இலங்கையில் பிடிபட்ட இரட்டைத் தலை பாம்பு!!

 
சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார்.

இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட பாம்பினை தான் ஒரு போதும் பார்த்ததில்லை என அந்த பாம்பினை பிடித்தவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைத் தலையை கொண்டுள்ள இந்த பாம்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியை கையகப்படுத்தியுள்ள பொலிசார்!!

 
கனகராயன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பொதுக்காணியை பொலிசார் கையகப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது. குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது.

தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அப் பொலிஸ் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி போதிய இடவசதி கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில், கனகராயன்குளம் சந்தியை அண்மித்து காணப்படும் கிராமிய அபிவிருத்திச் சங்கத்திற்குரிய காணியை விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டு அந்தக் காணியை விடுவிப்பதாக பொலிசார் உறுதியளித்தனர்.

இருப்பினும் பொலிசார் அதனை விடுவிக்காது தற்போது அந்தக் காணிக்குரிய வேலிகளை பலப்படுத்தி வருவதுடன் அக் காணியை தமது விளையாட்டு திடலாகவும், பொலிஸ் அதிகாரி தங்கிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே குறித்த காணியை வவிடுவித்து அப்பகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு பொலிசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா,

வவுனியாவில் 92,659 பேருக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் 25,987 குடும்பங்களை சேர்ந்த 92,659 பேர் வறட்சி உலர் உணவு திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 123 மில்லியன் ரூபா பெறுமதியில் உலர் உணவு வழங்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் 13,993 குடும்பங்களை சேர்ந்த 51,228 பேரும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 4042 குடும்பங்களைச் சேர்ந்த 13,085 பேரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் 2691 குடும்பங்களை சேர்ந்த 9350 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 5261 குடும்பங்களை சேர்ந்த 18,996 பேரும் நிவாரணம் பெறும் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிவாரணத்தினை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக கிராம சேவகர் பிரிவு ரீதியாக பொது இடங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

உயிர்களைப் பறிக்கும் ப்ளூ வேல் விளையாட்டு : கல்லூரி மாணவன் தற்கொலை!!

கேரளாவில் ப்ளூ வேல் இணைய விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல உயிர்களை கொள்ளை கொண்ட, ப்ளூ வேல் எனப்படும் இணைய விளையாட்டு இந்தியாவில் இப்போது பரவலாகி வருகின்றது.

உலக நாடுகளில் இவ் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்துவரும் நிலையில், இந்தியாவிலும் சில மாணவர்கள் இந்த விளையாட்டால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

இந்த விளையாட்டின் இணைப்புகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஆஷிக் என்ற 20 வயது கல்லூரி மாணவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்துள்ளார்.

பாலக்காட்டைச் சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடலை ஆய்வு செய்தபோது, அவரது கையில் திமிங்கலத்தின் உருவம் வரையப்பட்டிருந்தது. மேலும் அவரது கைபேசியை ஆய்வு செய்தபோது, அதில் அவர் கைகளில் ரத்தக்காயம் ஏற்படுத்தியது, கடலில் நின்று செல்பி எடுப்பது, வீட்டின் மாடியில் இருந்து குதிப்பது, கற்குவாரி மேல் நிற்பது போன்ற படங்கள் இருந்துள்ளன.

இவை அனைத்தும் ப்ளூ வேல் விளையாட்டின் சவால்கள் என்பதால், ஆஷிக்கும் அந்த விளையாட்டில் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த விளையாட்டு காரணமாக கேரளாவில் மட்டும் இதுவரை 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ் (19), கண்ணனூரை சேர்ந்த சவாந்த் (19) ஆகிய கல்லூரி மாணவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்ற சில நிமிடங்களில் துண்டுகளாகி பரிதாபமாக பலியான பெண்!!

தனியார் வைத்தியசாலையில் குழந்தை பெற்ற பெண் நோயாளர் விடுதிக்கு கொண்டு செல்லும் போது லிப்டுக்குள் சிக்கி தலை வேறு உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த ரோசியோ கார்டெஸ் நுனெஷ் என்ற 25 வயதுப் பெண்ணுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ரோசியோவை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை  தள்ளுவண்டியில் நோயாளர் விடுதிக்கு லிப்ட் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயற்படத் தொடங்கியது. அந்த நேரம் நோயாளர் தள்ளு வண்டியில் படுத்திருந்த ரோசியோவின் தலையை லிப்ட் கதவு நசுக்கியுள்ளது. இதனால் அவர் தலை வேறு உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும்!!

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்,
இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,
விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது. பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்.

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.

மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.

வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.

கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.

பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.

குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்;
நோயுற்றிருப்பின் நோய் அகலும்.

குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.

ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும்.

அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.

ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும்.

தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம்.

பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.

அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.

வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.

சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கைமிகும்.
சுப சொப்பனங்கள்.

பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.

வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.

தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.

தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.

புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.

நீர் நிலை கனவுகள்

நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.

வெள்ளை நாகம் கனவில் வந்தால்,இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது.

வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள்.

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

தீய பலன் தரும் கனவுகள்.

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.

தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.

நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.

முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.

அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.

எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.

அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.

வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ

ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.

நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது.

அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.

அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.

தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.

சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.

ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை.

நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன.

இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போலத்தான்.

கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.

கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்:

பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன.ஏன்
தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது.

மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம்.

வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.

திருமண பந்தத்தில் இணையும் மாற்றுப் பாலின காதல் ஜோடி!!

கேரளாவைச் சேர்ந்தவர் திருநம்பி ஆரவ் அப்புகுட்டன். 46 வயதான ஆரவ் அப்புகுட்டனின் இயற்பெயர், பிந்து. சிறுவயதில் இவருடைய உடம்பில் ஆணுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து ஆணாக மாறிவிட்டார்.

அதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திருநங்கை சுகென்யா கிருஷ்ணனும் சந்துவாக இருந்து, சுகென்யா கிருஷ்ணனாக மாறியவர். சுகென்யாவின் வீட்டில் இவரை ஒதுக்கிவைத்துவிட, இவரை ஒரு வளர்ப்புத் தந்தை வளர்த்து ஆளாக்கினார். இவர், தனது வளர்ப்புத் தந்தையின் உதவியுடன் சத்திர சிகிச்சைக்காக மும்பை சென்றுள்ளார்.

ஆனால் 18 வயதுக்குப் பின்னர் தான் சத்திர சிகிச்சை செய்துகொள்ள முடியும் என மருத்துவர் கூறியதால், பெங்களூருக்கு வந்து அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார்.

ஆரவ் அப்புகுட்டன் சத்திர சிகிச்சைக்காக மும்பை செல்ல, அங்குள்ள மருத்துவர் சுகென்யாவைப் பற்றிக் தெரிவித்துள்ளனர். உடனே ஆரவ், சுகென்யாவைப் பார்க்க பெங்களூரு சென்றுள்ளார். இருவருக்கிடையே நட்பு வளரத் தொடங்கி, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

தற்போது இருவரும் அவர்களது ஆண்,பெண் உறுப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றி சத்திர சிகிச்சை செய்துள்ளனர். அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன் : கோடீஸ்வரர் ஒருவர் அதிரடி!!

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரோ நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Toyota, Honda, Volvo, BMW, Aston Martin, Opel, போன்ற பல வாகனங்களின் சென்சார் உற்பத்தி செய்கின்ற இலங்கை தொழிற்சாலையின் உரிமையாளரான ரொஹான் பல்லேவத்த என்பவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றால் இலங்கையின் மொத்த கடனையும் ஓரே நாளில் செலுத்தி விடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமின்றி உலக அமைப்புகள் பலவற்றில் இலங்கை கடன் பெற்றுள்ளது.

பிறக்கும் குழந்தைகள் உட்பட நாட்டிலுள்ள அனைவரும் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் திணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கோடிஸ்வரர் குறிப்பிட்ட விடயம் நடந்தால் நன்மையாக இருக்கும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தற்கொலை தாக்குதலில் தகர்க்கப்படவிருந்த விமானம்!!

ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் விமானத்தின் மீதே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகும், எனினும் குறித்த தாக்குதல் முயற்சியினை முறியடித்துள்ளதாக லெபனான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லெபனானை சேர்ந்த தற்கொலை குண்டுதாரி ஒருவரே இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து அபுதாபிக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் இடம்பெறவிருந்த அனர்த்தத்தை எங்கள் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்,லெபனான் பிரஜை ஒருவரே இதனை செய்வதற்கு திட்டமிட்டார்.

தரகெகையாட் என்ற லெபனான் தற்கொலை குண்டுதாரியே இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இத் தாக்குதல்தாரியுடன் வேறு மூன்று பேரும் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சந்தேக நபர்களில் மற்றொரு நபர் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினராக இருக்கின்றார் என்று லெபனான் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதலில் நான்கு சகோதரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகித்துள்ள லெபனான் புலனாய்வு அமைப்பு அவர்கள் தொடர்பாக தீவிர கண்காணிப்பை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்டு 20வது நிமிடத்தில் தாக்குதல் நடத்துவது தான் அவர்கள் திட்டமாக இருந்துள்ளது. எனினும் பயணப் பொதிகளில் இதை சாத்தியமாக்குவது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு சகோதரர்களில் ஒருவரால் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி கடந்து செல்ல முடியவில்லை என்றும், தெரிவித்துள்ளனர். எனினும் இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் 120 லெபனான் நாட்டவர்கள் உட்பட 400 பயணிகள் இருந்துள்ளனர். அதிகாரிகளின் சாதுர்யமான சோதனை நடவடிக்கையினால் இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் நிலநடுக்கம் : குலுங்கிய கட்டடங்கள்!!

 
இத்தாலியின் இச்சியா தீவில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அருகே நேப்லெஸ் கடலில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்சியா தீவு பிரபல சுற்றுலா தலமாக உள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இச்சியா தீவுப்பகுதியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

தேவாலயம் ஒன்று இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது. பலர் இதனால் காயமடைந்துள்ளனர். ஆனால் உயிர் சேதம் குறித்தான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இங்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 6க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

மருத்துவனையும் சேதமடைந்ததால், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நான் ஜெயலலிதாவின் மகள் : இளம் பெண்ணால் பரபரப்பு!!

ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வந்த இளம்பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு நேற்று காலை, 10 மணியளவில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் சென்றிருந்தார்.

மாநகர சுகாதார அதிகாரி செந்தில்நாதனை சந்தித்து, நான், முன்னாள் முதல்வர் ஜெ.,யின் மகள். என் தந்தை சோபன் பாபு, தாய் ஜெயலலிதா, பாட்டி சந்தியா ஆகியோரின் இறப்பு சான்றிதழ் வேண்டும்.

ஒன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்ட செந்தில்நாதன், அனைத்து இறப்பு சான்றிதழ்களையும் ஒன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அனுப்பி வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி, மாநகராட்சி அதிகாரிகள் Lock செய்திருந்தனர். இந்த சம்பவத்தையடுத்து Un Lock செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

5000 ஆண்டு வரை திகதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லும் சிறுவன்!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது பஹீம் 13 துபாயில் 7 ஆம் வகுப்பு படிக்கிறார். அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர்.

இந்த நிலையில், தற்போது ஒன்று முதல் 5000 ஆண்டு வரை, எந்தத் திகதியை கூறினாலும் அதன் கிழமையை கூறுகிறார்.
இதேபோல் உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் கூறுகிறார். எந்த நாட்டை கேட்டாலும், அதன் தலைநகர், கொடி, மொழி, நாணயத்தை கூறுவார். சர்வதேச எண் முறை, அனைத்து அலைபேசி நிறுவனங்களின் பெயர், மொடல், தயாரிப்பு திகதி, மென்பொருள் குறித்தும் கூறுகிறார்.

எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தின் பெயர், திகதி , நேரத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார். இவருக்கு, சிறந்த ஞாபக சக்தியாளர் என்ற முறையில், 5000 ஆண்டுகளுக்கான திகதியைச் சொன்னால் கிழமையை சொல்லும் திறனுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.

 

வயிற்று வலியென வைத்தியசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

சிறுமியின் வயிற்றில் உருவாகிய 5 மாத குழந்தையை உடுதும்பர வைத்தியசாலையில் இரகிசயமாக புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 வயது சிறுமியின் குழந்தை ஒன்றே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தெல்தெனிய நீதவான் என்.எம் பரிக்டீன் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு குறித்த வைத்தியரின் உதவி கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புத்தளத்தில் 14 வயதுச் சிறுவன்​ கொலை : 32 வயது இளைஞர் கைது!!

புத்தளம் – முந்தல், சமீரகம கிராமத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். சிறுவனின் சடலம் குறித்த பகுதியிலுள்ள தென்னந்தோப்பிலிருந்து நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கயிற்றினால் கழுத்து நெறிக்கப்பட்டு சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 32 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபராக அடையாளங்காணப்படட இளைஞர் நேற்று இரவு பிரதேச இளைஞர்களினால் தாக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் பாதுகாப்பில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14 வயதான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரும் நேற்று முன்தினம் காலை அப்பகுதியிலுள்ள தென்னந்தோப்பிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், குறித்த இளைஞரிடம் சிறுவனின் உறவினர்கள் அது பற்றி கேட்டபோது, சிறுவன் ஏற்கனவே வீடு திரும்பிவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் பிரதேச மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரவு 7 மணியளவில் குறித்த சிறுவன் தென்னந்தோப்பில் ஓலைகளுக்கிடையில் உயிரிழந்த நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளான்.

அதனைத் தொடர்ந்து சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் காலை வரை குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டிருந்ததுடன், காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்களின் உதவியுடன் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது

புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம். பஸால் மரண விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பிரேதத்தை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சி : வடகொரியா கடும் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது.

அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் ராணுவ தீர்வு காண்பதற்கு போர்த் தளவாடங்களையும், ஆயுதங்களையும் லோடு ஏற்றியாகி விட்டது, வடகொரியா தனது பாதையை மாற்றிக்கொள்ளாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்துகிற கூட்டு போர்ப்பயிற்சி கொரிய தீபகற்ப பகுதியில் இன்று தொடங்குகிறது. இது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டு போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி, வடகொரிய அரசின் செய்தித்தாள் ரோடங்க் சின்முன் நேற்று வெளியிட்ட செய்தியில், “வர இருக்கிற அமெரிக்க, தென் கொரிய கூட்டு ராணுவ பயிற்சி பொறுப்பற்றது. ஒரு அணு ஆயுதப்போரின் கட்டுப்பாடற்ற கட்டத்தில் நிலைமையை கொண்டு செல்கிறது” என கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 வயதுச் சிறுவன் பொலிசாரால் கைது!!

வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10வயது சிறுவன் உட்பட மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்மே லும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் பட்டக்காடு நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் மற்றும் அவரது 18 வயது சகோதரன் மற்றும் வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான இளைஞன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் யாரும் இல்லாத வீடுகளில் இச்சிறுவனின் உதவியுடன் வீடுகளில் காணப்படும் சிறிய துளைகள் ஊடாக சிறுவனை வீட்டினுள்புகுத்தி கொள்ளைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் அத்துடன் 5 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணமும் இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதற்காகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.