தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு தேவையில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் தற்போது செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்புக்களின் பின்னர், தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது, மாணவ மாணவியருக்கு இந்த பரீட்சை தேவையில்லை.
எதிர்காலத்தில் அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும். எதிர்காலத்திற்கு செல்ல வேண்டிய கடவுச்சீட்டு கல்வியேயாகும்.
எனவே அந்த கடவுச்சீட்டில் இடப்படும் வீசாக்கள் மிகவும் நிதானமான தீர்மானங்களின் அடிப்படையிலான வீசாக்களாக இருக்க வேண்டுமென அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகர் தசுன் நிஷாந்தவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக கம்பஹா மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி நடவடிக்கைகள் மல்வத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த நடிகரின் தாயார் கண்ணீருடன் கருத்து வெளியிட்டிருந்தார்.
தினமும் ஹோமாகம வில்ப்ரட் மைதானத்திற்கு அருகில் ஐஸ்கிரிம் விற்று இதுவரை எனது மகனை வளர்த்தேன். எனது மகன் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் கல்வி கற்றுள்ளார். அவருக்கு இன்னுமொரு சகோதரர் உள்ளார்.
எனது கணவர் இரண்டாவது மகனுக்கு இரண்டரை வயதாகும் போது எங்கள் அனைவரையும் கைவிட்டு கனடாவுக்கு சென்று விட்டார். அன்று முதல் எனது பிள்ளைகளை நானே வளர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாங்க முடியாத மனவிரக்தி காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தான் தங்கியிருந்த அறையினுள் தசுன் நிஷாந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்கவுள்ளார்.
ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. அங்காடித்தெரு அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்திருக்கிறார்.
பலூன் படத்தில் நடித்துள்ள அவர் பேரன்பு, காளி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார்.
விரைவில் தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரிவுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெங்கு உற்பத்தி சபையூடாக நேரடியாக மக்களுக்கு குறைந்த விலைவில் தேங்காயை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு என்பவற்றை தற்போதைய விலையை விட குறைந்த விலைக்கு சதொச ஊடாக இன்று முதல் நுகர்வோருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அரிசியின் விலையை இன்று முதல் குறைப்பதற்கும், விலைப்பட்டியலை உடனடியாக அறிவிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள்.
இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். தேர்தல் முடிவுகள் மூலமாக அன்றி, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பகிர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றும் அவர் கோரியிருந்தார். எனினும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
“சுயாட்சிக்கு ஆதரவாக முடிவுகள் வந்திருப்பதையடுத்தே பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகியிருக்கிறது” என்று குர்திஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியப் பெண் ஒருவர் தன்னைத் தானே மணந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். சோலோகமி என்ற, தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் ஒரு புதிய முறை சில நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, இத்தாலியைச் சேர்ந்த லோரா மெஸி (40) என்ற இந்த உடற்பயிற்சி நிபுணர், சாதாரண திருமணங்களைப் போலவே வெள்ளை ஆடை அணிந்து, கேக் வெட்டி தனது திருமணத்தைக் கொண்டாடினார். அவரது திருமணத்துக்கு விருந்தினர்கள் எழுபது பேரும் சமுகமளித்துள்ளனர்.
“துணை இல்லாமலேயே திருமணம் செய்துகொள்ளலாம். முதலில் நம்மை நாம் காதலிக்க வேண்டும். எல்லாப் பெண்களின் கற்பனைக் கதைகளிலும் இராஜகுமாரன் வரவேண்டும் என்று அவசியமில்லை” என்று தத்துவமாகப் பேசுகிறார் லோரா.
லோராவின் பன்னிரண்டு வருடக் காதல் கடந்த சில வருடங்களுக்கு முன் முறிந்தது. அன்று முதல், தன்னை ஏமாற்றாத ஒரு நல்ல துணையைத் தாம் எதிர்பார்த்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் திட்டம் தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார் லோரா!
எதிர்காலத்தில் தன்னைக் கவரும் ஒரு ஆண் கிடைத்தால் அவரைத் திருமணம் செய்துகொள்வேனென்றும், எவ்வாறெனினும், தன்னுடைய சந்தோஷம் அவரைச் சார்ந்து இருக்காது என்றும் லோரா தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை செய்யப்பட்ட முதலாம் மற்றும் 7ஆம் இலக்க சந்தேகநபர்களில் முதலாம் இலக்க சந்தேக நபரே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க நபர், திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட நிலையில் அவருக்கு வழக்கொன்று ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அவர் விடுதலையான சிறிது நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் நீதிமன்றிலிருந்து, கடுமையான பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ளார்.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த சடலத்தை நேற்று புதன் கிழமை மாலை தோண்டி எடுத்துள்ளதோடு, குறித்த சிறுவனின் தந்தையினை சிலாபத்துறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலபாத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள பெற்கேணி கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின் மகனான ஒன்றரை வயது மதிக்கத்தக்க சரூன் கேலம் என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தை பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது அன்றைய தினம் மாலை பெற்கேணி முஸ்ஸிம் மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர்.
எனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் கொண்டவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிலாபத்துறை பொலிஸார் குறித்த விடையத்தை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த சடலத்தை தோண்டி எடுக்க அனுமதியையும் கோரியிறுந்தனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிவானின் உத்தரவிற்கு அமைவாக இன்று புதன் கிழமை (27) மாலை குறித்த சடலம் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று புதன் கிழமை (27) மாலை 3 மணியளவில் பெற்கேணி கிராமத்திற்குச் சென்ற மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முதலில் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
இதன்போது விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் சென்று தடையங்களை பரிசோதனை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து பொற்கேணி முஸ்ஸிம் மையவாடிக்குச் சென்ற மன்னார் நீதிவான், விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸார் முன்னிலையில் குறித்த சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டமைக்கு அமைவாக குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் குறித்த சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், சடலப்பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் தந்தையை சந்தேகத்தின் பேரில் சிலாபத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடகொரியா நடத்திவரும் அணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்க அரசை எரிச்சலடைய செய்துள்ளது. இதன்காரணமாக வடகொரியா மீது அமெரிக்க அரசு பல தடைகளை விதித்துள்ளது.
இந்த தடைகளுக்கு அமெரிக்கா, ஜப்பான், சீனா உட்பட பல நாடுகள் அதரவளித்துள்ளதால் வடகொரியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது.
இந்நிலையில், வடகொரியாவிற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அதோடு அவ்வங்கிகளை சேர்ந்த 26 வங்கி அதிகாரிகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்காவில் அவ்வங்கிகளின் அனைத்து சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் “இந்த தடைகளின் மூலம் வடகொரியாவை முழுமையாக தனிமைபடுத்தி கொரியா தீபகற்பத்தை சமாதானம் நிறைந்த மற்றும் அணுஆயுதம் இல்லா பகுதியாக மாற்றும் எண்ணத்தை நிறைவேற்ற முடியும்”, என கூறினார்.
நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் விழாவுக்கு நிச்சயம் வருவேன் என நேற்று அறிவித்ததால் அவரது ஆர்மி மகிழ்ச்சியில் உள்ளது.
ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் இதை தெரிவித்தார். இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா தற்போது ஒரு பேட்டியில் ஓவியாவின் திட்டம் பற்றி பேசியுள்ளார்.
பைனலுக்குப் பிறகு ரசிகர்களிடம் மனம்விட்டு பேசப்போறேன்னு சொன்னாங்க. அவங்களோட பிளான் தெரிஞ்சதுலேருந்து நான் செம குஷியா இருக்கேன். இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியப்போகுது.
நிகழ்ச்சியின் ஃபைனல் நாளில் ரிசல்ட் அறிவிக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஓவியாவை போட்டியாளராக்கி, ஓட்டிங்கை ஸ்டார்ட் பண்ணினாலும் அவங்கதான் வின் பண்ணுவாங்கனு நான் உறுதியா நம்புறேன்,” என பிரியங்கா கூறியுள்ளார்.
புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்தவாரம் மாத்தறையில் நடைபெற்ற 43வது தேசியமட்ட விளையாட்டு விழாவில் வடமாகாணம் 8வது இடத்தை பெற்றுள்ளது. அந்தவகையில் வடமாகாணத்திற்கு 20 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வடமாகாணம் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வீரர்களால் குத்துசண்டை போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் பெறப்பட்டது.
M.நிக்ஸன் ரூபராஜ் 91kg பிரிவிலும் S.கேசவன் 81kg பிரிவிலும் 2 வெண்கல பதக்கங்களை பெற்று தேசிய மட்டத்தில் வவுனியாவை பிரபல்யம் அடையவைத்துள்ளனர்.
இவர்களுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த பயிற்றுவிப்பாளர் Suranga Mudannayake அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உட்பட ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று கூடியது.
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதில் 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,
3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,
4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,
5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,
6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,
8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,
9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எழுவருக்கு மரணதண்டனை:30 வருட ஆயுள் தண்டனை!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன், 30 வருட ஆயுள் தண்டனை, 40000 தொடக்கம் 75000 தண்டப் பணம், மாணவி வித்தியா குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நட்டஈடென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார்.
மூன்றாவதாக, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பை நிறைவு செய்துள்ள நிலையில், 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.
இதையடுத்து, குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, உங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியாக அவர்களின் விளக்கங்கள் கோரப்பட்டன.
இந்த நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.இதனிடையே இலங்கை காவல்துறையின் தடயவியல் குற்றப் பிரிவு வித்தியா படுகொலை வழக்கினில் முறையாக விசாரணை செய்யவில்லையென மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.அத்துடன் 10 மாதங்களுக்கு பின் விசாரணையைப் பொறுப்பேற்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் நிசாந்த சில்வாவுக்கு நீதிபதி இளஞ்செழியன் பாராட்டுக்களினையும் தெரிவித்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நேற்று (26.09.2017) செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்கு சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.
மேற்படி ஆலயத்தில் 10 நாட்கள் இடம்பெறும் பிரம்மோற்சவத்தில்
சப்பர திருவிழா -03.10.2017 செவ்வாய்கிழமை இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -04.10.2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கும்
தீர்தோற்சவம் – 05.10.2017 வியாழக்கிழமை 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 06.10.2017 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 07.10.2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.
பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டப்படுகின்றனர்.
ரஷ்யாவில் கடந்த 18 ஆண்டுகளாக முப்பது பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட கணவன்- மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ், இவரது மனைவி நடாலியா. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று நரமாமிசம் உண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் சோதனை நடத்தினர்.
அப்போது, மனித சதை மற்றும் தோல் உட்பட உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டியிலும், ஜார்களிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்புகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல் உறுப்புகளுடன் செல்பி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து இவர்களை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.