தாலி எடுத்து கொடுத்ததால் மனைவியிடம் திட்டு வாங்கிய நடிகர்!!

தமிழ் சினிமாவில் மக்கள் மட்டுமல்ல பிரபலங்கள் கூட பலர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் பாக்யராஜ் மகன் ஷாந்தனுவும் விஜய்யின் தீவிர ரசிகர். இவரின் திருமணத்திற்கு விஜய் சென்ற போது திடிரென இளையதளபதியை தாலி எடுத்து தரச்சொல்லி திருமணம் செய்து கொண்டார்.

இதை விஜய் தன் மனைவி சங்கீதாவிடம் கூறிய போது அவர் கோபப்பட்டாராம். தாலியெல்லாம் வயதில் பெரியவர்கள் தான் எடுத்து தரவேண்டும் நீங்கள் ஏன் எடுத்து தந்தீர்கள் என்று கடிந்து கொண்டாராம்.

இதை விஜய் சாந்தனுவிடம் சொல்லவும், என்னை பொறுத்தவரை பெரியவர்கள் என்பதை விட மனதுக்கு பிடித்தவர்கள் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம் அண்ணா என்று ஷாந்தனு கூறினாராம்.

இதையடுத்து திருமணம் முடிந்தபின் முதல் விருந்தை விஜய் தான் அளித்தாராம். இந்த நிகழ்வை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நடத்திய நலத்திட்ட உதவிகள் செய்த விழாவில் ஷாந்தனு தெரிவித்தார்.

வவுனியாவில் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் : நோயாளிகள் அவதி!!

 
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக நேற்றையதினம் (21.06.2017) மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் நுழைய முற்பட்ட மாணவர்களை பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்று (22.06.2017) நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று (22.06.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8மணி வரை 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் இயங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் மூன்று தடவைகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

** மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் கடந்த 22.05.2017 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

** மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் கடந்த 05.05.2017 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

** மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் கடந்த 07.04.2017 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மரண அறிவித்தல்- அமரர் .கந்தசாமி உமாமகேஸ்வரி

மரண அறிவித்தல்

 

அமரர் .கந்தசாமி உமாமகேஸ்வரி

சாவகச்சேரி கல்வயலை பிறப்பிடமாகவும்  யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை  நீராவியடியை வசிப்பிடமாகவும் தற்போது பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவில் வசித்து வந்தவருமாகிய கந்தசாமி உமாமகேஸ்வரி கடந்த 20.06.2017 செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற  கார்த்திகேசு முத்துப்பிள்ளை  தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும் காலஞ்சென்ற காசிப்பிள்ளை யோகாம்பிகை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற காசிப்பிள்ளை கந்தசாமியின் அன்புத் துணைவியாரும் குகதாசன் (தபாலதிபர் கிளிநொச்சி -செயலாளர் ஸ்ரீலட்சுமி சமேத நரசிங்கர் ஆலயம் பூந்தோட்டம் வவுனியா)சரவணபவான்(ஜேர்மனி),சண்முகதாசன்(பிரான்சு),குமாரதாஸ்(பிரான்சு),ஆறுமுகதாஸ்(ஆசிரியர்  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி)ஆகியோரின்அன்புத்தாயாரும்,நளினி,(வவுனியா),மனோரதி(ஜெர்மனி),சுபத்திரா(பிரான்சு),ஜெயநந்தினி(பிரான்சு)விஜிதா(ஆசிரியைவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்)ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள நாளை 23.06.2017( வெள்ளிக்கிழமை) பெரியார்குளம்  பூந்தோட்டம் வவுனியாவிலுள்ள இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 2.00 மணியளவில் தகன கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும் .

 

தகவல்: மகன்மார் ,மருமக்கள் ,பேரபிள்ளைகள்

தொடர்புகளுக்கு: 024.2221480

077833332

0771301071

வவுனியா பிரதேச செயலகத்தில் சிறப்பு இப்தார் நிகழ்வு!!(காணொளி)

 
வவுனியா பிரதேச செயலகத்தில் க.உதயராசா (பிரதேச செயலாளர்) தலைமையில் இன்று (21.06.2017) 5.30 மணி தொடக்கம் 6.40 மணிவரை சிறப்பு இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.மயூரன், ம.தியாகராஜா, பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அ.பிரதீபன், தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , சமயத்தலைவர்கள், வவுனியா மாவட்ட கிராம சேவையாளர்கள், வர்த்தகர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

என்னை கருணைக் கொலை செய்து உடலை குடும்பத்தாரிடம் ஒப்படையுங்கள் : ராஜீவ் கொலை வழக்கு கைதியின் கோரிக்கை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில்,

“கடந்த 11ஆம் திகதியோடு 26 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவடைந்து 27ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
2014ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் அம்மாவின் முடிவுதான் இங்குள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

அரசியல் தலைவர்கள் எந்தப் பாகுபாடின்றி எங்கள் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க, நீதிமன்றமும் எங்களை விடுதலைக்குப் பரிந்துரைத்தும் எந்தக் காரணத்தால் எங்களின் விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இதற்கு முன் இருந்த மத்திய அரசும் தற்போதைய மத்திய அரசும் எமது விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறது. சிறைக்குள்ளே எனக்கு வாழ்வை முடித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனது 26 ஆண்டுகால சிறை வாழ்க்கை பெரும் வேதனையைத் தருகிறது. இனி விடுதலை இல்லை என்ற நிலையில் இதுவரை இல்லாத எண்ணங்கள் வேரூன்றுகிறது.

இனி விடுதலை இல்லை என்ற நிலையில் இனி உயிர் வாழ்வதிலும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே, தயவுசெய்து என்னை கருணைக் கொலை செய்து எனது உடலை என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்” என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

பொகவந்தலாவை – பெட்றசோ டெவன் போல் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் இருந்து எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதாக குறித்த நபரின் மகனால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே பொலிஸார் நேற்று மாலை சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 70 வயதான சுப்பிரமணியம் மருதை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த குடும்பஸ்தருக்கு பிள்ளைகள் இருந்த போதும் கவனிப்பார் அற்ற நிலையில் அயலவர்கள் வழங்கிய உணவினை உண்டு தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேகம் நிகழ்வதால் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

அத்துடன் சடலம் இன்று ஹட்டன் நீதவானின் கண்காணிப்பின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் ஹட்டன் கைரேகை விசாரணை பிரிவு ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இளம் பெண்ணும் பாடசாலை மாணவனும் விஷம் அருந்தியுள்ளனர் : பெண் மரணம்!!

காலி பிட்டிகலை பிரதேசத்தில் 21 வயதான இளம் பெண்ணும் 17 வயதான பாடசாலை மாணவனும் விஷம் அருந்திய நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார். 17 வயதான பாடசாலை மாணவன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

21 வயதான பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த பெண்ணுக்கும் 17 வயதான பாடசாலை மாணவனுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பெண் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக அறிந்து கொண்ட மாணவன் தானும் விஷம் அருந்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

வவுனியா செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!!

வவுனியா செட்டிக்குளம் – அரவிதோட்டம் பிரதேசத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செட்டிக்குளம் மெனிக்பார்ம் பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பழங்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எனவும், காட்டில் பழம் பறிக்க சென்றிருந்த போது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

வவுனியாவில் மலசலகூடத்தில் குழந்தையின் சடலம் :  பொலிசார் தீவிர விசாரணை!!

 
வவுனியா ஈச்சங்குளத்தில் நேற்று (20.06.2017) மாலை 5 மணியளவில் மலசலகூடத்திலிருந்து சடலமாக குழந்தையோன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு, ஈஸ்வரிபுரத்தில் வசித்து வரும் 26 வயது தாய் ஒருவர் நேற்று (20.06.2017) மாலை 5 மணியளவில் அவரின் வீட்டிலிலுள்ள மலசலகூடத்தில் ஆண் குழந்தையோன்றை பிரசரவித்துள்ளார். குழந்தை பிரசரவிக்கும் சமயத்தில் குழந்தை மலசல கூடத்தில் வீழ்ந்து இறந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.

இவ் விடயத்தினை கேள்வியுள்ள அயவலவர்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இறந்த குழந்தையின் சடலத்தினையும் குறித்த பெண்ணையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது குழந்தையின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயார் அதிக குருதி வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலையின் 7ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் 5 மற்றும் 7வயதில் இரு பெண் பிள்ளைகளின் தயார் ஆவார். குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதுடன் தனிமையில் வாழ்வதற்கு கடினம் என்பதால் அவரது சகோதரின் வீட்டில் வசித்து வருகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் வவுனியா குற்றவியல் அதிகாரிகளின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் வெப் கமெரா உங்களையே வேவு பார்க்கும் : எச்சரிக்கை!!

வெப் கமெராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கமெராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெப் கமெரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கமெராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது உங்கள் வீட்டு டெஸ்க் டாப்பில் உள்ள வெப் கமெரா நீங்கள் நினைத்தால்தான் ஆன் ஆகும். ரெக்கார்ட் செய்யும் என்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட சாஃப்ட் வேர் மூலம் உங்கள் வெப் கமெராவை வெளியில் இருந்து இயக்க முடியும். உங்களுக்குத் தெரியாமலே அது ஆன் ஆகி, உங்களைப் படம் பிடிக்கும்.

அது முழுவதையும் ஒரு வீடியோ தொகுப்பாகி வெளியிலும் ஷேர் செய்யவும் முடியுமாம். ஃபோஸ்காம் நிறுவனம் தயாரித்துள்ள வெப் கமெராக்களில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எஃப்-செக்யூர் நிறுவனம்,

இந்த குறைபாடுகள் தொடர்பாக ஃபோஸ்காம் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்குள் நடக்கும் உச்சகட்ட மோதல் அம்பலம்!!

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்குப் பிடிக்காததால், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனக்குமுறல்களை வெளியிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே இதுபற்றிய ஊகங்கள் உலா வந்த நிலையில், தற்போது உறுதியாகியிருக்கிறது.

கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தான் கெளரவமடைந்ததாகவும், கடந்த ஓராண்டில் அடைந்த சாதனைகளுக்கு அணியின் தலைவர், வீரர்கள், பயிற்சி மற்றும் துணை ஊழியர்களுக்கே எல்லா பெருமைகளும் சென்றடையும் என கும்ப்ளே தெரிவித்துள்ளார். ட்விட்டரில் கும்ப்ளே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எனது செயற்பாடு கேப்டனுக்குப் பிடிக்கவில்லை என்றும், நான் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் முதல் முறையாக பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) நிர்வாகத்தின் சார்பில் முதல் முறையாக நேற்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் உள்ள எல்லை வரையறை குறித்து நான் எப்போதும் மதிப்பவன் என்பதால் அதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன்” என கும்ப்ளே தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

“தலைவருக்கும் எனக்கும் இடையிலான குழப்பத்தைத் தீர்த்து வைக்க பிசிசிஐ நிர்வாகம் முயற்சி செய்தாலும் கூட, அது மீண்டும் சேரமுடியாத அளவுக்குப் போய்விட்டது. அதனால், விலகிச் செல்வதே நல்லது என நான் நம்புகிறேன்” என்று கும்ப்ளே தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

“தொழில்முறை, கட்டுப்பாடு, ஈடுபாடு, நேர்மை, கூடுதல் திறன், பரந்துபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை நான் பயிற்சியாளனாக அணிக்குக் கொண்டுவந்தேன். இணைந்து செயல்பட வேண்டுமானால், இந்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும் ” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்தக் கருத் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதே சரியானது என்று நான் நம்புகிறேன்” என கும்ப்ளே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

கிரிக்கெட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள கும்ப்ளே, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்துக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, அணித் தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் மோதல் ஏற்படும்போது, கேப்டனின் கைதான் ஓங்கும் என்பது தவிர்க்க முடியாதது என்று கூறப்படும் நிலையில், கும்ப்ளேவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படாவிட்டால் தான் ஏமாற்றமடைவேன் என தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்து இரண்டு நாட்களில் இந்திய அணியில் நடக்கும் உச்சகட்ட மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டோனியின் எதிர்காலம் என்னவாகும்?

சம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொண்ட இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் 4ஆவது மற்றும் 5ஆவது வீரராக முறையே யுவராஜ் மற்றும் டோனி இடம்பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் சீனியர் வீரர்களான டோனி மற்றும் யுவராஜ் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது.

அதற்காக வலுவான இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு மூத்த வீரர்களான டோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் நிலை குறித்து பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும்.

இந்திய அணியில் அடுத்த 2 ஆண்டுகளில் இவர்களின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுக்க இதுவே சரியான தருணம்.

எதிர்காலத்தில் நடைபெறும் தொடர்களில் அவர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தினை தேர்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன் தீ விபத்து : 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சிகரமான செயல்!!

லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது பாக்கெட் மணியை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள Grenfell டவர் குடியிருப்பில், கடந்த 14-ஆம் திகதி நடந்த தீ விபத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 79-பேர் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் Alfie Lindsey என்ற ஆறு வயது சிறுவன், தன் தந்தை Arthur உடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று தான் சேர்த்து வைத்திருந்த பாக்கெட் மணியான £60 முதல் £70 பவுண்டுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

இந்த பணத்தை அவர் கிரஹாம் டாம்லினிடம் வழங்கினார். சிறுவனின் இந்த உதவி மனப்பான்மையை கண்டு நெகிழ்ச்சிகரமாக இருப்பதாக கிரஹாம் டாம்லின் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து சிறுவனின் தந்தை Arthur கூறுகையில், தீ விபத்து தொடர்பான காட்சிகளை தனது மகன் தொலைக்காட்சிகளில் பார்த்து உதவ முடிவெடுத்ததாகவும், அதனால் அவன் தான் வைத்திருந்த பாக்கெட் மணி சேமிப்பு பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

சிறுவனின் இச்செயலுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

5 வயதுச் சிறுமியின் கனவு : 6வயது நண்பருடன் திருமணம் : கண்ணீரில் மிதந்த மணமேடை!!

 
ஸ்கொட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமியின் கனவை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதனால் அவரது பெற்றோர்கள் Eileidh Paterson-ன் திருமணக் கனவை நிறைவேற்றியுள்ளனர். Eileidh Paterson-க்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதனால் அவரது நெருங்கிய நண்பரான Harrison Grier(6) – ஐ நேற்று திருமணம் செய்து வைத்து ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

இவர்களது திருமணம் அங்குள்ள Aberdeen-பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் இரு வீட்டார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு சிலர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீரும் வடித்தனர்.

இந்நிகழ்வின் போது மணமகளான Eileidh Paterson தனது சகோதரர் கையை பிடித்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு மகிழ்ச்சியாக நடந்து வந்தார்.

அப்போது மணமகனான Harrison Grier வந்தார். அதன் பின் இருவரும் தங்கள் கையை பிடித்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து திருமணம் கோலகலமகாக நடந்து முடிந்தது.

இது குறித்து Eileidh Paterson-ன் தந்தை Billy கூறுகையில், இது ஒரு புதுவிதமான திருமணம் தான், ஆனால் இந்த திருமணத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.

அவரது தாய் Gail கூறுகையில், தனது மகள் neuroblastoma என்ற அரிய வகை புற்றுநோயின் தாக்கத்தால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாள்.

ஒவ்வொரு நிமிடமும் அவள் அந்த நோயுடன் போராடி வருகிறாள். வரும் சனிக்கிழமை அவளுக்கு இரத்தம் மாற்றுதல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறோம்.

இதனால் அவளது கனவை நிறைவேற்றிவிடுவோம், தன் சக நண்பர்களுடன் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு என்று கூறியுள்ளார்.

1000 லைக்குகளுக்காக உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூரத் தந்தை!!

அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை ஒருவர், 15 வது மாடியின் ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ”1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்” என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார்.

இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள் குழந்தையை இப்படி துஷ்பிரேயோகம் செய்கிறார் என கொந்தளித்துள்ளனர். மேலும் இவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த தகவல் பொலிசாரிக்கு தெரியவந்ததையடுத்து, இந்நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் இருந்து, தனது குழந்தையை பெயர் குறிப்பிடப்படாத இந்நபர் தொங்கவிட்டதாக அல் அராபியா செய்திவலைத்தளம் தெரிவித்துள்ளது.

காதல் திருமணம் செய்த ஜோடிகள் : 30 நிமிடங்களில் உறவினர்கள் செய்த செயல்!!

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து 30 நிமிடங்களே ஆன நிலையில், அவர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(22). இவர் பி.பி.ஏ. முடித்து விட்டு, அங்குள்ள மினி பஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அபிநயா நேற்று வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு பாபநாசத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேசும் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனால் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவரம் அபிநயாவின் குடும்பத்திற்க்கு தெரியவர உடனடியாக அவர்கள் தங்கள் உறவினர்கள் சிலரை அங்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் சிலர் அவர்களை உருட்டுகட்டை வைத்தும் தாக்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

இருவரையும் சமாதானப்படுத்தி விசாரணை செய்த பொலிசாரிடம், காதல் ஜோடிகள் தங்களுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததையும் தாங்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்டதையும் கூறியுள்ளனர்,

மேலும் அபிநயாவின் உறவினர்கள் ஜாதிப்பெயரை கூறி திட்டியதாக ராஜேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.