபாலசிங்கம் முயற்சியால் அன்பழகனின் பாடல் வரிகளுக்கு சோமசுந்தரம் ஜெயந்தன் இசைவடிவம் கொடுத்து கல்லூரி கீதம் வெளியிடப்பட்டது.

வவுனியாவில் இனமத பேதங்களைக் கடந்து இடம்பெற்ற வாணி விழா!!

 
இனமத பேதங்களை கடந்து நடளாவிய ரிதியில் இடம்பெற்றுவரும் வாணி விழ வவுனியா முஸ்லீம்  கல்லூரியில் நேற்று முன்தினம் (28.09.2017) வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எஸ்.எம்.றம்சீன் பிரசன்னத்தில்  இந்துமாமன்றப் பொறுப்பாசிரியர் திரு.ஸ்ரீபகவான் தலைமையில்  வெகு விமர்சையாக நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி மாணவரின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகி நடனம் பாடல் எனப்பல்வேறு கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

வாணி விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து  ‘அண்டம் – பிம்பம் – கும்பம் ‘ என்ற தலைப்பில்  சிறப்புரை நிகழ்த்தினார் .

நிகழ்வில் மகுடமாக ஆசிரியர்கள் பங்கு பற்றிய பட்டிமண்டபம் அமைந்தது. ‘ கைப்பேசிப்பாவனை இன்றைய இளம் தலைமுறையினரை சீரழிக்கின்றதா? சீர்படுத்துகின்றதா? ‘  நடுவராக பிரதமவிருந்தினர் கடமையாற்ற சீர்படுத்துகின்றது என்ற அணியில் ஆசிரியர்கள் திருமதி ரு.ரகுபதி, திருமதி ஜெய்சி, திரு சாருஹாசன் ஆகியோரும்  சீரழிகிறது என்ற அணியில் ஆசிரியர்களான  திரு. கெங்காதரன் , திருமதி.கஜிதா ,திரு.மதனரூபன் ஆகியோர் வாதிட்டனர் .

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

வவுனியா இ.போ.ச நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குருணாகல், கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் பகுதிக்கு பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2 கிலோ நிறையுடைய கேரளா கஞ்சாவினை இன்று (29.09.2017) காலை 7 மணியளவில் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தமுத்தேகம பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி பதும் தயாசிறி என்ற 34 வயதுடையவரையே கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.