முகத்தைக் காட்டினால் பணம் கிடைக்கும் அதிசயம்!!

சீனாவின் ஜினான் நகரில் தானியங்கி பண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப் பெறவோ அட்டைகள் தேவையில்லை; முகத்தைக் காட்டினால் போதும். சீனாவின் விவசாய வங்கியே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு இது புதிய வசதியல்ல. ஏற்கனவே, இதே தொழில்நுட்ப முறை மூலம் பணப் பரிமாற்றம், பொதிகள் பாதுகாப்பு போன்ற பல சேவைகளையும் செய்யக்கூடிய வசதிகள் சீனாவில் உள்ளன.

முகத்தை அடையாளம் கண்டுகொண்டபின் தனது தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் பதிவுசெய்ய வேண்டும். தேவையான பணத்தைத் தெரிவித்தபின், இரகசிய எண்ணைப் பதிந்தால் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு மூவாயிரம் யுவான்களை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற சுமார் 24 ஆயிரம் இயந்திரங்களை நிறுவிய பின் மீளெடுக்கப்படும் பணத் தொகை அதிகரிக்கப்படும் என குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

இதுபோன்ற இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பானவை என்றபோதும், இவற்றை நிறுவவும், நிர்வாகம் செய்யவும் அதிக செலவாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலப்பகுதிகளில் வாடிக்கையாளர்கள் தமது தோற்றத்தைப் பதிவு செய்யவேண்டியிருக்கும் என்றும் தெரியவருகிறது.

அடுத்தடுத்து இரு பேய்ப் படங்களில் நடிக்கும் ஓவியா!!

டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் யாமிருக்க பயமே. த்ரில்லர் கலந்த நகைச்சுவைப் படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் 3 வருட இடைவேளைக்குப் பின்னர் டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு காட்டேரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்றது.

ஏற்கனவே சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் – ஓவியா இணைந்து இருட்டு அறையில் முறட்டு குத்து என்ற பேய் கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டேரி படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளதன் மூலம் அடுத்தடுத்து இரு பேய்ப் படங்களில் ஓவியா நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த படத்தையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜாவே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது.

நடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை!!

பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.

ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து பால் நடிகையை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக அச்சப்படாத நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை வேண்டும் என்றே அச்சப்படாத நாயகி தட்டி பறித்துவிட்டதாக அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறாராம் பால் நடிகை.

 

வித்தியா ஆசையாக வளர்த்த குட்டி நாய் : வித்தியாவின் படத்தைப் பார்த்து ஏங்கும் பரிதாபம்!!

 
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவால் வாடுவோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால் வித்தியா ஆசையாக வளர்த்த நாய் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வீட்டின் கடைக்குட்டியான வித்தியா தன்னுடைய நாய்க்கு ஆசையாக குட்டி என பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் சிறு பருவத்திலிருக்கும் போது வித்தியாவுக்கு கிடைத்துள்ளது.

உயிர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ள வித்தியாவுக்கு இந்த நாயை கண்டதும் பிடித்துப்போயுள்ளது. இந்த நாயை மிகவும் ஆசையாக வித்தியா வளர்த்து வந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.

எனினும் வித்தியாவின் மறைவுக்குப் பின்னர் இந்த நாய் கவலையாகவும் சோர்வாக இருந்ததாகவும் வித்தியாவின் தாயார் தெரிவித்தார்.

வித்தியாவின் 45ஆம் நாள் நினைவு தினத்தின் போது வித்தியா புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்த குட்டி, வித்தியா புதைக்கப்பட்ட இடத்தை சுற்றி வந்ததையும், அவ்விடத்தில் இருந்ததையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

வித்தியாவின் புகைப்படத்தைக் காட்டியதும் ஓடி வந்து அப்புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு இருக்குமாம் இந்த குட்டி.

வித்தியா மீது இந்த நாய் கொண்டிருக்கும் அன்பை பார்க்கும் போது அனைவர் மனதிலும் ஒரு பரிவு எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கிற்கு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் 7 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 30, 000 ரூபா தண்டப்பணமும், வித்தியாவின் குடும்பத்தாருக்கு தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் குழந்தையை தலை இல்லாமல் நாய் இழுத்துச் சென்ற கொடூரம்!!

பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் சிசுவின் சடலத்தை நாய் ஒன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம் ஹட்டன் நோர்வூட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேர்கசோல்ட் தோட்ட எல்பட கீழ் பிரிவில் இன்று மாலை இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாய் ஒன்று சிசுவின் சடலத்தை இழுத்துச் செல்வதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சிசுவின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குடியிருப்புக்களை அண்மித்த வாசிகசாலைக்கருகிலுள்ள வீட்டுத் தோட்டமொன்றில் இருந்தே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சிசுவின் தலைப்பகுதியை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் பிரதேச தாதியரின் உதவியுடன் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் திருட்டுடன் தொடர்புடைய இராணுவ வீரர் உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் பல்வேறு பட்ட திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ வீரர் உட்பட மூவரை வவுனியா பொலிஸார் நேற்று (27.09.2017) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் வீதியில் நடந்து செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிலில் வந்தவர்கள் தங்கச்சங்கிலி அபகரிப்பு, நகைகள் திருட்டு என பல்வேறு முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்தவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் போது வவுனியாவில் வைத்து நேற்றையதினம் (27.09.2017) 20, 21, 25 வயதுடைய அனுராபுரம், நிராவி, சாலபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தூய சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா!!

 
வவுனியா சகாயமாதாபுரம் பகுதியிலுள்ள தூய சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா திருப்பலி வழிபாடுகள் நேற்று (27.09.2017) காலை 7 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று தினங்கள் நவநாள் வழிபாடுகள் இடம்பெற்று நேற்று (27.09.2017) காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சகாயமாதாபுரம் விழியாக தூய சதா சகாய மாதாவின் திருச்சொரூபம் பவனி வந்து மாதாவின் ஆசீர்வாதத்துடன் நிறைவுற்றது.

பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை, அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடனும் பங்குமக்களின் இறை அன்புடனும் சிறப்புற இடம்பெற்றது.

 

வவுனியா A9 வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு!!

 
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய வளாகத்தினுள் இருந்த பழமை வாய்ந்த மரமொன்று இன்று (28.09.2017) மதியம் 2 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் ஏ9 வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்தது.

இதனால் தொலைபேசி, மின்சார இணைப்புகளின் வயர்கள் அறுந்து வீழ்ந்த நிலையில் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மின்சாரசபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களின் உதவியுடன் வீதியில் போக்குவரத்துக்கு இடையூராகவிருந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு வீதியின் அருகே போடப்பட்டுள்ளது.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (28.09.2017) காலை 7.30 மணியளவில் 1 கிலோ 8 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த அவர்களின் தலமையில் உப பொலிஸ் பரிசோதகர் தினேஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் அலுவலர்களாக அனுர 43210 , பண்டார 14957 , பிரதீப் 45980 , குமார 66701 ஆகியோரினால் கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் 1கிலோ 8கிராம் கேரள கஞ்சாவினை கொண்டு சென்ற செய்யது முகமது மொய்தீன் (வயது – 60) என்பவறை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை வவுனியா மத்திய பேரூந்து நிலையில் 130 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த பூநகரி இராணுவ முகாமைச் சேர்ந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மிளகாயை சாப்பிட்டால் மரணம்: உலகில் மிக காரமான மிளகாய்!!

உலகின்மிகவும் காரமான மிளகாயை இங்கிலாந்தை சேர்ந்த ஸ்மித் என் ஆராய்ச்சியாளர் உருவாக்கியுள்ளார்.

இந்த மிளகாய்க்கு Pepper X என பெயரிடப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் தனது குழுவினருடன்ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்தபோது, இந்த மிளகாயை உருவாக்க வேண்டும் என்பது குறித்த எவ்வித திட்டமிடலும் இல்லை என்றும்ஒரு விபத்தை போலவே இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்குமுன்னதாக கரோலினா ரீப்பர் என்றமிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்தமிளகாய் காரத்திற்கான அளவுகோலில் கரோலினா பெப்பரை விட 1.6 கோடி மடங்குகாரமானது என இதனை உற்பத்தியாளர்கள்தெரிவித்துள்ளனர்.

100 கிலோஎடையுள்ள ஒரு மனிதன் அதிகபட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார். ஆனால்,இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன்அளவிற்கு காரச்சுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

இந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்துவிடும் அபாயம்உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய மிளகாயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளஇந்த sauce நீர்த்துப்போன வினிகர், இஞ்சி வேர், சந்தனவகைகள், சீரக, கொத்தமல்லி, கடுகுபோன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை கட்ட1307 கோடி நன்கொடை அளித்த இந்திய தம்பதி!!

அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக அந்நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்த தம்பதி 1307 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரண் படேல் மற்றும் அவர் மனைவி பல்லவி படேல் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மருத்துவ சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கிரண் படேல் மற்றும் பல்லவி படேல் ஆகிய இருவரும் சேர்ந்து மியாமியைச் சேர்ந்த நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு 1307 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைகழகம் தம்பாவில் புதிய மருத்துவமனை வளாகம் ஒன்றை கட்டவுள்ளது. இதற்கான செலவுகளை ஈடுகட்டவே தம்பதி பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

சொர்க்கத்தை அடைவதற்கு இரண்டு வயது குழந்தை எரித்து கொலை : தாய் அளித்த பகீர் வாக்கு மூலம்!!

பெல்ஜியத்தில் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தையை அவரது தாயே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியத்தின் தலைநகரான Brussels பகுதியில் உள்ள Zemst என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெறும் புகையாக வருவதாக அருகில் இருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் பொலிசார் குறித்த வீட்டை அடைந்து வீட்டிற்குள் பொலிசார் சென்ற போது அதிர்ச்சியடைந்தானர். அங்கு வீட்டின் பின் புறம் வாகனம் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் 2 வயது பெண் குழந்தை ஒருவர் இறைச்சியை வாட்டும் பார்பிக்யு கம்பியில் உயிருடன் எரிக்கப்பட்ட நிலையில் கருகி இருந்துள்ளது.

இதனால் பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அந்த இரண்டு வயது குழந்தையை எரித்ததே அவரது 27 வயது சொந்த தாய் தான் என்றும் சில காரணங்களுக்காக தற்போதைக்கு பெயர் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பெண் கூறுகையில், சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக குழந்தையை அப்படி செய்ததாகவும், அதன் பின் தானும் உயிரை மாய்த்து கொள்வதற்கு தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ள நிலையில், அவருக்கு மனநிலை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அதன் பின்னரே முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை கடத்திய 9 வயது சிறுவன்: சிக்கியது எப்படி?

 
சென்னையில் வீதியில் விளையாடிய இரண்டரை வயது குழந்தையை கடத்திய சிறுவனை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரின் முகமது சாது, நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு சைக்கில் வந்த 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் சைக்கிளில் சாதுவை அழைத்துச் சென்றுள்ளான்.
இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட விசாரணை நடத்திய பொலிசார், அப்பகுதி சிசிடிவி கமராவை ஆய்வு செய்ததில் சிறுவன் ஒருவன் ஒரஞ்சு நிற சைக்கிளில் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, கொருக்குப்பேட்டை பகுதியில் சிறுவன் இருப்பதைக் கண்டறிந்த தனிப்படையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.

சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் கூலி தொழிலாளியின் மகன் என தெரிந்தது. விளையாடுவதற்காகவே குழந்தையை சிறுவன் கடத்தியதாக பொலிசார் கூறியுள்ளார்.

ஆனால், ஒரஞ்ச் நிறத்திலான சைக்கிள் நிறத்தை கடத்தலுக்கு பின்னர் சிறுவன் மாற்றியுள்ளதால் சந்தேகத்தின் பேரில் அவனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இதையடுத்து, நேற்றிரவு தந்தை இலியாஸிடம் குழந்தை முகமது சாதுவை பொலிசார் ஒப்படைத்தனர்.

மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை : தந்தை பரபரப்பு புகார்!!

தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் விடுதியின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தை புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சிவகங்கையை சேர்ந்தவர் பரணிதாஸ், இவரது மகள் தாரணி (19), திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 2 மணிக்கு விடுதியின் மூன்றாம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வந்த நிலையில், தாரணிக்கும், விடுதி வார்டனுக்கும் தகராறு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து தாரணியின் தந்தை பரணிதாஸ் கூறுகையில், கடந்த 25ம் திகதி தாரணி மற்றொருவர் செல்போனில் இருந்து என்னிடம் பேசினார்.

அப்போது நன்றாக பேசியவர், இரவு சுமார் 12 மணிக்கு மீண்டும் போன் செய்து, இங்கே ரொம்ப கொடுமை செய்றாங்க. என்னை கூட்டிட்டு போங்க என்று அழுத நிலையில் போன் திடீரென கட்டானது.

பின்னர் குறித்த நம்பருக்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. தாரணியின் உடலில் எலும்பு முறிவோ, பலத்த காயமோ இல்லாத நிலையில் அவர் கீழே குதித்து விட்டதாக கூறுவது பொய்.

அவரை யாரோ துன்புறுத்தி உள்ளனர், மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலாடை இல்லாமல் ஊர்வலமாக சென்ற சிறுமிகள்!!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தின் மேலூர் அருகே உள்ளே வெள்ளளூர் என்ற கிராமத்தில் ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கோவில் திருவிழாவின் போது 15 வயதுள்ள சிறுமிகள் மேல் சட்டையில்லாமல் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இது கோவில் திருவிழாவில் நடத்தப்படும் சடங்கு என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தனியார் செய்தி இணையதளம் ஒன்று வீடியோவை வெளியிட்டிருந்தது.

இது சமூக ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் மெய்யம்மை கூறுகையில், இந்த கோவிலில் நடக்கும் திருவிழாப் பற்றி எனக்குத் தெரியும் என்றும் 15 வயதுடைய சிறுமிகளை, மேல் சட்டையைக் களைந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

அதன் பின் அந்த சிறுமிகள் ஏழு நாள்களுக்குக் கோவில் பூசாரியுடன் தங்கவைப்படுவார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று செய்தி வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து திங்கட் கிழமை முதல் தனக்கு போன் மற்றும் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வர ஆரம்பித்ததாக கூறினார்.

சுமார் 50,000 பேர் கூடும் திருவிழாவில், இப்படி மேலாடை இல்லாமல் சிறுமிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது கொடுமையானது. இதை நான் நேரடியாகப் பார்த்தேன்.

அதுமட்டுமின்றி கோவில் திருவிழாவில் இருந்த சிலர் செல்போனில் அந்தச் சிறுமிகளைப் படம்பிடித்தார்கள். இது சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

சிறுமிகளுக்கு மேலாடை போட்டு, திருவிழா நடத்துங்கள் என்று கலெக்டட் கூறிய போது, அது எங்க வழக்கத்துக்கு மாறானதுனு என்று கூறி மறுத்துவிட்டதால், இதை தான் செய்தியாக்கியதாக கூறினார்.

மேலும் குறித்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் வித்யாஸ்ரீ தர்மாராஜ் கூறுகையில், அந்த செய்திக்கு பின்னர் பல அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததாகவும், இரத்தம் கக்கி சாவே எனவும் உங்க இணையதளத்தையே ஹேக் செஞ்சுடுவோம் என்று மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன் : காரணம் என்ன?

தமிழகத்தின் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ்(31). கோவையில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணியாற்றி வரும், இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேகலா(25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுகு பிரியதர்ஷனி என்ற 7 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேகலா அவரது பெற்றோர் வீட்டில் தனது மகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை இருவரும் தம்மம்பட்டி மண்கரடு மலை அடிவாரத்தில் இருக்கும் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கணேஷ் மேகலாவின் கழுத்தை கத்தியால் அறுத்ததால், அவர் அந்த இடத்திலே துடி துடித்து இறந்தார்.

அதன் பின் இது தொடர்பான தகவல் பொலிசாருக்கு தெரியவந்தால், பொலிசாருக்கு அப்பகுதிக்கு வந்தவுடன் கணேஷ் அவர்களிடம் சரணடைந்தார்.

கணேஷ் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்தோம். இருந்த போதிலும் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வோம். குடும்ப செலவுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பேன். அவள் படிப்பதற்கு கடந்த 2 வருடமாக நான் பணம் கொடுத்து உதவினேன்.

இதைத் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும் என்று நான் அவரை அங்கு அழைத்தேன். அப்போது அவளது செல்போனை வாங்கி பார்த்ததில் அவளுடைய வட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வேறு இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததால், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் அறிவுரை கூறினேன்.

ஆனால் அவரோ நான் அப்படித்தான் இருப்பேன் என்றும், என் இஷ்டப்படிதான் வாழ்வேன் என்று கூறியதால், தனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் மேகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன், அதன் பின்னர் வாழ்க்கையே நாசமாகி விட்டதே என்று கதறி அழுததாக கூறியுள்ளார்.