இன்று முதல் விசேட ரயில் சேவை!!

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை பொதுவான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்கள அதிகாரி பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 1033 என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இம்மாதம் 27 ஆம் திகதி வரை அதன் சேவை தொடர்பான நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்கம்பத்துடன் மோதுண்ட வாகன விபத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் மின் கம்பத்துடன் மோதி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம் ஒன்று இராசேந்திர குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தாக்கியதில் வாகனத்தில் பயணித்த வவுனியா பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த முகமட் வயது 30 என்ற நபர் நூதனமாக பலியாகியுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை இன்று மதியம் வவுனியா கண்டி வீதியில் ஏற்பட்ட விபத்தில் நபரொருவர் பலியான சம்பவம் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருவுற்றது அறியாமல் இருக்கும் 10 வயது சிறுமியின் பரிதாபம்!!

சண்டிகரில் உறவினர் ஒருவரால் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதால், 10 வயது சிறுமி கருத்தரித்தாக வெளியான சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய உறவினர் தற்போது விசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார். அவர் கருத்தரித்து அதிக நாட்கள் கடந்துவிட்டதை காரணம் காட்டி, கருக்கலைப்பு செய்ய கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

குழந்தையை சுமக்கின்ற தாயின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சான்று அளித்தால் மட்டுமே அதற்கு மேலான வாரங்களான கருவை கலைக்க அனுமதி வழங்கப்படும். 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைப்பதை இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனால், தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட அறியாமல் அந்த சிறுமி இருப்பது தான் பரிதாபம். இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது, உன்னுடைய வயிற்றில் பெரிய கல் இருக்கிறது, அதனால்தான் வயிறு வீங்கியுள்ளது என அவளிடம் கூறியுள்ளோம்.

முட்டை, பால் பழங்கள், மீன் மற்றும் கோழி இறைச்சி என சிறப்பு உணவுகள் அவருக்கு வழங்கப்படுகிறது. அதிக கவனம் அவர் மீது செலுத்தப்படுவதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

6 ஆம் வகுப்பு படிக்கும் இவளுக்கு ஆங்கிலமும், கணிதமும் மிகவும் விரும்பமான பாடங்கள். ஓவியங்கள் வரைவதையும் விரும்புகிற அவர் சிறப்பாகவே ஓவியங்கள் வரைகிறார். இதுவே அவரின் பொழுதுபோக்காக உள்ளது என கூறியுள்ளனர்.

காதலுக்காக 2000 கோடி சொத்துக்களை உதறித்த தள்ளிய கோடீஸ்வரி!!

கோடீஸ்வரரின் மகள் ஒருவர் காதலனை கரம் பிடிக்க தனது கோடிக்கணக்கான சொத்துக்களை உதறித் தள்ளியுள்ளார்.

மலேசியாவை சேர்ந்தவர் கோ கே பெங், மிகப்பெரிய கோடீஸ்வரரான இவரின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய் ஆகும்.

கே பெங்கின் ஒரே மகள் ஏஞ்சலின் பிரான்ஸிஸ் கோ, இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது உடன் படிக்கும் ஜடிடிஹா என்பவரை காதலித்துள்ளார்.

கரிபியன் தீவை சேர்ந்த ஐடிடிஹாவை தனது மகள் காதலிப்பதை கே பெங் ஒத்துக்கொள்ளவில்லை.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்தால் கோடிக்கணக்கான சொத்துக்களை இழக்க நேரிடும் என அறிந்தும் ஏஞ்சலா அவர்களின் சம்மதத்தை மீறி காதலனை கரம் பிடித்துள்ளார்.

ஏஞ்சலா – ஐடிடிஹா திருமணம் 30 பேர் முன்னிலையில் தேவாலயத்தில் மிக எளிமையாக நடந்தது.

புதுப்பெண் ஏஞ்சலா கூறுகையில், என் தந்தையின் நிலைப்பாடு தவறு என நான் நம்பினேன். அதனால் எது சரி என்கிற கேள்வியே எனக்குள் எழவில்லை, பணத்தை இழந்ததில் வருத்தமில்லை, சிக்கனமாக வாழ கற்றுக் கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

 

வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்!!

 
வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கணேசபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி இன்று (08.08.2017) மதியம் 2.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்..

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மக்கள் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய மக்களை 2004 ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்று தொடக்கம் அக்கிராம மக்கள் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் மழை காலங்களில் இடப்பெயர்வுகளை சந்திப்பதாக தெரிவிக்கும் மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

வவுனியாவில் அரசியல் கைதிகளின் படுகொலைகளைக் நினைவுகூர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

 
சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமாணவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு இன்று (08.08.2017) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா இ.போ.ச பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமும் அஞ்சலிச் சுடர் ஏற்றல் நிகழ்வும் இடம்பெற்றது.

போராட்டத்தின் போது சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நிமலரூபனின் படுகொலைக்கு பதில் என்ன?, டில்ருக்சனின் படுகொலைக்கு பதில் என்ன?, அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? , நீதி அமைச்சரே பதில் கூறு என பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயலாளர் சு.டொன்பொஸ்கோ, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம தியாகராசா, சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.​
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​

பூமியை நெருங்கும் எரி நட்சத்திர மழை!!

சுவிஸ்லாந்தில் இம்மாத இறுதிக்குள் எரி நட்சத்திர மழை பொழியும் எனவும் இதனை வெறும் கண்களால் கண்டு மகிழலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனை பூமி அசுர வேகத்தில் சுற்றி முடிக்க ஒரு ஆண்டு தேவைப்படுகிறது. சூரியனை சுற்றி வரும்போது குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது வால் நட்சத்திரத்தின் சிதறல்கள் பூமியில் மழையாக பொழியும்.

இதுபோன்ற ஒரு அரிதான நிகழ்வு சுவிட்சர்லாந்து நாட்டில் இம்மாத இறுதிக்குள் நிகழும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்.

குறிப்பாக, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் எரி நட்சத்திரங்கள் மழையாக பொழியும். நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்கு இடையில் இக்காட்சி நிகழ வாய்ப்புள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்நிகழ்வில் சுமார் 50 முதல் 75 எரி நட்சத்திரங்கள் சுவிஸ் மண்ணில் மழையாக பொழியும்.

இக்காட்சியை பைனாகுலர் இல்லாமல் வெறும் கண்களாலும் பார்க்கலாம். ஆனால், வெளிச்சம் இல்லாத இருண்ட இடங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

குறிப்பாக, வாட் மாகாணத்தில் உள்ள Les Pleiades என்ற பகுதியில் இந்த எரி நட்சத்திர மழையை துல்லியமாக பார்க்கலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் இலங்கையர்கள் கைது!!

 

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் சிலர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்நாட்டில் பாரிய தீவிரவாத முறியடிப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், சிலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!!

சென்னையில் காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மடிப்பாக்கம் செந்தூரர் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் முருகன் (49), ரயில்வே அதிகாரி. இவரது மனைவி லட்சுமி (45), தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இவர்களது மகள் சங்கீர்த்தனா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார், இவர் ரவி(24) என்ற ஆட்டோ ஓட்டுநரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம், பெற்றோர்களுக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சங்கீர்த்தனா தனது காதலனுடன் சேர்ந்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் தொங்கிய சடலங்களை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரூந்தின் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!!

 
கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் வீதி அருகில் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பேரூந்தின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம ம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இருவராவார்.

இவர்களில் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நா.நிதர்சன் என்ற 18 வயது இளைஞனின் மரணச் சடங்கு இன்று இடம்பெற்றுள்ளதுடன் அவரின் உயிரிழப்பு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான தமிழ் இளைஞன்!!

மட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனுசாந்திற்கு 2 – 3 மாதங்கள் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்டு தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவாகியுள்ள இரு தமிழ் வீரர்களில் தனுசாந்தும் ஒருவராக உள்ளார். இவர் படுவான்கரை – கொக்கடிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்வி கற்று வருகிறார்.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கை தேசிய அணியில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!

 
வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயஸ் வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன் என்ற 56 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த தர்சன் (26 வயது), அப்றஜிதன் (23 வயது), கிரிதரன் (25 வயது) ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் சற்றுமுன் கோரவிபத்து!ஒருவர் பலி! மூவர் படுகாயம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா  கண்டிவீதி  மதவுவைத்த குளம் பிரதேசத்தில் சற்றுமுன்  கோரவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து  வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த   ஹயெஸ்வான்   பாரவூர்தி  ஒன்றுடன்   மோதியதனால்  இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மேற்படி  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயெஸ் வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன் வயது (56) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும்  விபத்தில்படுகாயமடைந்த தர்சன் (26), அப்றஜிதன் (23) கிரிதரன் (25) ஆகியோர்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா!(வீடியோ )

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தேர்திருவிழா  06.08.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில்   காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை  மணிக்கு வசந்தமண்டபபூஜையை தொடர்ந்து   ஒன்பதரை  மணியளவில்   முத்துமாரியம்பாள்  தேரில் ஆரோகணிக்க    ஆண் பெண் பக்தர்கள் இருபுறமும்  வடம் பிடிக்க  நூற்றுக்கணக்கான பக்தர்களின் பிரசன்னத்தின் மத்தியில் தேர் திருவிழா  வெகு சிறப்பாக இடம்பெற்றது .

 

 

வவுனியாவில் அன்னம்மா சிற்றம்பலம் அறக்கட்டளையால் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு!!

 
திருமதி அன்னம்மா சிற்றம்பலம் அறக்கட்டளையின் அனுசரணையில் அஸ்திரம் மக்கள் நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கூமாங்குளம் கிராமத்தில் முதியவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு அஸ்திரம் இளைஞர் கழக தலைவரும் அன்னம்மா சிற்றம்லம் அறக்கட்டளை அமைப்பின் செயற்திட்ட அதிகாரி நா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் இனைப்புச் செயலாளர் பா.சிந்துஜன், அஸ்திரம் மமக்கள் நற்பனி மன்ற பொதுசெயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூமாங்குளம் இளம் விவசாய கழக தலைவர் கோ.ரகுவரன் மற்றும் கூமாங்குளம் சியிவிநாயகர் ஆலய தலைவர் ந. ஆறுமுகம் மற்றும் பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் வீதியில் குப்பைகளை வீசிய அரச உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 
வவுனியா தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் நீண்ட நாட்களாக குப்பை வீசிவந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் தண்டம் அறிவிடப்பட்டுள்ளதுடன் நீதவானின் கடுமையான எச்சரிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல், மதகுவைத்தகுளம் பகுதிகளில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் இப்பகுதியை துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

எனினும் தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் சிலர் தொடர்ச்சியாக குப்பைகளை வீசி வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் பொது சுகாதாரப் பரிசோதகதர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது குறித்த வீதியில் குப்பை வீசிய அரச உத்தியோகத்தர் ஒருவரை 31.07.2017 அன்று கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 03.08.2017 நீதிமன்ற சட்ட நடவடிக்கையின்போது தண்டம் அறவிடப்பட்டதுடன் நீதவான் அரச உத்தியோகத்தரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்.

குறித்த பகுதியில் குப்பைகளை வீசுகின்றவர்களில் அனேகமானவர்கள் அரச உத்தியோகத்தர்களாகவே காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.