கிளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று முன்தினம் (23.08) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, முரசுமோட்டைப் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேநபர்கள் இருவரும் நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் 5 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தலா 200,000 பெறுமதியான காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 2,700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக வெளி சிகிச்சைகளுக்காக 10,000 ரூபாவும், வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் குறித்த வயது மாணவர்களுக்கு 100,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களின் அவசர மரணத்தின் போது குறித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு 100,000 ரூபாவும், தமது தாய் அல்லது தந்தை மரணத்துக்காக குறித்த பாடசாலை மாணவருக்கு 75,000 ரூபாவும் காப்புறுதி திட்டத்தின் மூலம் செலுத்தப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் பூரண அங்கவீனத்துக்கு உள்ளாகும் போது 100,000 ரூபாவும், பகுதியளவில் காயமடைகின்ற போது 50,000 ரூபாவும் மற்றும் 100,000 வரையிலும் காப்புறுதி தொகை வழங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், 2,348 மில்லியன் ரூபாவை, வருடாந்த தவணையின் கீழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம், இக்காப்புறுதி செயன்முறையினை செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குடிபோதையில் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த கணவருக்கு கடுமையான வேலையுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இடம்பெற்ற மதுபான விருந்தின் பின்னர் இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற முன்னாள் பொறியியலாளருக்கு மேல் மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி பியசிலியினால் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளுக்கு மேலதிகமாக 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தண்டனைக்கு மேலதிகமாக சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் நஷ்டஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கட்டான மிரிஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான ஓய்வு பெற்ற பொறியியலாளர் துஷார பெர்ணாட் ஸ்டீவன் என்பவரே குற்றத்தை ஏற்று கொண்டவராகும்.
2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19ஆம் திகதி இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மனைவியினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை
நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் தீபாவளிக்கு வௌியாக இருக்கிறது.
வடிவேலு அடுத்ததாக இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.
சிம்பு தேவன் இயக்கவிருக்கும் இப்படத்தை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலு கடந்த 3 மாதகாலமாக கடுமையாக உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.
நேற்று இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வடிவேலுவின் புகைப்படம் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது
வயது முதிர்வைத் தவிர்க்க, இளைஞர்களின் இரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, வயதான நோயாளிகள் தங்கள் உடலில் இளைஞர்களின் இரத்தத்தை ஏற்றிக்கொள்ளும் நிகழ்வுக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவரிடமும் 8000 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா (மனித இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் ஒரு திரவம்) செலுத்தப்பட்டது.
வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களின் சராசரி வயது 60.
இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக உள்ளதென ஸ்டாம்ஃபோர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளரும், யு.எஸ் மருத்துவமனையின் நிறுவனருமான 32 வயதாகும் ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார்.
”தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றலை மேம்படுத்த இது உதவும். ஏனெனில் இவை தான் வயதாவதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் முக்கியமானவை. இந்த புதிய வகை சிகிச்சை சாகாவரத்தை அளிக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அடிப்படையில் இது அதனைப்போன்ற ஒன்று,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மருத்துவ முறையானது ஸ்டாம்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த ஆய்விலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, வயதான எலி ஒன்றுக்கு இளைய வயதுடைய எலியின் இரத்தம் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் வயதான எலியின் உள்ளுறுப்புகள், தசைகள் மற்றும், ஸ்டெம் செல்கள் ஆகியவை புத்துணர்ச்சியடைந்ததாக தெரிய வந்தது.
மேலும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், இளைஞர்களின் பிளாஸ்மா வயதானவர்களின் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருத்துவ ரீதியாக அந்த சிகிச்சை பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என 2014-ஆம் ஆண்டு எலிகளுக்கு பாராபயோசிஸ் ஆய்வு நடத்திய ஸ்டாம்ஃபோர்ட் நரம்பியல் துறை வல்லுநரான டோனி வைஸ் கோரே தெரிவித்துள்ளார்.
மேலும் இரத்த பரிமாற்றத்தால் படை, கல்லீரல் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அளவிலான தொற்றுகள் ஏற்படலாம் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சிகிச்சை முறை பல மோசடிகளுக்கும் வித்திடலாம் என மற்றவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள கர்மாசின், தனது ஆராய்ச்சி அனைத்து நெறிமுறை ஆய்வுகளிலும் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ சோதனையின் செலவு மற்றும் செயன்முறை குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள அவர், கட்டணம் செலுத்தும் பங்கேற்பாளருக்கு, போலியான சிகிச்சை அளிப்பது தவறானது என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நோயாளிகள் அனைவரும் தனது சிகிச்சையின் பலனை உடனடியாக அனுபவித்ததாக வாதாடும் அவர், ஒரு முறை சிகிச்சை பெற்றதில், நல்ல மாற்றத்தை உணர்ந்த பலரை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சிகிச்சை முறை வெளியிலிருந்து உள்ளே செய்யப்படும் பிளாஸ்டிக் சேஜரி போன்றது என அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருவரினதும் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த இராணுவ வீரர்களின் நிலமையில் கவலையில்லை என்றும், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விலங்குகளில் கூடுதல் உறுப்புகள் ஒட்டி பிறப்பவை மிகவும் அரிதென கருதப்படுகிறது. இந்நிலையில், கடற்பன்றியொன்று இரட்டைத் தலையுடன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடற்பன்றிக்கு முழுமையாக வளர்ச்சியடைந்த இரண்டு தலைகள் உள்ளன.
திமிங்கிலத்திற்கும் டால்ஃபினுக்கும் உயிரியல் வகையில் தொடர்புடைய விலங்காக கடற்பன்றியைக் குறிப்பிடுகின்றனர்.
கடலோரத்திலும், கடலையொட்டிய நீர்நிலைகளிலும் இந்த உயிரினம் வாழ்கின்றது. இதற்கு முன்னால், இரண்டு காளை மாடுகள் ஓட்டி பிறந்ததுதான் விலங்கினங்கள் இணைந்து பிறந்த சம்பவமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிறந்த சற்று நேரத்தில் அந்த இரட்டை உடலுடைய காளை மாடு இறந்து விட்டது. தற்போது, இந்த நீர்நிலை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி ரோட்டர்டாமிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘டெய்ன்ஸ்’ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் தெற்கிலுள்ள வடக்கு கடலில், மீனவர் குழு ஒன்று இந்த இரட்டை தலையுடைய கடற்பன்றியை நீரில் இருந்து வெளியே எடுத்தது.
இந்த உயிரினத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று எண்ணிய அந்த மீனவர் குழு, மீண்டும் அதை தண்ணீரில் விட்டுவிட்டார்கள். ஆனால், அதற்கு முன்பாக அதன் புகைப்படத்தை பலரும் எடுத்துள்ளனர்.
திமிங்கிலம் மற்றும் டால்ஃபின் குடும்பம் முழுவதிலும், இவ்வாறு கூடுதல் உறுப்போடு பிறந்த நிகழ்வு இது 10 ஆவது முறையாகும்.
இவ்வாறான உயிரினங்களின் பிறப்புக்கு முன்னரும், பிறப்புக்கு பின்னருமான இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், எண்ணிக்கை தெளிவாகத் தெரியாமல் போகிறது.
தியத்தலாவ வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று மாலை இந்த குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றும் பெண் குழந்தைகள் எனவும், ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 வயதான சந்திரிக்கா தர்ஷினி என்பவருக்கும் 23 வயதான லக்ஷான் தனஞ்சய என்பவருக்குமே இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
ஏழ்மையான இளம் குடும்பத்தினர், மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர் உதவியை எதிர்பார்ப்பதாக வைத்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கணவன் – மனைவியினரில் 15 சதவீதத்துக்கும் அதிகமான தொகையினர், பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர் என, இணங்காணப்பட்டுள்ளது என்று அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, இது கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (22.08) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பான பிரச்சினைக்காக, பொதுமக்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளின் கவனத்தைச் செலுத்தி, இவ்வருடத்தில் தேசிய குடும்ப திட்டமிடல் தினத்தை செப்டம்பர் 26ஆம் திகதி அனுஷ்டிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்துக் சென்றுகொண்டிருந்தபொழுது புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.
இருப்பினும் சம்பவத்தில் பலியானவர் அடையாளம் காணப்படாத நிலையில் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் சடலம் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு இருபுறத்திலும் கடவைகள் இருக்கின்ற பொழுதும், கடவையை பாவிக்காமல் கடக்க முயன்றதினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியாகக் கூட இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் செயற்பாட்டு ரீதியாக இயங்கிய காலத்தில் புதைத்து வைத்த குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் செயலிழக்க வைத்துள்ளனர்.
வவுனியா மூன்றுமுறிப்பு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் கிளேமோர் குண்டுகள் என்பன அண்மையில் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து குறித்த குண்டுகளை செயலிழக்க வைப்பதற்கு அனுமதி கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்றைய தினம் குறித்த குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டும் மறைத்து வைக்கப்பட்டும் இருந்த நிலையில் பல்வேறு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் மொத்தமாக இன்றைய தினம் செயலிழக்க வைக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (24.08.2017) இரவு 7 மணியளில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – துவிச்சரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு அருகே அதே பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டியில் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் துவிச்சரவண்டியினை செலுத்திச் சென்ற முதியவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா கந்தபுரம் பிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தவசிக்குளம் கிராம மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்து கிராம அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை 10.30 மணிக்கு போராட்டம் நடத்தினர்.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தவசிக்குளம் கிராமத்தில் 756 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் வெறும் 40 குடும்பங்களுக்கு மாத்திரமே வறட்சி நிவாரணம் வழங்கப்படுவதாகவும், அத்தெரிவில் கூட மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கிராமத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்து மக்கள் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ‘கிராம அலுவலரை மாற்று, கிராம அபிவிருத்திச் சங்க தலைவரை மாற்று என கோசமெழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்..
வறட்சி நிவாரணத் தெரிவானது மக்களுக்கு அறிவித்து சுயாதீனமாக நடைபெறவில்லை. தனிப்பட்ட ரீதியில் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் விருப்படியே தெரிவு இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
வறட்சி நிவாறணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் எனக் கூறப்படும் 40 பேரில் கூலி வேலை செய்பவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மக்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.கிருஸ்ணமூர்த்தி,
வவுனியா பிரதேச செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வறட்சி நிவாரணமானது பயிர்கள் செய்து அழிவடைந்தவர்களின் விபரங்கள் கமக்கார அமைப்பினூடாக தெரிவு செய்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு வழங்கியிருந்தோம். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் பல பிரதேசங்களில் வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை வழிப்பறி செய்த நபரை நேற்று (23.08) பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில் ஆசிகுளம், கோவில்குளம், பட்டைகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வீதியில் செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலி, தாலிக்கொடி போன்றவற்றை குறிவைத்து தங்கநகைகளை சூறையாடிய நபரை பொலிசார் நேற்று (23.08) கைது செய்துள்ளனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரான மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 26 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றுமொரு நபரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். சூட்சுமமான முறையால் குறித்த நகைகளை விற்பனை செய்த இடத்திலும், அடகுவைத்த இடத்திலும் நான்கு லட்சம் பெறுமதியான நகைகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவின் வழிகாட்டலின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியஸ்ரீ பெர்னாண்டோ, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பூரளகெதர, பொலிஸ் சார்ஜன் ஜேசுதாசன் தலைமையிலான குழுவினர் இன் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஈழ வள நாட்டின் நீர் வளமும், நில வளமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநகரின் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி, வழங்குகின்ற ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்க பெருமானுக்கு நிகழும் சர்வ மங்களங்களும் நிறைந்த ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 09ம் நாள் (25.08.2017) வெள்ளிக்கிழமை சதுர்த்தித் திதியும் அத்த நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
ஆவணி திங்கள் 17ம் நாள் (02.09.2017) சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்
வவுனியா நகரமானது வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்கும் முக்கிய கேந்திர நிலையமாக அமைந்துள்ளது. எனவே நகரசபையின் வினைத்திறனான சேவையினை மேலும் மெருகுபடுத்துவதற்கு தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வவுனியா நகரசபைக்கு சொந்தமான காணியினை பெற்றுத்தருமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வவுனியா நகரசபையின் முகாமைத்துவக்குழு கலந்துரையாடல், நகர அபிவிருத்தி அதிகாரசபை கலந்துரையாடல் என்பவற்றில் ஆராயப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணித்துண்டு நகரசபை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆதனங்களாக விளங்குவதனால் இவற்றை பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலையில் உள்ளது.
எனவே இக் காணியை வவுனியா நகரசபையின் அபிவிருத்திக்காக பெற்றுத்தருமாறு நகரசபை செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச சபை செயலாளர் க.உதயராசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினாவிய போது,
வவுனியா நகரசபை செயலாளர் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியில் சிறிய துண்டு காணியே நகரசபைக்கு சொந்தமானது.
இக் காணியினை பொலிஸாருக்கே வழங்குமாறு நகரசபை செயலாளரிடம் வேண்டுகொள் விடுத்த சமயத்தில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அக் காணித்துண்டை பொலிஸாரிடமிருந்து மீள பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.