ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது 40 மில்லியனிற்கும் மேற்பட்ட அபிமானிகளுக்கு ஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனைவராலும் ரசிக்கப்பட்ட “சரட்டு வண்டில” என்ற பாடலை ஒலிவியா வீணையில் மீட்டி பதிவேற்றம் செய்திருந்தார். அதனை ரசித்தஏ.ஆர்.ரஹ்மான் தனது அபிமானிகளுடன் இதை பகிர்ந்துள்ளார்.
ஜெர்மனில் பிறந்த ஈழத்தமிழரான ஒலிவியா தனபாலசிங்கம் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை என்பவற்றினை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்.
இந்த ஈழத்தமிழர் ஒலிவியாவின் இந்த சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இந்த அந்தஸ்து ஊடகங்களிலும் இணையங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஒலிவியாவும் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு கொடுத்த இந்த அந்தஸ்துக்கும், தனது இசையை பகிர்ந்து கொண்டதற்கும் பேஸ்புக் ஊடாக நன்றியை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – வற்றாப்பளை அம்மன் கோயில் வளாகத்து அரசமரத்தில் அம்மன் போன்ற வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த அம்மன் உருவம் நேற்றைய தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஆலய பரிபாலன சபை உருப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பெண் ஒருவர் அம்மன் வடிவில் ஒரு தோற்றத்தை முதலில் கண்டு கூறியதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தின் அறிகுறியாக அரசமரத்தில் அம்மன் போன்ற உருவம் தோன்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நிகழும் வைகாசி விசாகப் பொங்கள் தினத்திற்கு நாட்டில் உள்ள சகல இடங்களிலும் இருந்து இன மத வேறுபாடின்றி இலச்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா போகஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயதுச் சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார என்ற நபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (01.08.2017) 27 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வவுனியா போகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டுக்கு முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார (வயது 56) என்பவரை வவுனியா பொலிஸார் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு முற்படுத்தியதன் அடிப்படையில் ஆரம்ப வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
அதன் பின்னர் 2017.03.16 ஆம் திகதி அன்று 7 வயது சிறுமியை கடத்தியமை மற்றும் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் புரிந்தமை என்ற 2 குற்றச்சாட்டுக்காக இந்த எதிரிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததுடன் இச்சம்பவத்தினூடாக பாதிக்கப்பட்ட சிறுமியும் சிறுமியின் தாயாரும் சட்ட வைத்திய அதிகாரியும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தனர்.
அதன் பின்னர் எதிரி சாட்சியமளித்திருந்தார். இவ் வழக்கு விசாரணை இடம்பெற்று தீர்ப்பு நியமிக்கப்பட்டிருந்தது. இன்றையதினம் இவ் வழக்கு அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களும் வழக்கு தொடுனர் தரப்பால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த எதிரியை குற்றவாளியாக காண்பதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.
அதனையடுத்து தண்டனை தீர்ப்பு வழங்கும் போது ஓர் விசேட காரணத்தினை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியினுடைய தாயார் சாட்சியமளிக்கும்போது தெரிவித்ததாவது,
நான் மிகவும் கஸ்ட நிலையிலேயே எனது பிள்ளைகளை வளர்ந்து வருகின்றேன். சமூகத்திலே சிறுபிள்ளைகளுக்கு எனது மகளுக்கு ஏற்பட்டது போன்று பல்வேறு அநியாயங்கள் இடம்பெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு அநியாயங்கள் இடம்பெறாமல் நீதிபதி ஐயா தடுக்கவேண்டும் என கண்ணீர் மல்க மன்றில் தெரிவித்தார்.
இதனை மன்றில் சுட்டிக்காட்டிய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இந்த எதிரிக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டான 16 வயதிலும் குறைந்த பெண் பிள்ளையை சட்ட ரீதியான பாதுகாவலரிடமிருந்து கடத்திய குற்றச்சாட்டுக்காக அதிகபட்ச தண்டணையாக 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.
இந்த எதிரிக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டான 7 வயது சிறுமியை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு அதிக பட்ச தண்டனையாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா நஸ்டஈட்டினை செலுத்துமாறும் பணித்ததுடன் நஸ்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்ததுடன் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபா விதித்தார்.
வழக்கு தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
இன்று பலரும் நுண்நிதி கடன்களைப் பெற்று வீட்டில் தொலைக்காட்சிகளையும், டிஸ் அன்ரனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்துவதன்மூலம் சுத்தமான குடிநீரை பருகமுடியுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (31.07.2017) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..
தற்போது தொற்றாத நோயின் தாக்கம் எமது நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக நாட்பட்ட சிறுநீரக நோய்த்தாக்கமுடையவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் எட்டு மாவட்டங்கள் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்களை கொண்ட மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளது. அதில் எமது மாகாணத்தில் வவுனியா மாவட்டமும் முல்லைத்தீவு மாவட்டமும் அதிகளவிலான நோயாளர்களை கொண்ட மாவட்டங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சுத்தமான குடிநீர் பருகாமையும் ஒருகாரணமாக கருதப்படுகின்றது. சிறுவயதிலிருந்தே சுத்தமான குடிநீரை பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலைகளில் இவ்வாறான இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
எனக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியிலிருந்து இதுவரை 18ற்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வருடமும் 7 பாடசாலைகளுக்கு இந்த இயந்திரம் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களென பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் அவ்வையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட வீதி கிராம மக்களின் முயற்சியால் நேற்று (31.07) புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன் மற்றும் வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றிச் செல்லவேண்டிய நிலைமை காணப்பட்டதுடன் மரணமானவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்வதிலும் தெற்கிலுப்பைக்குளம் மற்றும் கோவில்குளம் கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இவ் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் இனங் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளதோடு, அதனால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 310 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார துறையினரால் பாரிய அச்சுறுத்தல் என கருதப்படும் டெங்கு நோயை பரப்பும் கொசுவுக்கு எதிரான போராட்டம் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மே மாதம் தொடக்கம் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் அதிகரிப்பை காண முடிகின்றது.
இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் 12,498 நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். மே மாதம் தொடக்கம் ஜுலை வரையிலான தரவுகளை மையப்படுத்தி பார்க்கும் போது மூன்று மாதங்கள் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிகின்றது.
மே மாதத்தில் 15,886 பேரும், ஜுன் மாதத்தில் 24,978 பேரும், ஜுலை மாதத்தில் 29,055 பேரும், புதிதாக இனம் காணப்பட்டுள்ளதாக அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் கூடுதலான நோயாளர்கள் இம் மாதத்தில் இனம் காணப்பட்டிருந்தாலும் முதலாம் வாரத்தில் – 9322 என காணப்பட்ட எண்ணிக்கை நான்காம் வாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது என, பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
வாராந்தம் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி பல்வேறு தரப்புடன் இணைந்து தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற டெங்கு ஓழிப்பு செயல் திட்டத்தின் முன்னேற்றத்தை காட்டுவதாக சுகாதார துறையினரால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்கள் மற்றும் மரணங்களை கடந்த வருடத்துடன் ஓப்பிடும் போது இதுவரையில் இரு மடங்கு கடந்துவிட்டதாகவே பதிவுகள் மூலம் அறியமுடிகின்றது. 2016ம் ஆண்டு இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 55,150 ஆகும். 97 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சில வருடங்களுக்கு முன்னர் Flip கைப்பேசிகள் எனப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு காணப்பட்டது.
இவ்வாறிருக்கையில் மீண்டும் இவ்வாறான ஒரு கைப்பேசியினை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
SM-G9298 எனும் தொடரிலக்கத்தில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதில் 4.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD திரை காணப்படுகின்றது.
தவிர Qualcomm Snapdragon 821 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா, NFC தொழில்நுட்பம் மற்றும் Samsung Pay வசதி என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமா உலகில் சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த நிகழ்வு பெரும் விடயமாக உருமாறியது. குற்றவாளிகளும் பிடிபட்டனர். இன்னும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது அதே போல ஒரு சதி பிரபல மொடலிங் நடிகை மெரீனா மைக்கேலுக்கு நடந்துள்ளது. இவர் தமிழில் டெல்லி கணேஷ் மகன் மஹா நடித்த என்னுள் ஆயிரம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அவரிடம் ஒருவர் தன்னை தயாரிப்பாளாராக அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல நகைக்கடையின் பெயரை கூறி விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்றும், நள்ளிரவில் தான் ஷூட்டிங் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
உடனே மெரினா ஷூட்டிங் எங்கு நடக்கிறது என கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர் சரியாக பதிலளிக்காமல் உடனே வீட்டிற்கு கார் வரும் என்று சொல்லியிருக்கிறார். இதனால் சந்தேகமான மெரினா உடனே நகைக்கடை அதிபரை தொடர்பு கொண்டு விடயம் குறித்து கேட்டுள்ளார்.
அப்படி எதுவும் இல்லை என விடயம் தெரிந்ததும் சதி என்ன என்பதை கண்டுபிடிக்க அமைதி காத்துள்ளார். இந்த உரையாடலை ஃபேஸ்புக்கிலும் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடைசியில் அந்த நபர் ஷூட்டிங் ராதாகிவிட்டது என கூறியுள்ளார். இது போல யாருக்கும் நடந்துவிடக்கூடாது என அவர் தனக்கு நடந்ததை விளக்கமளித்துள்ளார்.
யேமன் நாட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 41 வயதான Muhammad al-Maghrab, யேமன் தலைநகர் சானாவில் முக்கிய சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டு பொலிசாரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். ஏமனில் அனைத்து சட்டங்களின் மூலதனமாக ஷரியா சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மரண தண்டனை அந்நாட்டு ஊடகங்களில் தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பலர் செல் போனில் பதிவு செய்துள்ளனர்.
ரயில் என்ஜின் சாரதிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உரிய விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின்களில் காணப்படும் சில இயந்திரக் கோளாறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவரை மொட்டையடித்த வழக்கில் தொடர்புடைய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கில் கைதான நபர்களில் வங்கதேச ஆளும் கட்சியான அவாமி லீக்கின் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த டுஃபான் சர்கெரும் ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தின் போக்ரா பகுதியில் தாயும் அவரது 16 வயது மகளும் தனியாக இருந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பலொன்று திடீரென்று புகுந்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.
மட்டுமின்றி அந்த தாயாரை கட்டிப்போட்டுவிட்டு மகளை அந்த கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது. மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் இருவருக்கும் மொட்டையடித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயார் ஆகியோர் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் காவல்துறையினரின் பாதுகாப்போடு இருக்கும் புகைப்படங்கள், இணையதளத்தில் வேகமாக பரவி வங்கதேச மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.
பாதிக்கப்பட்ட, அடையாளம் வெளியிடப்படாத அந்த மாணவிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக சர்கெரின் மனைவி சந்தேகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவியை பாலியல் வல்லுறவு செய்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் 25 வயதான சர்கெரின் மீது போக்ரா மாவட்ட காவல்துறையினர் கடந்த வெள்ளியன்று வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக மற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள சர்கெரின் மனைவியான ஆஷா காடுன் என்பவரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது.
அது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது எனவும் ஜப்பான் கடற்கரை எல்லையில் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜன் உன் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது உறுதியும் செய்யப்பட்டுள்ளதால் எந்த நேரத்தில் எந்த பகுதியையும் இங்கிருந்தே தாக்க முடியும் என்று மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இராணுவ வல்லுநர்கள், வட கொரியாவின் சமீபத்திய சோதனையான ஹாவசாங்-14 எனும் பெயர் கொண்ட இந்த ஏவுகணை 3,724.9 கி.மீற்றர் உயரமாக எழும்பி 998 கி.மீற்றர் தூரம் பயணித்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் விழுந்துள்ளது.
இந்த ஏவுகணை பல கட்டங்களைக் கடந்து சோதனையில் வெற்றி கண்டது என்பதால் ஆபத்தின் தன்மை அதிகம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வடகொரியாவால் அமெரிக்கா முழுவதையும் ஏவுகணைகளால தாக்க முடியும் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
premenstrual dysphoric மற்றும் Chronic Hormone நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 39 வயதான லாரெட்டா ஜோன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1993 முதல் 2017 இடையே மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளிலும் இடம்பெற்ற 189 கொலைகளுடன் லாரெட்டா ஜோன்ஸிற்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஒரு பெரிய நிதி நிறுவனத்திறகாக கடன் சேகரிப்பாளராக பணியாற்றிய ஜோன்ஸ், கலிபோர்னியாவிலும், அமெரிக்கா எல்லை மாநிலங்களிலும் மற்றும் வடக்கு மெக்ஸிக்கோவிற்கும் பயணம் மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் இடம்பெற்ற 137 கொலைகள், ஒரேகானில் 16, அரிசோனாவில் 11, நெவாடாவில் 8, மெக்சிக்கோவில் 17 என அனைத்து கொலைகளுடன் ஜோன்ஸிற்கு தொடர்புடையதை பொலிசார் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு அரிதான நோய் என குறிப்பிட்டுள்ள கலிபோர்னியா மன நல நிறுவன டாக்டர் அலோன்சோ பிராங்கோ கோன்சலஸ், ஜோன்ஸ் வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவ மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும், தற்போது வரை ஜோன்ஸிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி தாய் மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் அருகில் உள்ள கொங்கராயனூர் என்கிற கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. நிலத்திற்காக அப்பகுதியை சேர்ந்த தலித் பெண் பேபியும், அவரது மகன் எழிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
பேபிக்கு சிறிய அளவில் நிலம் இருந்ததுள்ளது. பேபியின் நிலத்தை சுற்றி வேறொருவரின் நிலம் இருந்திருக்கிறது.
பேபி தன்னுடைய நிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அந்த நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். நிலத்திற்கான தண்ணீரும் அந்த நிலத்தின் உரிமையாளரை நம்பிதான் இருக்க வேண்டியிருந்ததுள்ளது.
இந்நிலையில், பேபிக்கு நிலத்தை எழுதிக் கொடு என்று பலமுறை மிரட்டில் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கடந்த 27ம் திகதி இரவு தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள பேபிக்கு அந்த நிலத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்துள்ளார்.
பேபியும் அவரது மகன் எழிலும் தண்ணீரை திறந்துவிட சென்றிருந்தபோது தண்ணீரில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி பேபியும் எழிலும் இறந்து போயுள்ளனர்
பொலிசார் நடத்திய விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்த பொலிசார் இரு குற்றவாளிகளில் பாஸ்கர் என்ற நபரை மட்டும் கைது செய்துள்ளனர். பாபு என்பவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
நாடு முழுவதிலும் காணப்படும் நகைக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட குடும்பம் ஒன்றை கொச்சிக்கடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கணவன், மனைவி, பிள்ளைகள், கணவரின் சகோதரர் என குடும்ப உறுப்பினர்கள் திட்டமிட்ட அடிப்படையில் பல நகைக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை தங்க நகைக் கடை ஒன்றில் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நேற்று இந்த குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்த நபர்களின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
56 வயதான மொஹமட் மசீட் மொஹமட் ரசாக், 34 வயதான பாதிமா சர்மிளா, 30 வயதான அப்துல் கரீம் மற்றும் 14 வயதான பாதிமா செய்னா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை நகையகம் ஒன்றிலிருந்து தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டமை சீ.சீ.ரீ.வி கமரா பதிவுகள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன