ஆபாசமாக நடித்து மிகுந்த சர்சையை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடித்திருந்தார். பட நிகழ்ச்சிகளிலும் கூட சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக புனே, மும்பையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினாராம். வீட்டு உரிமையாளகள் நடிகை, நடிகர்களுக்கு வீடு தரவே பயப்படுகிறார்கள். திருமணமாகாத ஆண் அல்லது பெண்ணுக்கு வீடு கொடுத்தால் தொல்லைகள் வரும் என கருதுகிறார்கள்.
மேலும் திருமண சான்றிதழ் கேட்கிறார்கள். இதனால் புதிதாக வீடு வாங்கி குடியேறியபோது மற்றவர்கள் என் கலாச்சாரத்தை தெரிந்துகொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும், முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளரும் லொறியின் சாரதியுமே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்துள்ளமையால் வீதியில் இருந்து அகற்றப்படாமையால் இன்று அதிகாலை இரண்டு மணிவரை ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படுள்ளது.
இவ்வாகனங்களை அகற்றுவதற்கு பாரம்தூக்கி அல்லது யே.சி.பி ரக வாகனம் தேவைப்படுவதால் சில வேளைகளில் இன்று காலையும் ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவி செல்வி டயந்தினி கண்ணதாசனுக்கு இலண்டனில் இயங்கும் V3 அமைப்பு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக இன்று (04.07.2017) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை அதிபர் செல்வி அமராவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்கினர்.
தந்தையான திரு.கண்ணதாசன் யுத்த காலங்களில் பல தடவைகள் பாதிக்கப்பட்டவர். இதனால் இவரது தலையில் தற்போது இனந்தெரியாத கட்டி உருவாகி திடீரென நடக்கமுடியாத நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளார். நல்ல உழைப்பாளியான இவரது குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் . இதில் மூத்த மகள் உயர்தரம் கலைப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
திறமைசாலியான இவர் பூப்புகாரில் இருந்து நடந்து வருவதால் காலதாமதமாகியே பாடசாலையை வந்தடைகின்றார். இதனை அவதானித்த பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சதீஸ் ஆகியோர் மூலம் தாயாரான திருமதி இராசநாயகி கண்ணதாசன மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கு தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தியதற்கிணங்க இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் சமூக ஆர்வலர் புருஸோத்தமன், பாடசாலை உப அதிபர் திரு.நிமலன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு தனித்தனியாக அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
மாகாணத்தின் அமைச்சர்களாக நியமனம் பெற்றமையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மாகாணத்தின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எனது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரகவுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் வருடாந்த தேசிய விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் உதைப்பந்தாட்ட இறுதி போட்டி 02.07.2017 அன்று வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்டம் இளைய நிலா இளைஞர் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் வவுனியா பிரதேச மட்டத்தில் சம்பியனான 786 இளைஞர் கழகமும் செட்டிகுளம் பிரதேச மட்டத்தில் தெரிவான சென்.அன்ரனிஸ் இளைஞர் கழகமும் மோதியது. இப் போட்டியில் 1-0 எனும் கோல் வித்தியாசத்தில் வவுனியா பிரதேச சம்பியன் அணியான 786 இளைஞர் கழகம் வெற்றியீட்டியது.
மேற்படி 786 இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்து அணியானது வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த 02 வருடங்களாக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடவத்த பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடவத்தை ரன்முத்துகம பகுதியில் வாழும் 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு மீண்டும் உயிருடன் வந்துள்ளார்.
வாகன விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த பெண் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணின் இறுதி நடவடிக்கைள் மேற்கொண்டதன் பின்னர் 7வது நாள் காரியங்கள் செய்த தினத்தன்று மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் இவரது சடலத்தை அடையாளம் காட்டியதன் பின்னரே சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தவறான சடலம் ஒன்று வீட்டிற்கு கொண்டு வந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஸ்ரீ ராம்புரம் திருஞான சம்மந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று முற்பகல் 10 மணியளவில் நீர் நாய் ஒன்று புகுந்துள்ளது.
பாடசாலைக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று நடமாடியதை அவதானித்த மாணவர்கள் இது குறித்து அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் அப்பகுதி கிராம அலுவலரிடம் தெரிவித்தமைக்கு பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்தார்.
இதனையடுத்து குறித்த பாடசாலைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் அதனை மீட்டு வனஜீவராசிகள் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உயிரினம் வவுனியாவில் முதன் முதலில் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் காட்டுக்குள் இருந்து வெடிக்காத நிலையில் 4 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காகச் சென்றவர்கள் இன்று (04.07) காலை அப்பகுதியில் வெடிக்காத நிலையிலிருந்த 4 மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நேற்று (03.07) அமைச்சரின் வவுனியா அலுவலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்ப்பிற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
விட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.
உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும்.
விட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.
எனவே, விட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று விட்டமின் சி. உங்களுக்கு விட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
தேவையானப் பொருட்கள்:
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 டம்ளர்
கிவி ஜூஸ் – 1/2 டம்ளர்
மிளகுப் பொடி – 1/2 டீஸ்பூன்
ஜூஸ் தயாரிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமாக வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் விட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்தவர் இஷான் அப்ரஹாம் பிச்சமுத்து(9), நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த வருடம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள ஏரியில் தண்ணீரின் பத்து அடிக்கு கீழே ஜெல்லி பிஷ் இருப்பதை கண்டுள்ளார். இதை அவரது தந்தை கிஷோர் பிச்சைமுத்து அறிய வகை மீன் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவரும் அந்த மீனை தங்களுடன் கொண்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கடல்சார் மேலாண்மை மையத்திற்கும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரிக்கும், ஜெல்லி பிஷ்ஷை அவர்கள் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சுமார் ஆறு மாத காலம் நடந்த சோதனைக்கு பின்னர். இஷான் கண்டறிந்த ஜெல்லி பிஷ் மீன் இந்தியாவின் முதன் முதலில் கண்டறியப்பட்ட மீன் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்திய உயிரினங்கள் கணக்கெடுப்பு துறையின் முன்னாள் இயக்குநர் வெங்கட்ராமன் கூறுகையில், இந்த வகை மீன்கள் மிகவும் அரிதானவை என்றும், இது இந்தியாவில் கண்டறியப்பட்ட ஜெல்லி பிஷ் இனம் எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த மீன் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய உயிரினங்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மாணவி பள்ளிக்கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிக்கூட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் Alex Dallas (16), பதினோராம் வகுப்பு மாணவியான இவருக்கு 4 வயதிலிருந்தே புற்றுநோய் இருந்துள்ளது.
நோயிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கும் Dallasக்கு கடந்த டிசம்பரில் 12 மணி நேர ஆப்ரேஷன் நடந்துள்ளது.
இந்நிலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடன நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதில், கலந்து கொள்ள ஆசைப்பட்டுள்ள Dallas, நிகழ்ச்சிக்கு அணிந்து செல்ல $680 விலையில் புது துணி வாங்கியுள்ளார்.
மேலும், தலைமுடியை அழகாக்கி அதற்கு தனியாக செலவு செய்துள்ளார். இந்நிலையில், பள்ளி நிர்வாகம் Dallas நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளி நிர்வாகம், Dallasன் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
கடந்த ஆறு மாதங்களாக அவர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கூட நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி தினமும் ஒரு மணி நேரம் Dallasஐ பள்ளிக்கு வர சொன்னோம்.
ஆனால் அவர் வரவில்லை, அதனால் அவர் நிகழ்ச்சிக்கு வருவது சரியாக இருக்காது என கூறியுள்ளது.
பள்ளிக்கூடத்தின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள Dallasன் தாய் Sam Mattison, எல்லா பள்ளி மாணவ, மாணவியர்களை போல தன்னையும் நடத்த வேண்டும் என Dallas விரும்புகிறாள். ஆனால் அது அவருக்கு மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
ஜேர்மனியில் லொறி மீது மோதி பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள Stammbach நெடுஞ்சாலையில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் நேரத்தில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது லொறி மீது மோதியதாக கூறப்படுகிறது.
பேருந்து மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. பேருந்துக்குள் இருந்த 30 பேர் படுகாயங்களுடன் வெளியே தப்பியுள்ளனர்.
ஆனால், எஞ்சிய 18 பேர் வெளியேற முடியவில்லை என்பதால் அவர்கள் அனைவரும் உயிரிழந்துருக்கலாம் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு ஹெலிகொப்டர் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து சேர்ந்துள்ளனர்.
பின்னர், படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அபாயக்கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பேருந்து எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து பொலிசாருக்கு தெளிவான பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
தென்சீனக் கடல் பகுதிகளில் உள்ள குட்டிக் குட்டித் தீவுகளுக்கு உரிமை கொண்டாடி உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.
இந்தப் பகுதியில் உள்ள ’டிரைடன்’ என்னும் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதே தீவை, தைவான் மற்றும் வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடிவருகின்றன.
சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல் கடந்துசென்றுள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் கோபமூட்டுவதாக உள்ளது என சீனா தெரிவித்துள்ளது, சர்ச்சைக்குரிய பகுதியில் போர்க்கப்பல் பயணம் செய்வது சரியான முறை கிடையாது, இதுபோன்ற செயல்களை அமெரிக்கா குறைத்துக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, தனது ராணுவ கப்பல்களையும் போர் விமானங்களையும் அந்த தீவுக்கு சீனா அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய சில மணி நேரங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.