இந்தியாவை உலுக்கிய சம்பவம்!!(வீடியோ)

 
மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தை சேர்ந்த ஓடேரா பிபி (42) என்ற பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், இவர் வழிதவறி பக்கத்து கிராமத்துக்கு சென்றுள்ளார், அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒருபெண், பிபியை பார்த்து இவள் ஒரு குழந்தை கடத்தல்காரி, நமது கிராமத்தில் உள்ள குழந்தைகளை கடத்துவதற்கு வந்துள்ளார் எனவும் கூச்சலிட்டுள்ளார்.

இதனை கேட்ட கிராம மக்கள் அந்த பெண்ணை பிடித்து டிராக்டரில் கட்டிவைத்துள்ளனர், அதன் பின்னர் கிராம மக்கள் சேர்ந்து பிபியை அடித்துள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாமல் பிபி கதறியுள்ளார், இவரது ஆடைகளை அப்புறப்படுத்தி, தலைமுடியை வெட்டி மனிதாபிமானமின்றி அந்த கிராமத்து ஆண்கள் நடந்துகொண்டுள்ளனர்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று பிபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி பிபி இறந்துவிட்டார்.

அந்தப் பெண்ணை அடித்தவர்கள் மீதும், அவரை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபி அடித்துக் கொல்லப்பட்ட காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர, உலகளவில் அந்த வீடியோ பரவி வருகிறது.

 

அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் : சிரியா எச்சரிக்கை!!

சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது.

உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தீவிரவாதிகள், புரட்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளையும் மீட்பதற்கு சிரியா இராணுவம் போராடி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த கான் ஷேக்வுன் என்ற நகரை மீட்பதற்கு இராணுவம் தாக்குதல் நடத்தியது.

அந்த தாக்குதலில் இரசாயன குண்டுகளும் வீசப்பட்டன. இதில் புரட்சிப்படை வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், இரசாயனம் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறி ‌ஷயாரத் விமானப்படை தளத்தையும் தாக்கியது.

இதில் மத்திய தரை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து 59 குண்டுகள் வீசப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் சிரியா இரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறி, கடந்த வாரம் அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிரியாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் அல்-மொக்தத் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.

வித்தியா கொலை வழக்கு : சாட்சியம் வழங்கும் போது மயங்கி விழுந்த சிறுவன்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் நேற்றைய தினம் 10 நிமிடம் வழக்கினை ஒத்தி வைக்குமாறு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயம் முன்னிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

13 வயதுடைய பாடசாலை மாணவன் இந்த வழக்கின் ஒன்பதாவது சாட்சியாளராகியுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூன்றாவது சாட்சியாளராக சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளார்.

சாட்சி வழங்க ஆரம்பித்து சற்று நேரத்தில் “எனக்கு மயக்கமாக உள்ளது” என அந்த மாணவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் மயங்கி விழும் நிலையில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து 10 நிமிடங்கள் சாட்சி பெற்று கொள்ளும் நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் பின்னர் 10 நிமிடங்களில் பின்னர் மீண்டும் குறித்த மாணவர் சாட்சி வழங்கியுள்ளார்.

வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டு பெண் ஒருவரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் திகதி இரவு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

மோட்டார் வாகனத்தில் வந்த 4 பேருடனான குழுவொன்று இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த மோட்டார் வாகனம் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வாடகைக்கு பெற்று கொள்ளப்பட்டதென தெரியவந்துள்ளது.

பணத்தை பறிகொடுத்த சீனப் பெண் வட்டித் தொழில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

இரவு நேர விடுதிகளுக்கு செல்லும் நபர்கள் மற்றும் பொலிஸாருக்கு வட்டிக்கு பணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சீன நாட்டு பெண் 10 வருடத்திற்கும் அதிக காலம் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிக்காமலே 4 கோடி சம்பளம் பெறும் சர்மி!!

கோலிவூட் நடி­கைகள் அதி­க­பட்­ச­மாக 3 கோடி சம்­பளம் வாங்­கு­வ­தாக கூறப்­படும் நிலையில் கைவசம் படங்­களே இல்­லாத சார்மி 4 கோடி சம்­பளம் வாங்­கி­யி­ருப்­பது பர­ப­ரப்­பாக பேசப்­ப­டு­கி­றது. டோலிவூட் இயக்­குநர் புரி ஜெக­னாத்­துடன் நல்ல புரி­த­லுடன் இருக்­கிறார் சார்மி.

என்.டி. பால­கி­ருஷ்ணா நடிக்கும், பைசா வசூல், 101 ஆவது படத்தை புரி இயக்­கு­கிறார். இதன் பட்ஜெட் 32 கோடி. புரியின் சிபா­ரிசால் சார்மி படத்தின் நிர்­வாக தயா­ரிப்­பாளர் பொறுப்பு பெற்றார். நடிகர், நடி­கைகள் ஒருங்­கி­ணைப்பு, படப்­பி­டிப்பு பணி­களை கவ­னித்தார் சார்மி.

இதன் படப்­பி­டிப்பு போர்த்துகல் நாட்டில் 70 நாட்கள் நடந்­தது. இதற்­கான பணி­களை கவ­னித்த சார்­மிக்கு ரூ.4 கோடி சம்­பளம் தரப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. 5 படங்கள் நடித்­தி­ருந்தால் கூட சார்­மிக்கு இதில் பாதி அளவு சம்­பளம் கூட கிடைத்­தி­ருக்­காது.

ஆனால், சாதுர்­ய­மாக நிர்­வாக தயா­ரிப்­பாளர் பொறுப்பை ஏற்று பெரிய தொகையை சம்­ப­ள­மாக பெற்­றி­ருக்­கிறார். படத்தில் நடிக்­கா­மலே இவ்­வ­ளவு பெரிய தொகையை சார்மி சம்பளமாக பெறுவதையறிந்து சக ஹீரோயின்கள் அதிர்ச்சியில் வாயடைத்துபோய் உள்ளார்களாம்.

விமானப் பயணியின் பொதியில் 20 கிலோ எடையுள்ள உயிருள்ள சிங்கி இறால்!!

20 கிலோ­கிராம் எடை கொண்ட உயி­ருள்ள சிங்கி இறால் ஒன்றை பயணி ஒருவர் தனது பயணப் பொதியில் வைத்து கொண்டு செல்ல முயன்­றதை அமெ­ரிக்க விமான நிலை­ய­மொன்றின் அதி­கா­ரிகள் கண்டு பிடித்­துள்­ளனர்.

பொஸ்டன் நக­ரி­லுள்ள போகன் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
குறித்த சிங்கி இறாலின் புகைப்­ப­டத்­தையும் அமெ­ரிக்க போக்­கு­வ­ரத்து பாது­காப்பு நிர்­வாக அதி­கா­ரிகள் வெளி­யிட்­டுள்­ளனர்.

பொஸ்டன் லோகன் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் சோத­னை­யின்­போது பயணி ஒரு­வரின் பொதி­யி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய சிங்கி இறால் இது என போக்­கு­வ­ரத்து பாது­காப்பு நிர்­வா­கத்தின் பேச்­சாளர் மைக்கல் மெக்­கர்த்தி தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், சிங்கி இறால்­களை விமானப் பய­ணிகள் தம்­மு­டன்­கொண்டு செல்­வது தடை செய்­யப்­ப­ட­வில்லை என்றார்.

உயி­ருள்ள சிங்கி இறால்கள் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­கின்ற போதிலும் தெளி­வான, பொலித்தீன் பைகளில் கசி­யாத விதத்தில் அவை அடைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்!!

வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது.

அதன்படி, தற்போது வட்ஸ்அப்பில் உள்ள இமோஜி சேவையை புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உள்ள இமோஜியை விட மேலும் பல இமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது நாம் என்ன இமோஜி வேண்டும் என நினைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான இமோஜிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.

மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து போல்ட் (bold), இட்டாலிக் (italic), and ஸ்டிரைக்த்ரோ (strikethrough) உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, வட்ஸ்அப்பில் MP3, ஈமெயில் உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க வேலை கிடைத்தும் சாதிக்க பல்கலை சென்ற மாணவி பலி : சோகமயமானது கிராமம்!!

 
டெங்கு நோய் தொற்றினால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவமானது அவரின் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த மாணவியின் இறுதி பயண நிகழவுகள் இன்று நடைபெற்றது. இதன்போது கிராம மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.

நிர்மலா சேதனி அபேகோண் என்ற 27 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு கிராம உத்தியோகத்தர் பதவி கிடைத்த போதும், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற வேண்டும் என்ற கனவோ சென்றார். எனினும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

நாஉல ஸ்ரீ நாக தேசிய பாடசாலையில் ஆரம்ப கற்கைகளை நிறைவு செய்த நிர்மலா 2013ஆம் ஆண்டு உயர்தரத்தில் விசேட சித்தி பெற்று மாத்தளை மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

விண்ணப்பித்த கிராம உத்தியோகத்தர் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் தங்கள் கிராமத்தில் கிராம சேவகராக நியமிக்கப்பட்ட போது, இந்த பதவியை வேறு ஒருவருக்கு கொடுங்கள் எனக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்ல விருப்பமாக உள்ளதென கூறிவிட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2015ஆம் டிசம்பர் மாதம் இணைத்துள்ளார்.

அமைதியை மாத்திரம் விரும்பும் அவரின் நேர்மையான தன்மையை பலர் விரும்பியுள்ளனர். நிர்மலா மற்றவர்களின் மகிழ்ச்சி குறித்து எதிர்பார்க்கும் ஒருவர் என அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு அவரது தந்தை வாகன விபத்தில் உயிரிழக்கும் போதும் அம்மா மற்றும் அண்ணாவுடன் வாழ ஆரம்பித்த நிர்மலா யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

பட்டம் பெறும் கனவில் வாழ்ந்த நிர்மலா அதற்கு முன்னரே உயிரிழந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு!!

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவாறு காணப்பட்ட இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை புகை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நோய் பரவியதன் காரணமாக அண்மையில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடப்படதுடன் 80 பல்கலைக்கழக மாணவர்கள் அளவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!!

நாட்டில் தொடர்ந்தும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் அபாயம் நிலவும் 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து புகை விசிறும் செயற்பாடுகள் இடம்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகளை பரவலான முறையில் முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 225 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் 70,000 அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது

வறட்சி காரணமாக 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை, வறட்சியான காலநிலையுடன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழுள்ள 14,000 இற்கும் அதிகமான குளங்கள் வற்றியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திள் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பிரபாத் விதாரண கூறினார்.

தமது திணைக்களத்தின் கீழுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 21 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், வறட்சியால் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இறுதிக்கட்ட இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வடக்கு சுகாதார அமைச்சருடன் சந்திப்பு!!

 
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை நேற்று (03.07) அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது வவுனியாவில் 399 பட்டதாரிகள் வேலைவாய்பின்றி இருப்பதாகவும் தமது போராட்டம் 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லையென்றும், முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.

மாகாண சபையின் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டுமெனவும், பட்டதாரிகளை போட்டிப்பரீட்சை நடாத்தி நியமனம் வழங்கவதை நிறுத்தவேண்டுமெனவும், மூப்பு அடிப்படையில் பல்கலைகழகத்தை விட்டு வெளியேறிய ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படல்வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவரை தாங்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் மாகாணத்தில் நீடித்து நிலைக்கக்கூடிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதன்மூலமே பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வை காணமுடியுமெனவும், மாகாண சபைக்கு நியமனங்கள் வழங்கும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தனது அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் இருப்பதாகவும், இதுதொடர்பில் இதுவரை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லையென்றும் தெரிவித்ததோடு எதிர்க்கட்சித் தலைவருடன் பேசி சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

வடமாகாண கல்வி அமைச்சருடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இலங்கை ஆசிரியர் சங்கமும் கூட்டாக சந்திப்பு!!

 
வவுனியா மாவட்ட கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் ஊழல் செயற்பாடுகள், முறையற்ற நியமனங்கள் பற்றி வட மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (03.07.2017) திங்கட்கிழமை பி.ப 2.30 மணியளவில் அமைச்சர் க.சர்வேஸ்வரனுடன் கலந்துரையாடபட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட அதிபர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுடன் அவர்கள் பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் கையாளப்பட்ட நிதிகளை மீள செலுத்த வேண்டும் என்பதையும் மற்றும் கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்பதையும் இலங்கை ஆசிரிய சங்க வவுனியா மாவட்டத் தலைவர் திரு.நேசராசா முன்வைத்தார்.

அத்தகைய கோரிக்கைகளுக்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் ஆதரவு தெரிவிப்பதுடன் மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர் துஸ்பிரயோக விடயங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டொன்பொஸ்கோ சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சர் கூறும் போது, நிர்வாக சட்டங்களுக்கு அமைவாக முறையற்ற நியமனங்களை இடைநிறுத்துவதாகவும் தன்னால் இயன்றளவு கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக வடமாகாண முதலமைச்சருடன் இணைந்து நல்லதொரு பதிலை பெற்றுத் தருவதாகவும் இச்சந்திப்பின் போது வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இவருடன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார்.

கொடிய பாம்புகளுடன் நண்பராகும் இலங்கை இளைஞர்!!

 
பாம்புகளை பார்த்தவுடன் நண்பராகும் இலங்கை இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பாம்புகள் குறித்து மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை.

பாம்புகள் அச்சுறுத்தல் கொண்டவை என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது. பாம்புகளை பார்த்தவுடன் அடித்து கொலை செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர்.

பாம்புகளை பிடித்து மீண்டும் காட்டில் விடும் காட்சிகளை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தாலும், அவ்வாறு நடந்து கொள்பவர்கள் இலங்கையில் இல்லை.

எனினும் இலங்கையில் வாழும் இளைஞர் ஒருவர் பாம்புகளை கண்டவுடன் அவைகளுடன் நட்புறவு கொண்டாடுவதாக தெரிய வருகிறது.

கொடிய பாம்புகளுடனும் மிகவும் நட்பாக பழகும் குணாதிசயம் கொண்டவராக காணப்படுகிறார். இவர் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் அதிக பிரபல்யம் அடைந்துள்ளார்.

பிரதிப் சஞ்சய அத்தபத்து என்ற என்ற இளைஞரே பாம்புகளுடன் நட்புறவு கொண்டுள்ளார். அவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழ்வதாக தெரிய வருகிறது.

வவுனியா கற்பகபுரம் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்கள் அதிருப்தி!!

வவுனியா கற்பகபுரம் கிராமத்திற்கு வழங்கப்பட்ட வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், “வவுனியா புதிய மற்றும் பழைய கற்பகபுரம் கிராமத்திற்கு 360 வீடுகள் வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் பெறுமதியான குறித்த வீட்டு கட்டுமானத்திற்குரிய பணம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

சீமெந்து, வீட்டுக் கூரை சீற் என்பன பொருட்களாக வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்படுவதுடன், அதற்குரிய பணத்தை கழித்து விட்டு மிகுதிப் பணத்தையே பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடு திருத்த வேலைக்காக வீடமைப்பு அதிகார சபையிடம் முன்னர் ஒரு லட்சம் ரூபாய் பணம் கடனடிப்படையில் மாதாந்தம் செலுத்தும் வகையில் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போது வீட்டுத் திட்டத்திற்காக வழங்கப்படும் பணத்தில் குறித்த கடன் தொகை ஒரு லட்சத்தையும் அதற்குரிய வட்டியையும் வீடமைப்பு அதிகார சபையினர் கழித்து விட்டே மீதிப் பணத்தை வழங்குகின்றனர்.

இதனால் தமது வீடுகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்ட கடனை இதில் கழிக்காது அவற்றை ஏற்கனவே கூறியபடி மாதாந்தம் அறவிடும்படியும் அம்மக்கள் கோரியுள்ளதுடன், இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாகவும் வினவியுள்ளனர்.

இதனால் குறித்த அதிகாரிகள் தம்மை பழிவாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், தமக்காக கொண்டு வரப்பட்ட சீமெந்து உள்ளிட்ட பொருட்களையும் வழங்காது மீளத் திருப்பிக் கொண்டு சென்று விட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் வி.எம்.வி.குரூஸ் கருத்துத் தெரிவித்த போது,

வீட்டு அறை கட்டுவதற்காகவே கடன் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு வீட்டுத்திட்டம் மானியமாக வழங்குவதால் அதில் அந்தப் பணத்தை கழித்து விட்டு மிகுதிப் பணத்தை வழங்கி அந்த வீடு பூர்த்தி செய்யப்படுகின்றது.

கடன் அவர்களின் விருப்பத்துடனேயே அறவிடப்படுகிறது. அவர்களால் அனுப்பப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பம் சனிக்கிழமையே கிடைத்தது. இன்னும் அதற்கு பதில் வழங்கவில்லை.

எமது அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மிகவும் கஸ்டப்பட்டு அந்த மக்களுக்காக வேலை செய்கிறார்கள். எந்தப் பழிவாங்களும் இடம்பெறவில்லை. இன்றும் அவர்களுக்கு சீமெந்து வழங்கப்படுகின்றது.

தாம் சீராக வழங்குவதனாலேயே அவர்கள் வீடுகளை கட்டி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாடசாலையில் துஸ்பிரயோகம் ஏதும் இடம்பெறவில்லை : வவுனியா பொலிஸார்!!

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக எவ்வித வாக்குமூலமும் இதுவரை பதிவாகவில்லை என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகி இருந்ததுடன் வவுனியா பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர், சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி மற்றும் மாணவியின் தந்தை ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இருப்பினும், அவ்வாறானதொரு பாலியல் துஸ்பிரயோகச் சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியும், அவரது தந்தையும் தெரிவித்ததாகவும், அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக எவரும் எமக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.