அனுராதபுரத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
அனுராதபுரம் – மீகெல்லேவ விகாரையில் உள்ள புத்தரின் சிலை மற்றும் ஏனைய சில பெறுமதியான பொருட்களை மோட்டர் சைக்கிளில் சென்ற இரண்டு கொள்ளையர்கள் நேற்றிரவு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது, கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (24.07.2017) மாலை 5 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது மதுபோதையில் தனியார் பேரூந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து இன்று தனியார் போக்குவரத்து சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் பேரூந்தின் நடத்துனர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச பேரூந்தில் ஏறியுள்ளார். பேரூந்தில் ஏறிய குறித்த நபர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இ.போ.ச பேரூந்தின் நடத்துனர் சென்று இவ்விடத்தில் மதுபானம் அருந்த வேண்டாமென தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தனியார் பேரூந்து நடத்துனர் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகவும் எனினும் அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் பிரயாணிகள் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் இன்று (24.07.2017) மதியம் 2.45 மணியளவில் விடுதி முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்கு இன்று (24.07.2017) மதியம் 2.45 மணியளவில் நான்கு நபர்கள் சென்று அறை வேண்டுமென கோரியுள்ளனர். எனினும் முகாமையாளர் அறை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் முகாமையாளரை தாக்கி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நபரின் சத்தம் கேட்டதையடுத்து விடுதியின் உரிமையாளர் தாக்குதலுக்குள்ளான விடுதி முகாமையாளரை (குமார் வயது48) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக காயமடைந்த முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவியபோது..
மதியம் நான்கு நபர்கள் மது போதையில் வந்தார்கள் . அவர்கள் என்னிடம் அறை வேண்டுமென கோரினார்கள். நான் இல்லை என தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் என் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றார்கள் எனத் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து இன்று (24.07.2017) வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தனியார் பேரூந்து உரிமையாளர்கள், நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.
நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.
நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து இன்று வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர்களாகிய நாம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
எனினும் இ.போ.ச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது சேவையில் ஈடுபடுவது தொடர்பாக இ.போ.ச வடபிராந்திய இணைந்த தொழிற்சங்க உப தலைவர் கோபிகிருஸ்னனிடம் வினாவிய போது,
இன்று வடக்கு மாகாண அனைத்து பாடசாலைகளிலும் இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெறுவதன் காரணமாக எமது மாணவர்களின் நன்மை கருதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது சேவையில் ஈடுபட்டுள்ளோம்.
ஆனால் யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை வண்மையாக கண்டிப்பதோடு தாக்குதலால் உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான நீதித்துறை மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது காவல்த்துறை செயற்பட வேண்டும் என இ.போ.ச வடபிராந்திய இணைந்த தொழிற்சங்க உப தலைவர் கோபிகிருஸ்னன் தெரிவித்தார்.
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24.07.2017) காலை வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வவுனியா மாவட்டத்திலும் 8 வருடங்களாக பணியாற்றியவர். அவரது துணிச்சலான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை யாவரும் அறிவர். பல சவால் மிக்க வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளபபட்ட துப்பாக்கி பிரயோகம் நீதித்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும்.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
விசாரணைகள் முழுமை பெறாத நிலையில் பொலிசார் இத் தாக்குதல் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என கோருவதுடன், நீதிபதிகளின் பாதுகாப்பையும் அதிகாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த பணிப்புறக்கணிப்பில் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் கலந்து கொண்டதுடன் வாயில் கறுப்புத்துணியினை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் வவுனியா, கற்பகபுரம், விவேகானந்தா சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள்(பிளாஸ்ரிக் கதிரைகள்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைக் கையளிக்கும் நிகழ்வு கற்பகபுரம், செந்தமிழ் முன்பள்ளி மண்டபத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு.பாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மக்கள் குறைகேள் சந்திப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ப. த்தியலிங்கம் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் சனசமூக நிர்வாகத்தினர், அமைச்சரின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டுத்திட்டம், காணி பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. அமைச்சரின் உடனடி நடவடிக்கை மூலம் பல விடயங்களுக்கு இதன்போது உடனடி தீர்வுகளும் எட்டப்பட்டன. சில விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி விடயங்களில் உடனடித் தீர்வுகளை பெற்றுத்தந்தமைக்காக அமைச்சர் அவர்கள் சனசமூக நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் பூதவுடல் சிலாபம் சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிலாபத்தில் உள்ள மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் வீட்டிற்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவரின் மகனை கட்டி தழுவி கதறி அழுதுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் பூதவுடல் தற்போது சிலாபம் சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதி மா.இளஞ்செழியனுடன் சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், மன்னார் நீதவான்- ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன்ஆகியோரும் சென்றிருந்தனர்.
யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோக்கத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு உத்தியோகத்தரின் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் மற்றும் வடமாகாண நீதிபதிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் கிளாடிஸ் ஒவைடோ என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று, 3 குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறித்த ஆட்டுக்குட்டியின் கண்களும், முகமும் வினோதமாகவும், பாதி மனிதனை போலவும் பயங்கரமாக இருந்துள்ளது.
இதனை கண்ட மக்கள், பிசாசு என்று அச்சமடைந்துள்ளனர். இந்த ஆட்டுக்குட்டி பிறந்த 3 மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. அதன் புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் Pulsnitz பகுதியைச் சேர்ந்தவர் லிண்டா. இவர் கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியில் காணமால் போயுள்ளார், அதன் பின் இவர் துருக்கி சென்று அங்கிருந்து ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார்.
அதன் பின்னர் மரியம் என பெயர் மாற்றிக் கொண்ட லிண்டா, தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார்.
லிண்டா தலைமறைவான விவகாரம் அரசுக்கு கிட்டியதும் ஜேர்மனியின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் மோசூல் நகரை கைப்பற்றிய அரசுப் படையினர் ஐந்து பெண்களை கைது செய்ததாகவும் அவர்களுள் இப்பெண்ணும் இருந்ததாக ஜேர்மன் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். தற்போது ஈராக்கில் உள்ள அவருக்கு தூதரக அதிகாரிகள் உதவி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவரை இரண்டு ஜேர்மனி ஊடகங்கங்கள் பேட்டி எடுத்ததாகவும், அப்போது அவர், தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும். இதனால் நாடு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர், ஆயுதங்கள் அதன் சப்தம் ஆகியவற்றை விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள கணவன் மற்றும் மனைவியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடங்கனேனி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவர் மனைவி உமா தேவி (28) இவர்களுக்கு இபிலினா (3) கீர்த்தி (1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பம் அடைந்த உமாதேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷின் தந்தை கணேஷ் அங்கு சென்று என்னவென்று பார்த்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி பிரகாஷ் மற்றும் உமாதேவி சடலமாக கிடந்துள்ளனர்.
இபிலினா, கீர்த்தி ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணேஷ் மயங்கி கிடந்த 2 குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
செல்லும் வழியிலேயே கீர்த்தி பரிதாபமாக இறந்தாள். இபிலினாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் மற்றும் உமா தேவி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்
இந்தியாவில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி இளைஞர் இருவரை அடித்து உதைத்து மலம் உண்ண வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள வினேகா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்து மலம் உண்ண வைத்துள்ளனர் பெண்ணின் உறவினர்கள்.
இளைஞரை அடித்து உதைத்து சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதனை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்திலும் பரவ விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளம்பெண்ணும், தானும் காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தான் அந்த பெண்ணை துன்புறுத்தவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண் தான் தம்மை தோட்டத்திற்கு அழைத்ததாகவும், அப்போது பெண்ணின் சகோதரன் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தனக்கு இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளைஞரும், இளம்பெண்ணும் அருகருகே வசித்து வந்துள்ளனர்,
இளம்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை குறித்த இளைஞர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக துன்புறுத்தி வருவதாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர் மீதும், அவரை அடித்து துன்புறுத்தி, சித்திரவதை செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய பெண்ணின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவமானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு யானைகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
திருகோணமலை – ரவுண்ட் தீவு மற்றும் கெவுளியாமுனை என்பனவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (23) காலை குறித்த யானைகள் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு கப்பலின் (IPC) ஊடாக குறித்த இரண்டு யானைகளும் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருகோணமலை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும், கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த இரண்டு யானைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 11ம் திகதி கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட யானையொன்றும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பிராந்திய நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அந்நாட்டு மக்கள் அவலப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டாரில் சுமார் 27 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான உணவு பிரச்சினை தீர்ப்பதில் கட்டார் அரசாங்கம் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.
தொழில் வாய்ப்பு தேடி அங்கு சென்றுள்ள சுமார் 140,000 இலங்கையர்கள் கட்டாரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கட்டார் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு கட்டார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இணக்கம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி சவுதி அரேபியா உட்பட நான்கு நாடுகள் கட்டார் நாட்டினை புறக்கணித்தது.
இதன் காரணமாக குறித்த நான்கு நாடுகளிடமிருந்து பொருட்கள் இறக்குமதி, விமான பயணம் உள்ளிட்ட பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் பகுதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த பொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்த பொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அருமந்த ஒருஉயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வடமாகாண உப பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன் எனவும் அறிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லொறி ஒன்று எட்டு சடலங்களுடன் சுற்றியுள்ளது.
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு லொறி ஒன்று வழக்கம் போல் சரக்கு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
அப்போது லொறிக்குள் இருந்த சிலர் ஓட்டுனரிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத லொறி ஓட்டுனர், சரக்கு லொறிக்குள் எப்படி மனிதர்கள் என்று அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக லாரி இருக்கும் பகுதிக்கு வந்த பொலிசார் லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது லொறிக்குள் 38 பேர் இருந்துள்ளதாகவும், அதில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் 8 பேர் இறந்துகிடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நல்லூர் – பின்வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
வடமாகாண நீதிபதிகள் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 51 வயதுடைய ஹேமரத்ன என்பவரே உயிரிழந்ததுடன், தற்போது அவரது சடலம் சிலாபம் – சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.