வவுனியா – ஶ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மீட்கப்பட்ட நீர் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த நீர் நாய் நேற்றைய தினம் பாடசாலை வளாகத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்க்கப்பட்டது.
அப்பகுதி கிராம அலுவலர் மூலம் பாடசாலை வளாகத்தில் நீர் நாய் ஒன்று நிற்பதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து அதனை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மீட்டுச் சென்றுள்ளனர்.
நீர் நாய் மீட்கப்பட்ட போது அதன் கழுத்துப் பகுதியில் நாய் ஒன்று கடித்த காயம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வவுனியாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட குறித்த நீர் நாய் ஒரு அரியவகை விலங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் அனுசரணையில் இவ்வாண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு நேற்று (04.07.2017) 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை நடைபெற்றது.
இச் செயலமர்வில் பிரபல ஆசிரியர்களான S.குணசீலன் (உயிரியல்) , P. டீ.விஜேந்திரன் (இணைந்த கணிதம்) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்விற்கு நிதி உதவியினை விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்ற செல்வி கலீபா (2008 Bio) வழங்கியிருந்தமையுடன் இவ்செயலமர்வில் 60 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் இருக்கும் புகையிரதக்கடவையில் ஊழியர் இன்மை காரணமாக அதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயத்துடனே வீதியைக் கடந்து செல்கின்றனர்.
புகையிரதக்கடவைக்கு அருகில் பாடசாலை உள்ளதால் மாணவர்களும் புகையிரதக் கடவையைக் கடந்தே செல்லவேண்டிய நிலையில் உள்ளது.
முன்னர் அப்பகுதியிலிருந்த தற்காலிக பணியாளர்கள் கடமையிலிருந்து விலகியதையடுத்து சிறிது காலம் அப்பகுதியில் பொலிசார் கடமையில் இருந்துள்ளனர்.
தற்போது கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள புகையிரதக்கடவையில் பணிக்கு எவரும் இல்லை. இதன் காரணமாக புகையிரதக்கடவையைக்கடந்த செல்வதில் அச்சத்தினை எதிர்கொண்டுள்ள அப்பிரதேச மக்கள் தமது புகையிரதக்கடவைக்கு பணியாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியுள்ளனர்.
தற்போது புகையிரதக்கடவை பணியாளர் தங்கியிருக்கும் கொட்டில் சரிந்து வீழ்ந்துள்ளமையும் புகையிரதக்கடவை பாதுகாப்பிற்கும் போடப்பட்ட தடை கம்பியும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
அதையே சீரமைத்த பணியாளரை நியமித்த தருமாறும் பாடசாலை மாணவர்களும் கோரியுள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஷார்ப் எனும் நிறுவனம், தனது 2-வது ஷார்ப் x1 அன்ட்ரொய்ட் வன்( sharp x1 android one) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மற்ற மொபைல் போன்களை விட விலை சற்று அதிகமாக உள்ளதால், இதற்கு உறுதியாக 18 மாத அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போன் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ப் x1 மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள்?
5.3 இன்ச் HD உள்ள IGZO LCD தொடுதிரை.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 Soc.
3 GB ரேம் மற்றும் 32 GB இன்பில்ட் ஸ்டோரேஜ்.
அன்ட்ரொய்ட் 7.1 மற்றும் 16.4 MB மெகாபிக்சல் ரியர் கேமரா.
LED பிளாஷ் மற்றும் 8 MB செல்ஃபி கேமரா.
3900 mAh திறனுள்ள பேட்டரி உள்ளதால், இந்த மொபைல் 3 மணிநேரம் செய்யும் ஜார்ஜ் 4 நாட்களுக்கு நீடிக்கும்.
ஷார்ப் x1 மொபைலானது மின்ட் க்ரீன், டார்க் பர்பிள், வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
இந்தோனேசியாவில் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியதால் 16 வயது பையனுக்கும், 71வயது மூதாட்டிக்கும் அவரது வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரோஹாயா, 71 வயதாகும் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிலமாத் ரயாதி என்ற சிறுவனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது.
இது தெரிய வந்த இருவரின் வீட்டாரும் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மூதாட்டியும் சிறுவனும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.
இதனால் பயந்துப்போன இருவீட்டாரும் சிறுவனுக்கும் மூதாட்டிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இருவருக்குள் இருக்கும் காதலுக்கு ஆதாரமாக இருவரில் யார் முதலில் இறந்தாலும் மற்றொருவரும் இறந்துவிடுவோம் எனவும் திருமணத்திற்கு முன்பாக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.
மணமகள் ரோஹாயா இதற்கு முன்பு இருமுறை கணவனை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 இன்ச் இருப்பதால் உலகின் உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளான்.
சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக 120 முதல் 130 செ.மீ வரை தான் இருக்கும்.
ஆனால், கரண் என்ற இந்த சிறுவன் 6 அடி 6 இன்ச் உயரம் இருக்கிறான். பிறந்த சமயத்தில் கரண் இருந்த எடை 7.8 கிலோ, மற்றும் 63 செ.மீ உயரம்.
உலகிலேயே அதிக எடை மற்றும் உயரம் கொண்ட குழந்தை என்ற பெருமை கின்னஸ் புத்தகத்தில் கரணுக்கு பிறந்த உடனேயே கிடைத்தது.
கூடைப்பந்து விளையாட்டு வீரராக வர வேண்டும் அல்லது மருத்துவராக வேண்டும் என்பதே கரணின் கனவாக உள்ளது.
கரணின் அப்பா 6 அடி 7 இன்ச் உயரம் கொண்டவர். கரணின் அம்மா ஸ்வேத்லானாவின் உயரம் 7 அடி 2 இன்ச். ஸ்வேத்லானா இந்தியாவின் உயரமான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பேஸ்புக் காதலனை நம்பி தனியாக சென்ற கல்லூரி மாணவி உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30ம் திகதி தமிழகத்தின் பண்ருட்டி அடுத்து கானாகாவஞ்சாடியில் உள்ள சாலையோரத்தில் நள்ளிரவு இளம்பெண் ஒருவர் உயிருடன் தீக்காயங்களுடன் போராடியுள்ளார்.
அவ்வழியே ஆம்புலன்சில் சென்ற நபர் ஒருவர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பெயர் சக்தி(23) எனவும், சென்னையைச் சேர்ந்தவர் என்றும் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தனக்கும், சேலத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பின் காதலாக மாறியதாகவும், இதனால் கடந்த 28-ஆம் திகதி சென்னையில் இருந்து திருச்சி, மதுரை சென்று அதன் பின் தஞ்சையில் உள்ள ஹோட்டலில் தனி அறை எடுத்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தோம்.
அதன் பின் இருவரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சென்ற போது, அங்கிருந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணம் செய்து கொண்ட இருவரும் அங்கிருந்த முந்திரி தோப்பிற்கு சென்ற போது, நாரயணன் திடீரென்று பெட்ரோலை தன் மீது ஊற்றி தீயை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.
இதனால் அருகிலிருந்து மண்ணை என் உடலில் போட்டு தீயை அணைக்க போராடினேன் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிசார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெண்ணின் பெற்றோர், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். பொலிசார் நாராயணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு காரணமாக அவரது மனைவி நித்யா கடந்த மே மாதம் 23 ஆம் திகதி சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
குறித்த புகாரில் கணவர் பாலாஜி, தன்னை சாதி பெயர் சொல்லி திட்டுவதாகவும், அடித்து உதைப்பதாகவும் தமது நடத்தை மீது சந்தேகிக்கிறார் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி யூலை 1ம் திகதி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது மீண்டும் புகார் அளித்தார் நித்யா.
அந்த புகாரில், “எனக்கும் நடிகர் பாலாஜிக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகள் இருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்வார். அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். நான் தினமும் ஜிம்முக்கு போவேன்.
இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டார். தினமும் நான் வேலைக்கு செல்லும் போதும், ஜிம்முக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார்.
நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தினார். இது உயர் அதிகாரிகள் மத்தியில் எனக்கு அவமானமாக இருந்தது.
சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு நித்யா பேட்டியும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கமிஷனர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் மாதவரம் பொலிசார் தாடி பாலாஜி மீது,
பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் நடிகர் தாடி பாலாஜி கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக் காதலால் வழிதவறி போயுள்ளார்.
திவ்யா என்ற மாணவிக்கும், முரளி என்பவருக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இருவரும், காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் செய்துக்கொள்ளலாம் என முரளி கூறியிருக்கிறார். அதனை நம்பி, அவருடன் கடந்த 30 ஆம் திகதி கல்லூரி மாணவி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இருவரும், பண்ருட்டி அருகே செல்லும் போது சாலையோரத்தில் இருந்த கோயிலில் வைத்து கல்லூரி மாணவியை முரளி திருமணம் செய்திருக்கிறார்.
திடீரென அருகிலிருந்த முந்திரி தோப்பிற்கு மாணவியை அழைத்துச்சென்ற முரளி, குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்பதால் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அதற்கு, மாணவி ஒப்புக்கொண்ட நிலையில், அவர் தலையில் மட்டும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, முரளி அங்கிருந்து தப்பிவிட்டார். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அங்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தலை,முகம் முழுவதும் எரிந்த நிலையிலிருந்த மாணவிக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், தப்பியோடிய முரளி என்கிற நாராயணனை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை முடியாத தாயொருவரை 13 வயது மகன் கவனித்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கலேவெல கரவில, வெல்யாய பிரதேசத்தில் வாழும் 13 வயது சிறுவன், மிகுந்த வறுமையின் மத்தியில் தாயை கவனித்து வருகிறார்.
பீ.கே.ஜு சுதேஷ் குமார என்ற சிறுவனே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். 39 வயதான தாயின் கால் அவரசமாக நீக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் 68 வயதான தந்தை கொழும்பு பிரதேசத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த தந்தை அருகில் இல்லாத போதிலும், தாயின் அனைத்து தேவைகளையும் சிறுவனே நிறைவேற்றுகின்றார்.
மொரகொல்ல பிரதேச பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த சிறுவன் தாய்க்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய பின்னர் பாடசாலைக்கு சென்று கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த குடும்பம் வாழ்ந்த மண் வீடு உடைந்து விழுந்தமையினால் தற்போது வரையில் தந்தையின் சகோதரருக்கு சொந்தமான சிறிய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பாடசாலை செல்வதற்கு பாதணிகள் கூட இல்லாத இந்த சிறுவன் கற்கை நடவடிக்கைகளில் மிகவும் திறமையானவர் என குறிப்பிடப்படுகின்றது.
பொலித்தீன் வகைகளை முற்றாக தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
கழிவுகளை அகற்றும் போது பொலித்தீன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், நீர் அடித்துச் செல்லும் பகுதிகளில் பொலித்தீனால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதிலீடாக வேறு பொருட்களை அறிமுகம் செய்யவும் சிறிது காலத்தில் உக்கக்கூடிய வகையில் இந்தப் பொருட்கள் அமைந்திருக்கும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 3ம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்திலும் கழிவகற்றல் மற்றும் பொலித்தீன் பயன்பாடு தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
தாய் ஒருவர் நான்கு வயது பிள்ளையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். மின்னேரிய ரத்மாலே, மஹா ரத்மலே தஹயே போக்குவ என்னும் பகுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பக்கத்து வீட்டுக்குச் சென்று விளையாடக் கூடாது என கண்டித்த தாய், பிரம்பினால் அடித்து பிள்ளையின் தலையை சுவரில் மோதச் செய்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நான்கு வயதான குறித்த பெண்ணின் மகன் உயிரிழந்துள்ளார்.
முதல் கணவரை பிரிந்து வாழும் இந்தப் பெண், உளவியல் பாதிப்பு தொடர்பிலான சிகிச்சைகளை பெற்றுக் கொண்டு வருகின்றார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் சடலம் பொலனறுவை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதான தாயையும், தாயுடன் தகாத உறவு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதான வீட்டு உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்னேரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாணவிகளின் கதிரைகளில் பசை பூசிய 13 வயதான மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமது வீட்டிலேயே குறித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பூண்டுலோயா பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் கவிஸ்க தனஞ்ஜய வீரக்கொடி என்ற மாணவரே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பாடசாலையில் மாணவிகளின் கதிரைகளில் ஒரு வகை பசையை பூசிய சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரும் ஏனைய சில மாணவர்களும் தொடர்புபட்டிருப்பதாக பாடசாலை நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்த பெற்றோரை அழைத்து வருமாறு குறித்த மாணவர்களுக்கு, பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இதன் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது பிள்ளைகள் மற்றும் கணவரை விட்டுவிட்டு தனது மகளின் காதலனுடன் தாயொருவர் தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தப்பிச் சென்ற பெண்ணின் மகளின் வயது 17 எனவும் அவர் பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் வேளையில் தனது வயதை ஒத்த இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணிவந்துள்ளார்.
பின்னர் இவ்விடயம் குறித்த யுவதியின் பெற்றோருக்கு தெரிய வந்தபோது அவர்கள் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால் இருவரும் சுதந்திரமாக தொடர்ந்தும் காதல் தொடர்பை பேணிவந்துள்ளனர்.
எனினும் யுவதியின் தாய் மகளின் காதலனுடன் கள்ளத்தனமாக காதல் தொடர்பினை பேணி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த யுவதி பிரத்தியேக வகுப்பு நிறைவடைந்து தனது காதலன் வரும்வரை காத்திருந்துள்ளார். வெகுநேரமாகியும் தனது காதலன் வராத காரணத்தினால் அவர் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார்.
வீட்டில் தனது தாய் இருக்கவில்லை. பின்னர் 35 வயதான தனது தாய் 17 வயதான தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளதனை குறித்த யுவதி அறிந்துகொண்டார். இவ்வாறு தப்பிச்சென்ற பெண் வீட்டில் பணத்தையும் எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மெக்சிக்கோவில் 676 மனித மண்டையோடுகளால் ஆன வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பழங்கால அஸ்டெக் கோவில் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த மண்டையோட்டுக் கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி கலாசாரம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அஸ்டெக் மற்றும் மெசோ அமெரிக்கன் மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளமை வரலாற்றாசிரியர்களால் நிறுவப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரமானது ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தமது குடிமக்களைக் காக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு மண்டை ஓடு மட்டும் ஸ்பானியர் ஒருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மண்டையோட்டுக் கோபுரம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை ஆய்வாளர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஆய்வுக்கு உட்படுத்தி வந்துள்ளனர்.
சீனாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 11 மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை பெய்து வருகிறது.
செஜியாங், அன்ஹுயி, ஜியாங்சி, ஹுபேய், ஹுனான், குவாங்டாங், சோங்கிங், சிச்சுவான், கிஸோ, யுன்னான், தன்னாட்சி உரிமை பெற்ற குவாங்சி ஸுவாங் மாகாணங்களில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
ஹுனான் மாகாணத்தில் உள்ள கிசியாங்ஜியாங் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. முந்தைய மழைக்காலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு 39.51 மீட்டர் உயரத்திற்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், இந்த மாகாணத்தில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள சுமார் 27,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், 37,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்ததாக சீன அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஹுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் சுமார் 3,000 இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி காணாமற்போயுள்ள 22 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வெள்ளத்தால் சீனாவில் சுமார் 2500 கோடி யுவான் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1880 கோடி யுவான்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.