அன்று மனிதக் கழிவுகளை கையால் அள்ளிய பெண் இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

ஹரியானாவைச் சேர்ந்தவர் கௌஷல் பன்வார். தலித் குடும்பத்தில் பிறந்ததால், பெற்றோருடன் சேர்ந்து தன்னுடைய இளம் வயதிலே மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் தொழிலை மேற்கொண்டார்.

இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் ஆசியர்கள் இவர் தலித் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சமஸ்கிருதம் பாடத்தை படிக்க அனுமதிக்கவில்லை.

அதற்கு மாறாக அந்த ஆசிரியர் உன் பெற்றோர் என்ன வேலை சொல்கிறார்களோ அதை செய் என்று கூறியுள்ளார். ஆனால் கொளஷல் சமஸ்கிருத மொழியின் மீது ஆர்வம் கொண்டதை கண்ட் அந்த ஆசியர் சமஸ்கிருதம் படிக்க வகுப்பிற்குள் அனுமதித்துள்ளார்.

கௌஷல் வகுப்பில் கடைசி வரிசையில் தான் அமர வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்ட கெளஷல் படிக்கும்போதே, தன் பெற்றோருடன் கையால் மலம் அள்ளும் தொழிலையும் செய்து வந்துள்ளார்

சமஸ்கிருதத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். அவர் வகுப்பில் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறும்போதெல்லாம், மற்ற உயர்ந்த’ சமூகத்தை சேர்ந்த மற்ற மாணவர்கள் அவரை வசைபாடினர். அவருடைய சமூகத்தின் பெயரால் மற்ற மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைப்பருவம், இளம்பருவம் என எல்லா வயதிலும், பள்ளி, ஹரியானா கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் என எல்லா இடங்களிலும், சாதியின் பெயராலேயே அவர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.

சமஸ்கிருதம் படித்தபோதுதான் ஜாதிகளைப் பற்றியும், இந்தியா எவ்வாறு சாதிய சமூகமாக உள்ளது என்பதைக் குறித்தும் கௌஷல் அறிந்துகொண்டார்.

இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது சமஸ்கிருதம் பாடத்தில் பி.எச்.டி. பட்டமும்,டெல்லியில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருத துறையில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போதும் தான் ஜாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுவதாகவும், அவர்களுடைய வசவுகளையும் ,கேலிகளையும் புறந்தள்ளி சென்று கொண்டே இருப்பதுதான் தன்னுடைய வெற்றி என்று கூறியுள்ளார்.

வளைகுடா நெருக்கடி : பிராந்திய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கட்டார்!!

சவுதி அரேபியா உட்பட அரபு நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைக்கு எதிராக கட்டார் அரசாங்கம் உலக வர்த்தக அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.

பிராந்திய அரபு நாடுகளினால் தங்கள் நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது சர்வதேச பொருளாதாரத்தை மீறும் ஒரு செயல் என உறுதியாகியுள்ளதாக கட்டார் பொருளியல் மற்றும் வணிகவியல் அமைச்சர் ஷேக் அஹமட் பின் ஜசேம் பின் மொஹமட் அல் தானி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக சவுதி அரேபியா, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த 60 நாட்களுக்குள் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என்றால் உலக வர்த்தக நிறுவனத்தினால் அதற்காக விசேட சபை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உத்தியோகபூர்வ முறைப்பாடு தொடர்பில் சவுதி உட்பட ஏனைய நாடுகள் இதுவரையில் பதிலளிக்காத போதிலும், அந்தத் தடை தங்கள் நாட்டு பாதுகாப்பு விடயத்துடன் எடுத்து கொண்டால் நியாயமான தீர்மானமே என அந்த நாடுகளினால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் திறப்பு!!

 
உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் 10 வாரங்களுக்குள் கட்டப்பட்டு பயணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்து தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மேம்பாலம் சுவிஸ்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் செர்மட் பள்ளத்தாக்கை கடப்பதற்கு 4 மணி நேரம் தேவைப்பட்டதாகவும் தற்போது மேம்பாலம் கட்டியதன் மூலம் 10 நிமிடங்களில் கடக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாலம் தரையில் இருந்து 85 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் அகலம் 65 செ.மீட்டர் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 7218 அடி உயரத்தில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் உள்ள டைடன் ஆர்.டி தொங்கும் பாலம் தான் உலகின் மிக நீளமான நடை மேம்பாலமாகாக இருந்து வந்தது.

ஆனால் இந்த சாதனையை சுவிஸ்லாந்து மேம்பாலம் முறியடித்து உலகின் மிக நீளமான இந்த நடை மேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், அதிக உயரத்தை விரும்புவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த மேம்பாலத்தில் பயணம் செய்வது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.

டெங்கு நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 327 ஆக அதிகரிப்பு!!

டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டில் பலியானவர்களின் எணிணக்கை 327 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தொற்று நோய்த் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆண்டின் கடந்த ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 15 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 வீதமானோர் 5 முதல் 19 வயது வரையான மாணவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

47 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகள் நீக்கம்!!

மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து ஆராய நேற்று கூடிய வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உப குழு பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, அடுத்த இரண்டு மாதங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளைப் பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி மீதான 5 ரூபா விசேட வர்த்தக வரியை 25 சதம் வரை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உலர்த்தப்படாத மீனுக்கான விசேட வர்த்தக வரியும் 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தலபத் மற்றும் கொப்பரா மீன்களுக்காக இதுவரை 75 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டதுடன், தற்போது அந்த வரி 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

கோழித்தீனிக்காக பயன்படுத்தப்படுகின்ற சோளத்திற்கான இறக்குமதி வரி அனைத்தையும் நீக்கி ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 10 ரூபா புதிய வர்த்தக வரியை மாத்திரம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுக்கான செஸ் வரியும் 25 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மீதான வரியையும் மூன்று ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி வரி மற்றும் விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் விலை விரைவில் குறையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரிசி, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகள் நீக்கப்பட்டு, விசேட வர்த்தக வரி மாத்திரம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் தூணில் மோதிய கேபிள் காரால் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

 
ஜெர்மனியில் ரெகின் ஆற்றின் மேல், தூணில் மோதி கேபிள் கார் போக்குவரத்து தடைப்பட்டதால் பலர் அந்தரத்தில் தொங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் சிக்கிக்கொண்ட 75 பேரை மீட்பதற்கு கொலோனிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புதவி அணியினர் கிரேனைப் பயன்படுத்தியுள்ளனர்.

40 மீட்டர் (130 அடி) உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டோரில் குழந்தைகளும் அடங்குவதுடன், காயமுற்றோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது, அங்கிருந்த 32 கேபிள் கார்களும் இயங்கிக் கொண்டிருந்தன. கேபிள் கார்களில் ஒன்று ஆதார அமைப்பின் ஒரு பகுதியில் மாட்டிக்கொண்ட காரணத்தால், போக்குவரத்து முழுவதும் நின்றுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : தலைமைப் பொறுப்பை ஏற்கும் தினேஷ் சந்திமல்!!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தினேஷ் சந்திமால் தயாராகியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் தினேஷ் சந்திமால் இடம்பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்திய ரங்கன ஹேரத் உபாதைக்குள்ளான போதிலும் இரண்டாவது போட்டிக்கான குழாத்திலும் இடம்பிடித்துள்ளார்.

காயமடைந்த அசேல குணரத்னவுக்கு பதிலாக லஹிரு திரிமன்ன பெயரிடப்பட்டுள்ளார்.

முதல் போட்டியில் விளையாடிய சுரங்க லக்மால் நீக்கப்பட்டு லக்சான் சந்தகனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 எனும் ஆட்டக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

பெண்கள் சுயநினைவை இழந்த பின் நடக்கும் கொடுமை!!

ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களின் கூந்தல் மர்மான முறையில் வெட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், குறிப்பாக பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருகிறது. யார் இதை செய்கிறார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கூந்தல் வெட்டப்பட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். மேலும், கூந்தல் துண்டிக்கப்படும் நேரத்தில் தாங்கள் சுயநினைவை இழந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதற்கு பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை காரணமா என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யார் இவ்வாறு செய்வது, எதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்களுக்கு இன்று முதல் தடை!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்களை நடத்த இன்று (02) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் முறையிடுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 784 208 என்ற தொலை பேசி இலக்கத்திற்கோ முறையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த அரசாங்கம்!!

மின்சாரத் தடையோ அல்லது கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக மின் கட்டண அதிகரிப்போ அல்லது மின் துண்டிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்…

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் நாளாந்த மின் தேவை பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தின் தேவை உயர்வடைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளும் நீர்நிலைகளின் நீர் மட்டம் 36 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. சில நீர்நிலைகளின் நீர் மட்டம் 20 வீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

பிரதான மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரம் பழுதடைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் மின்சாரத் துண்டிப்போ, கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

வவுனியா ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!(காணொளி)

வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.07.2017 (சனிக்கிழமை )அன்று  ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ   ஸ்ரீசங்கர குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது.

10 தினங்கள் இடம்பெறும் இவ் அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா எதிர்வரும் 07.08.2017 அன்று இடம்பெறுகின்றது.


வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற நிலையில்!!

வவுனியா ஏ9 வீதியையும், காளிகோவில் வீதியையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள தாண்டிக்குளம் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடனே அதனூடாக பிரயாணிக்க வேண்டியுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் இப் புகையிரதக் கடவையானது கடந்த காலங்களில் புகையிரத கடவை அமைக்கப்பட்டதுடன் இதற்கான கடவை ஊழியரும் கடமையாற்றியிருந்தார். தற்போது இக்கடவை அகற்றப்பட்டு இங்கு ஒளி சமிக்கை மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிக்குளம் சந்தியானது கடந்த காலத்தில் இருந்து தற்பொழுது வரை அதிக போக்குவரத்து நெரிசல் உடைய இடமாகும்.

கல்மடு, ஈச்சங்குளம், புதுக்குளம் போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களும் குருமன்காடு, தாண்டிக்குளம் போன்ற நகரை அண்டிய இடங்களில் உள்ளவர்களும் ஏ9 வீதியை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் இவ்வாறு செல்பவர்கள் இப் புகையிரதக் கடவையின் ஊடாகவே ஏ9 வீதியை அடைகின்றனர்.
அத்துடன் இக்கடவைக்கு மிக அண்மையில் பாடசாலை அமைந்துள்ளதுடன் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் இக்கடவையின் ஊடாகவே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காணப்படும் இக்கடவைக்கு, தானியங்கி கடவை அல்லது சாதாரண கடவையாவது அமைத்துத் தர வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களத்தினை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

நீதிபதி இளஞ்செழியன் இலக்கு அல்ல : மீண்டும் அடித்துக்கூறும் பொலிஸ்மா அதிபர்!!

யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த துப்பாக்கிச்சூடு நீதிபதியை இலக்கு வைத்ததா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பூரண விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் மேலதிகமாக என்னால் எதையும் கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் நீதிபதி ஒரு கருத்தையும், பொதுமக்கள் ஒரு கருத்தையும் கூறுகின்றனர், நேரில் கண்ட சாட்சியாளர்கள் வேறு கருத்தை கூறுகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்டதல்ல என்றும், திடீரென ஏற்பட்ட ஒன்று என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி..

கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ். நல்லூர் பின் வீதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நீதிபதியுடன் 15 வருடங்களாக பணியாற்றிய ஹேமச்சந்திர என்ற மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்று மறுநாள் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர் பொலிஸில் சடணடைந்தார். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அவசர அறிக்கை..

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும், சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்திற்குள் பொலிஸார் வெளியிட்ட அவசர அறிக்கை தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்ததுடன், இது குறித்து முக்கியமான இரு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மீண்டும் அதே கருத்து..

இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல. நீதிபதி இலஞ்செழியனை இலக்கு வைக்கவில்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறையில் பேய் : பயத்தில் எயார் இந்தியா ஊழியர்கள்!!

அமெரிக்காவில் எயார் இந்தியா ஊழியர்கள்தங்கும் அறையில் பேய் நடமாடும் காட்சிகள் வெளியாகி ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோ நகரில் ஹோட்டலில் எயார் இந்தியா ஊழியர்கள் தங்கியுள்ளனர்.அவர்கள் அளித்துள்ள புகாரில், நாங்கள் ஹோட்டல் அறையில் தங்கி இருக்கும் போது விசித்திரமான ஒலிகளும், வாசனைகளும் வருகின்றன.

நாங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த ஓட்டல் அறைக்கு வருகிறோம். ஒவ்வொரு முறையும் இங்கு தங்கும் போது விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்த விடயத்தில் கவனம் எடுத்துகொள்ள நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் சிகாகோ ஹோட்டல் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளோம்என எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

 
இந்தியாவில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை நகரம் தானே பகுதியில் உள்ள Mumbra பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கர்ப்பமாக இருப்பதால் அங்குள்ள Bilal என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த ஜுலை மாதம் 20 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சற்று அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் குழந்தையில் வயிற்றின் உள்ளே மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனால் வயிற்றினுள் இருக்கும் குழந்தையை எடுக்க வேண்டும்,இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால், குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.

குழந்தையின் வயிற்றின் உள்ளே இருந்த குழந்தையும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை 7 செ.மீற்றர் நீளமும், மூளை மற்றும் எலும்புகள் போன்றவை பாதி நிலையில் வளர்ந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இரட்டை குழந்தைகளாக இருவரும் பிறக்க வேண்டியவர்கள், குறைபாட்டின் காரணமாக மற்றொரு குழந்தை வளர்ச்சி அடையாமல் பாதி நிலையில் இருந்துள்ளது.

வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை ஆண் குழந்தை எனவும், 150 கிராம் எடை இருந்ததாகவும், அது தொடர்பாக சோதனை மேற்கொள்வதற்காக அக்குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரது தாயாரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாத குழந்தை தாயுடன் பேசும் அதிசயம்!!

கர்நாடகாவில் 4 மாத குழந்தை தனது தாயிடம் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் மாவட்டம் ராமபுரா பகுதியைச் சேர்ந்த நந்தீஷ்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை, தாய் ரம்யா வேண்டுமா என கேட்டால் வேண்டும் என பதில் அளிக்கிறது, அதேபோல் தாயின் குரலுக்கு பதில் தருகிறது, தாய் ஏதாவது பேசினால் அதற்கு பதில் தருகிறது.

இந்த அதிசய குழந்தையை பார்க்க தினமும் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது, தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் 5 மாதங்கள் இருக்கும் போதே தாயின் குரலை கேட்டு பழகி விடுகிறது. இதனால் பிறந்த 10 முதல் 11 மாதங்களில் நன்றாக பேச ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் இந்த குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் தாயிடம் பேசுவது அதிசயமாகவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.